'ரம்மி
சீட்டாட்டத்தைப்போல அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாத
அளவிற்கு திரைக்கதையில் ஒரு மேஜிக்கை அமைத்திருக்கிறேன்' என இப்படம்
குறித்து பெருமிதம் பொங்க கூறி இருந்தார் அறிமுக இயக்குனர் பாலகிருஷ்ணன்.
மூன்று முக்கிய கேரக்டர்களில் ஒன்றாக விஜய சேதுபதியையும் நுழைத்த
தெம்புடன் 1987 முதல் 1990 கால கட்டத்திலான காதல் கதையை சமர்ப்பித்து
இருக்கிறார்.
புதுக்கோட்டை
வடகாடு ஊரைச்சேர்ந்த சக்தி, திண்டுக்கல் ஜோசப் இருவரும் அரசுக்கல்லூரி
நண்பர்கள். உடன் படிக்கும் மீனாட்சி மனதில் இடம் பிடிக்கும் சக்தி மீது
கோபமாய் திரிகிறான் சகா சையத். மறுபக்கம் ஜோசப்பிற்கும் காதல் பூக்கிறது.
ஆனால் தங்கள் ஊர்ப்பெண்ணுடன் எந்த இளைஞன் பேசினாலும் அவனை நையப்புடைப்பது
அல்லது கொல்வது 'ஐயா'வின் கொள்கை, லட்சியம், சட்டம். அவர் கண்ணிலேயே விரலை
விட்டு ஆட்டும் இவ்விரு ஜோடிகளை எப்படி துரத்துகிறார், அக்காதலர்கள் என்ன
கதிக்கு ஆளாகிறார்கள் என்பது கதை.
சங்கர்,
சலீம், சைமன் டைப்பில் சக்தி, சையத், ஜோசப் என மூன்று பெயர் கொண்ட முக்கிய
கேரக்டர்கள். சக்தியான இனிகோவிற்கு பிரதான வாய்ப்பு. பாசமும், பயமும்
கொண்ட தோழனாக விஜய சேதுபதி. சையத் ஆக நமக்கு பரிச்சயம் இல்லாத ஒரு இளைஞர்.
பாவம் இறுதிவரை ட்வெல்த் மேனாகவே எட்டிப்பார்த்துவிட்டு காணாமல் போகிறார்.
'செகண்ட் இல்ல நீங்கதான் மெயின் ஹீரோ' என்று இனிகோ முகத்தில் கோலி சோடா
அடித்து தெளிய வைப்பதற்குள் க்ளைமாக்ஸ் வந்துவிடுகிறது. மறுமுறை
நல்வாய்ப்பு உரித்தாகுக நண்பா.
படத்தில்
மட்டுமல்ல நிஜத்திலும் நண்பன் இனிகோவிற்கு தோள் கொடுத்து உள்ளார்
வி.சேதுபதி. டைட்டில் கார்டில் பெயர் போட்டதுமே விசில் பறக்கிறது.
இயல்பிலேயே பரந்த மனது கொண்டவரான கொண்டவர் என்பதால் இதுக்கு மேல விசில்
வேண்டாம் என்பது போல் சுமார் பெர்பாமன்ஸ் தந்து தியேட்டரில் உள்ள
இதர சாதுக்கள் இனிதே படம் பார்க்க ஒத்தாசை செய்கிறார். கிணற்றில் குதித்து
நாயகி குளித்த மஞ்ச தண்ணியில் நீராடிய மறுகணமே இவருக்கு காதல் துளிர்
விடுவது அடடே.
காமடியில்
சூரி அரைக்கிணறு. மூணாறு ரமேஷ் ஆரம்பம் முதல் இறுதி வரை மூர்க்கமாகவே
திரிந்து சூரி விட்ட இடத்தை தட்டிப்பிடித்து இருப்பது அருமை. சென்ட்ராயனும்
இருக்கிறார். ரம்மியின் ஒரே மற்றும் ஒன்லி ரம்மியம் காயத்ரி. காயத்ரி.
காயத்ரி.
1987
டு 1990 கால கட்டத்தை பிரதிபலிக்கும் டீடெய்லிங் நன்று.பழங்கால
கோவில்களின் பின்னணியில் ஒளிப்பதிவாளர் பிரேம்குமாரின் கையம்சம் கண்களுக்கு
இனிமை. ஆனால் கோவில் சார்ந்த பாடல்களுக்கு இசை இமானாமே? எந்தப்பாடலும்
மனதில் நிற்கவில்லை.
ஊர்ப்பெரியவர்
ஜோ மல்லூரி எதற்கு கண்ணில் படும் இளசுகளை எல்லாம் கொல்ல துடிக்க வேண்டும்?
அதற்கான பின்னணி என்ன? ஊரில் அவருடன் இருக்கும் சில அடியாட்கள் தவிர்த்து
மற்ற பொதுமக்கள் எல்லாம் கல்கத்தா காளி கோவில் திருவிழாவிற்கு கிளம்பி
போய் விட்டார்களா? ஒன்றும் புரியவில்லை. படம் நெடுக சுந்தர பாண்டியன் வாடை
மூக்கை துளைக்கிறது.
மக்கள்
எதிர்பார்க்கும் காட்சி இன்றி வேறொரு ட்விஸ்ட் வைப்பதாக நினைத்துக்கொண்டு
காதல் ஜோடிகள் ஓடும் தெருக்களில் உள்ள வளைவுகளை விட அதிகமாக நாலு
திருப்பங்களை வைத்திருக்கிறார் இயக்குனர். ஆனால் ஷூட்டிங் நடக்கும்போது
ஒளிப்பதிவாளர் பின்னாலேயே ஓடி எல்லா சீனையும் பார்த்ததுபோல தியேட்டரில்
சரியாக சொல்கிறான் நம்மூர் கில்லாடி ரசிகன்.
க்ளைமாக்ஸில்
பாரதி ராஜாத்தனம் பளிச்சிடுகிறது. 'என் இனிய தமிழ் மக்களே' என கரம்
கூப்புவதற்குள் சிறப்பு வணக்கம் போட்டு விட்டு ஓடுகிறான் என் இனிய அப்பாவி
ரசிகன்.
Written for tamil.jillmore.com
..................................................................
சமீபத்தில் எழுதியது:
கோலி சோடா - விமர்சனம்
Written for tamil.jillmore.com
..................................................................
சமீபத்தில் எழுதியது:
கோலி சோடா - விமர்சனம்
6 comments:
அன்புடையீர்..
தங்களின் தளம் வலைசரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
http://blogintamil.blogspot.com/2014/02/2.html
நல்வாழ்த்துக்கள்..
நல்ல விமர்சனம்!சிரிக்க வைத்தது.உங்கள் நண்பர் செங்கோவி தன் பாணியில் விமர்சித்திருக்கிறார்,நீங்கள் உங்கள் பாணியில்!இறுதியில் பொருள் ஒன்று தான்,ஹ!ஹ!!ஹா!!!
நான் படம் பார்க்க வேண்டாம்னு சொல்லிட்டீங்க ஹி ஹி...
இப்போது பார்க்கும்படி ஏதாவது தமிழ் படம் இருக்கா சொல்லுங்க சிவகுமார். தமிழகம் வந்திருப்பதால் பார்க்க நினைத்தேன்! :)
இதாய்யா ஒலக சினிமா...என்னை மாதிரி எவனாவது நடிச்சிட முடியுமா?தமிழ் சினிமாவை ஒருவழி பண்ணாம விட மாட்டேன்
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்
வலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - நான்காம் நாள்
Post a Comment