CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, January 7, 2014

தாஜ்மகாலுக்கே வாடக வாங்கன பரம்பரடா...
'சிதம்பரம்' என்றாலே தடாலடி ரவுசுகளுக்கு பஞ்சமில்லா பெயர் போல. கடைத்தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைத்து நாட்டின் பொருளாதாரத்தை செங்குத்தாக நிறுத்திய ப.சிதம்பரம், போனில் பேசியே பல பதிவர்களை மனப்பிறழ்வுக்கு ஆளாக்கும் சிதம்பர மைந்தர் நக்கீரன், சிதம்பரம் கோவில் எங்களுக்கே சொந்தம் என கொப்பளிக்கும் தீட்சிதர்கள். ஆகக்கா. அக்கோவிலை நிர்வகிக்க அரசுக்கு உரிமை இல்லை. முறைகேடுகளை வேண்டுமானால் விசாரிக்கலாம். வழக்கம்போல தீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சொல்லி விட்டது. தமிழக அரசு சரியாக வாதத்தை முன்வைக்காததே இப்பின்னடைவுக்கு காரணம் என்று போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்து விட்டன. டி.வி.க்களில் கடும் விவாதங்கள் தூள் பறக்கின்றன. அவற்றை குறுகுறுவென்று பார்த்து கிறுகிறுத்ததன் விளைவே இப்பதிவு. 

தில்லை தீட்சிதர்கள் விலைமதிப்பற்ற கோவில் நகை மற்றும் சொத்துக்களை தின்று ஏப்பம் விடுவதாக குற்றச்சாட்டுகள் ஆண்டுக்கணக்கில் இருந்து வருகின்றன. அதுபோல நடராஜர் கோவிலில் தமிழுக்கு இடமில்லை என்று ஆறுமுகசாமியும், அவருக்கு ஆதரவாக சில இயக்கத்தினரும் போராட்டங்களை ,மேற்கொண்டனர். ஆனால் கோவிலை கண்காணிக்கும் இந்து அறநிலையத்துறையிலும் ஊழல் உள்ளது என்று எதிர்க்கணை வீசப்பட்டது. 'அப்படின்னா மசூதி, சர்ச் நிர்வாகத்துல அரசு ஏன் தலையிடல?' என செக் வைத்தார் இந்து முன்னணியின் ராமகோபாலன். 'அங்கே வக்பு வாரியங்கள், மற்றும் கிறிஸ்தவ சபைகள் ஒரு மனதாக தலைவர்களை தேர்ந்தெடுக்கின்றன. அவர்களுக்குள்ளும் சில பிரிவுகள் மற்றும் பிரச்னைகள் இருப்பினும் கட்டுப்பாடு உள்ளது. இங்கே பல்வேறு வழிபாடு முறைகள், ஏகப்பட்ட மதவாதிகள் இருப்பதால் நிர்வாகத்திற்கு தலைவர்களை தேர்ந்தெடுப்பதில் ஒற்றுமை இருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை' என்று ரா.கோபாலன் வாயில் கொழுக்கட்டையை சொருக முயற்சித்தது எதிர் தரப்பு. 'அதெல்லாம் எனக்கு தெரியாது? கிழிஞ்ச என் குடை கிழியாம வேணும்' என்று திரும்ப திரும்ப சொன்னார் ரா.கோ.  

சிதம்பரம் கோவிலின் ஹை ப்ரொபைல் தீட்சிதர் உமாநாத்  பயங்கர  கோவக்காரர் போல. அவ்வப்போது அவரை எதிர்த்து பேசும் நபர்களை பார்த்து 'யோவ். சும்மா பொய் புளுகாத. யோவ்' என்று ஹனிசிங் போல சபை நாகரீகமின்றி கொந்தளித்தார். 'நீர் கொஞ்சம் அமைதியா இரும்' என்று நடராஜர் சொன்னால் கூட அவருக்கும் ஒரு 'யோவ்' பார்சல் வைத்திருப்பார் போல. ஆத்தாடி ஆத்தா... சோழ பரம்பரைக்கு முடி சூடுன தெய்வீக பரம்பரைன்னு சொல்லிக்கற தீட்சிதர் டீமோட தலைவரே என்ன காட்டு காட்டுறாரு பாருங்க ஓய்!!

''நீ  எவ்ளோ பெரிய அதிகாரியா இருந்தா எனக்கென்ன? நாங்க இங்கதான் பாய விரிச்சி மல்லாக்க படுப்போம். ராஜன்ட்ட பேசறியா.... நட ராஜன்''  


'சிதம்பரம் கோவிலில் தமிழுக்கு இடமில்லை' என சிலர் கொடி பிடித்தாலும், அதை இல்லை என்று ஆதாரத்துடன் மறுக்கிறார்கள். நித்தம் தமிழிலும் நடராஜருக்கு வழிபாடுகள் நடக்கின்றன என்பதற்கு தரிசனம் செய்யும் இந்து பக்தர்களே சாட்சியாக இருக்கிறார்கள். இந்த பதில் வந்த பிற்பாடு திருமாவளன் மற்றும் திராவிட கட்சி நண்பர்கள் எதிர் வாதம் வைக்காது ஏன் என்பதும் புலப்படவில்லை. பேசாமல் நாமலே ஒரு எட்டு அக்கோவிலுக்கு சென்று நடப்பது என்னவென்று பார்த்துவிடலாம் என நினைத்தால்...எங்கே ஊர் மண்ணில் கால் வைத்த மறுகணம் நக்கீரன் முதுகில் ஏறிக்கொள்வாரோ எனும் திகில் ஆட்டிப்படைக்கிறது!!


'பிற சாதி/இன மக்களுக்கு உள்ளே மரியாதை இல்லை' என்பது இன்னொரு குற்றச்சாட்டு. ஆனால் முன்பொரு காலத்தில் நாடார் இன மக்களை கோவில் உள்ளே வரவிடாமல் சில தீய சக்திகள் தடுத்தது என்றும், அவர்களை விரட்டி அம்மக்கள் இறைவழிபாடு செய்ய வழி வகுத்ததே தீட்சிதர்கள் தான் என்றும் ஒரு வரலாற்று உண்மையை முன்வைக்கிறார்கள். 

மூவாயிரத்தில் இருந்து வெறும் 150 குடும்பங்களாக சுருங்கிவிட்ட தீட்சிதர்கள் பல கோடி பணம் புழங்கும் கோவில் நிர்வாகத்தை அடக்கி ஆண்டால் அதில் நடக்கும் முறைகேடுகளை கேட்க ஜனநாயக நாட்டில் ஆளே இல்லையா என்பது நியாயமான கேள்விதான். அதே சமயம் அரசு நிர்வகிக்கும் கோவில்களில் அரசியல்வாதிகள் எந்த அளவிற்கு நேர்மையாக இருப்பார்கள் என்பதும் பரம்பரை பரம்பரையாக கோவில்களை நிர்வகிப்போர் கேட்கும் கேள்வி. தற்போது அரசின் குடையின் கீழ் கோவிலருகே இருக்கும் கழிப்பிடங்கள் கூட சரியாக பராமரிக்கப்படாதது ஏன் எனும் குற்றச்சாட்டும் உள்ளது. 

இந்த களேபரத்தில் களவு போகும் அரிய ஆபரணங்கள், பல நூறு ஏக்கர் கோவில் நிலங்கள், வசூலாகும் உண்டியல் தொகைகள், நன்கொடைகள் எல்லாம் என்ன கதிக்கு ஆளாகும் என்பது பக்தர்களின் கேள்வி. ஓய்வு பெற்ற நீதிபதி, அறநிலையத்துறை அதிகாரி உள்ளிட்ட சில நேர்மையானவர்களை கொண்ட சுயேட்சையான கண்காணிப்பு குழு அவசியம் என்பது காலத்தின் கட்டாயம். ஒற்றுமையின்றி சிதறிக்கிடக்கும் இந்து அமைப்புகளும், உள்ளூர் பக்தர்களும் கரம் கோர்த்து தெளிவான முடிவை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற குடுமிப்பிடி சண்டைகளுக்கு தீர்வு கிடைக்கும். 


சீக்கிரம் சிக்கல் தீராவிட்டால் 10 ரூபாய் தேங்காயை 30 ரூபாய்க்குதான் விற்பனை செய்வார்கள். காலம் தாழ்த்தினால் இன்னும் பல ஆண்டுகளுக்கு இப்படியே பேரம் பேசிக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.

 'சரி 12 ரூபாய்'.  

'இவ்ளோ கேப்பாய்யா விடுவ. உனக்காக 25 ரூபாய் யா'

'உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்'

'அப்படி வா'

'12 ரூபாய்'

....................................................................................... 
5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அட நாய்களா...!

Unknown said...

இக்காலத்தில் பொதுவாகவே "கோவில்"கள் வருமானம் ஈட்டித் தரும் ஸ்தாபனங்கள் தான்!சுவை கண்டவர்கள் எத்தனை கோடி செலவழித்தும் கை விட்டுப் போக அனுமதிக்கவே மாட்டார்கள்!எல்லாம் அந்த நடராஜனுக்குத்(கடவுள்)தான் வெளிச்சம்!!!

ராஜி said...

சீக்கிரம் கடவுள் கல்கி அவதாரம் எடுத்து வரனும். அப்பதான் அடங்குவாங்க!

saidaiazeez.blogspot.in said...

இனம் இனத்தோடு சேரும் என்பது போல, நாகூர் தர்கா தலைவர் இந்த தீர்ப்பை ஆதரித்து தீட்சிதர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளதையும் கவனிச்சீங்களா சிவா?

வெங்கட் நாகராஜ் said...

நல்ல அலசல் சிவா.....

Related Posts Plugin for WordPress, Blogger...