CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, July 28, 2013

Ship of Theseus


                                                                      
                                                                         

'இந்திய திரைப்பட வரலாற்றில் இதுவரை வெளிவந்த படங்களில் முற்றிலும் மாறுபட்ட படைப்பிது', 'பார்க்காமல் தவறவிட்டால் ஒரு சினிமா ரசிகனாக உங்களுக்கு மிகப்பெரிய இழப்பு', 'பிரமாதமான ஒளிப்பதிவு' என ஏகப்பட்ட பாராட்டுகள், உலக திரைப்பட விழாக்களில் தொடர் வெற்றிகள். இதற்கு மேலும் ஷிப் ஆப் தீசியஸ் பார்க்கும் ஆவலை கட்டுப்படுத்த இயலவில்லை. சென்ற வாரம் இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் ரிலீஸ் ஆனாலும் இவ்வாரம் தான் சென்னை, கொச்சி உள்ளிட்ட மேலும் சில நகரங்களில் வெளியானது . சனிக்கிழமை காட்சிக்காக செவ்வாய் நள்ளிரவே முன்பதிவு செய்தாகிவிட்டது. 

அது என்ன ஷிப் ஆப் தீசியஸ்? டைட்டில் கார்ட் போடும்போதே அதற்கான விளக்கத்தையும் தந்துவிடுகிறார் ஆனந்த் காந்தி. மூன்று கதைகளை உள்ளடக்கிய இப்படத்தில் முதலில் வருவது கார்னியா தொற்றுநோயால்  பார்வை இழக்கும் இளம் பெண் போட்டோக்ராப்கார் பற்றிய கதை. ஓரளவு வசதியான குடும்பப்பின்னணி கொண்ட அலியா(அய்தா) கருப்பு வெள்ளை புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் கொண்டவள்.  அவளெடுத்த புகைப்படங்கள் சில சிறப்பாக உள்ளதென நண்பன் கூறினாலும் 'பிடிக்கவில்லை. அழித்து விடு' என அழுத்தமாக விவாதிக்கிறாள். இடையே கண் அறுவை சிகிச்சையும் மேற்கொள்கிறாள். முடிவென்ன என்பதை பனிபடர்ந்த மலையோர ஆற்றினோரம் ஒரு அமைதியான காட்சி மூலம் சொல்லப்பட்டு இரண்டாம் கதை துவங்குகிறது.

           
மிருக வதையை எதிர்த்து முன்னணி  நிறுவனங்கள் மீது வழக்கு தொடுக்கிறார் ஜெயின் துறவி மைத்ரேயா(நீரஜ்). ஒரு கட்டத்தில் நுரையீரல் பாதிப்பிற்கு உள்ளாகிறார். மருத்துவர்கள் தரும் மாத்திரைகள் தனக்கு தேவையில்லை. பல்வேறு விலங்குகளை சோதனைக்கூடங்களில் துன்புறுத்தி அதன் மூலம் உருவான மாத்திரைகள் எனக்கெதற்கு என புறக்கணிக்கிறார். காலம் அவரை எப்படி மாற்றத்திற்கு உள்ளாக்குகிறது என்பதை நமக்கு உணர்த்திவிட்டு தொடங்குறது மூன்றாம் கதை.

'காசு,துட்டு, பணம், பைசா' என்று வாழ்ந்து வரும் பங்குச்சந்தை தரகராக இளைஞன் நவீன்(சோஹம்). 'பணத்தை தவிர வேறெதையும் சிந்திக்காக மனிதனாக எத்தனை நாள் வாழப்போகிறாய். பிறருக்கு உபகாரமாக எதையும் சிந்திக்க மாட்டாயா?' என வாதாடும் பாட்டியிடம் அவ்வப்போது மல்லுக்கு நிற்கிறான். கட்டிடத்தொழிலாளி ஒருவனின் கிட்னியை மருத்துவர்கள் திருடிய செய்தி அறிந்து அவனுக்கு சகாயம் செய்ய முடிவெக்கும் நவீன் அதனால் சந்திக்கும் எதிர்பாராத திருப்பத்துடன் முடிகிறது. மூன்றாவது கதை. 
                                                                 
                                                    
பார்வையற்ற பெண்ணாக அலியா கமல். அழகு ததும்பும் தோற்றத்துடன் நம் பார்வைகளுக்கு விருந்து படைக்கிறார் நடிப்பிலும் சேர்த்து. அடிப்படையில் போட்டொக்ரபி பற்றி தெரியாத பலருக்கு இப்படைப்பு முக்கியமான ஆவணமாய் திகழும்.  ஜெயின் துறவியாக நீரஜ் நடித்திருக்கும் பகுதி வாழ்க்கை தத்துவத்தை அடிப்படையாக கொண்டது. கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்திப்போகும் நீரஜ் தனது இளம் வயது தோழன் ஒருவனுடன் விவாதிக்கும்போது வெளிப்படும் வசனங்கள் ஒவ்வொன்றும் வைரக்கற்கள். 

இருவரில் எவர் சொல்வது சரியென சான்றோர்கள் கூட முடிவெடுக்க தடுமாறும் வண்ணம் வசனங்கள் ஆட்கொள்கின்றன. நோய்வாய்ப்பட்டவராக நடிக்க வேண்டிய சில காட்சிகளுக்காக நீரஜ் 17 கிலோ எடைக்குறைப்பு செய்திருக்கிறார் நீரஜ். அதற்காக அவர் பட்ட அவஸ்தையை எலும்பும், தோலுமாக  ஒரு க்ளோஸ் அப் சீனில் மிரட்சியுடன் புரிந்து கொள்ள முடிகிறது நம்மால்.                                            
   
அருமையான வசனங்களால் பின்னப்பட்டு இருக்கும் இப்படத்தில் இருந்து சில...

நண்பன்: ''Don't Start that again''.

அலியா: Don't start that 'don't start again'.

ஜெயின் துறவியிடம் நண்பன்: 'மாத்திரைகளை உட்கொள்ள ஏனிந்த பிடிவாதம்?   உங்களுக்கும் தற்கொலைப்படை தீவிரவாதிக்கும் என்ன வித்யாசம்?'

ஷிப் ஆப் தீசியஸின் உயிர்நாடியாக இருப்பது பங்கஜின் ஒளிப்பதிவு. சாலையோரம் மிகவேகமாக நடந்து கொண்டே ஒரே ஷாட்டில் நீரஜ் பேசுமிடம், ஸ்டாக்ஹோம் மேகக்கூட்டங்களுக்கு கீழே முன்னோக்கி வரும் கார், பல்வேறு பாதங்களின் மிதிபாடுகளில் சிக்காமல் மீளும் மரவட்டை, பச்சை வயல் தோன்றுவதற்கு பின்பு டைட் க்ளோஸ் அப்பில் வரும் நீரஜின் கண்கள். விஷுவல் ராஜபாட்டை!!!
             
பங்கஜ்.....கேமராதான் கண்களா? கண்களே கேமராவா? ஒத்தை வார்த்தைல ஓராயிரம் தரம் சொல்லணும்னா.

பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா...          பிரம்மாதம்யா...           பிரம்மாதம்யா...          பிரம்மாதம்யா...
                              
இணைய தளம் ஒன்றிற்காக பங்கஜ் அளித்த பேட்டியை படிக்க:

பங்கஜ் - ஷிப் ஆப் தீசியஸ் 
                                                                    
  இயக்குனர் ஆனந்த் காந்தி

உலக சினிமாக்கள் குறித்த ஆழமான புரிதல் இல்லாவிடினும் தொடர்ந்து இதுபோன்ற படங்களை பார்க்கும் ஆர்வமுள்ள சராசரி ரசிகனாகிய என் போன்றோருக்கும் விளங்கும் விதத்தில் ஒரு சாலச்சிறந்த படைப்பை தந்திருக்கும் ஷிப் ஆப் தீசியஸின் அனைத்து கலைஞர்களுக்கும் வந்தனங்கள் பல.

உள்நாட்டில் பெரும்பாலும் காகிதக்கப்பல்களையே விட்டுப்பழகிய இந்திய கலைஞர்களுக்கு மத்தியில் உலக சினிமா எனும் சமுத்திரத்தில் கம்பீரமாக ஒரு டைட்டானிக் கப்பலை செலுத்தி இருக்கிறது 'கேப்டன்' ஆனந்தின் இந்த ஷிப் ஆப் தீசியஸ். 
...........................................................

குறிப்பு: ஆங்கிலத்தில் சப் டைட்டில் போடப்படுகிறது.
 

8 comments:

ராஜ் said...

சிவா,
படம் உங்களை ரொம்பவே இம்ப்ரெஸ் பண்ணி இருக்கு போல. எனக்கும் படம் பார்க்கணும் போல் இருக்கு. யூ டூப் இல்லாட்டி வேற எங்கயாவது ரீலீஸ் ஆனா தான் பார்க்க முடியும்.

! சிவகுமார் ! said...

Raj

U.S Release?

திண்டுக்கல் தனபாலன் said...

உலக சினிமா ரசிகன் அவர்களுக்கு (http://worldcinemafan.blogspot.in/2013/07/blog-post_27.html) டிக்கெட்டை எக்ஸ்பிரஸ் வேகத்தில் அனுப்பியதில் இருந்து படத்தின் அருமை புரிகிறது... நன்றி...

Inyan said...

I'm seeking this film......

உலக சினிமா ரசிகன் said...

இதோ புறப்பட்டு விட்டேன்.
வருகிறேன் சென்னை.
படத்தை காண...சிவாவுக்கு நன்றி சொல்ல.

Kavin said...

இந்திய சினிமாவிற்கு நல்லதொரு மாற்றம். . .படம் பார்க்க ஆவலாக உள்ளேன்..

பொன் மாலை பொழுது said...

நன்றி, நல்ல ஒரு படத்தை அறிமுகம் செய்ததற்கு

கோவை நேரம் said...

இந்த வாரம் ரிலீஸ் ஆகுது கோவைல...பார்ப்போம்...

Related Posts Plugin for WordPress, Blogger...