அக்சய் குமாரின் தில்லாலங்கடி சித்திரமான ஸ்பெஷல் 26 தான் இவ்வாண்டு பாலிவுட்டின் வெற்றிக்கணக்கை துவக்கி வைத்தது என சொல்லலாம். அதன் பிறகு ரசனையான படங்களின் வரிசையில் சேர்ந்து கொண்டவை: காய் போ சே, பாம்பே டாக்கீஸ், பாக் மில்கா பாக், சிக்ஸ்டீன், ஷாஹித் மற்றும் லஞ்ச் பாக்ஸ். விமர்சகர்களால் பெரிதாக ரசிக்கப்படாவிட்டாலும் சினிமா ரசிகர்களால் கவனிக்கப்பட்ட படங்களென்றால் தி அட்டாக்ஸ் ஆஃப் 26/11, அங்கூர் அரோரா மர்டர் கேஸ் போன்றவற்றை கூறலாம்.
பெரிய ஸ்டார்களின் படங்கள் முந்தைய சாதனைகளை போட்டி போட்டு முறியடித்ததே பாலிவுட்டின் ஹாட் டாபிக் ஆகிப்போனதால் க்ளாஸ் சினிமாக்கள் பற்றிய விவாதங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டன. விதிவிலக்கு லஞ்ச் பாக்ஸ். அதற்காக வெறும் மாஸ் சினிமாக்களை மட்டுமே கொண்டாடாமல் ஷாஹித், லஞ்ச் பாக்ஸ், பாக் மில்கா பாக் ஆகியவற்றின் வசூலுக்கும் உத்திரவாதம் தந்து கை தூக்கி விட்டனர் பாலிவுட் ரசிகர்கள். குறிப்பாக படு வக்கிரமான பாலியல் வசனங்களை கொண்ட குப்பை என்று முன்னணி ஊடகங்களால் தூற்றப்பட்ட 'க்ராண்ட் மஸ்தி' பெயருக்கேற்றாற்போல் இளையவர்களை சிறப்பாக குஷிப்படுத்தி 100 கோடிக்கும் மேல் அள்ளி அதகளம் செய்தது.
இனி எனக்குப்பிடித்த பட்டியல் உங்கள் பார்வைக்கு:
பாடகர் - மோஹித் சவுஹான்: இந்திய சினிமாவின் நூறாம் ஆண்டை கொண்டாட நான்கு முன்னணி இயக்குனர்கள் சேர்ந்து உருவாக்கிய படைப்பு பாம்பே டாக்கீஸ். அதில் மோஹித் பாடிய 'அக்கட் பக்கட்' பாடல் தேசத்தின் இந்திய சினிமா ரசிகனுக்கு செய்யப்பட சிறப்பு மரியாதை.
பாடகி - ஸ்ரேயா கோஷல்: ராம்லீலா 'தோல் பாஜே' பாடலில் தீபிகாவின் உணர்ச்சிபூர்வமான ஆட்டம், ரவிவர்மனின் சிறந்த ஒளியமைப்பு, சஞ்சய் லீலாவின் சிலிர்ப்பூட்டும் இசை ஆகியவற்றினூடே மகாராணியாக சிம்மாசனத்தில் வீற்றிருந்தது ஸ்ரேயாவின் தீர்க்கமான குரல்.
இசையமைப்பாளர்: சஞ்சய் லீலா பன்சாலி: குஜராத்தின் மண் மணம் சார்ந்த இசையை ஆர்ப்பரிக்க விட்டு திருவிழா சூழலை கொண்டு வந்தது சஞ்சயின் ராம் லீலா பாடல்கள் ஒவ்வொன்றும்.

ஒளிப்பதிவாளர் - ரவிவர்மன்: ராம்லீலாவில் உதய்பூர் அரண்மையினுள் சுடர்விட்ட ஒளிக்கதிர்களும், ரங்கோலி வண்ணங்களும் இரண்டு நாட்களுக்கு கண்களை விட்டு அகலாமல் போனதற்கு இவரது ஒளியாள்கையே காரணம்.
துணை நடிகர் - நானா படேகர்: தி அட்டாக்ஸ் ஆஃப் 26/11 படத்தில் மும்பை தாக்குதலை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியாக நானாவின் கர்ஜனை மிரட்டல். குறிப்பாக கசாப் பாத்திரத்துடன் பேசும் தேசாபிமான வசனத்திற்கு ஸ்பெஷல் சல்யூட் தல.
துணை நடிகைகள் - வமிகா, இசபெல்: பொதுவாக நாயகன்/நாயகிக்கு அடுத்து குறைந்த காட்சிகள் மற்றும் வலுவான கேரக்டரில் (நன்றாக) நடிப்பவரை (சிறந்த) துணை நடிகர் என்று சொல்லலாம். அதே நேரத்தில் கதையே நாயகன்/நாயகியாக இருக்கும் சப்ஜெக்ட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் நன்றாக நடித்தால்? அப்படி என்னை கவர்ந்த இருவர்தான் சிக்ஸ்டீனில் சிறகடித்த வமிகா மற்றும் இசபெல்.
வில்லன்/வில்லியம்மா - ரிஷி கபூர், சுப்ரியா பதக்: தாவூத் இப்ராஹிமாக ரிஷி சரிப்பட்டு வருவாரா எனும் பெருத்த ஐயத்துடன்தான் D - Day பார்க்க சென்றேன். ஆனால் ஹீ மேட் இட். சிகப்பு கூலருடன் என்ன கூல் ஆக்ட் பாய் சாப். அடுத்த ஹெவிவைட் பெர்பாமன்ஸை தந்தவர் சுப்ரியா. நக்கல், மூர்க்கம், அன்பு என மேடமின் அதிரடி ஆட்டம் அமோகம்.
காட்சி(வசனமின்றி) - தி அட்டாக்ஸ் ஆஃப் 26/11: கசாப் மற்றும் அவனது சகாக்கள் சிவாஜி ரயில் நிலையம், தாஜ் ஹோட்டல் மற்றும் லியோபோட் கபேயில் நடத்தும் மௌனமான ரத்த வெறியாட்டம். அக்கொடூர நிகழ்வின்போது சம்பவ இடத்தில் இருந்தது போன்ற அச்சத்தை திரையில் தந்த ராம் கோபால் வர்மா...க்ரேட் அட்டாக்!!
காட்சி(வசனத்துடன்) - ஷாஹித்: ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் சிக்கும் இஸ்லாமியர்களுக்காக ராஜ்குமார் வாதாடும் நீதிமன்ற காட்சிகள். இவ்வளவு யதார்த்தமாக இதற்கு முன்பு வழக்காடும் காட்சிகள் இந்திய சினிமாவில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதா என்பது சந்தேகமே.
நடிகர் - இர்ஃபான் கான்: ஷாஹிப் பிவி அவுர் கேங்ஸ்டர் ரிடர்ன்ஸ் படத்தில் சுமாராக நடித்திருப்பினும் அதன் பின்பு D - Day வில் ஃபார்முக்கு வந்தார் இந்த ஆல்ரவுண்டர். லஞ்ச் பாக்ஸ் மூலம் ஒரு படி இன்னும் மேலே. காய் போ சே, ஷாஹித் ஆகிய இரு படைப்புகளில் நன்றாக நடித்து இவ்வருடம் இர்பானுடன் போட்டியிட்டவர் என ராஜ்குமார் யாதவை சொல்லலாம்.
நடிகை - தீபிகா படுகோன்: சென்ற ஆண்டைப்போல ரிச்சா சட்டா, வித்யா பாலன் அளவிற்கு செமத்தியான பெர்பாமர் இம்முறை கண்ணில் படவில்லை. எனினும் ராம்லீலாவில் காமமும், காதலும் ததும்பும் கண்கள். கூடவே கொஞ்சம் ரௌத்திரமும். தீபிகாதான்...செம ஹாட் மிர்ச்சி!!
இயக்குனர் - ஹன்சல் மேத்தா(ஷாஹித்)
பிடித்த படம் - ஷாஹித்
'லஞ்ச் பாக்ஸ்' பார்த்தவர்கள் கூட சாப்பிட்டமா, அடுத்த வேலைய பாத்தமா என்றிருந்தபோது 'இப்படி ஒரு அறுசுவை விருந்தை இந்தியால இந்த வருஷம் யாராவது சமைச்சது உண்டா? ஆஸ்கருக்கு 100% தகுதியான படம்' என்று படக்குழுவும், முன்னணி ஊடகங்களும் இடைவிடாமல் விளம்பரம் செய்தது சற்று அதீதமாகவே பட்டது. நல்ல திரைப்படம் என்றாலும் மிகச்சிறந்த படமென்று சொல்லுமளவிற்கு இல்லையென்பது எனது கருத்து.
அதே நேரத்தில் சத்தமின்றி சத்தான சப்ஜெக்டுடன் களமிறங்கியது ஷாஹித். நியாயமான வழக்குகளில் வாதாடி உயிரிழந்த வழக்கறிஞர் ஷாஹித்தின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமிது. குறைந்த பட்ஜெட் என்பதால் சில இடங்களில் தொழில்நுட்ப குறைகள் இருப்பினும் இவ்வாண்டின் சிறந்த ஹிந்தி படமென்று சொல்வேன். இதனை படமாக்கிய இயக்குனர் ஹன்சல் மேத்தாவின் உழைப்பிற்கு பாராட்டுகள்.
அடுத்து 2013 தமிழ் சினிமா பற்றிய பார்வை மற்றும் எனக்குப்பிடித்த கலைஞர்கள் பட்டியலுடன் சந்திக்கிறேன்.
........................................................................
தொடர்புடைய பதிவுகள்:
திரை விரு(ந்)து 2013 - மலையாள படங்கள் - 2
2013 திரை விரு(ந்)து - தமிழ் படங்கள்

3 comments:
தீபிகா படுகோனை உடனே என்னை சுட சொல்லவும் ஹி ஹி....
Hindi malum nahi bhai.
கலர்-புல்................ஹி!ஹி!!ஹீ!!!
Post a Comment