CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, August 28, 2013

சென்னை பதிவர் சந்திப்பு 2013: முன்னோட்டம்                                                               

* வரும் ஞாயிறு அன்று காலை முதல் மாலை வரை சென்னை பதிவர் சந்திப்பு நடைபெறவுள்ள இடம்: திரை இசைக்கலைஞர்கள் சங்கம், 297 ஆற்காடு ரோடு, வடபழனி, சென்னை - 26. கமலா தியேட்டர் அருகில். தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கு பல்வேறு சங்கங்கள் இருப்பினும் அதற்கெல்லாம் முன்னோடியாக உருவான முதல் சங்கமிது. ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் விருது வென்றதற்காக அவருக்கு திரை இசைக்கலைஞர்கள் பாராட்டு விழா நடத்தியது இங்குதான்.
                                                                   

 * பதிவர் சந்திப்பு, அதற்கான கலந்தாலோசனை, புத்தக வெளியீடு உள்ளிட்ட பதிவர் சார்ந்த பல்வேறு நிகழ்வுகளுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து வரும் டிஸ்கவரி புக் பேலஸ் உரிமையாளர் வேடியப்பன் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். இலக்கியம், சினிமா, நாவல், சிறுகதை என பலவித தலைப்புகளில் புத்தகங்கள் கிடைக்கும் இப்புத்தக நிலையத்தின் முகவரி: 6, முனுசாமி சாலை, மேற்கு கே. கே. நகர், சென்னை - 78. அலைபேசி: 9940446650. ஆன்லைனில் புத்தகங்கள் வாங்க: http://discoverybookpalace.com. பதிவர் சந்திப்பன்று டிஸ்கவரியின் தனி ஸ்டால் ஒன்று அமைக்கப்பட உள்ளது. நண்பர்களை சந்திப்பதோடு புத்தகங்களையும் அள்ளிச்செல்ல ஒரு வாய்ப்பு.
                                                                 


* பதிவர் சந்திப்பன்று புத்தக வெளியீடும் நடைபெறவுள்ளது. சேட்டைக்காரன் எனும் பெயரில் நகைச்சுவையாக எழுதி வாசகர்களை சிரிக்க வைத்துக்கொண்டு இருக்கும் வேணு அவர்களின் 'மொட்டைத்தலையும், முழங்காலும்' புத்தகம் வழக்கம் போல சிரிப்புக்கு உத்தரவாதம் தருமென நம்பலாம். கங்க்ராட்ஸ் சேட்டை!!
                                                                    


* இதழில் எழுதிய கவிதைகள் எனும் நூலின் மூலம் நம்மை கவரவிருப்பது தோழர் சங்கவியின் வார்த்தைகள். முகநூலில் பதித்த கவிதை தொகுப்புகளையும் இணைத்து தமது முதல் நூலை வெளியிடும் சங்கவி அவர்களுக்கு பதிவர்கள் சார்பாக வாழ்த்துகள்.
                                                                     

 * 'வெற்றிக்கோடுகள்' எனும் தலைப்பில் இளைஞர்களுக்கான தன்னம்பிக்கை கட்டுரைகளை தொகுத்து தனது முதல் நூலை வெளியிடுகிறார் தோழர் மோகன்குமார்(வீடு திரும்பல்). No tagline. No problem என்று சேட்டைக்காரனும், சங்கவியும் எஸ்கேப் ஆகிவிட ' உயர்தலே வாழ்க்கை' எனும் கேப்ஷன் போட்டு வெளியாக உள்ள இந்நூல் பற்றிய தகவல் 'மே(லி)டத்திற்கு' போகாமல் இருந்தால் சரி. மனமார்ந்த வாழ்த்துகள் மோகன்குமார்.         
                                                                          

* பதிவர் சந்திப்பில் நமக்கான உணவு தயாரிப்பு மற்றும் பரிமாறும் பொறுப்பை ஏற்றிருப்பது Door No.27 உணவகம். குறுகிய காலத்தில் சென்னை உணவுப்பிரியர்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் இவ்வுணவகத்தின் முகவரி: 27, வாசு தெரு, ஈகா தியேட்டர் அருகில், கீழ்ப்பாக்கம், சென்னை. நமக்கான சிறப்பு மெனு:

சிக்கன்  & வெஜ் பிரியாணி
ஆனியன் ரைத்தா
கத்தரிக்கா கொஸ்து
சிக்கன் டிக்கா
தயிர் சாதம்
உருளைக்கிழங்கு சிப்ஸ்
பைனாப்பிள் கேசரி
ஐஸ்க்ரீம்
 
                                                                 


* இந்த பதிவர் சந்திப்பிற்கு பன்னிக்குட்டி வருகிறார் என்றொரு தகவல் வேறு காட்டுத்தீயாய் பரவிக்கொண்டு இருக்கிறது. மர்ம நபர்களை பதிவர்களை சந்திக்க அனுப்பிவிட்டு 'அது நாந்தான்' என்று ஜகஜ்ஜால வித்தை காட்டும் திறன் கொண்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே 'கண்டுபுடிச்சிட்டேன். நீங்கதான பன்னிக்குட்டி. விடமாட்டேன்' என்று ஆர்வக்கோளாறில் வேறேதேனும் நபரின் தோள் மீது தொங்கி தர்ம அடி வாங்கினால் நான் பொறுப்பல்ல என்று பன்னிக்குட்டி சார்பாக அவரது பினாமியின் 'அந்தரங்க' காரியதரிசி எச்சரிக்கை விடுத்துள்ளார். பீ கேர்புல்.... உங்களத்தான் சொன்னேன்!!
.......................................................


.....................................
சமீபத்தில் எழுதியது:

பதிவர் சந்திப்பில் பாமரன்

மெட்ராஸ் கபே - விமர்சனம்
....................................
   
  

5 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நம் பதிவர்களின் புத்தகங்களை வாசிக்க ஆவலாக இருக்கிறேன்...

பன்னிக்குட்டி ராமசாமியை ஆளை பார்க்கவேண்டும் என்ற ஆவல் எனக்கு இல்லை....

முகம் தெரியாமல் நட்பை தொடரும் சுகமே தனி....


செப்டம்பர் 1-க்காக காத்திருக்கிறேன்..

Manimaran said...

//ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் விருது வென்றதற்காக அவருக்கு திரை இசைக்கலைஞர்கள் பாராட்டு விழா நடத்தியது இங்குதான்.//

அட...இதுவே பெரிய விசயம்தான்.... சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்..

Manimaran said...

பிரபல பதிவர் பன்னிகுட்டியின் முகம் காண ஆவலாக உள்ளேன்...

Manimaran said...

கடைசில ஏதாவது பன்னிகுட்டி போட்டோவ போட்டு நான் சொல்ல வந்த பன்னிகுட்டி இதுதான்னு சொல்லி ஏமாத்திடாதீங்க பாஸ்..

Unknown said...

முன்னோட்டம் கருத்தோட்டத்துடன் அமைந்துள்ளது. வளர்க.வெல்க.

Related Posts Plugin for WordPress, Blogger...