CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, December 13, 2013

இவன் வேற மாதிரிஎங்கேயும் எப்போதும் மற்றும் கும்கி தந்த வெற்றிக்களிப்புடன் முறையே இயக்குனர் சரவணனும், விக்ரம் பிரபுவும் கைகோர்த்திருக்கும் படம். சமீபத்தில் முற்றிலும் மாறுபட்ட களத்தில் தமது முதற்படைப்புகளை தந்து தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்ட இளம் இயக்குனர்கள், அடுத்ததாக காதல் கலந்த ஆக்சன் படங்களைத்தான் தேர்வு செய்திருக்கிறார்கள். அதற்கு சரவணனும் விதிவிலக்கல்ல. இவ்வாரம் இ.வே.மா.விற்கு போட்டியாக வேறெந்த தமிழ்ப்படமும் இல்லாததால் எந்த தியேட்டர் பக்கம் திரும்பினாலும் ஒரே மாதிரி ப்ளெக்ஸ்கள் மூலம் வரவேற்கப்போவதும் இச்சித்திரமே.

தமிழகத்தின் சட்ட அமைச்சர் சதாசிவம் தனது கோட்டாவில் 30 நபர்களுக்கு சீட் தருமாறு சட்டக்கல்லூரி முதல்வரிடம் அழுத்திச்சொல்ல 'அவர்களில் பலர் கிரிமினல்கள். உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது' எனும் பதில்தான் வருகிறது. விளைவு: கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கிடையே தீ மூட்டி வன்முறையை கட்டவிழ்க்கிறார் அமைச்சர். இந்த அராஜகத்தை தட்டிக்கேட்க துணியும் நாயகன் குணசேகரன் பரோலில் இருக்கும் அமைச்சரின் ரவுடி தம்பியான ஈஸ்வரனை கடத்தி கட்டுமானத்தில் இருக்கும் பலமாடி குடியிருப்பின் உச்சியில் அடிக்கிறான். ஒரு கட்டத்தில் விடுதலையாகும் ஈஸ்வரன் குணாவை கொன்று தீர்க்க அலைகிறான். ஜெயித்தது யார்?

கும்கியில் 'நடிப்பு மீட்டர் என்ன விலை?' எனக்கேட்டு அடர்தாடியுடன் எஸ்கேப் ஆன விக்ரம் பிரபு இம்முறையாவது தேறுவாரா என்று பார்த்தால் 'நான் அதே மாதிரி' என்று அடம்பிடிக்கிறார். கதைக்கு முக்கியமாக தேவைப்படும் ஆக்ரோஷம், காதல் போன்ற உணர்ச்சிகளை (நம்) கண்ணில் காட்டாமல் அன்னை இல்ல வாசலில் வீற்றிருக்கும் கணேசக்கடவுள் போல் தேமேவென்றிருந்தால் ஆகிற கதையா தோழர்? அம்மாஞ்சி அறிமுகமாக சுரபி. ஓரளவு காதலைக்காட்டும் கண்களுடன் முதல் பாதி நெடுக விக்ரமை வலம் வந்தாலும் கெமிஸ்ட்ரி திவால் ஆகிறது. 'ஏன்? ஏன் இந்த மூஞ்சில ரொமான்ஸே வர மாட்டேங்குது'....சிம்மாவிற்கு பதில் விக்ரம் பிரபுவை போட்டிருந்தால் ஏக எடுப்பாக இருந்திருக்கும். யூ மிஸ்ட் தி கோல்டன் சான்ஸ் நலன். பிரபஞ்ச காதலர்களின் நெஞ்சை உலுக்கவும் மறுபாதியில் மெனக்கெட்டிருக்கிறார் சரவணன். தெய்வீக காதலை இவ்வளவு உயரத்தில் ஏற்றி அழகு பார்த்திருக்கும் இயக்குனர் வாழிய வாழியவே.

நாயகனுக்கு இணையான கேரக்டர் வம்சிக்கு. முறுக்கேறிய உடற்கட்டுடன் சிலமுறை ரௌத்ரம் பொங்க கட்டிப்புரள்கிறார். அமைச்சராக ஹரிராஜ் மற்றும் சாக்லேட் பாய் போலீஸதிகாரியாக கணேஷ் வெங்கட்ராம். சொல்லிக்கொள்ள பெரிதாக ஒன்றுமில்லை. நாயக, நாயகி குடும்பத்தார் உள்ளிட்ட பிற கதாபாத்திரங்களும் மனதில் பதிய மறுக்கின்றன. 

'ஏன்? ஏன் இந்த மூஞ்சில ரொமான்ஸே வர மாட்டேங்குது'


குறைந்த பட்ச சுவாரஸ்யம் கூட இன்றி முடியும் முதல் பாதியின்போது 'வட' போன கடுப்பில் முணுமுணுத்தவாறே அகன்றனர் சில ரசிக மகா ஜனங்கள். அதன் பிறகாவது வேகம் எடுக்குமா என எதிர்பார்த்தால் அதுவும் நடந்தேறவில்லை. விக்ரமிடம் லிப்ட் கேட்டு வம்சி பயணிக்கும்போது மட்டும் சடாரென தொற்றும் விறுவிறுப்பு அதே ஸ்பீடில் அமுங்கிப்போகிறது. 

இரண்டு நாளாகியும் தொடர்பில் இல்லா தம்பி பற்றி அமைச்சர் கவலைப்படுவதாக காட்சி இல்லாதது(இத்தனைக்கும் அவன் பரோலில் வந்திருக்கும் கைதி வேறு), மொத்த போலீஸும் சல்லடை போட்டு தேடும்போது பட்டப்பகலில் அடியாள் சகிதம் வம்சி வாகனம் ஓட்டுவது, அவன் அடைக்கப்பட்டிருக்கும் அறை அருகேயே வங்கி எண்ணை விக்ரம் உச்சரிப்பது..ஏன்? எப்படி? எதற்கு?... ஆங்காங்கே தொக்கி நிற்கின்றன கேள்விகள். துவக்கம் முதல் இறுதிவரை அடுக்குமாடி கட்டிடத்தை சுற்றியே கதை சுழல்வது நமக்கு சோர்வைத்தருகிறது. படத்தின் முக்கியமான பலவீனம் இதுவென்றால், அடுத்தது சுரத்தையற்ற விக்ரமின் நடிப்பு. 

அவையெல்லாம் போகட்டும். எதற்கு 'இவன் வேற மாதிரி' எனும் டைட்டில்? நாள் முழுக்க யோசித்தாலும் எதுவும் பிடிபட வாய்ப்பில்லை. அதையும் மீறி மூளைக்கு வேலை தந்தால் லாபம் பார்க்கப்போவதென்னவோ அமேசான் காட்டின் அரிய மூலிகைகளால் தயாரான எர்வா மாட்ரின் தான்!!

இவன் வேற மாதிரி - என்ன கொடும (டைரக்டர்) சரவணன்!
........................................................................
   
19 comments:

Geneva Yuva Aagaaya Manithan said...

என்ன கொடும சரவணன்!
இது வேற மாதிரி -சிறந்த விமர்சனம்

http://www.madrasbhavan.com/2013/12/blog-post.html

ஜோதிஜி திருப்பூர் said...

நடிப்பும் எழுத்தும் கற்றுக் கொடுத்து வருவதல்ல.

செங்கோவி said...

இரும்..உமக்கு ஆல் இன் ஆல் சிடி அனுப்பி வைக்கிறேன்.

கோவை ஆவி said...

ஹஹஹா.. கும்கிக்கு இதில் எவ்வளவோ முன்னேற்றம் தெரிகிறது பாஸ்!!

சேலம் தேவா said...

உங்க ஸ்டைல் விமர்சனம் எப்பவும் மாதிரி.... :)

! சிவகுமார் ! said...

@ Geneva Yuva

Welcome Yuva.

! சிவகுமார் ! said...

@ஜோதிஜி

வருகைக்கு நன்றி ஜோதிஜி.

! சிவகுமார் ! said...

@ செங்கோவி

ஐயா வணக்கமுங்க.

! சிவகுமார் ! said...

@ கோவை ஆவி

எத்தனை ஓட்டு அதிகம் வாங்குனா என்ன? டெபாசிட் வாங்கணுமே.

! சிவகுமார் ! said...

@ சேலம் தேவா

நன்றி தேவா.

வெங்கட் நாகராஜ் said...

விமர்சனம் நன்று.

lbscs6 said...

film is not so worst as u say...
i tjink u like only malayalam films.

Subramaniam Yogarasa said...

ரசிகர்கள்/ரசிப்பவர் ரசனை வேறுபடும்!"இது வேற மாதிரி" விமர்சனம்,ஹ!ஹ!!ஹா!!!

சக்கர கட்டி said...

படம் எனக்கு என்னமோ தேவலம் போல இருந்தது

Manimaran said...

தெளிவான பார்வை..

! சிவகுமார் ! said...

நன்றி வெங்கட், மணிமாறன், யோகா மூவருக்கும்.

! சிவகுமார் ! said...

/lbscs6 said...film is not so worst as u say...
i tjink u like only malayalam films./


That is your assumption friend. Moreover malayalam movies are doing better than tamil, nowadays. The truth that can't be denied.

! சிவகுமார் ! said...

/சக்கர கட்டி said...

படம் எனக்கு என்னமோ தேவலம் போல இருந்தது/

பார்வைகள் பலவிதம் :)

ஷீ-நிசி said...

A very genuine review...

Related Posts Plugin for WordPress, Blogger...