CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, October 2, 2013

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராதி மோஸ்ட் வான்டட் ஆக்டர் இன் தமிழ் சினிமா' விஜயசேதுபதி..உண்மைதான். சிறிய பட்ஜட் படங்கள், விஸ்வரூப வெற்றி..சும்மாவா? நடிப்புக்கான ஸ்கோப் பெரிதாக இல்லாமலே திரைக்கதை மேஜிக் உள்ளிட்ட இதர பல வஸ்துக்களால் இப்படி அடுத்தடுத்து ஹிட் அடிக்கிறாரே மனிதர் என்று எண்ணியதும் உண்டு. 'எல்லாத்துக்கும் சேத்து வச்சி இ.ஆ.பா.குல பெண்டை நிமித்தாட்டங்க பாஸ்' என்றார் வி.சே. ஹாட்ரிக் வெற்றிக்கு பிறகு இவர் 'இன்னாத்த கீசிகீறார்' என கோடம்பாக்கம் முழுக்க காத்திருந்த படம் எப்படி இருந்தது?  பாக்லாம். 

ஹவுசிங் போர்டில் 'குடி'யிருக்கும் சுமார் மூஞ்ஜி குமாருக்கு எதிர்த்த வீட்டு குமுதா மீது ஒரு தலைக்காதல். ரவுசு கட்டி மவுசு காட்டுகிறார். மற்றொரு பக்கம் பாலா. மார்க்கெட்டிங் துறையில் வேலை பார்க்கும் செவுப்பு தோல் யூத். க்யூட்டான ரீனுவை காதலிக்கிறார். இரு ஹீரோக்களும் சரக்கு அடிப்பதை சகஜமான வேலையாக செய்பவர்கள். லோக்கல் பார் ஒன்றில் நடக்கும் கொலை, பாலாவால் ஏற்படும் விபத்து எப்படி கதையை கஷ்டப்பட்டு நகர்த்த உதவியிருக்கிறது என்பதுதான் கதையே. 

சுமார் மூஞ்ஜி குமாராக சென்னை ஸ்பெஷல் பாஷையில் நூற்றுக்கு 50 மார்க் வாங்கி தப்பிக்கிறார் சேதுபதி. ரத்தம் குடுக்கப்போகும் இடத்தில் மட்டும் செம பார்மில் அதகளம் செய்திருக்கிறார். மற்றபடி நத்திங் ஸ்பெஷல். அட்டகத்தி நந்திதா, ஸ்வாதி ஜஸ்ட் ஊறுகாய்ஸ். பாலாவாக அஸ்வின் ஜஸ்ட் பாஸ். மலையாளி மேனேஜராக எம்.எஸ்.பாஸ்கர் பிரமாதமான நடிப்பு. ஆச்சி மனோரமாவிற்கு பிறகு பல்வேறு வட்டார வழக்கு மற்றும் வேற்று மாநில மொழியை கச்சிதமாக உச்சரிக்கும் நடிகர்களில் எனது பேவரிட். செம வாத்யாரே. பஞ்ஜாயத்து பேசும் அண்ணாச்சி பசுபதியும் டாப். பட்டிமன்றம் ராஜா நடிப்பில் ஒரளவு முன்னேற்றம். சிறப்பு சிரிப்பு நடிகராக சூரி...வெரி சாரி. சத்தம் ஜாஸ்தி. சரக்கு கம்மி. ஓகே ஓகே தேன் அடை அம்மணி சோபிக்கவில்லை. இன்னும் ஏராளமான கேரக்டர்களின் ஆக்ரமிப்பு படம் முழுக்க.

'அண்ணாச்சிய தூக்கிருவமா?' 'அவர் என்ன கொழந்தையா..தூக்க?'  'டேய் எரியுதுடா?' 'ஒனக்குதான்டா எரியுது' வசனங்கள், சரக்கு குடோனுக்கு வழிகாட்டும் ஹோமோ கேரக்டர் எல்லாம் தீபாவளி சரவெடி.

பாடல்கள் எதுவும் தியேட்டரில் பெரிதாக செல்ப் எடுக்கவில்லை. கொஞ்சம் சீரியசாக கதை சொல்ல வேண்டும் என்று இரண்டாம் பாதியில் ரத்தத்தை தேடி அலைகிறார்கள். சுத்தம். குருட்டு அதிர்ஷ்டத்தில் பத்தோடு 11 ஆக சில சுமார் தமாசு படங் கள் வசூலை அள்ளுவது போல இப்படம் பிய்த்துக்கொண்டு ஓடினாலும் ஆச்சர்யமில்லை. 

ரவுடிகளிடம் உதை வாங்கிய கடுப்பில் 'சொல்லி வை. ரிட்டர்ன் ஆப்  தி ட்ராகன்னு சொல்லி வை' என்பார் விஜய சேதுபதி. அதை அப்படியே பட அடுத்த ஆடியோ ரிலீஸில் மறக்காமல் சொல்லிடுங்க பாஸூ. ஐ ஆம் வைட்டிங்.

காந்தி ஜெயந்தி ஆகிய இன்று எல்லா டாஸ்மாக்கும் மூடி இருந்தால் என்ன? முழுநீள  டாஸ்மாக் படத்த பாத்தா போச்சி' என விரும்புவோருக்கு 100% ஏத்த காவியம். இதற்குத்தானா ஆசைப்பட்டாய் சிவகுமாரா? என்னமோ போடா...
.....................................................................

    


8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசம் என்றால் விஜயசேதுபதி என்றாகி விட்டது...!

வெங்கட் நாகராஜ் said...

//இதற்குத்தானா ஆசைப்பட்டாய் சிவகுமாரா? என்னமோ போடா...//

இப்ப தான் ஏதோ தொலைக்காட்சியில் போட்ட அப்படத்தின் பாடலை நினைத்து நொந்திருந்தேன்..... :)

Unknown said...

இந்த படத்துக்கு பிறகு விஜய் சேதுபதி சூப்பர் ஸ்டார் ஆகிறுவார்ன்னு ஜோசியம் சொன்னாக புஸ் ஆ ஆ

MGSP said...

In my previous job, my manager was a Malayali. When I saw MS Baskar in the trailer, it was just a single line dialogue but it resembled my ex-Manager. This is what is real acting.

aavee said...

ஹஹஹா.. கொஞ்சமா கலாய்ச்சு விட்டுட்டீங்க பாஸ்.. உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்த்தேன். படம் மாதிரியே ஆயிடுச்சு விமர்சனமும்.

Unknown said...

அட போங்க சார்..................ஒரேயடியா ஹிட் குடுத்தா எப்புடி,சார்?அதான் இப்புடியா இருக்குமோ?///முழு நீள(100%)டாஸ்மார்க்............ஹி!ஹி!!ஹீ!!!

பல்பு பலவேசம் said...

Besharam review. pannunga

திண்டுக்கல் தனபாலன் said...

வசனம் : ‘மெட்றாஸ் பவன்’ சிவா....???

visit : http://worldcinemafan.blogspot.in/2013/10/blog-post.html

Related Posts Plugin for WordPress, Blogger...