CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, January 15, 2014

2014 சென்னை புத்தகக்காட்சி - 1


நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.வில் ஜனவரி 10 ஆம் தேதி கனஜோராக தொடங்கியது சென்னை புத்தக காட்சி. 'காலம் முழுக்க என்னதான் கம்ப்யூட்டர நோண்டுனாலும் புத்தகம் வாங்கி படிக்கலன்னா சாமி கண்ண குத்திடும்' என்று ஒளிவட்ட ஆசாமிகள் சீசன் தொடங்குவதற்கு முன்பு ஏகப்பட்ட டீசர் விட்டார்கள். ஆம் ஆத்மியாக திரிந்த பதிவர்கள் மற்றும் இதர இணைய நண்பர்கள் திடீர் எழுத்தாளர்கள்/கவிஞர்கள் ஆக உருமாறி வாசகனை ஒரு கை பார்க்க சபதம் பூண்டு தங்கள் புத்தக வெளியீட்டில் மும்முரமாக களப்பணி ஆற்றிக்கொண்டு இருந்தார்கள். நமது பொழுதுபோக்கிற்கு இம்முறையும் உத்திரவாதம் உறுதியானது. எல்லாம் அவன் செயல்!!

சனியன்று மாலை முதல் விசிட். கூட்டம் அம்மும் என எதிர்பார்த்தேன். அவ்வாறில்லை. இரண்டாம் நாளென்பதால் இனிதான் 'க்ரவ்ட்' வர வாய்ப்புண்டு என்றது ஒரு குரல். யாருப்பா அது க்ரவ்டு? பிரதான இடத்தை அடைந்ததும் சில மாற்றங்களை காண நேர்ந்தது. சென்ற முறை புத்தக அரங்கை நோக்கி நடப்போருக்கு சங்கடம் தரும் விதமாக இருந்த பேச்சரங்கம் இம்முறை வேறு பக்கம் மாற்றப்பட்டு இருந்தது. மேடையின் ஓரங்களில் ஜீ தமிழ் சீரியல் ஆன்ட்டிகளின் ஆதிக்கம். மொபைல் ப்ளாஸ்டிக் கழிவறைகளுக்கு பதிலாக தற்காலிக பீங்கான் கழிவறைகள் சுத்தமாக பராமரிக்கப்பட்டு இருந்தன. 

10 ரூபாய் நுழைவுச்சீட்டை வாங்கிவிட்டு உள்ளே நுழைந்தேன். சென்ற முறை இருந்த கச கசப்புகள் பெரிதும் இல்லை. விஸ்தாரமான நடைபாதை, ஆங்காங்கே குடிக்க (இலவச) குடிநீர் உள்ளிட்ட பல முன்னேற்றங்கள். சந்தித்த பதிவர்கள்: பிலாசபி பிரபாகரன், ஆரூர் முனா செந்தில்,  கோவை ஆவி, பாலகணேஷ், சீனு, ஸ்கூல் பையர் சரவணர், ரூபக். பெயர் விடுபட்டிருப்பின் கூறவும் அல்லது தயவு செய்து கோபித்து கொள்ளவும்.

'அது அருமையான புக். இது இன்னும் பிரமாதம்' என்று ஆரூர் முனாவை உசுப்பேற்றி பிலாசபி தனக்குபிடித்த புத்தகங்களை வாங்க வைத்தார். இந்த ராஜதந்திரம் புரியாமல் வெள்ளந்தியாக பணத்தை கரைத்தார் ஆரூர். நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே. நம்மளும் அந்த புக்கை வாங்கி படிச்சிடுவோம்' என்று நானும் புத்தகம் வாங்காமல் வேடிக்கை மட்டும் பார்க்க ஆரம்பித்தேன். அந்நேரம் பார்த்து கரகாட்டக்காரன் செந்திலின் வசனம் மனத்திரையில் விருட்டென தோன்றி மறைந்தது: 'ஒல்லியா இருக்கறவன் எல்லாம் சூதுவாது புடிச்சவன். குண்டா இருக்கறவன் எல்லாம் கள்ளங்கபடம் இல்லாதவன்'.

                                               ரோஸ்விக், புதுகை அப்துல்லா, அகநாழிகை வாசு, மணிஜி   

தன்னம்பிக்கை புத்தகம் எழுதுவதில் அசாத்திய தன்னம்பிக்கை கொண்ட சுரேகா அவர்களை சில நாட்களுக்கு முன்பு சந்தித்து பேசினேன். அப்போது அவரெழுதிய 'தலைவா வா' புத்தகம் மீது எனக்கிருந்த சில மாற்றுக்கருத்துகளை சுட்டிக்காட்டி 'எஸ்கேப்' புத்தகத்தில் அதற்கான விடை உள்ளதென சொல்லி இருந்தார்.  எனவே புத்தக காட்சியில் 'எஸ்கேப்'பைத்தான் முதலில் வாங்கினேன். அடுத்து அசோகமித்திரன் எழுதிய 'பயாஸ்கோப்'. ஜெமினி ஸ்டுடியோவில் சில காலம் பணி புரிந்த அவரது அனுபவங்களை புத்தகமாக்கி இருக்கிறார். கிடைக்குமிடம்: புதுப்புனல்(அகநாழிகை. ஸ்டால் 666,667).

பதிவர்கள் மத்தியில் நன்கு பரிச்சயமான டிஸ்கவரி புக் பேலஸ்(ஸ்டால் 307, 308, 353, 354) வேடியப்பன் மற்றும் அகநாழிகை வாசுதேவன், மணிஜி ஆகியோருக்கு வணக்கம் வைத்து விட்டு நடைப்பயணத்தை தொடர்ந்தோம். ஒரு சுற்று முடித்து மீண்டும் டிஸ்கவரி வாசலில் ஐக்கியம். கல்லூரி வரை 'முதல் பெஞ்ச்' மாணவர் கேரக்டராகவே வாழ்ந்தது போல் தோற்றமளித்த ஒருவரிடம் பிலாசபியும், ஆரூரும் என்னமோ ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்கள். விசாரித்ததில் அவர்தான் வா.மணிகண்டன் என்றார்கள். முதன் முறை பார்த்ததால் மில்லி மீட்டர் சிரிப்புடன் நிசப்தமானேன். அவருடைய வலைப்பூ படிக்க நன்றாக இருக்கும் என சில பதிவுலக நண்பர்கள் சொல்லக்கேள்வி. நேரம் அமைந்தால் வாசிக்க உத்தேசம். ஆனால் கமண்ட் போடும் ஆப்சனை மூடி வைத்திருக்கிறார். அதுதான் உறுத்துகிறது. ஒருவேளை சண்டையில் கிழியாத சட்டை அவரிடம் இல்லாமல் இருக்கலாம். கூல்!!

'மேயற மாட்டை நக்கற மாடு கெடுத்த மாதிரி' மேலோட்டமாக புத்தகங்களை நோட்டம் விட்டுக்கொண்டிருந்த என்னை 'லேட்டஸ்ட் அலப்பறை' எழுதிய காவிய புத்தகங்கள் வசம் திருப்பி விட்டார் வில்லங்கம் ஒருவர். தற்கொலை குறுங்கதைகள் என தலைப்பிடப்பட்டு இருந்தது. 'என்னடி இங்க லுக்கு? அவுத்து போட்டா ஆடறாங்க?' டெம்ப்ளேட்டில் மாநகர ஆன்ட்டிகள் சிலர் செம கலீஜாக வெளுத்துக்கட்டும் சொற்களுக்கு ஈடாக எதையோ சொல்ல ஆசிரியர் அநியாயத்திற்கு முயன்றிருக்கிறார். நாலு வரிகள் கொண்ட கதைகள் கூட அதில் அடக்கம். கேட்டால் குறுங்கதையாம். குறுங்கதையின் கொள்ளுப்பேத்தி என்றால் கூட நம்ப முடியாது. அந்த காலத்துல கோவில் பாறைலயும், கக்கூஸ் செவுத்துலயும் மெர்சலா எழுதி காசு பாக்காம போன முட்டாள்களே. பாவம்யா  நீங்க!!

நீண்ட நேரம் நடந்து மூட்டு நட்டு பேஜார் செய்ததால் பேச்சரங்க மேடை பக்கம் இளைப்பாறினேன். அட பாரதி கிருஷ்ணகுமார்!! ஆவல் பொங்க மொத்தப்பேச்சையும் கேட்டு மகிழ்ந்தேன். பாரதி, விவேகானந்தர் இருவரும் பலமுறை அவரது நாவில் நர்த்தனம் ஆட, இடையிடையே மேடையில் இருந்த பிரபலங்களை பார்த்தும் உரையாற்றியனார். எங்கே பார்வையை அவர் பேசுமிடத்தில் செலுத்தாமல் விட்டால் மைக்கால் அடிப்பாரோ எனும் அச்சமும் அவர்களை தொற்றி இருக்கலாம். எளியோர்க்கும் புரியும் வண்ணம் சிறப்பான பேச்சு. நன்றியும், வாழ்த்துகளும் பாரதி.
 
அதன் பிற்பாடு இரவு கவ்வ ஆரம்பித்ததும் விடைபெற எத்தனித்தேன். 'என்னோட 'சாப்பாட்டுக்கடை' புத்தகம் வாங்காம என்னைய்யா பண்ணிட்டு இருக்க'....துரத்த ஆரம்பித்தார் இயக்குனர் கேபிள் சங்கர். கையில் காசில்லாததால் மினிச்சிரிப்பை மட்டும் உதிர்த்துவிட்டு எஸ்கேப்புடன் எஸ்கேப் ஆனேன்.


.......................................................

அடுத்து வருவது:.

சுடச்சுட ஐஸ்க்ரீம் பஞ்சாயத்து பேசிய பிரபல பதிவர்கள்.

அதிரடி காஸ்ட்யூமில் கட்டிப்பிடித்த இரு சிங்கங்கள்.

பில் கவுண்டரில் கண்ட கரிசக்காட்டு மைனா.


...........................................................

  

13 comments:

சீனு said...

//கோபித்துக் கொள்ளவும்// பார்த்து மெட்ராஸ் கோபித்து கொல்லபோகிறார்கள் :-)))

Philosophy Prabhakaran said...

சந்தித்த பதிவர்கள் லிஸ்டில் கவியழி கண்ணதாசன் பெயர் விடுபட்டுள்ளது... ஒருவேளை அவர் கவிஞர் என்பதால் பதிவர் லிஸ்டில் சேர்க்கவில்லையா ?

Philosophy Prabhakaran said...

// அவரெழுதிய 'தலைவா வா' புத்தகம் மீது எனக்கிருந்த சில மாற்றுக்கருத்துகளை சுட்டிக்காட்டி 'எஸ்கேப்' புத்தகத்தில் அதற்கான விடை உள்ளதென சொல்லி இருந்தார். //

இது ஒரு வியாபார யுக்தி... அது தெரியாமல் வாங்கியாச்சா... சரி விடுங்கள், எஸ்கேப்பில் உள்ள குறைகளுக்கு அவருடைய அடுத்த தன்னம்பிக்கை புத்தகத்தில் விடைகள் இருக்கும்...

Philosophy Prabhakaran said...

// அவருடைய வலைப்பூ படிக்க நன்றாக இருக்கும் என சில பதிவுலக நண்பர்கள் சொல்லக்கேள்வி. //

ஆகக்க, சனியன் வா.மணிகண்டனுக்கு ஜடை பின்ன ஆரம்பிச்சிடுச்சு...

Philosophy Prabhakaran said...

// பில் கவுண்டரில் கண்ட கரிசக்காட்டு மைனா. //

இது நம்ம ஏரியா கண்ணா... முதலில் அம்மையாரை கண்டுகொண்டதும் அடியேன் தான்... ஃபேஸ்புக்கில் இரண்டு நாட்களுக்கு முந்தய ஸ்டேட்டஸ் பார்க்கவும்...

MANO நாஞ்சில் மனோ said...

புத்தக கண்காட்சி அல்ல அது புத்தக திருவிழா'ன்னு சொல்லணும்...!

! சிவகுமார் ! said...

@ சீனு

வணக்கம் நல்ல தம்பி.

! சிவகுமார் ! said...

@ பிலாசபி

- கவியாழியை சந்திச்சது இரண்டாம் நாளில்.

- யோவ் நான் அந்த யுக்தியை நம்பி எஸ்கேப் வாங்கல.

- கரிசக்காட்டு மைனா. என்னது உங்க ஏரியாவா? அதெல்லாம் உங்க ஏரியால புக் பேர் நடந்தா. இப்போதைக்கு நாங்கதான் ஜவாப்தாரி. நித்தம் பாப்போம்.

! சிவகுமார் ! said...


//MANO நாஞ்சில் மனோ said...

புத்தக கண்காட்சி அல்ல அது புத்தக திருவிழா'ன்னு சொல்லணும்...!//

அண்ணே. விளம்பரத்துலயே சென்னை புத்தகக்காட்சின்னு தான் சொல்றாக.

aavee said...

//கரிசக் காட்டு மைனா //

புத்தக கண்காட்சிக்கு தானே போனீங்க!!

பால கணேஷ் said...

அடடா... அந்த மைனாவை நான் மட்டும்தான் கவனிச்சு வெச்சிருக்கேன்னுல்ல இதுவரைக்கும் நெனச்சுட்டிருந்தேன்1 இப்பல்ல தெரியுது... போட்டி பலமா இருக்குன்னு!

! சிவகுமார் ! said...

@ ஆவி

அட தமன்னாவின் 'வீரம்' பாக்குறப்ப அஜித்தையும் பாக்குறோம்ல. அது போலத்தான்.

! சிவகுமார் ! said...

@ பால கணேஷ்

சார் கண்காட்சி முடியறதுக்குள்ள ஒரு வெட்டுக்குத்தே நடக்கலாம். எல்லாரும் டூ ஸ்டெப் பேக்!!

Related Posts Plugin for WordPress, Blogger...