CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, October 27, 2013

சுட்ட கதை                                                                       

டார்க்/ப்ளாக் காமடி - சமீபகாலமாக கோடம்பாக்க டீக்கடை முதல் 'குறியீடு  புகழ்' தோழர்களின் இணைய தளங்கள் வரை பரவலாக உச்சரிக்கப்பட்டு வரும் சொல். விஷயம் தெரிந்த விற்பன்னர்களிடம் கேட்டறி ந்ததில் 'நீயெல்லாம் என்னத்த சினிமா பாத்து. என்னத்த விமர்சனம் எழுதி' என நையாண்டி செய்யாத குறைதான். நமக்கு 'கிளிண்டன்னா கிளி ஜோசியம் பாக்குறவறா?' அளவுக்குதான் வேர்ல்ட் மூவி நாலேஜ் என்பதால் இதைக்கேட்டு டப்புனு மெர்சலாயிட்டம்பா. 'மும்பை எக்ஸ்ப்ரஸ் பாரு. இல்லனா அதையே பட்டி டிங்கரிங் செஞ்சி எடுத்த சூது கவ்வும் பாரு. அதான் டார்க்/ப்ளாக் காமடிடா என் சிப்ஸூ' என கழுவி ஊற்றி, ஊற்றி கழுவினார்கள் உலக சினிமா ரசிகர்கள். அந்த நேரம் பார்த்து 'அம்மா மாரே அய்யா மாரே..இந்த வாரம் சுட்ட கதை - டார்க் காமடி படம் ரிலீசாகி இருக்கு. போனா வராது. பொழுது போனா ஒரு ஷோ கூட இருக்காது'ன்னு வெளம்பரம் பார்த்ததும் தியேட்டரை வாசலில் மின்னலென...

க்ரைம் கலந்த காமடி காமிக்ஸ் களத்தில் தனது முத்திரையை பதிக்க முயன்றிருக்கிறார் புதிய இயக்குனர் சுபு. கோரமலை எனும் ஊரில் மொத்தம் ஆறு வகை மனிதர்கள்...அங்கிருக்கும் காவல்துறை வீரர்கள் உட்பட என அறிமுகம் செய்யப்படுகிறது. ஆனால் காவலர்களைத்தவிர மற்றவர்கள் எவ்வகையில் சோம்பேறிகள் என்பது குறித்து விளக்காமல் கோட்டை விட்டு விட்டார். சின்ன விஷயங்களில் நேர்த்திகளை காட்ட மெனக்கெடுகையில் இதுபோன்ற முக்கியமான மேட்டர்களை மறந்த விடுவது அல்லது மக்கள் மறந்து விடுவார்கள் என நினைத்து விடுவதுதான் அசல் டார்க் காமடி போல.

கோரமலை காவல் நிலையத்தில் புதிதாக வேலைக்கு சேர்கிறார்கள் ராம்கியும்(பாலாஜி), சங்கிலியும்(வெங்கி). அவ்வூர் மலைவாழ் மக்களின் ஜான்ஸி ராணியான சிலந்தி(லக்ஷ்மி ப்ரியா) மீது இருவருக்கும் காதல். இடையில் நடக்கும் கொலையால் தொடை நடுங்கும் இருவரும் விபரீதத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் கதை. 'ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்' என்று பேப்பரில் விளம்பரம் செய்து விட்டு இடைவேளையில் தான்  'இனிமேதான் ட்விஸ்ட்' என கிச்சு கிச்சு மூட்டுகிறது சு.க.டீம். ஆனால் அதற்கு பிறகு 'டேய் ட்விஸ்டுடா' என பாலாஜியும்,வெங்கட்டும் மட்டுமே அடிக்கடி சொன்னாலும் தியேட்டரில் வாழ் காமிக்ஸ் கலா ரசிகர்கள் கோரஸாக கொட்டாவிதான் விடுகிறார்கள்.  
   

ராமராஜன், ராஜ்கிரண், டி. ஆர், பவர் ஸ்டார் போன்றவர்களை இணையத்தில் ரவுசு கட்டி எழுதி நாமெல்லாம் ஓய்ந்து விட்ட காலத்தில் க்ளைமாக்ஸில் வரும் டார்க்  ப்ரைட் காமடி போலீஸ் போல தற்போதுதான் தமிழ் சினிமா இயக்குனர்கள் மும்முரமாக அம்முன்னோர்களை ஓட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள். 'யா யா'வில் ராமராஜன், ராஜ்கிரணை எகத்தாளம் செய்தது எப்படி சோபிக்கவில்லையோ அதுபோல இங்கு ராம்கி, அருண்பாண்டியனை பகடி செய்யும் வசனங்கள்.  பாவம் இவர்கள்தான் காமடி பீஸாகி இருக்கிறார்கள். 

Paradesi tea stall பாரடைஸ் டீ ஸ்டால், 'அப்பா பெல்ட் போட்ருக்கனா பாரு?' என மகளிடம் வினவும் காவலதிகாரி, ஜேம்ஸ் மேஜிக் ஷோ போன்ற சில இடங்களில் மட்டுமே டார்க்/ப்ளாக் காமடி முத்திரை. மற்றபடி இருண்ட சூழல், நமக்கு புரிந்தது படம் பார்ப்போரின் உள்ளறிவுக்கும் எட்டும் எனும் அபார நம்பிக்கையுடன் எடுக்கப்படும் காட்சிகள் மட்டுமே டார்க் காமடி ஆகிவிடுமா என்பதே கேள்வி. அடிப்படையில் பொழுதுபோக்கு எனும் அம்சம் இல்லாமல் எப்படி? அந்த இடத்தில் ஆறோடு ஏழாம் சோம்பேறியாகி விட்டதோ சுட்ட கதை டீம் எனும் சந்தேகம் வலுக்கவே செய்கிறது.

நாசர் மட்டும் இல்லாவிட்டால் கந்துவட்டிக்கு கடன் வாங்கியாவது ஸ்க்ரீனை நோக்கி ஆளுக்கு 6 ரவுண்ட் சுட்டிருப்பார்கள். எம்.எஸ். பாஸ்கர், ஜெயப்ரகாஷ், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோர் ஸ்டார் வால்யூவிற்கு மட்டுமே தலை காட்டி இருக்கிறார்கள். மெட்லி ப்ளூஸ் எனும் பேன்ட் இசையில் பாடல்கள் சுமார். நிசாரின் ஒளிப்பதிவு டச்சிங்.

காமிக்ஸ் வகையறா படமான சுட்ட கதையை பாலாஜி தவிர்த்து கொஞ்சமாவது நடிக்க தெரிந்தவரை போட்டு இன்னும் அதிக சஸ்பென்ஸ்கள் நிறைத்திருந்தால் பேசப்பட்டிருக்கும். ஆனால் தீபாவளி துப்பாக்கி ஆகிவிட்டது துரதிர்ஷ்டம். 
 ...............................................................

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ok... thanks... from new android...

வெங்கட் நாகராஜ் said...

விமர்சனப் பகிர்வுக்கு நன்றி. இன்னொரு தளத்திலும் படித்தேன். விரைவில் “இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக....” பார்க்க முடியும்.

Unknown said...

பகிர்வுக்கு நன்றி.///வெடிக்காதா?அடடே...............!

உலக சினிமா ரசிகன் said...

பாவம் பாத்து... கொஞ்சமா கழுவி ஊத்திட்டீங்க போல!.

சென்னை பித்தன் said...

சாப்பாட்டுப் பதிவுக்காகக் காத்திருக்கிறேன்

Related Posts Plugin for WordPress, Blogger...