CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, August 27, 2013

பதிவர் சந்திப்பில் பாமரன் - ஒரு பார்வை                                                                  

வரும் ஞாயிறு அன்று சென்னையில் நடைபெறவுள்ள பதிவர் சந்திப்பில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொள்ளும் எழுத்தாளர் திரு.பாமரன் பற்றிய சிறு குறிப்புகள் உங்கள் பார்வைக்காக. கோவைக்கே உரித்தான யதார்த்தம் கலந்த நக்கல் பேச்சுக்கும்/எழுத்துக்கும் சொந்தக்காரரான பாமரனின் நிஜப்பெயர் எழிற்கோ. 70 வீடுகளை மட்டுமே உள்ளடக்கிய வேலம்பாளையத்தில் துணிகளை நெய்து அவற்றை ஊர் ஊராக சென்று விற்பனை செய்து வந்தவர்  பாட்டனார் செங்கோடன். தந்தை சண்முக சுந்தரம் பி.காம் பட்டதாரி. 
 
கவுண்டமணியின் தீவிர ரசிகரான பாமரன் எழுதிய புத்தகங்கள்:

அன்புத்தோழிக்கு
புத்தர் சிரித்தார்
வாலி + வைரமுத்து = ஆபாசம்
அகிம்சாமூர்த்தி அமெரிக்கா.

நாளிதழ்/வார இதழ்களில் வெளியான தொடர் கட்டுரைகள்:

பகிரங்க கடிதங்கள்(குமுதம் 1997),
தெருவோர குறிப்புகள் (குமுதம், தீராநதி 2001),
சாட்டிலைட் சனியன்களுக்கு (நக்கீரன், தினமணி, ஆனந்த விகடன் 2003),
ஆரிய உதடுகள் உன்னது (புதிய பார்வை 2006).

செயல்பாடுகள்:

1983ல் உருவான உலக மனிதாபிமான கழக நிறுவனர், 2006ல் உருவான கோவை நாய்வால் திரைபட இயக்க முன்னோடி, ஈழ நண்பர் கழகம் - 1985 - 1990 வரையான செயல்பாடுகள், வீரப்பன் மரணம் குறித்த உண்மை அறியும் குழுவில் இடம் பெற்றவர், கோவை குண்டு வெடிப்பு குறித்து ஆராய போடப்பட்ட குழுவில் இடம் பெற்றவர், Amnesty International - 1987 - 1991 வரையான செயல்பாடுகள். 
                                                                

 2007 ஆம் ஆண்டு முதல் வலைப்பூவில் எழுதி வரும் பாமரனின் இணைய முகவரி:  pamaran.wordpress.com

அதிகாலை.காம் தளத்திற்கு பாமரன் அளித்த பட்டாசு பேட்டிகளின் தொகுப்பை காணொளியில் பார்க்க க்ளிக் செய்க:

பாகம் - 1

பாகம் - 2

பாகம் - 3

பாகம் - 4          

குமுதத்தில் பாமரன் எழுதிய 'படித்ததும் கிழித்ததும்' மூலம் ரசிகனாகிப்போன எனக்கு அவரின் ஒரு மணி நேர சிறப்புரையை கேட்கும் சந்தர்ப்பம் அமைந்திருப்பது மகிழ்ச்சி.

பதிவர்களுடன் சங்கமித்து எழுத்துலகம் பற்றிய பல்வேறு தகவல்கள் மற்றும் அனுபவங்களை பகிர வரும் பாமரன் அவர்களை உளமார வரவேற்கிறது தமிழ் வலைப்பதிவர் குழுமம்.
................................................................

.............................................
சமீபத்தில் எழுதியது:

மெட்ராஸ் கபே - விமர்சனம்
............................................
  


8 comments:

Gopi said...

பாமானுக்கு கமலை பிடிக்காது. சமயம் கிடைக்கும் போதெல்லாம் கமலை கிழிப்பார். ஆனா பிறர் உருவத்தை கேலி செய்தும், உடன் நடிப்பவரை ஏளனப்படுத்தி, அடித்து உதைத்து காமெடி செஞ்ச கவுண்டமணிக்கு பாமரன் தீவிர ரசிகன் என்பது ஆச்சர்யமா இருக்கு. (எனக்கு கவுண்டமணியின் டைமிங், சுய எள்ளல் இதெல்லாம் ரொம்ப பிடிக்கும். கமலையும் பிடிக்கும்).

! சிவகுமார் ! said...

பாமரன் தமது வலைப்பூவில் ஆகஸ்ட் மாதம் கவுண்டமணி குறித்து எழுதி இருக்கும் பதிவை நேரம் கிடைத்தால் படித்து பார்க்கவும் கோபி.

சாய்ரோஸ் said...

பாமரன் குறித்து அறியாத பல தகவல்களைத்தெரிந்து கொண்டேன்... நல்ல விஷயம் இப்படியொரு பதிவு தந்தது...

arasan said...

super anne

”தளிர் சுரேஷ்” said...

குமுதத்தில் பாமரன் கட்டுரைகள் வாசித்து உள்ளேன்! இந்த பதிவில் மேலதிக தகவல்கள் கிடைத்தன! அருமையான பதிவு! நன்றி!

ரூபக் ராம் said...

நல்ல செய்தி தொகுப்பு. இதே போல் மற்ற சிறப்பு பேச்சாளர்கள் பற்றியும் இயன்றால் பதிவு போடுங்களேன்

Unknown said...


தேவையான குறிப்புகள்! தொகுத்து தந்ததற்கு நன்றி

உலக சினிமா ரசிகன் said...

யாரையும் பாமரன் விட்டு வைக்க மாட்டார்....கம்யூனிஸ்டுகள் உட்பட....
ஒரு மணி நேரமும் சிரிப்பு சரவெடிதான்.

Related Posts Plugin for WordPress, Blogger...