CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, July 24, 2013

D-Day


                                                                          


கெட்ட ஆட்டம் போட்ட ஒசாமா முதல் வீரப்பன் வரை அனைவரும் ஏதோ ஒரு ரூபத்தில் போட்டுத்தள்ளப்பட்டு விட மிஞ்சி இருப்பவர்களில் தாவூத் இப்ராஹிம்தான் மோஸ்ட் வான்டட். இவரை மையமாக வைத்து 'ஏக் மார் தோ துக்கடா' ஹிந்திப்படங்கள் வரிசையாக வந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் இந்த டி-டே. இதற்கும் முன்பு சுமாரான படங்களை இயக்கிய நிகில் அத்வானிக்கு டி-டே பெரிய பெயரை வாங்கித்தந்திருக்கிறது என்று சொல்லலாம்.

கராச்சியில் காலாட்டியவாறே நிழலுலக இரும்புக்கரங்களால் இந்தியாவை அலற வைத்துக்கொண்டு இருக்கும் Goldman (எ) தாவூத் (எ) ரிஷிகபூரை உயிருடன் பிடித்து வர R&AW திட்டம் தீட்டுகிறது. 'ஆபரேஷன் கோல்ட் மேன்' என பெயர் சூட்டி நம்பிக்கையான நான்கு உளவாளிகளிடம் அப்பொறுப்பை ஒப்படைக்கிறார்கள். நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தன் மகனின் திருமணத்திற்காக தாவூத் வரப்போவதை மோப்பம் பிடிக்கும் நால்வரும் தங்கள் திட்டத்தை செயல்படுத்த களமிறங்குகிறார்கள். வென்றார்களா/தோற்றார்களா என்பதே கதை.  

R&AW தலைமை அதிகாரியாக நாசர். ரவுடி ராத்தோர் மசாலா படத்தில் வில்லனாகவும், இன்னபிற ஹிந்தி படங்களில் ஆங்காங்கே தலைகாட்டி வந்த நாசரின் நடிப்பிற்கு டி-டே சரியான தீனியை வழங்கி இருக்கிறது. சென்டிமென்ட் உளவாளியாக இர்பான் வழக்கம்போல் அதகளம். அர்ஜுன் ராம்பால், 'கேங்ஸ்ஆப் வாசேபூர்-2' நாயகி ஹுமா குரேஷியும் நடிப்பில் பாஸ் ஆகி விடுகிறார்கள். 

அர்ஜுன் ராம்பாலுடன் உலக நாயகி ஸ்ருதி பின்னிப்பிணைந்து இருக்கும் ஸ்டில் பட ரிலீசுக்கு முன்பே பரபரப்பாக பேசப்பட்டது/ பார்க்கப்பட்டது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம். கராச்சி சிகப்பு விளக்கு பகுதியில் விலைமாதாக ஸ்ருதி. ராம்பாலை சுடச்சுட லிப் லாக் செய்யும் காட்சியின்போது தியேட்டர் ஏசி தானாகவே ஆப் ஆகி விடுகிறது. தந்தை 8 அடி என்றால் குட்டி 24 அடி பாய்ந்திருக்கிறது. அதே நேரத்தில் திரைக்கதைக்கு வேகத்தடை போடுவதும் மேடம் வரும் சீன்கள்தான். அதை க்ளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில் புரிந்து கொண்டு ஸ்ருதியை கௌரவக்கொலை செய்து விடுகிறார் இயக்குனர்.

                                                                       

ரிஷி கபூர்.... 'இந்த கெத்தான நடிப்ப இத்தன வருஷம் எங்க ஒளிச்சி வச்சிருந்த தலைவா' என விசிலடித்து பாராட்டும் அளவிற்கு வெளுத்துக்கட்டி இருக்கிறார். 'என்னை கைது செஞ்சி என்ன சாதிக்க போறீங்க? எனக்கு கராச்சியும் ஒண்ணுதான். மும்பையும் ஒண்ணுதான். நாடுமுழுக்க பரபரப்பா நாலு நாள் பேசுவீங்க. 'அர்னாப் கோஸ்வாமி' டி.வி.ல அலறுவார். அவ்ளோதான? உள்ள இருந்துட்டே பிசினெஸ் செய்வேன் பாக்கறியா?' என ரிஷி பேசும்போது 'அர்னாப் மூலம் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் இருந்து பலமாக விழுகிறது கைத்தட்டல். 

முதல் பாதியில் நட்சத்திர ஹோட்டலை சுற்றி நடக்கும் அதிரடி காட்சிகள் ஹாலிவுட் தரம். சங்கர் -எஹ்சான் -லாய் க்ரூப்பின் பின்னணி இசை மிரட்டல். ஸ்ருதி கொடூரமாக தாக்கப்படும் நிகழ்வை பாடலுடன் விஷுவல் செய்திருப்பது ரத்தமயமான லவ்லி ரொமான்ஸ். ஷங்கர் மகாதேவன் மற்றும் அவர் குழுவினரின் குரல்களில் ஒலிக்கும் 'முர்ஷித் கேலே' பாடல் மனதை கொள்ளை கொள்கிறது.

நகரின் பரபரப்பான மார்க்கெட்டில் உளவு பார்க்க செல்லும் பழமையான சீன், உளவுத்துறையால் சுற்றிவளைக்கப்படும்போது இம்மியளவு கூட பதட்டம் காட்டாமல் ரிஷி அவ்வப்போது பேசும் பஞ்ச் போன்றவை லேசான நெருட வைக்கின்றன. மற்றபடி நிழலுலகம்/ தாவூத் பின்னணி கொண்ட ஹிந்திப்படங்களில் டி-டே தனி இடத்தை பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
...........................................................................


சமீபத்தில் எழுதியது:


1 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அமுல்பேபி ரிஷி கபூர் என்றல்லவா நினைத்தோம், அவருக்கு தாவூத் கேரக்டர் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது....!

Related Posts Plugin for WordPress, Blogger...