தமிழ் சினிமா தத்தளிக்கும் போதெல்லாம் உரிய நேரத்தில் கைகொடுத்து காப்பாற்ற ஒரு தேவதூதனை புஷ்பக விமான பிஸினஸ் க்ளாலிஸ் ஏற்றி கோடம்பாக்கத்திற்கு அனுப்புவது இறைவனின் வழக்கம். உதாரணம்: பவர் ஸ்டார் சீனு செல்லம், புஜ்ஜிம்மா (லிப்ஸ்டிக் ஸ்டார்) ராஜகுமாரன். அந்த வரிசையில் இப்போது அழகு குட்டி பாஸ்(கரன்). சென்ற ஆண்டே ரிலீஸாகி வெள்ளி விழா கண்டிருக்க வேண்டிய தலைவன் பற்பல பலாப்பழ முட்களை தாண்டி இப்போதுதான் வந்துள்ளது. காரணம்? சென்ற ஆண்டு தலைவன் ஆடியோ ரிலீஸை கோலாகலமாக கொண்டாட அண்ணா சாலையே அலறும் வண்ணம் தொடர் பேனர்கள் வைத்தார் எங்கள்/உங்கள் பாஸ். தமிழில் மேடமுக்கு பிடிக்காத இரண்டே வார்த்தை தலைவா/தலைவன். பிறகென்ன? நமது அம்முகுட்டியை அமுக்கி சிறையில் தள்ளி விட்டார்கள். முதல் சில நாள் கர்ஜித்தாலும், பிறகு குடுத்த குடுப்பில் வழிக்கு வந்தார் பாஸ். அந்த அடக்கத்திற்கு கிடைத்த பலனாக இப்போது தாறு மாறு தக்காளி சோறாக ரிலீஸ் ஆகிவிட்டது 'பாஸ் இன் தலைவன்'.
அம்மாவிற்கு ஒரு பெரிய கும்பிடு போட்டு டைட்டில் போடுகிறார்கள். சற்றே பருத்த தொப்பை, போனவாரம் செய்த உளுந்த வடை போன்ற முகபாவம். வாரே வா!! இதோ பைக்கில் பறந்து வருகிறார் பாஸ். அதுவும் கல்லூரி மாணவனாக. காவல்துறைக்கு தண்ணீர் காட்டும் வண்ணம் அவ்வப்போது ரிமோட் ஹெலிகாப்டர் மூலம் 'இந்த இடத்தில் இத்தனை மணிக்கு கொள்ளை நடக்கும், குண்டு வெடிக்கும். தலைவனின் எச்சரிக்கை' பாணியில் செய்திகளை அனுப்புகிறார். 'யார் இந்த தலைவன்?' தடுமாறுகிறது தமிழக காவல் துறை. பட ரிலீசுக்கு முன்பே அச்சடிச்ச சோறும், அவுன்ஸ் க்ளாஸ்ல மோரும் தந்து 'கும்பாபிஷேகம்' செய்தோமே? அந்த பாஸின் ஜாடையில் இருக்கிறாரே என்று கூட யோசிக்கவில்லை போலீஸார். பின்ன? ஜெயில் கதவை திறந்து விட்டதுமே முதலில் சலூனுக்கு ஓடிப்போய் கிருதாவை ரெண்டு இன்ச் பெரிதாக வைத்து விட்ட பிறகு எங்கள் தலைவனை எப்படி அடையாளம் தெரியும். ஷேம் ஷேம் பப்பி ஷேம்!!
'வாழ்ந்துட்டோம்னு சாகலாம். வாழ முடியலன்னு சாகக்கூடாது' என்று புதிய தத்துவம் பத்தாயிரத்தி ஒன்றை நம்மாள் சொன்னதுமே காதலில் விழுகிறார் நிகிஷா. தங்க செல்போன், ராமர் ப்ளூ ஷூ, பீதியை கிளப்பும் க்ளோஸ் அப்கள்..யூத்னா இது!! சூர்யா, ஆர்யா அங்கிள்ஸ். இனி உங்கள் பாச்சா பலிக்காது. போலீஸ் அதிகாரி, வெடிகுண்டு நிபுணர், கல்லூரி மாணவர், கேரவன் கக்கூசை சுத்தம் செய்பவர்...எத்தனை கெட்டப்கள். யாருய்யா அது கமல்? இப்ப வர சொல்லுங்க ஒண்டிக்கு ஒண்டி.
ரிமோட் ஹெலிகாப்டர் மூலம் ஒட்டுமொத்த காவல்துறையை கலங்கடிக்கும் டெக்னிக்கை எங்கள் தலைவன் சென்ற ஆண்டு ஷூட்டிங் நடக்கும்போதே கண்டுபிடித்துவிட்டான். அதை அப்படியே காப்பி அடித்த 'சூது கவ்வும்' நலன் குமாரசாமியே...மன்னிப்பு கேள். மன்னிப்பு கேள். நிபந்தனையற்ற மன்னிப்பு கேள்.
'மன்மதர் வம்சத்துல ஒத்த பேராண்டி. நீ ஒத்துக்கிட்டா பத்து வகை முத்தம் தாரேண்டி' பாடலில் தலைவர் ஆடும்போது நம்முள் உற்சாகம் கரை புரண்டு காட்டாற்று வெள்ளமென கண்டபடி ஓடும் உணர்வை எப்படி விவரிக்க? எதிரிகளை வீழ்த்த 'காக்க காக்க' ஜீப்பில் அண்ணாத்தை பறக்கும்போது கலாசலான மாஸ் சாங் தெறிப்பது பொழுதுபோக்கின் உச்சம்.
'அப்படி என்றால் படத்தில் சென்டிமென்ட் இல்லையா?' என்று கப்பித்தனமாக ஒரு கேள்வி எழலாம். ஏனில்லை? இரண்டாம் பாதி முழுக்க அதற்குத்தானே சமர்ப்பணம். அன்பான பெற்றோர்கள், செல்லத்தங்கை. 'பச்சைக்கிளிகள் தோளோடு', 'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை' டைப்பில் ஒரு குடும்ப பாடல். அதில் நமது கண்களை குளமாக்கும் ஒரு காட்சி. பாசப்பறவைகள் நால்வரும் கேரம் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். அனைத்து காயன்களின் மீதும் குடும்பத்தினரின் படம் பொறிக்கப்பட்டு இருக்கிறது. அவற்றை போர்டின் மையத்தில் வைக்கிறார்கள். இப்போது அவற்றை அடிக்கும் சந்தர்ப்பம் பாஸிற்கு வருகிறது. எல்லோரும் அவரையே குறுகுறுவென பார்க்க அவருக்கோ கை உதறுகிறது. கண்களில் நீர் முட்டுகிறது. விளையாட்டுக்கு கூட குடும்பம் பிரியக்கூடாது எனும் ஈர நெஞ்சுடன் ஆடாமலே எழுந்து விடுகிறார். என்ட கர்த்தாவே...இப்பேர்ப்பட்ட நெஞ்சை உருக்கும், நறுக்கும் சீனை பார்த்து எத்தனை வருடங்கள் ஆகி விட்டது.
படத்தில் பவர் ஸ்டார், சந்தானம் எல்லாம் தமாசு செய்ய முயற்சித்து என்ன பலன்? முடியாதே. இங்க எல்லாமே நாங்கதான். அடுத்த படத்துலயாவது 'கொஞ்சம் நடிங்க பாஸ்' என்று விவரம் தெரியாத அப்பாவிகள் அலறலாம். அதற்கான வாய்ப்பே இல்லை. நாங்கதான் ஒட்டுமொத்த நவரசத்தையும் இங்கயே பிழிஞ்சிட்டமே!!
written for tamil.jillmore.com
..............................................................................
முந்தைய SYRUP விமர்சன மலர்கள் சில:
.................................................................................
16 comments:
எப்போ போடுவீங்க, எப்போ போடுவீங்க, விமர்சனத்த எப்போ போடுவீங்கன்னு ரெண்டு நாள மெட்ராஸ் பவனை ரிப்ரஷ் பண்ணிகிட்டே இருந்தேன்... நன்றி தலைவா!
ஹா..ஹா... பொக்கிஷ ஹீரோக்கள் 'வாழ்ந்த' பட விமர்சனங்களுக்கு காத்திருப்பதும் சுகமான சுகம்தான்!!
எங்க காத்திருப்பு வீண் போகலே.. தலைவனின் தன்னிகரில்லா நடிப்பை பற்றி சொல்லி மெய் சிலிர்க்க வச்சுட்டீங்க.. கோடானு கொடி நன்றிகள் ஏசப்பா!
உங்க "லிப்ஸ்டிக் ஸ்டார்" சந்தானத்தின் அடுத்த படத்தில் கலக்கவிருப்பதாக செய்தி.. ஹிஹி..
கலகல ஜாலி விமர்சனம்! ஹாஹா! நன்றி பாஸ்!?
Super boss.... Rombave rasichu Sirichu padichen !
வணக்கம்,
நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
இந்த காவியத்துக்கு போகும்போது கூப்பிட வேண்டும் என்பது எழுதப்படா விதிஎன்பதை மறந்த உம்மை இன்னொருக்கா எங்களோடு பார்க்க வேண்டி தண்டனை தரலாம் என்று இருக்கிறோம் ப்ரோ
தலைவன் பவர் ஸ்டாரைத் தாண்டி லிப்ஸ்டிக் ஸ்டார். தளபதி பாஸ் ஆகியோரின் படங்களை(கூட) விடாம பார்க்கிற உங்க ஒரே மன தைரியத்தைப் பாராட்டி... புடிங்க பாஸ் இந்த பூங்கொத்தை!
தெனாலிராமன் பார்த்து குலுங்கி குலுங்கி அழுதுட்டு வந்தேன். என் தங்கத்தலைவன் பட விமர்சனம் படித்து ரிப்ரஷ் ஆயிட்டேன்.
இப்படி ஒரு தலைவன் வருவான் எனத்தெரிந்து அவரது பெயரை 1961லேயே எனக்குச்சூடிய என் தந்தையாரின் தீர்க்க தரிசனத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை.
April 20, 2014 at 6:53 am
வாழ்க,வளர்க!///ரெண்டாவது பவர் ஸ்டார் வந்தாச்சு!அட………….மொதலாவது பவருக்கும் ஒரு ட்ராக் இருக்கே?ஹ!ஹ!!ஹா!!!///இது நான்,நேத்து நெட் ல பாத்துட்டு போட்ட கமெண்ட்.
நன்றி சொல்ல உனக்கு, வார்த்தையில்லை எனக்கு!
செங்கோவி said...
நன்றி சொல்ல உனக்கு, வார்த்தையில்லை எனக்கு!///இது விமர்சனத்துக்குக் காமேண்டா இல்ல............... நமக்கு.................ஹி!ஹி!!ஹீ!!!
ungal blog vaasikka thudanginathu medhai... ungalukku thheeni poda ethani poor sorry power starrrrrrrrrrrrr
:))))))))))
பாஸின் விமர்சனத்தை தவமாய் தவமிருந்து படித்து கருத்திட்ட உள்ளங்களுக்கு நன்றிகள் கோடி!! :)
Post a Comment