CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, August 12, 2013

புல்லுகட்டு முத்தம்மா                                                                        
                                                            ஆரூர் முனா, முத்தம்மா மேடம், நான் 

பிரபல நட்சத்திரங்கள் நடித்திராத  திரைப்படங்கள் அவ்வளவு எளிதாக என்னை தியேட்டருக்கு இஸ்ததாக வரலாறு இல்லை.அதையும் மீறி வெறும் டைட்டிலால் மட்டுமே சுண்டி இழுத்த படங்கள் சில: சக்கரவர்த்தி திருமகன், பாரசீக மன்னன், திருமதி தமிழ். ஆனால் இவற்றையெல்லாம் அலாக்க தூக்கி மலாக்க போடும் டைட்டில் தாங்கி  சென்ற வாரம் வெளியான சினிமாதான் இந்த புல்லுகட்டு முத்தம்மா. வெற்றிகரமாக 2 வது வாரம் என தினத்தந்தியில் விளம்பரம் கண்ட மறுகணம் மனம் சொன்னது: 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சிவகுமாரா'. அண்ணாசாலை அண்ணா தியேட்டரில் நேற்று மதிய காட்சிக்கு ஆரூர் முனா செந்திலுடன் 'கிரக' பிரவேசம் செய்தேன்.

வி.சேகரின் பொங்கலோ பொங்கலுக்கு பிறகு அண்ணாவில் காலடி எடுத்து வைக்க காலம் கனிந்தது. தனது 4 வயது மகனுடன் நைனா ஒருவர் சீட்டில் அமர்ந்து இருந்தது..டபுள் க்ரேட்.

கதை என்ன? 'கசமுசா' செய்வதில் கைதேர்ந்த கல்லூரி மாணவன்-கம்-பண்ணையார் மகன் ராஜாவிற்கு கால் கட்டு போடுகிறார்கள் பெற்றோர்கள். Debut ராவில் தலைவலி என்று சுணங்கிப்போகிறான் பயபுள்ள. மறுநாள் மனைவி ராதாவிடம் 'இன்னைக்கி சரவெடிதான்' என குஷியாக கூறி பிஸியாகும் நேரத்தில் மீண்டும் புஷ்வாணமாகிறான். 50 ரூபாய் டிக்கட் வாங்கிய ஏ தில் மாங்கே மோர் ரசிகர்களை ஏமாற்றிய அக்கொடூர கிராதகனை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார்கள் சொந்த பந்தங்கள்.

டாக்டர் நளினி(மிஸஸ் ராமராஜன்) 'டாக்டர் கிட்டயும், வக்கீல் கிட்டயும் பொய் சொல்லக்கூடாது. உன் பிரச்னை என்ன சொல்லுப்பா' என்றதும் அந்த 'இஸ்கலக்கடி லாலா சுந்தரி கோலா கொப்பற கொய்யா' ப்ளாஷ்பேக் ஆரம்பம். சொல்கிறேன். கேளுங்கள்:

கல்லூரி லீவில் ஊருக்கு செல்லும் ராஜா பக்கத்து வீட்டு ரவா லட்டிடம் வேலையை காட்ட செவுலில் அவுல் வாங்குகிறார். 'என்ன மாரியான சமூகத்ல பொயக்கிறோம் நாம' என நொந்தவாறு வயக்காட்டில் நடந்து செல்லும்போது அவன் கண்ணில் படுகிறாள் நமது நாயகி. ஆம். அதோ. அதோ. அங்கே வயல் நடுவே. சரியாக 41 வது நிமிடத்தில் புல்லுகட்டு முத்தம்மா ஆன் ஸ்க்ரீன். 'உய்ய் உய்ய்' பறக்கிறது விசில். மூன்று வேளையும் அன்லிமிடட் மீல்ஸ் சாப்பிட்டு செல்லமாக வளர்ந்த தோற்றப்பொலிவுடன் புல்லறுக்கும் முத்தம்மாவை கண்டு புல்லரித்து போகிறான் ஆன்ட்டி ஹீரோ ராஜா.

முத்தம்மாவுடன் ராஜா 'விளையாடியதை' சித்ரா பார்க்கும்போது வந்துவிடுகிறது இன்டர்வல். 'என்னடா ஒண்ணுமே இல்ல' அங்கலாய்ப்புடன் கேண்டீனை நோக்கி ஓடிய பக்த கோடிகளில் யாமும் இருவராக. அப்போது சீட்டில் அமர்ந்திருந்த 'திருநங்கை' அடித்த கமன்ட்: 'இன்னா படம் எடுத்துருக்கான். சப்பையா. செல் போன்லயே இதவிட சூப்பரா நெர்ய மேட்டர் கீதே' .   

                                                                          


வெறும் 20 ரூபாய்க்கு 300ml கோக் வழங்கும் அண்ணாவை மனதார வாழ்த்திவிட்டு மறுபாதி காண குத்த வைத்தோம். சரி யார் அந்த சித்ரா? துபாய்க்கு சென்று நான்கு ஆண்டுகள் ஆகியும் ஊர் திரும்பாத கணவனை கட்டிக்கொண்டு கட்டிக்கொள்ளாமல் அழும் அபலை. பராசக்தி சிவாஜி பத்து நாள் டைபாய்டில் படுத்து எழுந்ததுபோல் இருக்கும் ராஜாவிற்கு ப்ராக்கெட் போடுகிறாள் சித்ரா. மிஷன் சக்சஸ்.

ஒரு அகால தினத்தில் சித்ராவிற்கு சர்ப்ரைஸ் தர சொல்லாமல் கொள்ளாமல் துபாயில் இருந்து வரும் சோனகிரி புர்ஷன் அந்த துன்பியல் சம்பவத்தையும் பார்த்து விடுகிறான். 'டேய்..டெட்டடேய்' என ஆக்ரோஷத்துடன் நம்ம ஆன்ட்டி ஹீரோவை அடித்து துரத்த...வேணாம் சார் நெஞ்சு வலிக்குது.


ஒட்டுமொத்த படத்தில் என்னை மெர்சலாக்கிய வசனத்தை பேசியது  நம்ம ராதாவின் அண்ணிதான்: 'வீட்டுக்கு போயி சமச்சி வீட்டு சாப்பாடு கொண்டு வர்ரம்மா' (பின்ன வீட்ல சமச்சி ஹோட்டல் சாப்பாடா கொண்டு வர முடியும்? என்னமோ போடா மாதவா).
 
ப்ளாஷ்பேக் ஓவர். 'உங்க நரம்பு மண்டலம் ஹெவியா டேமேஜ் ஆகி இருக்கு. ஆனா சரி பண்ணிறலாம். எலே டோன்ட் வொர்ரி பீ ஹாப்பி' என டாக்டர் சொன்னதுதான் தாமதம்...

நர்சக்கா ஒரு குண்டை தூக்கி போடுகிறார்: 'டாக்டர் ராதா ப்ரெக்னன்டா இருக்காங்க?'. ராதாவை நோக்கி ஓடுகிறார் நளினி: 'இதுவரைக்கும் எல்லாமே நோ பால் தான? எப்படி?'. இப்போது ராதாவின் ப்ளாஷ்பேக் ஆரம்பம். அதாவது ஊரில் தங்கி இருந்தபோது அக்கா புர்சர் செய்த சேட்டையால் ராதா இப்படி ஆகிட்டாங்கப்பா. க்ளைமாக்ஸ் என்ன? அண்ணா, கிருஷ்ணவேணி, கே.கே. நகர் விஜயா, எம்.எம். தியேட்டர்...எங்கயாச்சும் அமுக்கமா தலைல போர்வைய போத்திட்டு கமுக்கமாக பாருங்கப்போய்!!

'பிறர் பொருளுக்கு ஆசைப்படுபவன் தன் ''பொருளை இழப்பான்', 'அசத்த போவது யாரு?' போன்ற பிரமிக்க வைக்கும் விளம்பரங்களின் துணை கொண்டு 2 வது வாரம் வீர நடை போடும் புல்லுகட்டு முத்தம்மாவை ஹாலிவுட்டில் 'Grassbundle Pearl Mother' என பெயரிட்டு படமாக்க இருக்கிறார்கள் என்பது 'குறி'ப்பிடத்தக்க செய்தி.

சமகால தமிழ் ஹிந்தி சினிமாக்களில் வரும்  கவர்ச்சி/ஆபாச காட்சிகளில் 25% கூட இல்லாமல் 'ஓவர் மாத்திர ஒடம்புக்கு ஆகாது தம்பி' எனும்  தத்துவத்தை (விடிய விடிய) 'விழி'ப்'புணர்வு' சித்திரா வடிவில் நமக்கு தந்திருக்கும் இயக்குனர் முத்துபாண்டி மற்றும் தாட்டியான ஆன்ட்டி முத்தம்மா....

You deserve a pat in the back!!
 .....................................................

சமீபத்தில் எழுதியது:

துல்கர் நடித்த...
Neelakasham Pachakadal Chuvanna Bhoomi - விமர்சனம் 

.........................................................................


 


12 comments:

rajamelaiyur said...

தலைவாக்கு செம போட்டியா???

Unknown said...

ஹாஹா அண்ணே சூப்பர் ண்ணே ரொம்ப நாள் ஆச்சு இப்படி ஒரு கில்மா விமர்சனம் படிச்சு

இஸ்கலகடி லாலா சுந்தரி கோயா கொப்பூற கொய்யா ஹாஹா சூப்பர் சூப்பர்

சீனு said...

முத்தமா அழகை வர்ணிபதற்கு யோசித்த உங்களுக்கு கோட்டானா கோடி நன்றிகள்...

arasan said...


இதுவல்லவோ விமர்சனம் ... கடைசில ஹாலிவுட்டுக்கு போறது தான் டாப்பு

Prem S said...

உங்கள் படத்துடன் விமர்சனம் கலக்கல்

aavee said...

இந்தப் படத்துக்கு இவ்ளோ பேர் விமர்சனம் எழுதியிருக்கிற்த பார்த்தா தமிழ் சினிமா வரலாறு காணாத வசூல் சாதனை படைக்கும் போலிருக்கே..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அடப்பாவிகள... ஒரு படத்தை விடதிறதில்லை....


எது எப்படியோ மத்த படத்தை விட இதுக்கு ஹிட்ஸ் அதிக கிடைக்கும்..

இதற்கு தானோ ஆசைப்பட்ட்டாய் பாலகுமாரா...?

Unknown said...

ஆலையில்லா ஊருக்கு.........................ஹ!ஹ!!ஹா!!!

CS. Mohan Kumar said...

4 vayasu paiyanudan appaa vanthaaraa? Training tharrar pola !!

அஜீமும்அற்புதவிளக்கும் said...

உங்க விமர்சனம் அருமை சிவா , சிரிச்சு சிரிச்சு ஞான் மறிச்சு.

Muraleedharan U said...

Dear Shiv, I have seen one and only one channel review on B grade movies -Channel V by Gaurav. Your reviews and amsenthil reminding this--should add blunder discussions of director comments to be added

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

ம்ம்ம்ம் ம்ம்மம்மம்ம்ம்ம் ம்ம்ம்மம்மம்ம்ம்ம் முடியல என்ன ஆள விடுங்க என் உடம்பு தாங்காது அடி வாங்க வீட்ல தேடுவாங்க நான் வரேன்

Related Posts Plugin for WordPress, Blogger...