CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, July 17, 2013

Sixteen


                                                                   முதிர் வயது நாயக நாயகிகளுக்கு பள்ளிச்சீருடை அணிவித்து ரசிகர்களை இம்சைக்கு ஆளாக்கும் காலகட்டத்தில் அக்மார்க் க்யூட்டிஸ்களை ஆன் ஸ்க்ரீனில் அரங்கேற்றினால்? அதுதான் சிக்ஸ்டீன். 16 வயதினிலே மேட்டுக்குடி மொட்டுக்கள் சந்திக்கும் ரகரகமான பருவக்கோளாறுகளை புட்டு புட்டு வைக்கிறார் புதிய இயக்குனர் ராஜ் புரோஹித்.
 
பள்ளித்தோழிகளான அனு(இசபெல்) , நிதி(மேஹக்)  மற்றும் தனிஷா(வமிகா).  மூவரின் உலகமும் வித்யாசமானது. மிகப்பெரிய மாடலாக என்ன விலை வேண்டுமானால் கொடுக்க தயாராக இருப்பவள் அனு. காதலுக்கும், இனக்கவர்ச்சிக்குமான குழப்பத்தில் தனிஷா. தந்தை  அளித்த சுதந்திரத்தை வைத்துக்கொண்டு தோழனுடன்  சிநேகம் பாராட்டினாலும் செக்ஸிற்கு இடமளிக்காமல் உஷாராக இருக்க முயலும் நிதி. இம்மூவரும் எதிர்பாராத வண்ணம் சந்திக்கும் பிரச்னைகள்தான் கதை.

கேரக்டர்களுக்கு பாந்தமாக பொருந்தும் சிட்டுக்களை தேர்ந்தெடுத்த இயக்குனர் முதுகில் நாள் முழுக்க தட்டிக்கொண்டே இருக்கலாம். தனிஷா சிம்ப்ளி ராக்ஸ்.  மகன் அஷ்வினை கலக்டர் ஆக்க கண்டிப்புடன் நடந்து கொள்ளும் தந்தையாக ஜாகிர், நிதியின் தந்தையாக வருபவர் மற்றும் ஒருதலையாய் இப்பெண்களை காதலிக்கும் மாணவர்கள் என கேரக்டர்களை அழகாக செதுக்கி இருக்கிறார் ராஜ்.

தனிஷாவின் வீட்டில் குடியேறி காதலில் சிக்கும் எழுத்தாளராக கீத்தின் கதாபாத்திரம்தான் படத்தின் பலம். 'எழுத்தாளர்களுக்கு அமைதியான சூழல்தான் பிடிக்குமென  யார் சொன்னது?' என்பதில் தொடங்கி 16 வயதில் ஏற்படும் குழப்பங்களை தெளிவாக எடுத்துரைப்பது வரை கீத்தின் சீரான நடிப்பு சிறப்பு.
                                                                  

                                         
கேண்டீனில் தோழி ஒருத்தி பேசியே கொல்லும்போது நிதி தொடர்ந்து 'உம்' கொட்டுவது, அஷ்வின் தற்கொலைக்கு முயலும் திக் திக் காட்சி போன்ற இடங்களில் இயக்குனர் டச் பிரமாதம். தந்தைக்கு தந்த வாக்குறுதியை மீறி தோழனுடன் தவறான உறவு வைத்து கர்ப்பமாகிறாள் நிதி. கருக்கலைப்பு செய்ய மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கும் அவள் 'தயவு செய்து அப்பாவை உள்ளே வர சொல்லாதே. அவரை பார்க்கும் தைரியம் எனக்கில்லை' என்று தாயிடம் பதறும்போதும், அதன்பின் தந்தையை அணைத்துக்கொண்டு கண்ணீர் சிந்தும் காட்சியும் நெகிழ்வின் உச்சம்.    


செல்வராகவன் வகையறாக்களிடம் இதுபோன்ற கதை சிக்கி இருந்தால் சூட்டை கிளப்பும் எசகுபிசகான காட்சிகளும், பாடல்களும் வியாபித்து இருக்கும். ஆனால் அதுபோன்று பிட் பட காட்சிகளை பெரிதாக நம்பாமல்,  அதே சமயம் பிரச்சாரமும் செய்யாமல் ஸ்வீட் சிக்ஸ்டீன் மூவியை தந்திருக்கிறார். டோன்ட் மிஸ் திஸ் Miss மூவி.
......................................................................


நாளைய விமர்சனம்:

Bhag Milkha Bhag10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வகையறாவிடம் சிக்கும் ரீமேக்...!

CS. Mohan Kumar said...

என்ன மொழி படம்னு சொல்லலாம் இல்லை ? என்னை மாதிரி இப்படத்தை இதுவரை கேள்விபடாதவங்க அதை தெரிஞ்சுக்க கூகிள் அல்லது விக்கிபீடியாவில் போய் தேடனும் ! ஒருவேளை நடுவிலே எங்கேயாவது அதை சொல்லிருக்கீங்களான்னு தேடி தேடி பாக்குறேன் ஊஹூம் கண்ணுல படலை :))

வெங்கட் நாகராஜ் said...

இந்த ஹிந்தி படத்தின் பாடல்கள் அடிக்கடி சோனி மிக்ஸ்-ல் கேட்டேன். பாடல் கேட்கும்போதே பார்க்க நினைத்த படம்!

நல்லா இருக்குன்னு சொன்னதால பார்த்திடறேன்!

ராஜ் said...

கொரியன் பட பீல் கிடைக்குது.

MANO நாஞ்சில் மனோ said...

விமர்சனமே நல்லா இருக்கே அப்போ படம் பாத்துர வேண்டியதுதான்...!

! சிவகுமார் ! said...

@ திண்டுக்கல் தனபாலன்

சிக்காது

! சிவகுமார் ! said...

@ மோகன்குமார்

இது போன வாரம் வந்த ஹிந்தி படம் சார்.

! சிவகுமார் ! said...

@ வெங்கட், மனோ

நேரம் கிடைத்தால் பார்க்கவும். நன்றி

! சிவகுமார் ! said...

@ ராஜ்

அப்படியா?

Unknown said...

செல்வராகவனை ரொம்ப அண்டர் எஸ்டிமேட் பண்ணாதிங்கப்பா
எடுத்துக்கிட்ட கதைக்கு நியாமானத்தை செய்யும் சில பேர்ல அவரும் ஒருத்தர்
அதே மாதிரி இந்த மாதிரியான கதைகளை சரியா கையாள கூடிய ஒரே தமிழ் இயக்குனர் அவர் தான் இப்போதைக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...