CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, November 2, 2013

அழகுராஜா


                                                                          
   
ராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்கிற பாஸ்கரன், ஓகே.ஓகே, சி.ம.ச. நடிப்பு எத்தனை லிட்டர் என பால் வடியும் முகத்துடன் இருந்த உதயநிதி, ஹன்சிகாவை வைத்துக்கொண்டு தனது தளபதி சந்தானத்தின் துணையுடன் பம்பர் ஹிட் அடித்த இயக்குனர். தியேட்டரில் பார்க்கும் போது ஆவரேஜ் படமாக பட்ட ஓகே ஓகே காமடிகள் அதன் பின் டி.வி.யில் பார்க்கும்போது ஒன்ஸ்மோர் பார்க்கத்தூண்டுகிறது இன்றுவரை. ஆக...அழகுராஜா பார்க்கும் ஆவல் ஏற்பட்டதற்கு ஆல் இன் ஆல் காரணம் ராஜேஷ் மட்டுமே. சகுனி, அலெக்ஸ்பாண்டியன் ஆகிய மெடிக்கல்-ஹிஸ்டாரிக்கல் சித்திரங்களில் காமடி செய்கிறேன் என்று எப்பாவமும் அறியா ரசிகர்களை ரத்த வாந்தி எடுக்க வைத்த கார்த்தி இம்முறை ரத்த வங்கியில் வற்றா ஆறாக ஓடுமளவிற்கு நம்மிடமிருந்து 'கடைசி சொட்டு ரத்தத்தையும் உள்நாக்கால் உறிஞ்சி எடுத்து தானம் செய்திருக்கிறார்!! கர்ண (கொடூர) 'பிரபுவே' நீ வாழி!! 

என்னது ராஜேஷ் படத்துல என்ன கதையா? முதல் நிமிடத்தில் இருந்து கடைசி வரை ஆளாளுக்கு கதைத்துக்கொண்டு இருப்பதுதான் தி சோ கால்ட் கதை. AAA எனும் லோக்கல் டி.வி.யின் ஓனர் அழகுராஜா. அவரிடம் பார்ட் டைமாக வேலை பார்ப்பது பேக்கரி ஓனர் கல்யாணம். தியேட்டர், கல்யாண மண்டபம் என பல சொத்துக்களுடன் சொகுசாக வாழும் தேவிப்ரியாவை காதலிக்கிறார் அ.ராசா. அப்பெண்ணின் குடும்ப பின்னணி கேட்டு கொந்தளிக்கும் அ.ராசாவின் தந்தை காதலுக்கு தடை போட...உங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றுமில்லை. எனவே நீங்களே மீதிக்கதையை யூகிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் யுவர் ஆனர். 

கார்த்தி சமீபத்தில் விகடனுக்கு அளித்த பேட்டியில் பருத்தி வீரன் போன்ற க்ளாஸ் படங்களை விட இம்மாதிரி ஸ்டான்ட் அப் காமடி படங்களை தூக்கி வைத்து பேசினார். அதெல்லாம் சரிதான். அதற்கு குறைந்த பட்சம் கஞ்சா கருப்பு, சிங்கம்புலி....அட அட்லீஸ்ட் போண்டா மணி செய்யும் காமடியில் 5% கூட பெர்பாம் செய்யாமல் ராஜேஷின் ஜானவாச காரில் சந்தானத்துடன் தொத்திக்கொண்டு வந்தால்? 'யாருடா நீ கோமாளி. உன்னையெல்லாம் ஏத்த முடியாது' என துரத்தி இருக்கலாம். காஜலை கிண்டல் செய்கிறேன் என்று முதல் பாதியில் கோழி கோரஸாக கொக்கரிப்பது போல கத்துவதும், பிரபுவை இமிடேட் செய்வதாக எண்ணிக்கொண்டு மறுபாதியில் சூர மொக்கை போடுவதும்... 'ஓவர் வாயால் எங்கள் காதுகளை பிடித்து பசுமாடு புல்லை தின்பது போல் கருக்கு கருக்கு என்று கடித்து துப்பி இருக்கிறார் மை லார்ட். இப்படி ஒரு கன்றாவியான  காமடியை யா யா, தேசிங்கு ராஜாவில் கூட நாங்கள் பார்த்ததில்லை யுவர் ஆனர். அம்மிக்கல்லை கொத்தத்தெரியாதவன் கொத்தியது போல இருக்கிறது படம் பார்த்தவர்களின் கபாலம்.     
                                                                       

மிகச்சுமாரான படத்தில் கூட ஓரிருமுறையாவது சிரிக்க வைக்கும் சந்தானம் இங்கே புஸ்வானம். முதல் சீனில் இருக்கும் வெகு சாதாரண சிரிப்பு(!!) அடுத்தடுத்து அதள பாதாள வீழ்ச்சி. இரண்டாம் பாதியில் வெற்றிலையை குதப்பிக்கொண்டு வரும் கேரக்டர் உலக மகா இம்சை. 'வாரே வாட் அ வடா பாவ்' அழகு காஜல். அவரையும் தமாசு தண்டவாளத்தில் ஏற்றி நம்மை கொல் கிறார்கள். சரண்யா, எம்.எஸ்.பாஸ்கர்....அந்தோ பரிதாபம். நல்லவேளை பிரபு வேறு தமாசு செய்வாரோ என அஞ்சி நடுங்கினேன். கர்த்தருக்கு (ஸ்)தோத்திரம். ஆங்..மறந்துட்டேன். நாசரும் படத்தில் இருந்தார். ஏதோ பேசினார். கொஞ்சம் நடந்தார். 

ராமராஜன், சுதாகர், வி.எஸ்.ராகவன் போன்றோரை நக்கல் விடுவதாக நினைத்துக்கொண்டு கார்த்தி-சந்தானம் ஜோக்கடிப்பது.....பூமரங். 'உன்ன பாத்த நேரம்' பாடல் மட்டும் தேறுகிறது.  இந்த அபார கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்திற்கு ஏன் 3 மணிநேரம் தேவைப்பட்டதோ?? தேவுடா!!
                                                                       
                                              இயக்குனர் கேபிள் சங்கர் மற்றும் நண்பன் வினோத்துடன்... 

சத்யம் தியேட்டரில் 'தல' கேபிள் சங்கருடன் இந்த அசுர குல காவியத்தை  இன்று காலை பார்த்தேன். படம் துவங்குவதற்கு முன்பு கேபிள் சொன்னது: 'வெளிநாட்ல அ.ராசா பாத்த ஒருத்தர் 'மூவி ஜாலியா இருக்குன்னு சொன்னாரு. ஆனா 'அந்த' நாட்ல படம் பாக்குறவங்க டேஸ்ட்டை நம்ப முடியாது' என கணித்தார். அக்கூற்று மெய்யாகிப்போனது. க்ளைமாக்ஸிற்கு 1 மணிநேரம் இருக்கும் முன்பே பாதி பேர் தியேட்டரை விட்டு ஓடிவிட்டார்கள். எப்பேர்ப்பட்ட ரம்பத்தையும் தாங்கும் சக்தி கொண்ட கேபிளார் மூன்று மணிநேரம் 'ஐயோ..அம்மா' என சீட்டில் அமர முடியாமல் கதறிக்கொண்டு இருந்தார். 'வீட்டுக்கு ஓடறேன்' என்று அவர் சொன்னபோது நான்கைந்து பேய்கள் அறைந்தது போல் பரிதாபமாக காட்சியளித்தார்...என்ன ஆனாரோ? 

கடந்த சில காலமாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் தமாசு படங்களில் அழகுராஜாதான் நம்பர் ஒன் மொக்கை. மாற்றுக்கருத்தே இல்லை ஓய். பொட்டு வெடி வெடிச்சமா.போத்தீஸ் துணிய கட்னமா. போத்திக்கிட்டு படுத்தமான்னு ஆத்துலயே இருங்கோ. அழகுராஜா பக்கம் மட்டும் போயிராதேல்...சொல்லிட்டனாக்கும்!! 
 
அழகுராஜாராஜேஷ், சந்தானம் காம்போவின் முதல் டக் அவுட்.
.......................................................................

சமீபத்தில் எழுதியது:

பாண்டிய நாடு - விமர்சனம்

ஆரம்பம் - விமர்சனம்

    

13 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

ராஜேஷ், சந்தானம் காம்போவின் முதல் டக் அவுட். ////

இவங்க கூட்டணிக்கு முதல் அவுட் இது.
கார்த்திக்கு எத்தனையாவது சிவா?

செங்கோவி said...

நானும் போய்ட்டு, கதறி அழுதேன்..எப்பா!

”தளிர் சுரேஷ்” said...

அப்ப பொங்கலுக்கு இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையா போட்டுடுவாங்கன்னு சொல்லுங்க! பேஷ்! பேஷ்!

வெங்கட் நாகராஜ் said...

சீக்கிரமே வெள்ளித்திரையில் பார்க்கலாம்! :)

உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.....

உலக சினிமா ரசிகன் said...

இயக்குனர் ராஜேஸ் தலைமையில் கார்த்தியும்,சந்தானமும் தீபாவளிக்கூட்டதினரிடம் பிக்பாக்கெட் அடிக்க களம் இறங்கிய ‘களவாணிகள்’.

aavee said...

கார்த்திக்கு இது ஹாட்ரிக்.

Unknown said...

படம் பாத்து டைம் வேஸ்ட் பண்ணது பத்தாதுன்னு,விமர்சனம் வேற எழுதி டைம் வேஸ்ட் பண்ணனுமா?ஓ........யாம் பெற்ற துன்பம் வையகம் பெறக் கூடாதுன்னா?ஓ.கே.ஓ.கே!!!

கலியபெருமாள் புதுச்சேரி said...

இந்த கருமத்துக்குத்தான் தியேட்டர் பக்கமே தலைவச்சு படுக்கறதில்லை...ரொம்ப படுத்தறாங்கப்பா

பால கணேஷ் said...

ஐயய்யோ....! தன் முதல் படத்தை செதுக்கிட்டிருக்கற இந்த நேரத்துல கேபிளாருக்கு இப்படி ஒரு சோதனையா????

Tamil Bloggers said...

தமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு,

தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து, உங்கள் தமிழ் தலத்தில் விளம்பரங்கள் காண்பிப்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php . பதிவுசெய்து முற்றிலும் இலவசம் .

வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம்.

Gopi said...

என் மகளும் அவள் நண்பிகளும் பெங்களூரு Inox ல இந்த படத்தை பார்க்கனும்னு கிளம்பிச்சுங்க. நான் உங்க விமர்சனத்தை பத்தி சொல்லி வேண்டாம் இந்த விபரீதம்னு எச்சரிச்சேன். கேக்காம போச்சுங்க. படம் பார்த்துட்டு வந்து அலறுதுங்க. "அய்யயோ படு மொக்கை. ஆரம்பிச்ச பத்தே நிமிஷத்துல கழுத்துல ரத்தம் வராத குறை. பாதியிலேயே ஓடி வந்துடலாம்னு சீரியஸா நினைச்சோம்" ன்னு அவங்க சொன்ன அந்த Face Expression ஐ வச்சே நீங்க 1% கூட மிகைபடுத்தி சொல்லலேன்னு தெரியுது.

முதன் முறையா என் பொண்ணு என் கிட்ட,"நைனா, உன் பேச்சை கேக்காம போனது தப்பு தான்" அப்படீன்னு சொன்னது தான் எனக்கு கிடைச்ச பெரிய சந்தோஷம். சிவா உங்களுக்கு நன்றி.

! சிவகுமார் ! said...

கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.

@கோபி
ஏதோ நம்மால முடிஞ்சா அபாய அறிவிப்பு சார். வருகைக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_7.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...