CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, July 19, 2013

மரியான்                                                                     

தமிழில் படமெடுப்பது சுடுதண்ணீர் வைப்பதை விட எளிதான விஷயம் என்பதை 'வந்தே மாதரம்' பரத் பாலாவும் புரிந்து கொண்டு மரியானை கடலில் இறக்கி ஆழம் பார்த்து இருக்கிறார். இயக்குனர் தனது அன்புத்தோழர் என்பதால் ரஹ்மான் மெனக்கெட்டு மெட்டமைத்து இருப்பாரென்பது ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பு. அத்தோடு துக்ளியூண்டு டிக்கட் காசிற்கு ஆப்ரிக்கா எக்ஸ்கர்ஷன்  அழைத்துச்சென்றே தீருவேன் என ஆஸ்கார் ரவிச்சந்திரன் அண்ணாச்சி தீர்மானித்தால் வேண்டாமென்றா சொல்லப்போகிறோம்.

அரபி மற்றும் வங்கக்கடல் முழுக்க தலைகீழாக சம்மர் அடித்து  நீரோட்டமுள்ள (திரைக்)கதையை கழுத்தாமட்டையில் போட்டு பிடித்து வந்திருக்கும் பரத் பாலாவிற்கு முதலில் ஒரு பெரிய 'கும்புடறோம் குருசாமி' போட்டு விடுவோம். முதல் காட்சியில் தனுஷ் உள்ளிட்ட மூன்று ஆயில் நிறுவன தொழிலாளிகளை கடத்தி செல்கிறது ஆப்ரிக்கன் சுள்ளான் க்ரூப். அப்போது  தனுஷிடம் ஜெகன் 'உன் கதை என்ன?' என்று கேட்ட குத்தத்திற்காக நம்மை குத்த வைத்து மொத்தி எடுத்திருக்கிறார்கள்.

நீரோடி எனும் கடலோர கிராமம்.  மீன்பிடிப்பதில் வல்லவரான லோக்கல் நெத்திலி தனுஷை சொம்மா தொர்த்தி தொர்த்தி காதலிப்பது நமது  'பூ' பார்வதி. 'தள்ளிப்போடி' என ஓப்பன் ஹார்ட்டுடன் உலவும் அவ்விள நெஞ்சை ஆரம்பத்தில் கடிந்துவிட்டு பிறகு நெஞ்சோடு கெட்டியாக அணைத்துக்கொள்கிறார் வங்கக்கடல் ராசா. பார்வதி இவ்வளவு சீன் காட்டியிருப்பார் என்று முன்பே தெரிந்திருந்தால் 10 ரூபாய் டிக்கட் எடுத்து முதல் வரிசையில் அமர்ந்திருப்பேன்.

காதலியின் கடனை தீர்க்க சூடான சூடானில் வேலைக்கு செல்கிறார் சும்பன் சுறா. இடைவேளை. அங்கிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை நீங்கள் அமெரிக்காவில் பார்த்தாலும். ஆப்ரிக்காவில் பார்த்தாலும் சரி.
                                                                

முந்தைய படங்களை விட இப்படத்தில் தனுஷிடம் குறிப்பிடத்தக்க மாற்றம் இருப்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். அது யாதெனில் 'மரியான்' எனும் டைட்டில் கொண்ட படத்தில் இதற்கு முன்பு தம்பி நடிக்கவில்லை என்பதே. அசலூர் தோழராக அப்புக்குட்டி, ஆப்ரிக்க தோஸ்தாக ஜெகன். வந்தார்கள் சென்றார்கள். கேரளத்தின் முன்னணி நடிகர் சலீம் வீணடிக்கப்பட்டு இருப்பது கொடுமை. உருப்படியாக நடித்த ஒரே நபர் உமா ரியாஸ் மட்டுமே. அவரையும் சிற்சில சீன்களில் (நரைத்த) தலை காட்ட வைத்து விட்டு ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டனர்.

மரியானில் இந்திய ரசிகர்களின் கண்ணீர் மோட்டாரில்லா காட்டாறாக உதட்டினுள் உப்புக்கரித்து ஓடவைக்கும் காட்சியொன்றும் உண்டு. சூடான் பாலைவனத்திலோர் ஒற்றை மரம். மரத்தின் பின்புறம் தனுஷ். அவரருகே இரு சிறுத்தைகள் 'அனல் அனலா ஆப்ரிக்கா. மரத்த மரத்த சுத்தி வா. கொலவெறி பாடுனவன் இங்கிருக்கான். சிக்கிக்கிட்டான் ஒண்டிப்புலி' என பாடாத குறையாக வலம் வருகின்றன.

'சிறுத்தைங்க தனுஷை கடிக்க. தனுஷை சிறுத்தைங்க கடிக்க. ரெண்டுல ஏதோ ஒண்ணு நடக்கப்போதுப்போய்' என்று முன்சீட்டில் இருப்பவர் மூக்கின் நுனிக்கே நீங்கள் செல்லும்போது 'மாட்டேன். உடனே கடிக்க மாட்டேன். என்ன பாத்து பயப்படராப்ல கொஞ்ச நேரம் நடிச்சாத்தான அவருக்கு நேஷனல் அவார்ட் தருவீங்க' என காத்திருக்கின்றன அச்சிறுத்தைகள். சங்க காலத்தில் வீரமறத்தி ஒருத்தியின் முறத்தால் ஓட ஓட விரட்டப்பட்ட சிறுத்தை இதுவாக இருக்கக்கூடுமோ என கேவலமாக எண்ணிய எனக்கு சத்தியமாக பரிகாரம் இல்லையே...அய்யகோ!!
                                                                    


கடத்தப்பட்ட காலத்தில் பசியில் துடிக்கும் ஜெகனை சாந்தப்படுத்த தனுஷ் 'வறுமையின் நிறம் சிகப்பு' பாணியில் அறுசுவை உணவு உண்பது போல பாவனை செய்யும் சீன் க்ரியேட்டிவிட்டி இருக்கே... பரத் உங்க தாடிக்கு 10 கிலோ ப்ளாக் ரோஸ் டை பார்சல். க்ளைமாக்ஸ் 'நெஞ்சே எழு, நெஞ்சே எழு' பாடலில்  500.1 DTS எபெக்டில் ரஹ்மான் அலறி ஆனது ஒன்றுமில்லை. உலகையே வாய்க்குள் அடக்கிய கிருஷ்ணன் கூட நான் கொட்டாவி விட்டபோது எனது வாய்க்குள் இருந்ததாக மல்டிப்ளெக்ஸ்புரி வாழ் மக்கள் பேசிக்கொண்டனர்.  

யோவ்... சிங்கம் சூர்யா. ஒமக்கு சீப்பு வக்கிற எடத்துல ஏதோ மச்சம் இருக்குய்யா!!!
...........................................................

சமீபத்தில் எழுதியது:

Bhaag Milkha Bhaag - விமர்சனம் 


14 comments:

N.Manivannan said...

சிங்கம் 2 எந்த இடத்தில சீப்பு வைக்கும்?

திண்டுக்கல் தனபாலன் said...

மரியான் தேறி விடுவான்...!

அதற்கு இன்றைக்கு லீவா...?

ஜீவன்சுப்பு said...

அப்பாடா ! அப்டின்னா தங்கமீன்கள் நீந்த கடல் கெடச்சுடும் ...!

சக்கர கட்டி said...

அப்ப சிங்கத்த மரியன் அடக்க மாட்டான்

மோகன் குமார் said...

அதிசயமா வேலை நாளிலே படமா ?!! நீங்க இதுக்கெல்லாம் லீவே எடுக்காத ஆசாமி ஆச்சே !

Subramaniam Yogarasa said...

நன்று,நன்று!!!கொடுத்த காசுக்கு ஓப்பன் ஹார்ட்டாவது கிட்டியதே!

angusamy said...

ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல சிரித்து ரசித்து படித்த விமர்சனம்
ஆனாலும் அந்த கடைசி வரி ரொம்ப குசும்பு....
ஸ்பெஷல் ஆ ரூம் போட்டு யோசிச்சு எழுதுவீங்களோ?

கோவை ஆவி said...

ஹஹஹா.. முதல் முறை வர்றேன் அண்ணே.. விழுந்து விழுந்து சிரிச்சுட்டே படிச்சேன் உங்க விமர்சனத்த..

வெங்கட் நாகராஜ் said...

இங்கேயும் மரியான் ரிலீஸ் ஆகியிருக்கிறது..... இந்த படத்தைப் பார்க்க 20 கிலோமீட்டர் பயணிக்க வேண்டுமா என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.....

meena manohar said...

hahaha...:) :)

MANO நாஞ்சில் மனோ said...

ஐயோகோ மரியான் புட்டுகிச்சே....!

antony said...

சூது கவ்வும்ல டாக்டர் தாதா சொல்ற மாதிரி கிளி ஜோசியன் எல்லாம் ரியல் எஸ்டேட் பண்ற மாதிரி கீரை விக்கறவன் எல்லாம் விமர்சனம் எழுதுனா இப்படி தான் இருக்கும்.( 4 வில்லு , 5 வேட்டைக்காரன், 6 குருவி, 7 ஜி , 8 வேலாயுதம் பார்க்க வைக்கணும் )ஒரு நல்ல படம் எடுத்த புடிக்காதா உனக்கு ....கமர்சியால் படமே இன்னும் எத்தன நாள் தான் பார்பிங்க... இந்த மாதிரி நல்ல படமும் பாருங்க.......

உலக சினிமா ரசிகன் said...

கடைசியில் அடிச்ச சிக்சருக்கு அடக்க முடியாம சிரிச்சேன்.
[உலகளந்த பெருமாள் தரிசனம் கிடைக்காத பாவி ஆகி விட்டேனே.]

அத்தனை ‘பஞ்சும்’ கலக்கல்.

abdul hakkim said...

ஏன்டா நீ என்ன பெரிய மயிரா விமர்சனம் எழுத இனிமே வமர்சனம் எழுதுன தேடி வந்து செருப்பாலையே அடிப்பேன்

Related Posts Plugin for WordPress, Blogger...