CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, January 16, 2014

2014 சென்னை புத்தகக்காட்சி - 2


   'சந்தையில் இரண்டு சிங்கங்கள் எதிரெதிர் திசையில் சந்தித்தபோது பேச   முடியவில்லையே...'

சனிக்கிழமை மாலை எட்டு மணி walkகில் புத்தகக்காட்சியை முடித்துவிட்டு ஒய்.எம்.சி.ஏ. வாசலை நெருங்கிக்கொண்டிருந்த சமயம். உண்மைத்தமிழன் அண்ணாச்சி கண்ணில்பட்டார். ஓரிரு வார்த்தைகள் பேச ஆரம்பித்த சமயம் உ.த.வை நோக்கி ஒருவர் வேகமாக நடந்து வந்து சட்டென நலம் விசாரித்த பிறகு 'உங்க blog வாசகர் ஒருத்தர் அங்க நிக்கறார். ஒரு நிமிஷம்...கூப்பிடறேன்'. எம்மிடம் அந்நபரை அறிமுகம் செய்துவிட்டு பார்க் செய்த வண்டியை எடுக்க கிளம்பினார்.  

'வணக்கம் உண்மைத்தமிழன் சார். என் பெயர் பத்மநாபன். சில மாசங்களுக்கு முன்ன உங்க blog பத்தி கனகு சொன்னார். அதுல இருந்து தொடர்ந்து படிக்கறேன். குறிப்பா சினிமா சார்ந்த செய்திகளை..'. லேசான மகிழ்ச்சி இருந்தாலும் பிறரைப்போல முகஸ்துதி செய்கிறாரோ என்று 'நிஜமாவா சொல்றீங்க?' என அழுத்தினார் அண்ணாச்சி. 'உண்மைத்தமிழன்' தளத்தில் தான் படித்த பதிவுகளை பட்டியலிட்ட பிறகு உ.த.வின் நம்பிக்கை வலுப்பெற்றது. 'தங்கள் தளம் முடங்கிப்போனது வருத்தமாக உள்ளது. விரைவில் மீட்டெடுங்கள் என அன்புக்கட்டளை இட்டார் பத்மநாபன்.

'ஆமா உங்களுக்குத்தான் கண்ணு தெரியாதே? எப்படி படிக்கறீங்க?' என உ.த. வினவ 'NVDA (Non Visual Desktop Access) எனும் பிரத்யேக மென்பொருள் உதவி யுடன் படிக்கிறேன். திரையில் உள்ள வார்த்தைகளை குரல் மூலம் சொல்வது இதன் சிறப்பு' என்றார் பத்மநாபன். அண்ணாச்சியின் மொபைல் என்னை அவரது மொபைலில் டைப் செய்தபோது ஒவ்வொரு எண்ணும் உச்சரிப்பாக ஒலிப்பதை எம்மிடம் காட்டினார். உற்சாகம் பொங்க மேலும் சில வார்த்தைகள் பேசியபிறகு விடைபெற்றார் பத்மநாபன். உண்மைத்தமிழன் ஒரு கணம் உறைந்து போய் நிற்க அதற்கான காரணம் எனக்கு விளங்கியது. 'இப்படியும் ஒரு வாசகரா?'  பிரமிப்பு அகலாமல் என்னிடமிருந்து விடைபெற்றார். அந் நெகிழ்வான தருணத்தில் சங்கமித்த பூரிப்பு என் மனதை நிரப்பியது. பொதுவாக 'என்னத்த வாழ்ந்து..' என்று என்னத்த கண்ணையா போலவே பேசுவது உ.த.வின் வழக்கம். ஆனால் அந்த நாள் கண்டிப்பாக அவரது இயல்புத்தன்மையை புரட்டிப்போட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. 

உயிர்மை ஸ்டால் அருகே சாரு மற்றும் மனுஷ்யபுத்திரனுடன் நான்...
 
ஞாயிறு(நாள் இரண்டு):  புது வரவாக அஞ்சாசிங்கம். வெள்ளை ஜிப்பா, குறுந்தாடி சகிதம் பிலாசபியுடன் வீரநடை போட்டுக்கொண்டு இருந்தார். இதர தோழர்களுடன் அகநாழிகை ஸ்டாலை அடைந்தோம். பூப்போட்ட சட்டையுடன் கவியாழி!! இருவரையும் சேர்த்து வைத்து அந்த அரிய ஸ்டில்லை எடுத்தோம். புதுகை அப்துல்லா, செல்லப்பா, ரோஸ்விக், அரசன், நேசமித்ரன் உள்ளிட்ட இணைய அன்பர்களை சந்தித்தேன். உயிர்மை ஸ்டால் இருக்கும் வரிசையில் உலா வந்தபோது சலசலப்பு சத்தம் அதிகமாக என்னவென்று பார்த்தால் எஸ்.ரா, சாரு மற்றும் மனுஷ்யபுத்திரன் மூவரும் ஓரிடத்தில். சாருவிடம் சற்று அளவளாவிவிட்டு ஒரு ஸ்டில் எடுத்துக்கொண்டேன். 


அதன் பிறகு முகாமிட்டது திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம் ஸ்டால் 273. பேரறிவாளன் குறித்த பிரத்யேக நூல்கள் மற்றும் டி.வி.டி.க்கள் விற்பனைக்கு இருந்தன. அங்கமர்ந்திருந்த பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் அவர்களுடன் பேச வாய்ப்பு கிட்டியது. 'எப்படியும் அவன் வெளில வந்துருவாம்ப்பா' எனும் நம்பிக்கை அவரது குரலில் வலுவாக ஒலித்தாலும், பல்லாண்டு போராட்டம் மற்றும் ஏக்கத்தால் ஏற்பட்ட களைப்பு அத்தாயின் மனதில் குடி கொண்டிருந்ததை உணர முடிந்தது. விடை தெரியாமல் காத்திருக்கிறோம் நாமும்....

அதே அரங்கில் 'தங்க மீன்கள்' இயக்குனர் ராம் பிரவேசிக்க இளைஞர் படை அவருடன் போட்டோ எடுக்கவே பிரயத்தனம் செய்து கொண்டிருந்தது. போட்டோ செஷன் தொடர்ந்து கொண்டிருக்க நேரமானதால் அவரை தனியே அழைத்து 'கற்றது தமிழ்' குறித்து மனதில் தேக்கி வைத்திருந்த சில கேள்விகளை முன் வைத்தேன். IT/BPO துறையில் இருப்பவர்களுக்கு எதிராக வன்முறை மனோபாவத்தை நாயகனுக்கு உண்டாக்கியது நடைமுறைக்கு ஒப்பவில்லை என்றும், சில ஆயிரங்களுக்கு கொத்தடிமை போல வேலை பார்க்கும் சாப்ட்வேர் இளைஞர்களை எப்போது தமிழ் சினிமா பிரதிபலிக்கும் எனும் கேள்விக்கு 'எனது அடுத்த படமான 'தரமணி'யில் இதற்கான பதில் நிச்சயம் கிடைக்கும்' என பதில் சொன்னார் ராம். பார்க்கலாம்!!  

இரண்டாம் நாளில் நான் வாங்கிய புத்தகங்கள்: 

விந்தன் எழுதிய 'எம். ஆர். ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள்'. வெளியீடு: கோணம். பக்கங்கள்: 143. விலை ரூ.90.  

இயக்குனர் மகேந்திரனின் 'சினிமாவும் நானும்'. வெளியீடு: கற்பகம் புத்தகாலயம். பக்கங்கள்: 368. விலை: 250.

மின்னல் எழுதிய 'விலகி ஓடிய கேமரா'. வெளியீடு: வம்சி. பக்கங்கள் 176. விலை 120.  

'உயிர்வலி' பேரறிவாளன் பற்றிய ஆவணப்படம். நீளம்: 1 மணி நேரம். விலை ரூ.90.

இத்துடன் நடையைக்கட்ட உத்தேசித்த சமயம் ஒரு அரும்பு மீசை 'செல்லமே' எனும் சிறுவர் மாத இதழை வாங்கிக்கொள்ள பணித்தான். மறுத்தும் விடவில்லை. பதிவர்களுடன் சினிமா நாயகிகள் குறித்து பேசிக்கொண்டிருக்க அவனும் அதில் சங்கமித்து புத்தகத்தை விற்கும் யுக்தியில் கண்ணும் கருத்துமாக இருந்ததால் அத்தம்பியின் சாமர்த்தியத்திற்காக ஒரு பிரதி வாங்கினேன். விகடன் சைஸ் இருக்கிறது. 46 பள பளா பக்கங்கள் 50 ரூபாயாம். சந்தையில் ரூ.40. 

பர்சேஸ் முடிந்து வெளியே நடக்க ஆரம்பித்தேன். பத்தடிக்கு ஒரு தம்பியும், அண்ணனும் 'அண்ணா சுண்டல் வாங்கிக்கங்க'. நிலவொளி. புற்தரை. சுண்டலைக்கவ்வியவாறு சுற்றப்பட்ட காகிதத்தை நோட்டம் விட்டால்... 'நான் எப்பேர்பட்ட பதிவர் தெரியுமா?' என்று சிலுப்பு காட்டி வரும் நபரின் புத்தகம் ஒன்றின் பக்கமது. தெறித்து சிரித்ததில் ரூ.1 மதிப்புள்ள சுண்டல் தரையில் உருண்டோட.... கடவுளே கடவுளே!!  
 
ஐஸ்க்ரீம் பஞ்சாயத்து & கரிசக்காட்டு மைனா குறிப்புகள் விரைவில்....

..............................................................................
5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பத்மநாபன் அவர்களின் ஆர்வம் வியக்க வைத்தது...!

சீனு said...

// இயல்புத் தன்மையை புரட்டிப் போட்டிருக்கும் // மெட்ராசின் பிலாசபிகள் அட்ரா அட்ரா அட்ரா :-)

காட்சிப்பிழையின் மிக பழைய இதழ்களை விற்பனைக்கு வைத்திருந்ததார்கள், முடிந்தால் ஓர் எட்டு பார்த்துவிடவும்.. வாங்காத இதழ்கள் இருந்தால் வாங்கிக் கொள்ளலாமே

MANO நாஞ்சில் மனோ said...

நான் எப்பிடிபட்ட பதிவர் தெரியுமா//

ஹா ஹா ஹா ஹா யாரோ சதி செஞ்சிட்டாங்க போல தெரியுதே....

சாரு'க்கு இம்புட்டு வயசாகிடுச்சா ? !

கவியாழி said...

நாஞ்சில் எந்த சாரை சொல்லுகிறீர்கள்.

sarav said...

ungalai neril santhithathu mikka magizhchiyaga irundhadhu ! ungaludun Aroor moona(marakkara ooruvama athu ! ), Philosophy , matrum iruvar irundhargal aanal ennal avargalai nyabaga paduthu mudiyavillai... vayathagi vittathal varum kodumai !

Related Posts Plugin for WordPress, Blogger...