CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, August 7, 2013

ஸ்பெஷல் மீல்ஸ் (07/08/13)


கண்ணா லட்டு தின்ன ஆசையா:

                                                                       
                                                                       Image: madrasbhavan.com

அண்ணாசாலை(நந்தனம்) பெட்டிக்கடை ஒன்றினருகே தென்பட்ட கழக கல்வெட்டு. கோவில்களுக்கு 10 வாட்ஸ் பல்ப் அன்பளிப்பு தந்துவிட்டு அந்த வெளிச்சம் மறைய 'உபயம்' போடுபவர்களையும்  மிஞ்சி விட்டார்கள் இங்கே. 'இனிப்பு வழங்கிய' சென்னை மேயர் சைதை துரைசாமியின் பெயர் கல்வெட்டில் காலத்திற்கும் நிலைக்கும் வண்ணம் என்னமா சிந்திக்கறாங்க. இந்த மாதிரி தீவீர தொண்டர்கள் இருக்குற வரைக்கும் தமிழ்நாட்ல உங்கள யாரும் அசச்சிக்க முடியாது..அசச்சிக்க முடியாது.
...................................................................

The Conjuring:
பீட்சாவிற்கு பிறகு தியேட்டரில் ரசித்து பார்த்த பேய்ப்படம் The Conjuring. சத்யம் தியேட்டரின் மிரட்டும் ஒலி அமைப்பில் 100% நிரம்பி வழிந்த ரசிகர்களுடன் இம்மாதிரி திகில் படங்களை இரவுக்காட்சி பார்ப்பதே தனி த்ரில்தான். உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு சிறிதளவே க்ராபிக்ஸ் பயன்படுத்தி போதுமான அளவு பயமூட்டி இருக்கிறார்கள். ஐ லைக் இட்.
......................................................................

மறந்தேன் மன்னித்தேன்: 
                                                                
                                                                         Image: madrasbhavan.com

ஆழ்வார்பேட்டை சிக்னல் அருகே கண்ட ப்ளெக்ஸ். டெங்கு இல்லா சென்னையை உருவாக்க 'அனு' தினமும் தொடர்ந்து செயல்படுவதாக உறுதி அளித்திருக்கிறார்!!!
..............................................................................

அடிதடி:
சென்னை எக்ஸ்ப்ரஸ், தலைவா ட்ரெயிலர்கள் அடிவயிற்றில் புளியை கரைத்து விட்டதால் இவ்வாரம் இரண்டிற்குமே ஒரு பெரிய கும்பிடு. ஆகஸ்ட் 23 ஆம் தேதி ஒரு சுவாரஸ்யமான சினிமா திரைக்கு வருகிறது. அதன் பெயர் Local Kung Fu. வெறும் 95,000 ரூபாய் பட்ஜெட்டில் சண்டைப்படமொன்றை எடுத்திருக்கிறார் அஸ்ஸாமின் ஜாஃப்ரி. ''இந்திய சினிமாவில் உருப்படியாக ஒரு மார்சியல் ஆர்ட்ஸ் படம் கூட வந்ததில்லை. அக்குறை இப்போது நீங்கும். எனக்கு தெரிந்த அடிப்படை தொழில்நுட்ப அறிவை வைத்து இப்படைப்பை உருவாக்கி இருக்கிறேன்" எனச்சொல்கிறார் ஜாஃப்ரி. அமர்க்களமான The Raid Redemption படத்திற்கு பிறகு நான் பார்க்கவுள்ள அசல் சண்டைப்படம் இது.  

வாங்கண்ணா வணக்கங்கண்ணா!!
.............................................................................

சென்னையில் ஒரு நாள்:  
செப்டம்பர் 1 ஆம் தேதி நடக்கவுள்ள  சென்னை பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள உற்சாகமாக வருகையை உறுதி செய்துவரும் உள்ளங்களுக்கு வாழ்த்துகளும், நன்றிகளும். சந்திப்பு குறித்த விபரங்கள் பற்றி மேலும் அறிய கீழுள்ள தளத்தை விசிட் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்: 

http://www.tamilbloggers.info/ 
............................................................................

வித்தகன்:
சென்ற வெள்ளியன்று ப்ரசன்னா இயக்கி நடித்த 'கல்யாண சமையல் சாதம்' படத்தின் ஆடியோ வெளியீட்டிற்கு செல்லும் வாய்ப்பு நல்கியது. சினேகா, பாலுமகேந்திரா, கே.எஸ்.ரவிகுமார், கிரேசி மோகன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்ட நிகழ்வை தொகுத்து வழங்கியது ஆர்.ஜே. பாலாஜி. 'நானும் காமடி செய்கிறேன்' என்று தமிழ் சினிமா/ஊடகம் மற்றும் பத்திரிக்கைகளில் போடப்படும் அசுர மொக்கைகளுக்கு நடுவே பாலாஜி ஒரு விதிவிலக்கு. ஒட்டுமொத்த அரங்கும் வாய் விட்டு சிரிக்கும் வண்ணம் டைமிங் சென்ஸுடன் நகைச்சுவையாக பேசி விழாவை சிறப்பாக்கி விட்டார். வாழ்த்துகள் நண்பா.
.........................................................................

அச்சமுண்டு அச்சமுண்டு: 
புத்தகத்திற்கு வித்யாசமான தலைப்பு வைப்பதற்கான எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்பதை புத்தகக்கண்காட்சிகள் மூலம் பெருமளவு அறிந்து கொள்ளலாம். சமீபத்தில் புத்தகக்கடையொன்றில் வினோதமான புத்தக தலைப்புகளை வாசிக்கும் பாக்கியம் பெற்றேன். அவை: ஓநாயின் புத்தாண்டு கொண்டாட்டம், உப்புக்கடலை குடிக்கும் பூனை, அத்திப்பழங்கள் இன்னும் சிவப்பாய்த்தான் இருக்கின்றன, பகல் தண்டவாளத்தில் ரயில். விதிவசத்தால் நானொரு புத்தகம் எழுதினால் இப்படி ஒரு எடக்கு மடக்கான பெயரைத்தான் வைக்க வேண்டும். 
.............................................................................. 

புகைப்படம்: 
நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 'இமேஜ் டுடே' கண்காட்சிக்கு சென்றிருந்தபோது வளாகத்தினுள் எடுத்த புகைப்படம்:
                                                                     
                                                                         Image: madrasbhavan.com  
 ..........................................................................
 
துள்ளி விளையாடு:
ஆர்ப்பாட்ட 'கொலைவெறி'க்கு பிறகு கமுக்கமாக யூ ட்யூப்பில் ஹிட்டடித்து கொண்டு இருப்பது 'குற்றாலம்' திரைப்படத்தின் லவ் பெயிலியர் ஆந்தம் பாடல்தான். 

'காதல கண்டு புடிச்சவன் யாரு? அவன் கையில கெடச்சா மவனே செத்தான்'. நல்லாத்தான் இருக்கு.காணொளி பார்க்க க்ளிக் செய்க: 


https://www.youtube.com/watch?v=PtAr5gVVqk0

........................................................................ 
  

11 comments:

ராஜ் said...

சிவா,
THE CONJURING படத்தோட விரிவான விமர்சனம் உங்க ஸ்டைலில் எதிர்பார்கிறேன். தலைவா ட்ரைலர் நல்லா தானே இருக்கு, "சர்க்கார்" மாதிரி க்ரிப்பிங் ஸ்டோரியா இருக்கும்னு எதிர்பார்கிறேன்.

சீனு said...

எது எப்படியோ நான் தலைவா புக் பண்ணியாச்சு :-) ஆண்டவா என்ன காப்பாத்து :-)

”தளிர் சுரேஷ்” said...

சுவையான பகிர்வு! நன்றி!

வெங்கட் நாகராஜ் said...

ரசித்தேன்.

Unknown said...

தலைவாஆஅ

Yoga.S. said...

மீல்ஸ் எல்லாம் நல்லாருந்திச்சு!

MANO நாஞ்சில் மனோ said...

படத்துக்கு தலைவான்னு பேரை வச்சுகிட்டு நான் அண்ணா மாதிரி என் மகன் எம்ஜியார் என்று சொன்னால் விடுவாயின்களா நம்ம தலை[வா]வர்கள் ?

பல்சுவை....!

aavee said...

conjuring- பார்க்க விரும்பி மிஸ் செய்த படம்.

ராஜி said...

மீல்ஸ் அருமை

Rangs said...

Nanba, உப்புக்கடலை குடிக்கும் பூனை is an amazing book. Please read before commenting about it :(

வவ்வால் said...

ஊப்பு கடலை எப்ப்டி பூனையால்குடிக்க முடியும்?

உப்பு கடலையை தோல் உறித்து ஊதி ஊதி கடித்து தின்ன வேன்டும் :-))

Related Posts Plugin for WordPress, Blogger...