ஆல்மோஸ்ட் அதிகாரப்பூர்வ ஊர்தி: நம்ம ஆட்டோ.
வலதுபக்க மாடல்: கோவை ஆவி.
புத்தகக்காட்சியின் இரண்டாம் நாள்(ஞாயிறு)
இரவு. சிறிது நேரம் கேபிள் சங்கருடன் உலா. உணவகத்தில் டெல்லி அப்பளம் சாப்பிட
றெக்கை கட்டி பறக்க துவங்கினார். பெரிய தட்டு அகலத்தில் இருக்கும் அப்பளத்தின்
மேனியில் மசாலாத்தூவல். ருசி பார்த்துவிட்டு வெளியே வந்தால் அதிஷா, சுரேகா தென்பட....ஸ்டான்ட் அட் ஈஸ். அருகில் இருந்த 'மினிமெல்ட்ஸ்' குளுகுளு கூல் பற்றி அதன் ப்ராண்ட்
அம்பாசிடர் சுரேகா பேசியதோடு ஒரு ஐஸ்க்ரீம் கப்பையும் எடுத்து வந்து ருசி பார்க்க
சொன்னார். சின்னஞ்சிறு பூந்தி சைசில் இருந்த அந்த ஐஸ்க்ரீம் -48 டிகிரியில் குளிரூட்டப்பட்டது என்றவர் சொல்ல 'என்ன
இருந்தாலும் சாப்பிட்டதுக்கு அப்பறம் டேஸ்ட் நிக்கல' என்று
நின்றவாறே அடுப்பை பற்ற வைத்தார் கேபிள். இருவரும் சிறிது நேரம் ஆக்ஸா ப்ளேடில்
கீறிக்கொள்ள சம்பிரதாயத்திற்கு ஒரு துளியை உட்தள்ளினேன்.
நாள் மூன்று(திங்கள்): கோவையில் இருந்து 'உலக சினிமா ரசிகன்' பாஸ்கரன். நேரில் சில முறை அவரை
சந்தித்து இருந்தாலும் மனம் விட்டு பேச வாய்ப்பின்றி போனது. அக்குறை அன்றைய தினம்
நிவர்த்தி செய்யப்பட்டது. இருவருமாக அரங்கினுள் நுழைந்தோம். முந்தைய ஆண்டுகளில்
ஸ்டால் போட்டிருந்ததால் உள்ளே அவருக்கு பல ஸ்டாலாதிபதிகள் வழி நெடுக வணக்கம்
வைத்தனர். பரஸ்பரம் இவரும். சினிமா, அரசியல் தாண்டி புத்
க்கக்காட்சி மற்றும் கண்ணில் பட்ட சில புத்தகங்கள் உருவான பின்னணி குறித்து
பல்வேறு தகவல்களை காலாற நடந்தவாறே அள்ளித்தந்தார் பாஸ்கரன்.
மதிய உணவு வேளை நெருங்கியதால் 'சாப்பிட வாங்க' கூடாரத்தினுள் நுழைந்தோம். கடந்த காலத்தில் கொச
கொசவென்றிருந்த உணவக மையம் இம்முறை சிறப்பாக பராமரிக்கப்பட்டு இருந்தது. அட்வான்ஸ்
பில் வாங்கும் இடத்தில் நின்றிருந்த நேரம் பார்த்து 'பிலாசபி சொன்ன கரிசக்காட்டு மைனா இதுதானா?' எனக்கூவினார்
உ.சி.ர. 'இப்படியா உசிர வாங்கணும்?' என
டென்ஷன் ஆகி டாபிக்கை வேறு பக்கம் திருப்பினேன். அக்குயிலை பார்ப்பதற்காகவே மேலும்
சிலமுறை கவுண்டர் பக்கம் போய் வரச்சொன்னது படவா ராஸ்கோல் மனசு.
சாதங்கள், சாதா தோசை எல்லாம் ரூ50,
60 க்கும், மூன்று மினி பஜ்ஜிகள் 30 ரூபாய்க்கும், காலி பிளவர் பக்கோடா ரூ.40 க்கும் விற்கப்படுகின்றன. தரம் ஓகே தான். 'இப்படி
அநியாயத்துக்கு விக்கறாங்களே? அந்த காசுக்கு இன்னும் ரெண்டு
புக்கு வாங்கிடலாம்?' என்று சில அம்பிமார்கள் இணையத்தில்
அலறினர். தூரத்தில் இருந்து புத்தகங்கள் வாங்க வருபவர்களுக்கு இதை விட்டால் வேறு
சாய்ஸ் இல்லை. அதுபோக தரத்தில் பெரிய குறை இல்லாததால் சபிப்பதிலும் அர்த்தமில்லை.
பழைய புத்தகங்களை புதுக்கவர் போட்டு 30 அல்லது 40 ரூபாய் அதிகம் வைத்து விற்கும் அராஜகம் புத்தகக்காட்சி அரங்கினுள் நடப்பதை
தட்டிக்கேட்க வக்கில்லாதவர்கள் ஷங்கர் பட ஜூனியர் ஆர்டிஸ்ட் போல பொங்குவது பெரிய
காமடி.
அப்படியே வெளியே சென்று சாப்பிட நினைத்தாலும்
கஷ்டப்படத்தான் வேண்டும். ஒய்.எம்.சி.ஏ. அருகில் தரம் மற்றும் நியாயமான விலை கொண்ட
ஹோட்டல்கள் இல்லை. இடதுபக்கமாக சற்று தூரம் பயணித்தால் புஹாரி மட்டுமே. விலை பற்றி
சொல்ல வேண்டியதில்லை. வலதுபுறம் கொஞ்சம் நடந்து பெரியார் மாளிகை அருகே போனால் ஜனதா
சைவ உணவகம். அதுவும் பொங்கல் விடுமுறை என்பதால் கையேந்தி பவன் உட்பட பல உணவகங்கள்
மூடியே இருக்கும். அதையும் மீறி தேடித்துருவி ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு
மீண்டும் வண்டியை பார்க் செய்து நீண்ட நடை நடந்து புத்தகம் வாங்க யார்தான்
முன்வருவார்கள்? குறிப்பாக குடும்பத்துடன் வருவோருக்கு அது எந்த
அளவிற்கு சாத்தியம்? வாய் புளித்ததோ, Maaza புளித்ததோ? அறியாமல் மனதில் பட்டதை கூறிவிடுகிறார்கள். பல் இருப்பவர் பக்கோடா
சாப்பிட்டுவிட்டு போகட்டுமே!!
பிரதான அரங்கின் அருகிலேயே நம்ம ஆட்டோ ஸ்டான்ட்.
நியாயமான ரேட்டில் வாடிக்கையாளர்களை அழைத்துச்சென்ற வண்ணம் இருந்தது. அதில் உலக
சினிமா ரசிகன் மற்றும் கோவை ஆவியுடன் பயணித்தபோது அருகே வந்த இன்னொரு நம்ம ஆட்டோ ஓட்டுனர்
''20, 30 ரூபாய்க்கு எத்தனை ட்ரிப் தான் அடிக்கறது''
என்று 'எங்கள்' நம்ம
ஆட்டோ ஓட்டுனரிடம் சலித்துக்கொண்டார்.
அன்றைய நாளில் நான் வாங்கிய பெரும்பாலான
புத்தகங்கள் உலக சினிமா ரசிகனின் பரிந்துரை:
இமையத்தின் 'செடல்'
நாவல். வெளியீடு: க்ரியா.
பக்கங்கள்: 244. ரூ.210.
பக்கங்கள்: 244. ரூ.210.
கே.வி. ஷைலஜாவின் 'மூன்றாம் பிறை' நடிகர் மம்முட்டியின்
வாழ்வனுபவங்கள். வெளியீடு: வம்சி. பக்கங்கள்: 128. ரூ.80.
ரா.கி. ரங்கராஜனின் 'பட்டாம்பூச்சி'. வெளியீடு: நர்மதா.
பக்கங்கள்: 856. ரூ.300.
பக்கங்கள்: 856. ரூ.300.
சஃபியின் 'என்றார் முல்லா'.
வெளியீடு: உயிர்மை.
பக்கங்கள்: 270. ரூ.160.
பக்கங்கள்: 270. ரூ.160.
ஊர்மிளா பவாரின் 'முடையும் வாழ்வு'. வெளியீடு: விடியல்.
பக்கங்கள்: 394. ரூ.250.
பக்கங்கள்: 394. ரூ.250.
கி.ராஜநாராயணனின் 'கோபல்ல கிராமம்'. வெளியீடு:
அன்னம்.
பக்கங்கள்: 176. ரூ.120.
பக்கங்கள்: 176. ரூ.120.
கி.ராஜநாராயணனின் 'கோபல்லபுரத்து மக்கள்'. வெளியீடு: அன்னம்.
பக்கங்கள்: 272. ரூ.150.
பக்கங்கள்: 272. ரூ.150.
கி.ராஜநாராயணனின் 'கரிசல் காட்டுக்கடிதாசி'. வெளியீடு: அன்னம்.
பக்கங்கள்: 272. ரூ.150.
பக்கங்கள்: 272. ரூ.150.
மணாவின் 'எம்.ஆர். ராதா -
காலத்தின் கலைஞன்'. வெளியீடு: உயிர்மை.
பக்கங்கள்: 216. ரூ.170.
பக்கங்கள்: 216. ரூ.170.
தியடர் பாஸ்கரனின் 'எம் தமிழர் செய்த படம்'. வெளியீடு: உயிர்மை.
பக்கங்கள்: 176. ரூ.100.
பக்கங்கள்: 176. ரூ.100.
மேற்கண்ட புத்தகங்கள் வழக்கம்போல 10% தள்ளுபடியில் கிட்டின. அதுபோக உ.சி.ர. பாஸ்கரன் பரிந்துரையில் மேலும் சில
% தள்ளுபடி கிடைத்தது.
இதுபோக பாஸ்கரன் அவர்கள் அன்பளிப்பாக
வாங்கித்தந்தவை:
மர்ஜானோ சத்ரபியின் இரண்டு நூல்கள்:
'ஈரான் - திரும்பும் காலம்' மற்றும்
'ஈரான் - ஒரு குழந்தைப்பருவத்தின் கதை'.
தகவல்களுக்கும், அன்பிற்கும் நன்றிகள் பல பாஸ்கரன் சார்.
அனைத்து புத்தகங்களையும் வீட்டில் இளைப்பாற
வைத்து விட்டு மீண்டும் ஒய்.எம்.சி.ஏ. பக்கம். பேச்சரங்கில் சிறப்பு விருந்தினராக
தமிழருவி மணியன். இன்பத்தேன் காதினில் பாய சில மணித்துளிகள் அங்கே கரைந்தது.
இவ்வுற்சவத்தில் கலந்துகொள்ள இயலாத
அன்பர்களுக்காக சிறப்பு வாசல் ஒன்றும் திறக்கப்பட்டிருக்கிறது:
2014 சென்னை புத்தகக்காட்சி - அடுத்த பாகம் விரைவில்...
................................................................
6 comments:
வருங்கால கவிஞர இப்படி மாடலாக்கி நிறுத்திட்டீங்களே.. (யாராவது ஓட்ட ஆரம்பிக்கறதுக்கு முன்னே நாமே சொல்லிடுவோம்)
பரிந்துரை செய்த உலக மகா ரசிகன் ஐயாவிற்கு நன்றிகள்...
கொடுத்து வச்சவிங்க நீங்க அனுபவிங்க அனுபவிங்க...!
அடுத்த பதிவும் எடுத்த படங்களும் எங்கே? இரண்டு நாட்கள் ஆகிவிட்டன நண்பரே!
ஆம் எங்கே? ஆத்மி எங்கே?
Post a Comment