CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, October 23, 2013

ஸ்பெஷல் மீல்ஸ்(23/10/13)அன்பே சிவம்:

                                                                    

சில நாட்களுக்கு முன்பு தி.நகர் நடேசன் பூங்கா அருகே நான் எடுத்த புகைப்படமிது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாலும் தனது இரு நண்பர்களையும் அரவணைத்துக்கொண்டிருக்கும் கரங்கள். இன்றுவரை மனதில் நிழலாடிக்கொண்டிருக்கிறது  இக்காட்சி.
...............................................................

Captain Phillips:
'சூடான் கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய நாயகனின் சாகசக்கதை' என பிலிம் காட்டி விட்டு பார்வதியுடன் காதல் ரசம் சொட்ட தனுஷை நடிக்க வைத்த பரத் பாலாவிற்கு இப்படம் செம சமர்ப்பணம். ஓமனில் இருந்து சரக்கேற்றி செல்லும் கப்பல் பிரசித்தி பெற்ற சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் மாட்டிக்கொள்கிறது. குழுவை காப்பாற்றி தான் மட்டும் பணயக்கைதியாகிறார் கேப்டன் பில்லிப்ஸ்(டாம் ஹாங்க்ஸ்). வீர தீர சாகசங்கள் செய்து ஹீரோ ஆகாமல் அமெரிக்க கப்பல் படை உதவியுடன் எப்படி மீள்கிறார் எனும் உண்மைச்சம்பவம் திரைக்கு வந்துள்ளது.

'கேப்டன்னா இவர்தான்' கதாபாத்திரத்தில் பாந்தமாய் டாம். ஆனால் கொள்ளையர் தலைவனாக வரும் பர்கத் அப்திதான் நடிப்பில் ஹீரோ. '30,000 டாலர் வாங்க நான் என்ன பிச்சைக்காரனா?' எனச்சொல்லும்போதும்,  இன்ஜின் ரூமை பார்த்தே தீர வேண்டுமென அழுத்தி கூறும்போதும்..டாமை விட விருதுக்கு தகுதியான நடிப்பு. 700 பேரை ஆடிட் செய்து அதில் 4 பேரை சோமாலிய கொள்ளையர்கள் வேடத்திற்கு தேர்வு செய்திருக்கிறார்கள். கை மேல் பலன். 'நிஜத்தில்  பில்லிப்ஸ் எம்மை ஆபத்தில்தான் சிக்க வைத்தார். அவரை ஆபத்பாந்தவனாக படத்தில் காட்டி இருப்பது சரியல்ல' என கேப்டனுடன் பயணித்த ஊழியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். எது எப்படியோ பரபரக்கும் கடத்தல் த்ரில்லரை தந்திருக்கும் பால் க்ரீன் க்ராஸை 10 ரவுண்ட் வானத்தில் சுட்டு பாராட்டலாம்.
.........................................................................

புது வசந்தம்:
                                                                     

புதிதாக வந்திருக்கும் 'தி இந்து' தமிழ் எப்படி இருக்கிறது என அறிய சென்னை தூவானம் போல நாளிடைவெளிவிட்டு சில பிரதிகள் வாங்கிப்படித்தேன். என்னதான் பாலா, மிஷ்கின் படமென்றாலும் இம்மாத்தூண்டு மசாலா இருந்தால்தான்  தமிழ் பேப்பர் வாசிப்பாளர்களுக்கு செமிக்கும். அந்த தினத்தந்தி பார்முலா இந்துவுக்கு கை வரவில்லை. தந்தி, தினமலர் மற்றும் தினகரன் கலவையாக தர முயற்சித்து இருக்கிறார்கள். Too many cooks spoil the broth. முதல் பக்கத்தில் கலாட்டா கச்சேரி என்கிற பெயரில் சினிமா பாடல் தாங்கிய கார்ட்டூன்...ஹே (N) ராம். தாங்கல. 16 பக்கங்கள் 4 ரூபாய் டூ மச்(சி). ஆங்காங்கே ஆழமான கட்டுரைகள். தினமணியையும் சேர்த்து வாசித்த எபெக்ட். 4 இன் 1 பேப்பர்களின் கலவை என்பதால்தான் 4 ரூபாயோ?
..............................................................................

நீர்ப்பறவை: 
கடைகளில் 10 ரூபாய்க்கு விற்கும் அரை லிட்டர் தண்ணீர் பாட்டிலை சத்யம் தியேட்டரில் 20 ரூபாய்க்கு விற்று வந்தார்கள். தற்போது அதன் விலை 30 ரூபாய். டிக்கட் விலை பல ஆண்டுகளாக ரூ.120க்கு மேல் ஏறாமல் வேறு வடிவில் அட்ஜஸ்ட்  செய்யப்படுகிறது. இனி அம்மா குடிநீரே சரணம்.
.............................................................................
  
தீபாவளி:
வருடா வருடம் ஆனந்த் விகடன் தீபாவளி மலர் வாங்க உத்தேசிப்பது வழக்கம். பெரும்பாலும் நம்ம டக்கு லேட் என்பதால் 'தீந்து போச்சி' பதில்தான் கடைக்காரரிடமிருந்து வரும். இம்முறை அவ்விதழ் என வசமானது. 99 இல் இருந்து 120 ரூபாயாக விலையை ஏற்றி விட்டனர். ஆனால் பேப்பர் தரம் டாப் க்ளாஸ். மொத்தம் 400 பக்கங்கள். அளவான விளம்பரங்கள் மட்டுமே.

ஆன்மீக கட்டுரைகள்/படங்கள், லால்குடி ஜெயராமன், நல்லி சில்க்ஸ் வரலாறு, பட்டுக்கோட்டை பிரபாகர், நாஞ்சில் நாடன், சுபா உள்ளிட்டோரின் சிறுகதைகள், சிவாஜி, எம்.ஜி. ஆர். ஸ்பெஷல், விஜய சேதுபதி பேட்டி என பல்வேறு அம்சங்களுடன் வழக்கமான நகைச்சுவை மத்தாப்புகள் தாங்கி அமர்க்களமாக இருக்கிறது.  சாம்பிள் வெடி: ஸ்ரீதர் இயக்கிய 'நெஞ்சிருக்கும் வரை' படத்தில் சிவாஜி மற்றும் ஏனைய நடிகர்கள் எவரும் மேக்கப் இன்றி நடித்திருக்கின்றனர் எனும் தகவலை படித்தேன். தமிழ் சினிமா வரலாற்றில் முதல் 'நோ டச் அப்' படமென்பதால் டி.வி.யில் பார்க்கும் ஆவலை கிளப்பியுள்ளது. 
....................................................................... 

நான் ராஜாவாகப்போகிறேன்:
ஆரம்பத்தில் சன் டி.வி.க்கு இணையாக போட்டி போட முடியாமல் ராஜாதி ராஜா, கர்ணன், இந்தியன் படங்களை ஒரு ஓரமாக ஓட்டி ஒதுங்கியது ராஜ் டி.வி. புதிய படங்களின் சாட்டிலைட் உரிமை வாங்குவதில் ஜீ தமிழ் சன்னை முந்தினாலும் காலப்போக்கில் அடங்கியது/அடக்கப்பட்டது. அடுத்து கோட் கோபி பரிவாரங்களுடன் சவால் விட்டது ஸ்டார் விஜய். சமீபகாலமாக விஜய்யும் ரம்பம் போட்டுக்கொண்டு இருக்கிறது. 'என்னடா இது மோகன், டி.ஆர்., ராமராஜன்னு போட்டிக்கு வந்துட்டே இருக்காங்க?' என கடுப்பான சூப்பர் டி.வி.ஸ்டார் சன்னுக்கு லேட்டஸ்ட் சவால் புதிய தலைமுறை.

என் போன்ற SCV செட் ஆப் பாக்ஸ் வைத்திருப்போர் வீட்டில் பு.த.சேனலை கட் செய்தது சன். தற்போது 'புதுயுகம்' எனும் பொழுதுபோக்கு சேனல் மூலம் சன்னுக்கு கடும் சவாலை தர தயாராகி விட்டது புதிய தலைமுறை. குறிப்பாக மெகா சீரியல் ஏரியாவில் ஹெவியாக களமிறங்கி இருக்கிறது புது யுகம். சிம்ரன், சினேகா, 'சோனியா அகர்வால்'...என நட்சத்திரங்களின் நான் ஸ்டாப் பவனி. 'சன் மெகா'ன்னு தனி சீரியல் சேனல் ஆரம்பிப்பாரோ கலாநிதி!!
................................................................................

வணக்கம் சென்னை:
சென்னை மாநகரின் சந்து பொந்துகளில் இருப்போரின் குறை போக்க மினி பேருந்துகளை மாண்புமிகு அம்மா அவர்கள் மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு ஜெயா டி.வி.யில் இன்று காலை லைவ் அடிக்கப்பட்டது. அம்மா குடிநீரில் இருப்பது போன்றே பெரிய சைஸில் இரட்டை இலையும், அதையொட்டி இரு சிற்றிலைகளும் பேருந்துகளின் முதுகில் பச்சை(யாக) குத்தப்பட்டு இருந்தன. நம்ம தெருவான்ட இன்னா நம்பர் பஸ்ஸு பறக்கும்னு டப்புனு சொல்லுங்கப்போய்.
.......................................................................

அமர்க்களம்:
கடைக்கோடி ரசிகனுக்கும் சேர்த்து ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படங்களை வழங்கும் தலைவன் பீட்டர் ஜாக்சனின் லார்ட் ஆப் தி ரிங்ஸ் தொடர்ப்படங்களின் வரிசையில் டிசம்பர் 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது: The Hobbit: The desolation of Smaug. ஹாப்பிட் முந்தைய பாகம் HFR(High Frame Rate) தொழில்நுட்பத்தில்   வெளியானது. சத்யம் தியேட்டரில் அப்படத்தை பார்த்தபோது ஆங்கில டி.வி. சீரியல் பார்த்த குறை இருந்தது. அது பரவலான விமர்சனத்திற்கும் உள்ளானது. இம்முறை அதனை பீட்டர் & கோ சரி செய்திருப்பார்கள் என கண்டிப்பாக நம்பலாம். ஐ ஆம் வைட்டிங் வாத்யாரே!!

ட்ரெய்லர் பார்க்க:  

 
               
.............................................................                  
               

சமீபத்தில் எழுதியது:

..............................................

 email: madrasminnal@gmail.com


8 comments:

அஞ்சா சிங்கம் said...

முதல் படத்தில் இருப்பது நாய்நக்ஸ் தானே .

திண்டுக்கல் தனபாலன் said...

விகடன் தீபாவளி மலர் வாங்க வேண்டும்...

ராஜி said...

அன்பே சிவம் மனசை நெகிழ வைத்தது
>>
ஆ.வியின் தீபாவளி மலர் வாங்கனும்ன்னு ஆவலை தூண்டியது. ”நெஞ்சிருக்கும் வரை” எந்த தலைமுறையினரும் ரசிக்கும் வண்ணம் இருக்கும்.
>>
ஏற்கனவே மக்களை கெடுத்து வச்சிருப்பது போதாதுன்னு மற்றுமொரு சேனல்ல சீரியலா!?

”தளிர் சுரேஷ்” said...

சுவையான மீல்ஸ்! விகடன் தீபாவளி மலர் ரெண்டு வருசமா வாங்கலை! இந்த வருசம் வாங்க தோன்றுகிறது! பார்ப்போம்! தமிழ் இந்து குறித்த கமெண்ட் நச்!

வெங்கட் நாகராஜ் said...

முதல் படம் - மனதைத் தொட்டது.....

சீனு said...

மீல்ஸ் நல்லா இருந்தது சிவா... ஆவி தீபாவளி ஸ்பெஷல் பழைய புத்தக கடைக்கு போனதும் தான் வாங்கிப் படிப்பேன் (காஸ்ட் கட்டிங் :-))))))

MANO நாஞ்சில் மனோ said...

முதல் படத்துலேயே நக்கீரன் அண்ணனை கேவலப் படுத்தியமைக்கு கடும் கண்டனங்கள் - அப்புறம் மீல்ஸ் பல்சுவை...!

Unknown said...

தீபாவளி ஸ்பெஷலோ?வெரி ஸ்வீட் மீல்ஸ்,தேங்க்ஸ்!!!

Related Posts Plugin for WordPress, Blogger...