CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, January 28, 2014

Prankly ஸ்பீக்கிங் வித் அர்னாப்!!தேசிய ஊடகங்களில் 'முதல்வன்' பாணி பேட்டிகளை நான் பார்க்க ஆரம்பித்தது கரன் தாபரின் CNN-IBN டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சி மூலமாகத்தான். அதிகபட்சம் 20 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் பேட்டியில் வீர தீர சூர அரசியல்வாதிகளைக்கூட நாக்கில் நுரை தப்ப வைப்பார். தாபரின் ரேசர் ஷார்ப் பார்வை, கம்பீர குரல் மட்டுமே போதும். எதிரில் அமர்பவரின் பேஸ்மன்ட் கிடுகிடுக்கும். பர்வேஸ் முஷரப், நரேந்திர மோடி ஆகியோரை தாபர் மடக்கியபோது முகம் சிவந்து அவர்கள் க்ளாஸ் டம்ளர் தண்ணீரை பதற்றத்துடன் அருந்திய நிமிடங்கள் இன்னும் நினைவில் இருந்து மறையவில்லை. கபில் சிபல் போன்ற வெகு சிலர் மட்டுமே தாபருக்கு தண்ணி காட்டிய ஜித்தர்கள். பிற்பாடு அதுபோன்ற அதிரடி பேட்டிகள் அரிதாகவே நிகழ்ந்தன என்று சொல்லலாம். நேற்று அர்னாப் மூலமாக அந்த குறையும் தீர்ந்தது.

விளம்பரம்/தம்பட்டம் அடிப்பதில், அதிக சப்தம் போடுவதில் டைம்ஸ் நவ் சேனலுக்கு இணை அதுதான். குறிப்பாக அர்னாப். சென்ற ஆண்டு சில முக்கிய புள்ளிகளை திணற அடிக்கிறேன் பேர்வழி என்று அவர்களிடம் சிக்கி கோல் வாங்கினார் அர்னாப். அதன் பிறகு 'ந்யூஸ் ஹவர்' பார்ப்பதை பெரும்பாலும் குறைத்துக்கொண்டேன். சமீபகாலமாக தந்தி டி.வி. ரங்கராஜ் பாண்டே 'தமிழகத்தின் அர்னாப்' ஆக கடும் முயற்சி  எடுத்து வருகிறார். 'கேள்விக்கென்ன பதில்' மூலம் பகிரங்கமாக கேள்விகளை முன்வைத்து பேட்டி எடுத்தது அவரை கவனிக்க வைத்தது. 'ப்ரெஞ்ச் தாடி' அவருடைய பிரம்மாஸ்திர உறை. ஒருமுறை கார்த்திக் சிதம்பரத்திடம் சிக்கி சின்னாபின்னம் ஆனார் பாண்டே. பேட்டி எடுப்பதில் கடக்க வேண்டிய தூரம் அவருக்கு இன்னும் இருக்கிறது என ஊர்ஜிதம் ஆனது. 

நேற்று முழுக்க 'இந்திய ஊடகங்களில் மிகப்பெரிய பேட்டி, பார்த்தே ஆக வேண்டும்' என டைம்ஸ் நவ் நம் காதின் மீதமர்ந்து அலறியது. Frankly Speaking with Arnab சிறப்பு பேட்டியில் 'கை'ப்புள்ள ராகுல். மொத்த பேட்டியையும் காணும் வாய்ப்பு கிட்டியது. முதல் கேள்வியிலேயே பட்டாசு கிளப்ப ஆரம்பித்தார் அர்னாப். குஜராத்/சீக்கியர் கலவரம்/படுகொலை, காங்கிரஸ் ஊழல் உள்ளிட்ட எந்த கேள்விக்கும் நேரடி பதில் தரவில்லை ராகுல். 'பெண்கள் முன்னேற வேண்டும், இளைஞர்களை ஒன்று திரட்ட வேண்டும்' ரீதியில் கூச்சமின்றி ஒரு மணிநேரம் சம்மந்தம் இல்லாமலே பதில் அளித்தார் நல்லதம்பி. 'நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் தாருங்கள்' என அர்னாப் பலமுறை சொல்லியும் பயனில்லை. 


மோடி குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மழுப்பி தள்ளினார் 'நாளைய' காங்கிரஸ் தலைவர். "சீக்கிய கலவரம் நடக்கும்போது நான் சிறுவனாக இருந்தேன். அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் எனது பங்கு எதுவும் இல்லை" போன்ற பிரமாதமான பதில்களை சொல்லி அர்னாப்பை மிரள வைத்தார். "லாலு போன்ற ஊழல் கறை படிந்தவரிடம் கூட்டணி வைக்கிறீர்களே?" என கேட்டதற்கு கிடைத்த பதில் "நாங்கள் அவரது கட்சியுடன் தான் கூட்டணி வைத்துள்ளோம். லாலு எனும் தனிநபருடன் அல்ல".  'என் சம்பள பாக்கிய இப்பவே செட்டில் பண்ணுங்க. ஓடிடறேன்' என்று அர்னாப் அலறாத குறைதான்.

"10 வருஷம் One on One பேட்டி குடுக்காம இருந்தது எவ்ளோ பெரிய ராஜதந்திரம். அப்படியே இருந்து இருக்கலாம். என்னா அடி" லெவலுக்கு ராகுல் முகம் பேயறைந்தது போல் ஆகத்தொடங்கியது. ஒரு கட்டத்தில் வெறியாகி (ஆனாலும் நீங்க ரொம்ப தமாசு தம்பி) "நானும் வந்ததுல இருந்து பாக்கறேன். உருப்படியா ஒரு கேள்வி கேட்டியா? பெண்கள் முன்னேற்றம், இளைஞர்கள் இணைப்பு, Funda'mental' பிரச்னைகள் பத்தி பேசாம எதை எதையோ கேக்குற" (இதுக்கு மேல அடிச்ச அழுதுருவேன்). அர்னாப்: "அதுக்கு உங்க பிரச்சார மேடைல வந்து உக்காந்தா போதாது? இது இன்டர்வியூ ராகுல். இப்படித்தான் கேக்க முடியும்".  தலைகுனிந்தார் காங்கிரஸ் துணை ஜனா.  

அடுத்து: "மோடியுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா?". நம்ம தம்பி: "பெண்கள் முன்னேற வேண்டும். இளைஞர்கள்....". மண்டை காய்ந்த அர்னாப் "பேசாமல் RTI போட்டு பதில்களை வாங்கினால் என்ன? இந்தாளு நம்மள ராக்கிங் பண்ணிட்டே இருக்காரே?" நிலைக்கு தள்ளப்பட்டார். மூச்சுக்கு முப்பது தரம் "சிஸ்டத்தை மாற்ற வேண்டும். சிஸ்டத்தை மாற்ற வேண்டும்" என்றார் ராகுல். செம அட்டாக். ஒரு வருஷமா ஒரே லாப்டாப்போட டி.வி. ப்ரோக்ராம் பண்ணா? கேக்கத்தான் செய்வாங்க. அட்லீஸ்ட் சிஸ்டம் லேபிளையாவது மாத்துங்க கோஸ்வாமி. சார் சொல்றாருல்ல.

மொத்தத்தில் இப்படி ஒரு 100% மொக்கையான, சம்மந்தமில்லாத, பொறுப்பற்ற பதில்களை எந்த ஒரு இந்திய தலைவரும், ஏன் கட்சியின் கீழ்மட்ட பிரதிநிதி கூட தமது பேட்டிகளில் சொன்னதில்லை. இப்படிப்பட்ட நபரிடம் இந்தியாவை ஆளும் பொறுப்பை தந்தால் மக்கள் என்ன கதிக்கு ஆளாவர்கள் எனும் பேரச்சம் குடிகொள்கிறது. பேசுவதில் கோல்ட் மெடல் வாங்கிய மோடி, லாலு, அருண் ஜெட்லி ஆகியோரையும் அர்னாப் இதுபோன்று வெளுத்து வாங்கினால் அட்டகாசமாய் இருக்கும். பாவம் ராஜா வீட்டு கன்னுக்குட்டியை புலிக்கூண்டுக்குள் அடைத்து மிரண்டோட வைத்து விட்டார். Bad Times Now for the Prince.

எது எப்படியோ கொஞ்சமும் திசை மாறாமல் அனல் பறக்கும் கேள்விகளை கேட்டு பட்டையை கிளப்பிய அர்னாப். ஹாட்ஸ் ஆப்!!
 ..........................................................................

15 comments:

Unknown said...

சில அறிவு ஜீவிகள்? மோடியை எதிர்க்கிறேன்னு தொடை தட்டி கிளம்பியிருக்காங்க, அப்படி அவர்கள் செய்வது. இப்படிப்பட்ட ஒரு முட்டாளை தலைவனாக்குவதற்குத்தான் :))

சீனு said...

ஹா ஹா ஹா கைய புடிச்சி இழுத்தியா.. என்ன கைய புடிச்சி இழுத்தியா கேசா இல்ல இருக்கு

புதுகை.அப்துல்லா said...

என்னைக்காவது ஒருநாள் அர்ணாப் எங்கிட்ட மாட்டுவாரு :)

வவ்வால் said...

சிவா,

// பாவம் ராஜா வீட்டு கன்னுக்குட்டியை புலிக்கூண்டுக்குள் அடைத்து மிரண்டோட வைத்து விட்டார். Bad Times Now for the Prince.

எது எப்படியோ கொஞ்சமும் திசை மாறாமல் அனல் பறக்கும் கேள்விகளை கேட்டு பட்டையை கிளப்பிய அர்னாப். ஹாட்ஸ் ஆப்!!//

மீடியா எப்படி செயல்படுது என புரிந்துக்கொண்டால் ,இப்படிலாம் நினைக்கும் நாம தான் ஏமாந்துக்கிட்டு இருக்கோம்னு புரியும் அவ்வ்!

இண்டர்வியூக்கு வருபவர்கள் ரெண்டுவிதம் , டிவிப்பொட்டில மூஞ்சி தெரிஞ்சாப்போதும்னு வருபவர்கள்,அவர்களை தான் துவம்சம் செய்து "மீடியாக்காரர்கள்" பேர் வாங்கிக்கொள்வது.

இன்னொருவகையினர், எல்லாக்கேள்விகளையும் முன்னரே எழுத்து வடிவில் கேட்டு வாங்கிவிட்டு ,இவற்றுக்கு மட்டும் தான் பதில் சொல்ல விருப்பம் என தெரிவித்து "சம்பந்தப்பட்ட மீடியா" ஒத்துக்கிட்டா வருவாங்க.

ராகுல் காந்திப்போன்ற உயர்மட்ட தலைகள் எல்லாம் ரெண்டாவது வகையினர் ,எனவே அர்ணாப் என்னக்கேட்பார்னு தெரிஞ்ச பின்னர் தான் இண்டர்வியூக்கு வந்திருப்பார்.

என்னளவில் ராகுல் காந்தி அர்ணாப்புக்கு தண்ணிக்காட்டி "தேர்ந்த அரசியல்வாதி"யாக காட்டியுள்ளார் என்றே சொல்லலாம்.

பேட்டிக்கேட்பவரின் விருப்பத்துக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற கட்டாயமோ,இல்லை சரியான பதில் சொல்ல வேண்டும் என்ற கட்டாயமோ பேட்டிக்கொடுப்பவருக்கு இல்லை எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என தெளிவாக இருப்பது தான் "அரசியல் மெச்சூரிட்டி" :-))

# பெரும்பாலான "தமிழக அரசியல் இண்டர்வியூக்கள்" நானே கேள்வி,நானே பதில்" வகையில் தான் சேரும், ஆனால் பேட்டிக்காண்பதற்கு என ஒருத்தர போட்டுப்பாங்க அவ்வ்!

இதனால் தான் தமிழகத்தில் சிலர் "சிறப்பான" பதில்களை தருவது போல மாயை உருவாகி இருக்கு!

Unknown said...

அவரும்(ராகுல்)பாவமில்லையா?பெண்கள் முன்னேற்றம் குறித்துப் பேசினாலாவது "பொண்ணு" கிடைக்காதான்னு...................ஹி!ஹி!!ஹீ!!!

Muthuramalingam said...

Some one has tell Rahul.. He belongs to Congress and Congress is the Ruling part last 10 years and was ruled more than 50 years. The way he told to change the system and everything outside people may think Rahul is opposite party and want to come power to change everything.. I watched more than half an hour .. he is not respond the question and he himself tell something else..

MANO நாஞ்சில் மனோ said...

எவன் எப்பிடி போனால் என்ன ? நமக்கு மோடி வந்தால் போதும்.

வெங்கட் நாகராஜ் said...

பொதுவாகவே அர்ணாப் கோஸ்வாமி மற்றவர்களை பேசவே விடமாட்டார். அவருக்கு தேவையான பதிலை அவரே சொல்லும் பல நிகழ்ச்சிகளைப் பார்த்து, இப்போதெல்லாம் பார்ப்பதே இல்லை. ராகுல் இண்டர்வியூ உட்பட!

! சிவகுமார் ! said...

வருகைக்கு நன்றி கே.ஆர்.பி, சீனு.

! சிவகுமார் ! said...


// புதுகை.அப்துல்லா said...

என்னைக்காவது ஒருநாள் அர்ணாப் எங்கிட்ட மாட்டுவாரு :) //

அந்த நாளுக்காக காத்திருக்கிறேன் அண்ணே!!

! சிவகுமார் ! said...

@ வவ்வால்

நீங்கள் சொல்லும் பல விஷயங்கள் உண்மைதான் வவ்வால். ஆனால் இப்படி வகையாக சிக்குவோம் எனத்தெரிந்து கொஞ்சம் சுதாரித்து இருக்கலாம் ராகுல். முன்கூட்டியே கேள்விகளை வாங்கிய பிறகும் ஏன் இந்த தடுமாற்றம் என்பதுதான் முக்கியமான கேள்வி.

! சிவகுமார் ! said...

//Subramaniam Yogarasa said...

அவரும்(ராகுல்)பாவமில்லையா?பெண்கள் முன்னேற்றம் குறித்துப் பேசினாலாவது "பொண்ணு" கிடைக்காதான்னு...................ஹி!ஹி!!ஹீ!!!//

அவருக்கு ஆள் எல்லாம் இருக்காங்களாம். அரசியலுக்காக அதை பத்தி சொல்றது இல்லை.

! சிவகுமார் ! said...

@ Muthuramalingam

Correctly said Muthu.

! சிவகுமார் ! said...

// MANO நாஞ்சில் மனோ said...

எவன் எப்பிடி போனால் என்ன ? நமக்கு மோடி வந்தால் போதும்.//

ஓஹோ!!

! சிவகுமார் ! said...

@ வெங்கட் நாகராஜ்

அது என்னவோ உண்மைதான். ஆனால் சில சமயம் அர்னாப் பெயர் பெற்று விடுகிறார்.

Related Posts Plugin for WordPress, Blogger...