CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, October 14, 2013

ஸ்பெஷல் மீல்ஸ்(14/10/13)ஆயுத பூஜை:தீபாவளி, பொங்கல், ஆங்கில புத்தாண்டு என எப்பண்டிகையையும்  கொண்டாடும் பழக்கமில்லாத எனக்கு இவ்வாண்டு சற்று வித்யாசமான அனுபவம்தான். பெரம்பூர் ஐ.சி.எப்.பில் வேலை பார்க்கும் நண்பர் ஆரூர் மூனா ரயில் பெட்டிகள் தயாராகும் இடத்தையும், ரயில்வே ஊழியர்கள் ஆயுத பூஜை கொண்டாடுவதையும் காணும் சந்தர்ப்பத்தை சனியன்று அளித்தார். நேற்று காலை எமது ஏரியா தீயணைப்பு நிலையத்தில் ஆயுத பூஜை களை கட்டியது. தீயணைப்பு வண்டி மற்றும் காவலர்களுக்கு தீபாராதனை  காட்டிய காவல் நண்பரின் பெயர்....சையத் முகமத்.
............................................................................

Prisoners:
6 மெழுகுவர்த்திகள் பார்த்த  காண்டில் இருந்த எனக்கு அதே கதையுடன் ஹாலிவுட் படமொன்றை காணும் வாய்ப்பு கிடைத்தது. அருகருகே வசிக்கும் இரு நட்பான குடும்பங்களை சேர்ந்த இரு சிறுமிகள் சட்டென மாயமாக அவர்களைத்தேடி ஹ்யூஜ் ஜாக்மன் மற்றும் ஜேக் எப்படி அலைகிறார்கள் என்பதை திகில் நிறைந்த காட்சிகள் மூலம் அருமையாக படமாக்கி இருக்கிறார் டெனிஸ். ஷாம் மற்றும் வீ.இசட். துரை பார்த்தே தீர வேண்டிய படம்.
.......................................................................

கலகலப்பு:
அயனாவரம் பேருந்து நிலையம் அருகே நம்மை மிரள வைக்கும் ப்ளெக்ஸ். பாகிஸ்தானை கேப்டன் தொம்சம் செய்துவிட்டதால் ர.ர.க்கள் சீனாவை மிரட்டும் யுக்தியை கடைபிடித்து இருக்கிறார்கள். பலே குஸ்கா.
                                                                  

............................................................................

Gravity:
ரஷ்ய ஏவுகணை ஒரு செயற்கைக்கோளை தாக்குவதன் எதிரொலியாக சான்ட்ரா புல்லக் மற்றும் ஜார்ஜ் க்ளூனி ஆகியோர் பயணிக்கும் விண்வெளிக்கலம் ஆபத்தில் சிக்குகிறது. பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு உயிர் பிழைக்க போராடும் இருவரின் நிலையென்ன என்பதுதான் கதை. இரண்டே கேரக்டர்கள் மட்டுமே நடித்திருக்கிறார்கள். இனி பிழைக்க வாய்ப்பில்லை எனும் தருணத்தில் இருவரும் பேசும் வசனங்கள் மனதை நெகிழ வைக்கிறது. 90 நிமிடங்கள் பரபரப்பான ஸ்பேஸ் அனுபவத்திற்கு தயாராக விரும்பினால் க்ராவிடியை தவற விடாதீர்.
........................................................................... 

அலைபாயுதே:மெஸ், காய்கறி கடை..அடுத்ததாக அம்மா குடிநீர். சென்னை பேருந்து நிலையங்களில் விற்பனைக்கு வந்து ஒரு மாதமாகிவிட்டது. அண்ணா சாலை டி.எம்.எஸ் பேருந்து நிலையத்தில் 2 பாட்டில்களை வாங்கினேன். தனியார் தண்ணீர் பாட்டில் விலையை விட 10 ரூபாய் குறைத்து விற்றாலும் நீரின் சுவையும் விலைக்கு ஏற்றாற்போல் சற்று சுமார்தான். 'ஆள்பவர்கள் தண்ணீரை விற்றால் தரித்திரம்' என்று யாரோ சில ஜோசிய வல்லுனர்கள் கொளுத்தி போட்டிருக்கிறார்களாம். மேடமின் அடுத்த மூவ் என்னவாக இருக்க போகிறதோ?  
........................................................................

சொன்னா புரியாது:

தினத்தந்தி கன்னித்தீவு முடியுமா? பிரதமருக்கு எப்போதாவது ரோஷம் வருமா? போன்ற கணிக்கவே முடியாத விஷயங்களுக்கு இணையாக உலா வருவது 'ஆதார் அட்டை அவசியமா? இல்லையா?'. 'சுப்ரீம் கோர்ட்டே சொன்னாலும் எதுக்கு வம்பு. வாங்கி வச்சிருவோம்' எனும் மன நிலையில்தான் பலர் இருப்பதாக தெரிகிறது. ஆமா.. வண்டி ஓட்டும்போது ஹெல்மட் அவசியமா? இல்லையா?..அந்த பழைய பஞ்சாயத்து என்ன கதில கெடக்கு வாத்யாரே?
......................................................................
  
குட்டிப்புலி:

சமீபத்தில் சி.என்.என். சேனலுக்கு மலாலா அளித்த பேட்டி அட்டகாசம். 'உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்களை கொன்றே தீருவோம் என தாலிபான்கள் எச்சரிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் எனும் கேள்விக்கு மலாலாவின் பதில்: "என்னெதிரே துப்பாக்கி நீட்டியபடி அவர்கள் நின்றால் காலில் இருக்கும் ஷூவை கழற்றி அவர்களை அடிக்க தோன்றும். ஆனால் அப்படி செய்வதால் அவர்களுக்கும் நமக்கும் வித்யாசம் இருக்காது. எனவே கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்து சொல்லி உங்கள் பிள்ளைகளையும் படிக்க வையுங்கள் என்று சொல்லுவேன்".
..............................................................................


7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கொளுத்தி போட்டாங்களா...? போச்சி...!

மலாலாவின் பதில் செம அடி...

MANO நாஞ்சில் மனோ said...

கொளுத்தி போட்டாச்சுல்லா இனி அந்த திட்டத்தின் அட்ரசே இருக்காது அவ்வ்வ்வ்.....

ராஜி said...

அம்மா வாட்டருக்கு வேட்டு வச்சாச்சா?!

ஜீவன் சுப்பு said...

பரபரன்னு பத்தி பதிவு சூப்பர் ....!

இரண்டே கேரக்டர்கள் - கேபிள் ஜி 3 கேரக்டர்னு எழுதியிருந்ததா ஞாபகம் ...

Unknown said...

மீல்ஸ் அருமை!!!///அந்த ஜோதிடருங்க,அம்மா குடிநீர்(தண்ணீர்)வியாபாரம் செய்யப் போறாங்கன்னு முன்னாடியே தெரியாமயா இருந்தாங்க?///இதே மாதிரி,டாஸ்மார்க் குடும்பங்களக் கெடுக்குதுன்னு தெரியாமயா பிஸ்னஸ் பண்ணுறாங்க,அம்மா????

வெங்கட் நாகராஜ் said...

மலாலாவின் பதில் - அட்டகாசம்.....

சிறப்பான மீல்ஸ்..... பாராட்டுகள்.

aavee said...

@Jeevan Subbu - இன்னும் சீக்கிரமே போட்டிருப்பார் சிவா சார்.. ஒரு பக்கி போட்டோ எடுத்துட்டு அனுப்பறதுக்கு ஆறேழு நாள் பண்ணிடுச்சி அதான் லேட்.. ஹிஹி.. அது யாருன்னு நான்(னே) சொல்ல மாட்டேன்..

Related Posts Plugin for WordPress, Blogger...