CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, December 8, 2013

வெற்றிக்கோடு - மோகன்குமார்
                                                                        

'வெற்றி நிச்சயம்', 'விரல் நுனியில் சக்சஸ்', 'ஜெயிக்கலாம் வாங்க' 'இலகுவாக இலக்கை அடைய' என்று அட்டைப்படத்தில் தம்ஸ் அப்புடன் ஒரு மாடல் அல்லது விபரீத முயற்சியாக அதன் ஆசிரியரே போஸ் தருவார்கள். இல்லாவிடில் மலை உச்சியில் இருந்து ஒரு மேற்கத்திய கை ஊசலாடிக்கொண்டிருக்கும் இன்னொரு நபரின் சிவந்த கையை இறுகப்பற்றி இருக்கும். 'என்னை நம்பி முன்னேற நினைத்தாயே. உனக்கு இதுதான் கதி' என்று அக்கரம் பிரியாவிடை அளிப்பது போலவும் ஒரு உதறல் நமக்குள் இருக்கும். கிட்டத்தட்ட 99% சுயமுன்னேற்ற/தன்னம்பிக்கை புத்தகங்கள் சளைக்காமல் பின்பற்றும் யுக்தி அது. கல்லூரி முடிக்கும்போதே 'ஏழு கழுதை வயதாகிவிட்டது. சுற்றிலும் நடக்கும் செய்திகள்/நிகழ்வுகளை கிரகித்து முடிவெடுக்க கூட முடியாமல் திடீர் சாம்பார் போல ஒரு புத்தகம் சு.மு./த  படித்தால் போதும். அது ஏதேனும் ஒரு விதத்தில் நம்  வாழ்வை மாற்றியமைக்கும் என்பது எப்பேர்பட்ட அபத்தம்' என நினைத்ததுண்டு. அதிகபட்சம் குறளும், பட்டுக்கோட்டையார், கண்ணதாசன், எம்.ஜி,ஆர், டி.எம்.எஸ். பாடல்களும் போதாதா? 'போதாது. உன்னை சிகரத்தில் ஏற்றி விட்டுத்தான் மறுவேலை' என நமக்காக உருகி ஏணிப்படிகளுடன் காத்திருக்கும் சான்றோர்களின் புறங்கையில் ஆனந்த கண்ணீர் துளிகளை சிந்திவிட்டு விஷயத்திற்கு வருவோம்.

வெற்றிக்கோடு எனும் நூலை எழுதி இருப்பது வீடு திரும்பல் எனும் வலைப்பூ மூலம் அறியப்பட்ட மோகன் குமார் அவர்கள்.  தனியார் நிறுவனமொன்றில் உயர்பொறுப்பில் இருக்கும் இவரது புத்தகம் இவ்வாண்டு சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பின்போது வெளியானது. அச்சமயமே இதன் இணைய பிரதியை எனக்கு அவர் அனுப்பி இருந்தபோதும் படிப்பதற்கான வாய்ப்பு நேற்றுதான் அமைந்தது. சுயமுன்னேற்ற/தன்னம்பிக்கை நூல்கள் என்றால் அதில் குறைந்தபட்சம் நாம் எதிர்பார்ப்பது: ஒன்று நூலின் ஆசிரியர் தனது துறையில் எப்படி வெற்றிக்கொடி நாட்டினார் என்பதை அர்த்தத்துடனும், நேர்மையுடன் வெளிப்படுத்தி இருக்க வேண்டும் அல்லது சமூகத்திற்கு (குறிப்பாக இளைஞர்களுக்கு)  தற்காலத்திற்கேற்ப புதிய அணுகுமுறையுடன்  சொல்ல வரும் கருத்து/அறிவுரைகளை நேர்த்தியாக சமர்ப்பித்தல் வேண்டும். ஆனால் வெற்றிக்கோட்டின் பாதை வேறு வழியில் பயணிக்கிறது.

தயக்கம், முயற்சி, கோபம், பயம், அலட்சியம் என பல்வேறு உணர்ச்சிகள் மற்றும் பண்புகளை எப்படி சீர்படுத்த வேண்டும் என வரிசை வாரியாக எடுத்துரைத்திருக்கிறார் ஆசிரியர். ஆங்காங்கே ஆங்கிலப்பழமொழிகள் வியாபித்து இருக்கின்றன. I expected atleast a tamil translation for those in the brackets like the legendary actor Major Sundharrajan. அதாவது....குறைந்தபட்சம் மேஜர் சுந்தர்ராஜன் போல அவற்றின் தமிழாக்கமாவது இடம் பெற்றிருக்கும் என எண்ணினால் ஏமாற்றம்தான்.    ஒரு இடத்தில் 'Aim for the moon. You will get stars' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. கொஞ்சம் நஞ்சம் தெரிந்து வைத்திருக்கும் ஆங்கிலமும் மறந்து விட்டதோ எனும் பதட்டத்துடன் இணையத்தில் தோண்டிப்பார்த்தால் 'Aim for the moon. Even if you miss you'll land among the stars' என்றிருந்தது. Take care in the next edison edition, author.
                                                                      


'அந்நியன் படம் பார்த்திருப்பீர்கள் தானே' பாணியில் சில பக்கங்களில் தானே புயலின் தாக்கமும் உண்டு. 'ஜப்பானியர்கள் ஒவ்வொரு வருடமும் தேநீர் குடிக்கும் திருவிழா என்று ஒன்றை கொண்டாடுவார்கள். இதில் தேநீர் குடிப்பதுதான் விசேஷமே' போன்ற ப்ராண்ட் மோகன்குமார் வார்த்தைகள் சிம்ப்ளி டிலைட்புல். 'மது, புகைப்பழக்கம் போன்றவை கொடிய நோய். மிகவும் கொடிய நோய்' எனும் அறிவுரைகளை ஆசிரியர் குரலிலேயே இந்நூல் மூலம் கேட்பது  அலாதி சுகம். போதுமென மறுத்தாலும் இன்னும் ஒரு வாய் சாப்பிடு என ஊட்டும் தாயுமானவர் போல மேற்சொன்னதைத்தாண்டி 'எல்லோருக்கும் தர என்ன உண்டு என்னிடம். புன்னகை தவிர' உள்ளிட்ட சிற்சில கவிதைகளையும் சமைத்திருப்பது கிரீடத்தில் இன்னுமோர் வைரக்கல்.

இந்நூலில் எனக்கு பிடித்தது வைரமுத்து எழுதிய வாக்கியங்கள்: 'உன்னை விட மிகப்பெரிய மனிதரை சந்திக்க வேண்டுமெனில் அதிகாலையிலே அவர் இல்லம் சென்று விடு. சற்று தாமதமாக சென்றால் அவர் தன்னை விட பெரிய மனிதரைக்காண சென்றிருப்பார்'. பகிர்வுக்கு நன்றி மோகன் குமார்.


'Too many cooks spoil the broth' என்பது போல சொந்த அனுபவம், ஆங்கில சொற்றொடர்கள், தியானம், உடற்பயிற்சி செல்லும் முறைகள், ஐம்புலனடக்கம் என உள்ளடக்கங்கள் வெவ்வேறு கிளைகளாக படர்ந்து இருப்பதும், இதற்கு முன்பு வந்த ஆயிரக்... லட்சக்கணக்கான சுய முன்னேற்ற/தன்னம்பிக்கை புத்தகங்களில் இருந்து துளியும் வேறுபடாமல் போவதும் வெற்றிக்கோட்டின் பிரதான பலவீனம். 

இவ்வகை சார்ந்த புத்தங்கள் குறித்து அமெரிக்காவின் புகழ்பெற்ற பேராசிரியர்களில் ஒருவரான திமோதி வில்சன் சொன்ன செய்தி ஒன்று: "உலகெங்கும் சு.மு/தன்னம்பிக்கை நூல்களை எழுதுவோர் தரும் போதனைகள்/தீர்வுகளை படிக்கையில் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அவை நம் குறைகளை போக்கும் வலிமை அவற்றுக்கு இல்லை என்பதுதான் நிதர்சனம்". மேஜர் பாணியில் இன்னும் அவர் சொல்வது: Reading a self-help book is like  buying a lottery ticket. For a small investment, we get hope in return - the dream that all our problems will soon be solved, without any real expectation that they will be.தமது பதிவுகளில் எழுதுவது போலவே சகலகலா வல்லவத்தனம், அநியாயத்திற்கு எளிய நடை போன்றவற்றை தவிர்த்து தற்போதிருக்கும் நிலைக்கு எப்படி உயர்ந்தார் என்றோ அல்லது ஒரு குறிப்பிட்ட வயது/தொழில் சார்ந்த நபர்களுக்கோ புதிய பாணியில் கூர்தீட்டி எழுதி இருந்தால் வெற்றிக்கோட்டை தொட்டிருக்கலாம். 

இறையருளால் ஒருவேளை இன்னொரு நூலெழுதும் வாய்ப்பு கிடைத்தால்/அமைத்துக்கொண்டால் இக்குறைகள் களையப்படுமென நம்புகிறேன்.

'உன் வாழ்க்கை உன் கையில்', 'கடன் வாங்கறதும் தப்பு, கடன் குடுக்கறதும் தப்பு' போன்ற அரிய தத்துவங்களை சேகரித்து புத்தகம் போடாமல்  'என்றேனும் ஒரு நாள் நக்மா வருவார்' என்கிற நப்பாசையுடன் சத்யா ஸ்டுடியோ ஆட்டோ ஸ்டாண்டில் தன்னம்பிக்கை பொங்க காத்திருக்கும் பாட்ஷா பாய் எப்போது சுய முன்னேற்றம் அடைவார் எனும் பெருத்த சோகம் என்னுள் தொக்கி நிற்கிறது இத்தருணத்தில். 

I am Malala எனும் ஆங்கில புத்தகப்பார்வையுடன் மீண்டும் 'என் வாசகர்களை' சந்திக்கிறேன் நன்றி.
................................................................


சமீபத்தில் எழுதியது:


................................................................
 
19 comments:

aavee said...

உங்களுக்கு எப்படிங்க இவ்வளவு நேரம் கிடைக்குது?

சீனு said...

//உங்களுக்கு எப்படிங்க இவ்வளவு நேரம் கிடைக்குது?//

ஆமாமா மோகன் குமார் நேத்து புத்தகம் எழுதி மெட்ராஸ் இன்னிக்கு விமர்சனம் போட்டு இருக்காரு... :-))))

திண்டுக்கல் தனபாலன் said...

அடேங்கப்பா...!

// குறளும், பட்டுக்கோட்டையார், கண்ணதாசன், எம்.ஜி,ஆர், டி.எம்.எஸ். பாடல்களும் போதாது // அழுகையே வந்து விட்டது...

ஹா... ஹா...

என்னவொரு (சென்னைக்கே உரித்தான) சுறுசுறுப்பு... (நேர்மையுடன் வெளிப்படுத்தவில்லையோ...?)

என்னவொரு உடனடி விமர்சனம்...

குறைகளை போக்கும் வலிமை உங்களிடம் உள்ளது... I am Malala எனும் ஆங்கில புத்தகப்பார்வையுடன் உங்கள் வாசகர்களை சந்திக்க தான் முடியும்... வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

http://dindiguldhanabalan.blogspot.com/2012/01/blog-post.html

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விமர்சனம்.....

நானும் படித்து விட்டேன்......

Philosophy Prabhakaran said...

யோவ் சிவா உமக்கு போய் PDF அனுப்பி வைத்தாரே... பாவமய்யா அவர்... சரி அந்த மின் புஸ்தகத்தை அடியேனுக்கு அனுப்பி வைக்கவும்...

Philosophy Prabhakaran said...

// தயக்கம், முயற்சி, கோபம், பயம், அலட்சியம் என பல்வேறு உணர்ச்சிகள் மற்றும் பண்புகளை எப்படி சீர்படுத்த வேண்டும் என வரிசை வாரியாக எடுத்துரைத்திருக்கிறார் ஆசிரியர். //

எனக்கென்னவோ ஆசிரியரே இன்னமும் மாணவர் நிலையில் தான் இருக்கிறாரோ என்று தோன்றுகிறது...

Philosophy Prabhakaran said...

// 'Aim for the moon. Even if you miss you'll land among the stars' //

ஒரிஜினல் பழமொழியின் அர்த்தமே அபத்தமாக இருக்கிறது... நிலவு எங்கே இருக்கிறது, மற்ற நட்சத்திரங்கள் எங்கிருக்கின்றன...? எ.மா.ச.வா ?

Philosophy Prabhakaran said...

// 'அந்நியன் படம் பார்த்திருப்பீர்கள் தானே' பாணியில் சில பக்கங்களில் தானே புயலின் தாக்கமும் உண்டு. //

தானே புயலின் சீற்றம் பற்றி இன்னும் விவரித்திருக்கலாம். அண்ணனின் அதுபோன்ற வரிகளுக்கு நான் தீவிர விசிறி. இருக்கட்டும் என்னுடைய முறை வரும்போது அவற்றைப் பற்றி எழுதுகிறேன்...

Philosophy Prabhakaran said...

// I am Malala எனும் ஆங்கில புத்தகப்பார்வையுடன் மீண்டும் 'என் வாசகர்களை' சந்திக்கிறேன் நன்றி. //

என்னது...? நிஜமாவே அத்தன்தண்டி புக்கை வாங்கியிருக்கிறீர்களா...? விளங்கியது...

! சிவகுமார் ! said...


@ ஆவி

:)

! சிவகுமார் ! said...


@ சீனு

படுவா ராஸ்கோல்.

! சிவகுமார் ! said...

@ தி.தா.பாலன்

சார். கலாய்க்கிறேன் என்று முன்னமே சொல்லி விடவும். ஜெர்க் ஆவது போல் பாவனை செய்ய ஆயத்தம் ஆகிறேன். உங்கள் பதிவிற்கான லிங்க் போட விளம்பர கட்டணம் வசூலிக்கப்படும். :)

குறிப்பு: அர்த்தமின்றி எமது ஊரை வம்புக்கு இழுக்க வேண்டாம்.

! சிவகுமார் ! said...

@ வெங்கட் நாகராஜ்

வருகைக்கு நன்றி வெங்கட் சார்.

! சிவகுமார் ! said...

@ பிரபாகரன்

தம்பி நலம்தானே? நான் சீரியஸ் ஆக எழுதியதை திரித்து விட வேண்டாம். சுட்டே புடுவேன். I mean I will suiting you.

! சிவகுமார் ! said...

/ Philosophy Prabhakaran said...

// I am Malala எனும் ஆங்கில புத்தகப்பார்வையுடன் மீண்டும் 'என் வாசகர்களை' சந்திக்கிறேன் நன்றி. //

என்னது...? நிஜமாவே அத்தன்தண்டி புக்கை வாங்கியிருக்கிறீர்களா...? விளங்கியது...//

என்ன விளங்கியது? சொல்லிட்டு போயா...

CS. Mohan Kumar said...

புத்தகம் வாசித்து இதுவரை 30 பேராவது கருத்து சொல்லியிருப்பார்கள். (பெரும்பாலானோர் பதிவர் அல்லாதோர்) பதிவர் அல்லது பதிவர் அல்லாதோர் என எல்லா கருத்துகளையும் சேர்த்தாலும் முழு நீள 100 % அக்மார்க் நெகடிவ் விமர்சனம் இது மட்டுமே ..

இன்னொரு புத்தகம் எழுதும் போது தங்கள் கருத்துக்களை நினைவில் கொள்கிறேன்

தங்கள் கருத்துக்கு நன்றி சிவா !

! சிவகுமார் ! said...

முன்பு வெளிவந்திருக்கும் தன்னம்பிக்கை புத்தகங்களின் சாயல் நீக்கமற நிறைந்திருப்பதால் வெற்றிக்கோடு தனித்து தெரியவில்லை என்பதில் சந்தேகமில்லை சார்.புத்தகம் படிக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

Visit : http://kudanthaiyur.blogspot.in/2013/12/blog-post_18.html

Related Posts Plugin for WordPress, Blogger...