CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, November 7, 2013

ஷார்ட் ஓகே (07/11/13)
குறும்படத்தின் வாயிலாக  பெரும்பட வாசற்கதவை தட்ட படையெடுக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கலைஞர் டி.வி. 'நாளைய இயக்குனர்' வெற்றியை தொடர்ந்து பிற சேனல்களும் குறும்பட போட்டிகளை தீவிரமாக நடத்த துவங்கியுள்ளன. சென்ற பதிவில் ஷார்ட் ஓகே எனும் தலைப்பில் எனக்கு பிடித்த ஐந்து குறும்படங்களுக்கு பிறகு இப்போது மேலும் ஐந்து உங்கள் பார்வைக்காக. இரண்டாம் சுற்றில் மனதிற்கு பிடித்த ஷார்ட்களை தேர்வு செய்வதற்குள் போதுமென்றாகி விடுகிறது. ஒற்றை கேமரா, நான்கைந்து நண்பர்களை வைத்துக்கொண்டு காதல், சரக்கு என யூ ட்யூப்பில் தான்தோன்றித்தனமாக குப்பைகளை கொட்டி வைத்திருக்கிறது பெரும்பாலான இளைய பட்டாளம். சூது கவ்வும் படத்தில் 'கிளி ஜோசியம் விக்கிறவன் முதற்கொண்டு ரியல் எஸ்டேட் பண்றானுங்க' என சலித்துக்கொள்வார் ரவுடி டாக்டர். அதுபோல குறும்படம் எடுப்பதற்கான அடிப்படை அறிவு கூட இன்றி மனதில் பட்டதையெல்லாம் எடுத்தால் பார்ப்பவன் கதி? 

இவ்வாண்டு நாளைய இயக்குனரில் போட்டியிட்டவர்களை பார்த்து இயக்குனர் பாண்டிராஜ் சொன்னது: "இது செமி பைனலுங்க. அந்த பயம் கூட இல்லாம எல்லாரும் ரொம்ப சுமாரா படம் பண்ணி இருக்கீங்களே..".  அடுத்தடுத்த சீசன்களில் தமிழ்க்குறும்படங்களின் தரம் தேய்ந்து வருவதற்கு இதுவும் ஒரு சாட்சி. 'ஒரே குறும்படம். மறுநாள் டைரக்டர்' பேராசையில் சினிமா பாணியில் குறும்பட காட்சிகளை எடுக்க முயன்று அதை சரியாக பிரதிபலிக்க முடியாமல் தோற்கிறார்கள் பலரும். 'உங்கள் போதைக்கு நாங்கள் ஊறுகாயா?' என்பது போல இந்த 'நாளைய' இயக்குனர்கள் சுட்டுத்தள்ளும் வேகாத உணவுகளை உட்தள்ளி சிரமப்படுவது ரசிகர்கள்தான். நாங்கள் விரும்புவது 'குறும்படங்களை' மட்டுமே நண்பர்களே.  ஏதேனும் ஓரிடத்தில் மனதை கிள்ளும் பதிவு அல்லது எதிர்பாராத சிற்சில சுவாரஸ்யங்கள். அவ்வளவுதானே? இதை எடுக்கவா இந்த அக்கப்போரு? முதல் இரண்டல்லது மூன்று நிமிடங்களிலேயே கொட்டாவி விட வைத்தால் இரண்டிற்கும் அதிகமான மணிநேரத்தை விழுங்கும் திரைச்சித்திரத்தை எப்படி தீட்டுவீர்கள் என்பதே பெருங்கேள்வி.  


பல்வேறு குறும்படங்களை பார்த்ததில் மனதினுள் சிக்கிய ஐந்தினை இப்போது பார்க்கலாம். 'தமிழை விட மலையாளத்தில் சிறந்த குறும்படங்கள் இருக்கின்றன. பாருங்கள்' என பதிவுலக நண்பர் வீடு சுரேஷ் பரிந்துரைத்ததன் பேரில் அவற்றையும் பார்த்தேன். அவர் சொன்னது உண்மைதான். மனதில் நின்ற மூன்று மலையாள ஷார்ட்களும் இங்கு பகிரப்பட்டுள்ளன. குறும்படங்களை திரைப்பட யுக்தி/தொழில்நுட்பம்/நடிப்புத்திறனுடன் ஒப்பீடு செய்து பார்ப்பதை விட குறும்படங்களாக மட்டுமே மக்கள் பார்த்தால் நலம். 


ஏ படம்:
சராசரி இளைஞர்களின் வாழ்வில் இத்தகு நிகழ்வு ஒரு முறையேனும் தொட்டுச்சென்று இருக்கலாம்..

 
            
                                                         

ஈ காலத்:
இயக்குனர் ஜெனித்தின் படைப்பு. 

                                                                      
                                                                     


நெஞ்சுக்கு நீதி:
'சூது கவ்வும்' இயக்குனர் நலன் குமாரசாமி & டீமின் ட்ரேட்மார்க் குறும்படம்.. 


                                                                        


2 இட்லி 2 வடை:
நகைச்சுவை நடிகராக மட்டுமே திரையில் தோன்றிய முருகன் குணச்சித்திர நடிகராகவும் பளிச்சிட்ட படைப்பு.


                                                                         

மீல்ஸ் ரெடி:
இறுதியாக இயக்குனர் நிதுனாவின் நெகிழ வைக்கும் குறும்படம். முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கும் பெரியவரின் பெயர் தெரியவில்லை. நடிப்பு வெகு இயல்பு.

     
                        
பகிர்வுகள் தொடரும்... 
.....................................................சமீபத்தில் எழுதியது:

அழகுராஜா - விமர்சனம்

ஆரம்பம் - விமர்சனம்
                                   

2 comments:

Muraleedharan U said...

Great collections siva...great...great...great...great...great...great

! சிவகுமார் ! said...

Welcome Muraleedharan. Will try to post more shorts in future.

Related Posts Plugin for WordPress, Blogger...