CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, May 30, 2020

லாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 7



19. கடைசி நிமிடங்கள். 

லிங்க்: https://youtu.be/VgX72dutHFk

நடிப்பு: கௌரிசங்கர்.
இதர கலைஞர்கள் வெவ்வேறு கேரக்டர்களுக்கு பின்னணிக்குரல் தந்துள்ளனர்.

ஒளிப்பதிவு, எடிட்டிங், எழுத்து, இயக்கம்: கார்த்திக் கௌரிசங்கர்.



தனிமையில் காலத்தை கழிக்கும் வயதான தந்தை. வெளிநாட்டில் குடிபெயர்ந்து விட்ட செல்ல மகன். ஒருமுறை கூட நேரில் பார்க்க வரவில்லை. அலைபேசி அழைப்புகள் மட்டுமே.

'இதேபோன்று எத்தனை ஆயிரம் கதைகள். மீண்டும் ஒன்றா?' என்று உள்ளூர பதற்றம் தொற்ற ஆரம்பிக்கிறதா? பீதியடைய வேண்டாம்.

பெற்றோரை தனிமையில் கிடத்தி, வெளிநாட்டில் நிரந்தர முகாமிட்டு, இறுதியில் 'குடும்பம் என்பது ஆலமரம். பெற்றோர் அதில் ஆணிவேர். கிளைகள் வேர்களை தாங்கும் காலமும் வருவதுதானே நியாயம்?' என ரக ரகமாக 'நீண்ட' வசனங்கள் பேசி உங்கள் செவியில் இருந்து ரத்தத்தை காவு கேட்கும் ஈவு இரக்கமற்ற படைப்பல்ல இது. 

இதே கதையமைப்பில் ஏகப்பட்ட மேடை நாடகங்கள் மற்றும் (குறும்)படங்களை பார்த்திருப்பினும்... அவற்றுக்கெல்லாம் சிகரம் வைப்பது போல் இருக்கிறது 'கடைசி நிமிடங்கள்'.  

கதையின் நாயகனான கௌரிசங்கர் ஒற்றை வசனம் பேசவில்லை. ஏன் முழுமையாக முகத்தை கூட காட்டவில்லை. சிலரது குரல்கள் பின்னணியில் ஒலிக்கின்றன. அவ்வளவுதான். ஆனால் வாடித்தவிக்கும் தந்தையின் மொத்த வெறுமையும், வலியும் நம்முள் ஆழமாய் இறங்கி பதம் பார்க்கிறது. 

தமிழ் மேடை நாடகங்களில் பல்லாண்டுகள் வலம் வந்து சிறந்த கேரக்டர்களில் நடித்து வரும் கௌரிசங்கருக்கு இது மிக முக்கியமான மைல்கல். 

ஒளிப்பதிவு, எடிட்டிங், எழுத்து, இயக்கம் என நான்கிலும் ஒரே நேரத்தில் சிக்ஸர் அடித்துள்ளார் கார்த்திக் கௌரிசங்கர். காலத்தால் அழியாத ஆகச்சிறந்த படைப்பினை தந்திருக்கும் இவருக்கு சிரம் தாழ்ந்த வணக்கமும், மனம் நிறைந்த நன்றியும்!! 

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...