பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்,
வரும் ஞாயிறு (அக்டோபர் 26) அன்று மதுரையில் மூன்றாம் ஆண்டு வலைப்பதிவர் சந்திப்பு நடைபெற இருக்கிறது. கடந்த இரு வருடங்கள் சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பிற்கு அளித்த ஆதரவினை மதுரை நிகழ்விற்கும் தந்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். நிகழ்ச்சி நிரல் விவரங்கள்:
பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிகள் காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்து மாலை சுமாராக
நான்கு மணி வரை நடக்க உள்ளது. வெளியூர் மற்றும் உள்ளூர் பதிவர்கள்
அதற்கேற்ப பயணத்தை திட்டமிட்டு நேரம் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.பதிவர்களே, நிகழ்ச்சிநிரல் படி எல்லா நிகழ்ச்சிகளும் இனிதே நடைபெற உங்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். நிகழ்ச்சி நிரலை தங்களது பதிவில் பகிர்ந்து, பெருவாரியான பதிவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு தாருங்கள்.
fff
fff
பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிகள் நேரலை செய்ய முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுபற்றிய விவரங்களை வருகிற நாட்களில் பதிவில்
பகிர்கிறோம். நிகழ்ச்சிகளை நண்பர் மகேந்திரன் பன்னீர்செல்வம்
அவர்களும் தீபா நாகராணி அவர்களும் தொகுத்து வழங்க இருக்கிறார்கள்.
fff
fff
வெளியூரிலிருந்து வரும் பதிவர்கள் அரங்கத்திற்கு வரும் வழித்தடம் பற்றி
அடுத்த சில நாட்களில் வரும் பதிவில் பகிர இருக்கிறோம். பதிவர்கள்
தங்களுக்கான வழித்தடத்தை குறித்துக் கொள்ளுங்கள்.
ffff
ffff
பதிவர் திருவிழாவில் மதிய உணவாக சுவை மிகுந்த சைவ சாப்பாடு வழங்க
இருக்கிறோம். உணவு ஏற்பாடுகளை சீனா ஐயா, திண்டுக்கல் தனபாலன், தமிழ்வாசி
பிரகாஷ், தமிழன் கோவிந்தராஜ் ஆகியோர் கவனித்துக் கொள்கிறார்கள்.பதிவர் திருவிழாவிற்கான நிர்வாக வரவு செலவு கணக்குகள் தமிழ்வாசி பிரகாஷ் கவனித்து கொள்கிறார்.
fff
fff
அரங்க ஏற்பாடுகள், பதிவர்களுக்கான அடையாள அட்டை, விருது ஏற்பாடுகள்,
சிறப்பு விருந்தினர் தொடர்பு, போன்றவற்றை தமிழ்வாசி பிரகாஷ், தமிழன்
கோவிந்தராஜ் ஆகியோர் கவனித்து வருகிறார்கள்.வெளியூர் பதிவர்கள் தங்குவதற்கான அறை ஏற்பாடுகளை தமிழன் கோவிந்தராஜ், ஜோக்காளி பகவான்ஜி அவர்கள் கவனித்து கொள்ள இருக்கிறார்கள்.
fff
மேலும் விவரங்களுக்கு:
கீதா நடன கோபால நாயகி மந்திர்,
எண் 3, தெப்பக்குளம் மேற்கு வீதி,
மதுரை.
தொடர்புக்கு:
தமிழ்வாசி பிரகாஷ் - 9080780981
thaiprakash1@gmail.com
....................................................................
1 comments:
பதிவர் சந்திப்பு சிறக்க எனது வாழ்த்துகள்.
இவ்வருடம் கலந்து கொள்ள முடியாத சூழல்.
Post a Comment