நேற்று மட்டும் ஒரே நாளில் மூன்று முத்தான படங்களை பார்த்த பரம திருப்தியில் இருக்கிறேன். மூன்றுமே உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டவை. க்ளாஸ்ஸிக் மற்றும் வெகுஜன சினிமா ரசிகர்கள் என இரு தரப்பினரையும் ரசிக்க வைக்கும் அம்சங்கள் நிறைந்தவை. முதலில் ஷாஹித். கோன் ஹை யே? காஷ்மீரில் தீவிரவாத பயிற்சி மேற்கொண்டதற்காக 7 வருட சிறை தண்டனை அனுபவித்து அதன் பிறகு குஜராத் கலவரம், மும்பை 26/11 தாக்குதல்களை காரணம் காட்டி ஜெயிலுக்குள் தள்ளப்பட்ட அப்பாவி இஸ்லாமியர்களுக்காக வாதாடியவர்தான் வழக்கறிஞர் ஷாஹித். 'இது போன்ற வழக்குகளில் வாதாட வேண்டாம்' என மிரட்டல்கள் வந்த பிறகும் அதை அலட்சியம் செய்ததால் 2010 ஆண்டு அவரது அலுவலகத்தில் வைத்து கொல்லப்பட்டார்.
ஷாஹித்தாக ராஜ்குமார் யாதவ். தம்பிக்கு சுத்தமாக நடிப்பே வரவில்லை. ஆம். கேரக்டராகவே வாழ்ந்திருக்கும் நடிகனை வேறெப்படி வர்ணிப்பது? fantastic kaam hai bhaiyya. கற்பதற்கான கடும் முயற்சி, முதிர்ந்த காதல்/காதலியுடன் ஊடல், கோர்ட் வாதங்கள்...எதைச்சொல்ல? தனது க்ளயன்ட் ப்ரப்ளீனிடம் ''லாயர்ஸ் எதிக்ஸ் என்ன தெரியுமா? எந்த வீட்டை மீட்க நீங்கள் எங்களிடம் வருகிறீர்களோ அதை எமது வசமாக்கிய பிறகு எங்களிடம் இருந்து அவ்வீட்டை மீட்க வெறோரு லாயரை தேடிப்போக வைப்போம்" என ராஜ்குமார் பேசுமிடம் அருமை. இவ்வருடம் சிறந்த நடிகருக்கான ரேஸில் தவிர்க்க முடியாத நபராகி விட்டார். நாயகியாக ப்ரப்ளீன். அழகிலும், நடிப்பிலும் அனாசயம். 'தல' கே.கே.மேனன்(உதயம் NH4) சில நிமிடங்களே வந்தாலும்...ராக்ஸ். கேங்ஸ் ஆப் வாசேபூரில் பிரமாதப்படுத்திய திக்மன்சு சீனியர் வக்கீலாக சட்டென வந்து சென்றாலும் தடம் பதிக்கிறார்.
அப்பாவி கைதிகள், ஷாஹித் குடும்பத்தார், எதிர்தரப்பு வக்கீல்கள் என ஒவ்வொருவரின் நடிப்பும் படம் பார்க்கிறோம் என்பதை மறக்கடித்து விடுகின்றன. அநியாயத்திற்கு எதார்த்தம்...நீக்கமற. படத்தின் மிக முக்கிய பலங்களில் ஒன்று கோர்ட் வாதங்கள். இவ்வளவு இயல்பாக கோர்ட் சம்மந்தப்பட்ட காட்சிகள் இதற்கு முன்பு படமாக்கப்பட்டதில்லை என அடித்து சொல்லலாம். ஷாஹித்தை எதிர்த்து வாதாடும் ரோலில் விபின் மற்றும் ஷாலினி இருவரின் நடிப்பும் டாப் க்ளாஸ்.
ஷாஹித்தை மிரட்டுபவர்களின் பின்னணி பற்றி சிறு தகவல் கூட இல்லாதது, அவன் காஷ்மீர் சென்றது குறித்த தெளிவான விளக்கம், மிகச்சிக்கனமான பட்ஜெட் போன்ற குறைகளையும் வெற்றி வாகை சூடுகிறது இப்படம். முஸ்லிம் எனும் ஒரே காரணத்திற்காக மட்டுமே வருடக்கணக்கில் சிறையில் வாடிய கீழ்த்தட்டு மக்களின் ரட்சகனாக வாழ்ந்து உயிர் துறந்த ஷாஹித்..சல்யூட்.
கேப்டன் பில்லிப்ஸ், ரஷ் விமர்சனங்கள் வெகு விரைவில்.
..........................................................
9 comments:
பார்க்கனும்னு இருந்தேன்.. உங்க விமர்சனம் படிச்சப்புறம் கண்டிப்பா பார்க்கனும்னு தோணுது.. பார்க்கிறேன்..
பார்க்க வேண்டும்... நன்றி...
ஒரே நாளில் மூன்று படங்களா?!
விமர்சனத்துக்கு நன்றி.இப்படியான படங்கள் இங்கே திரைக்கு வராது.உயிர்வாணி யே கதி!
ஒரே நாளில் மூன்று படம் ம்ம்ம்ம் - சினிமா ஆர்வம் சூப்பர்...!
மனோ அண்ணே.. அது ஆர்வம் இல்லே.. வெறி!! ( நாங்கெல்லாம் பெருமை பட்டுக்கிற ஒரு வெறி)
Hello BOSS,
Did you watch Captain Phillips in theatre or DVD or downloaded copy?
சென்னை பித்தன் said...
ஒரே நாளில் மூன்று படங்களா?
///////////////
நீங்கள் சென்னை பித்தன் . இவரு சினிமா பித்தன் .
Interesting reviews. Nice to be able to watch 3 good movies in one day. Dont these good movies continue to stay with us for many days?
Post a Comment