'வருடக்கடைசியில்
வந்தாலும் இவ்வாண்டின் மிகப்பெரிய வெற்றிப்படம் இதுதான்', '300 கோடிகளை
கலெக்ட் செய்து வசூல் சாதனை படைக்கும்' என சர்வநிச்சயமாக இந்திய சினிமா
வட்டாரங்கள் கணித்த தூம் - 3 இன்று ரிலீசாகி விட்டது. ஆமிர் கான், காத்ரீனா
கைப் என ஹெவியான மெகா ஸ்டார்களும் இடம்பெற ரசிகர்களின் உற்சாகம் எப்படி
இருக்கும் என்று அளவிட இயலாது. அதுபோக இப்படத்துடன் போட்டி போட வேறெந்த
படமும் இல்லாததால் யஷ் ராஜ் பிலிம்ஸ் காட்டில் பேய்மழைதான்.
தூம்
சீரிஸ் படங்களில் ஒரு டெம்ப்ளேட் சமாச்சாரம் பின்பட்டற்றப்படுவது உண்டு.
அது திருடன் போலீஸ் விளையாட்டு. ஒவ்வொரு முறையும் இண்டர்நேஷனல் கில்லியாக
சவால் விடும் திருடனை மடக்க அபிஷேக் பச்சன் வலை விரிப்பார். ஆனால் அவருக்கு
டேக்கா குடுத்து தப்பிப்பான் அந்த சோர். தூம் - 2 வில் இருந்த
சமாச்சாரங்களை(அபிஷேக், உதய் சோப்ரா இத்யாதி) ஆங்காங்கே வைத்துவிட்டு
திருடன், அவனுடைய காதலி கேரக்டரில் மட்டும் சமகால மெகா ஸ்டார்களை புகுத்தி
விடுவார்கள். இங்கும் அப்படியே.
சிகாகோ
நகரில் 'இந்தியன் சர்க்கஸ்' நடத்தி வரும் நபரொருவர் வங்கியில் வாங்கிய
கடனை அடைக்க இயலாமல் தத்தளிக்கிறார். 'என்னால் புது யுக்தியை பயன்படுத்தி
மீண்டும் சர்க்கஸ் கம்பனியை வெற்றி பெறச்செய்ய முடியும். இறுதியாக ஒரு
முறை எனது ஷோவை பாருங்கள். அதன்பிறகு நடவடிக்கை எடுங்கள்' என
கெஞ்சுகிறார். அதற்கு ஒப்புக்கொள்ளும் அதிகாரிகள் ஷோவையும்
பார்க்கிறார்கள். ஆனால் சாகசங்கள் திருப்திகரமாக இல்லை. இடத்தை காலி
செய்து தாருங்கள் என்று கட்டளை இடுகிறார் வங்கியின் முதன்மை அதிகாரி.
அதிர்ச்சியில் தற்கொலை செய்து கொள்கிறார் அந்நபர். அக்காட்சியை கண்முன்
காணும் அவரது சிறு வயது மகன் அந்த வங்கியை நாசம் செய்வதென
முடிவெடுக்கிறான். அச்சதியை முறியடிக்க வரும் இ ந்திய போலீஸ் அதிகாரி
மற்றும் அமெரிக்க காவற்படைக்கு அவன் காட்டும் கண்கட்டி வித்தைதான் கதை.
கிட்டத்தட்ட
மொத்த படத்தையும் சிகாகோ நகரில் எடுத்திருப்பதால் ஒவ்வொரு சீனிலும் ரிச்
லுக் நீக்கமற. வங்கிப்பணத்தை தெருக்களில் சிதறவிட்டு பைக்கில் பறந்தவாறே
ஆரவாரமாக என்ட்ரி தருகிறார் ஆமிர் கான். இரு கட்டிடங்களுக்கு இடையே கயிறு
கட்டி அதில் பைக்கை செலுத்தும்போது...பேச ஒன்றுமில்லை. அதற்கடுத்து
அபிஷேக்கின் அறிமுகம்.ஆட்டோவில் பறந்து வந்து அம்மா நகரில் இருக்கும் தமிழக
ரவுடிகளை புரட்டி எடுக்கிறார். நெருக்கமாக இருக்கும் வீடுகளின் கூரைகளில்
கூட ஆட்டோ பயணம் செய்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
தூமிற்கு
நேந்து விடப்பட்ட அடுத்த நபர் உதய். இரண்டாம் பாகத்தில் எப்படி போலீஸ்
வேலை பார்க்காமல் பெண்களைப்பார்த்து பல் இளித்தாரோ அது போலத்தான் இங்கும்.
ஆமிர்கானை துரத்தும் சீரியசான காட்சியில் கூட காமடி செய்து மொக்கை
போடுகிறார். 'ஐந்து நிமிடம் என் பெர்பாமன்ஸ் பாருங்கள். பிடித்தால்
சேர்த்துக்கொள்ளுங்கள்' எனக்கூறிவிட்டு ஒவ்வொரு உடையாக களைந்து அடடா
அல்வாத்துண்டு காத்ரீனா போடும் ஆட்டம் ஹாட்டஸ்ட் எவர். அபிஷேக் - ஆமிர்
விளையாட்டில் உள்ளே புகாமல் கொஞ்சமே வந்து காணாமல் போகிறது இந்த ஆறடி
வெண்ணிலா.
தூம்
இரண்டில் ஹ்ரித்திக் ரோஷன் பல்வேறு கெட்டப்களில் வந்து நம் தலையை சொரிய
வைத்திருப்பார். ஆனால் அந்த சேட்டையை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு
முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ஆமிர். முந்தைய பாகத்தில்
வெறும் சாகசம் மட்டுமே வியாபித்து இருந்தது. ஆனால் இதில் ஓரளவு கதையும்
இருப்பது ஆறுதல். ரசிகர்கள் குதூகலம் அடைய ஒரு இன்ப அதிர்ச்சியையும்
வைத்திருக்கிறார் ஆமிர். அதை திரையில் காண்க. ஹ்ரித்திக், ஆமிர்
ஆகியோருக்கு மட்டுமே பெருமளவு முக்கியத்துவம் தரப்படும் இந்த சீரிஸில்
அபிஷேக்கின் நிலை சற்று பரிதாபம்தான்.
எப்படி
வங்கிக்கொள்ளை நடைபெறுகிறது என்பதற்கான விளக்கம் சிறிதும் இல்லாதது,
கொள்ளையடித்த பணத்தை உருப்படியாக செலவழிக்காமல் தெருக்களில் ஆமிர்
கொட்டுவது, டெக்னிக்கல் விஷயங்களில் முன்னணியில் இருக்கும் அமெரிக்க போலீஸ்
படம் நெடுக அவர் பின்னே ஓடிக்கொண்டு இருப்பது என கேள்விகள் எழாமல் இல்லை.
ஆனால் அதைப்பற்றி கவலைப்பட அரங்கில் சிற்சிலரே இருப்பதால் 'சுப் ரஹோ' தான்.
முதல்
பாதியில் இரண்டு மற்றும் க்ளைமாக்ஸில் ஒன்றுமாக வெளுத்துக்கட்டும் பைக்
சேஸ்கள் மாஸ் ரகளை. சிகாகோ நகர வீதிகளில் அதி அற்புதமாக
படமாக்கப்பட்டிருக்கும் சேஸ்கள் ஹாலிவுட் தரம். விசுவல் எபெக்ட்ஸ் அணியும்
உழைப்பு அபாரம். மூன்று மணிநேர திரைப்படமாக இருந்தாலும் பொழுதுபோக்கிற்கு
துளியும் பஞ்சமில்லாமல் இயக்கி இருக்கிறார் விஜய் கிருஷ்ணா. ஷ்யாம் கவுசல்
மற்றும் கான்ராடின் ஸ்டன்ட்கள் அட்டகாசம். கை கலப்பிற்கு வேலை இல்லாமல்
கட்டிடங்கள், நீர்நிலை, பரபரப்பான வீதிகளில் பைக்குகளை சீற விட்டு சர்க்கஸ்
காட்டி இருக்கிறார்கள்.
சந்தேகமின்றி
மிகப்பெரிய ஹிட் ஆவதற்கான அம்சங்கள் அனைத்தையும் உள்ளடக்கி இருக்கிறது
தூம் - 3. ஷாருக், சல்மான் இருவருக்கும் மீண்டும் ஒரு முறை மாஸ்
ஹீரோவிற்கான சவாலை வலுவாக முன்வைத்து இருக்கிறார் ஆமிர் கான்.
தூம் 3 - பொழுதுபோக்கின் உச்சம்.
..............................................................
சமீபத்தில் எழுதியது:
ஷ்ரத்தாவின் மூன்று குறு நாடகங்கள்
சமீபத்தில் எழுதியது:
ஷ்ரத்தாவின் மூன்று குறு நாடகங்கள்
3 comments:
சீக்கிரம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது உங்க விமர்சனம்..
தவிர எங்க ஊர்ல (சிகாகோ) எடுத்திருக்காங்க, பார்த்தே ஆகணும்..
இங்கே ஹிந்தியில் வெளியாகி இருக்கிறது. பார்க்கலாம்! :)
எனக்கு படம் திருப்தி இல்ல சிவா.. ஆமிர்கான் படத்துல இத்தனை லாஜிக் ஓட்டைகள் ஒத்துக்கவே முடியல.. ஆனா ஹிந்தி காரனுக இதையும் ஓட வச்சிருவாங்க..
Post a Comment