CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, July 13, 2013

மோடி - காவி(ய)த்தலைவன்

           

எத்தனை நாட்களுக்குத்தான் விளம்பரம் செய்துகொண்டிருப்பது? தொழிலை தொடங்க வேண்டாமா? குஜராத்தின் குறுவியாபாரியாக மாநில மக்களிடம் நற்பெயரை(?) சம்பாதித்த மோடி தற்போது தேசிய அளவில் பிஸினசை துவக்குவதற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார் என்பதற்கு இன்னுமோர் உதாரணம் நேற்று இக்காவி(ய)த்தலைவர் அளித்த பேட்டி. குஜராத் கலவரம் குறித்த கேள்விக்கு இறையாண்மையை ஆரத்தழுவி காக்கப்போகும் நாளைய பிரதமர்(!) தந்த பதில்:  'நான் காரோட்டியாகவோ அல்லது காரின் பின்புறம் அமர்ந்திருப்பவனாகவோ இருக்கையில் ரோட்டின் குறுக்கே ஒரு puppy (குட்டி நாய்) மீது அவ்வாகனம் மோத நேர்ந்தால் இதயம் வலிக்கத்தானே செய்யும்?'  

இஸ்லாம் சமுதாய மக்கள் மனதில் ஆறா ரணமாக இருக்கும் அக்கொடூர நிகழ்வை எவ்வளவு சாதாரணமாக வார்த்தைகளால் கடந்து விட முடிகிறது இம்மனிதரால். 'ஹாட்ரிக்' முதல்வராக தேர்வு செய்யப்பட்டபோது அத் தேர்தலில் கணிசமான சிறுபான்மை ஓட்டுக்களையும் இவர் வென்றார் எனும் செய்தியும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. 

ஒரு சாமான்யனாக 'இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் அந்நிகழ்வை பற்றி பேசிக்கொண்டு இருப்பது.மாநில/தேச வளர்ச்சிக்கும், ஜனநாயகத்திற்கும் பாடுபட ஒரு போல்டான லீடர் வந்தால் அனைவருக்கும் நன்மைதானே' என இவர் மீது சற்று நம்பிக்கை வைத்த மங்குனி மக்களில் நானும் ஒருவன். மோடியின் இப்பேட்டி மூலம் அக்கருத்தையும் தீவிர மறுபரிசீலனைக்கு உட்படுத்தி பார்க்கையில் உள்மனது உரக்க உச்சரித்த சொற்கள் இவைதான்:  'Reject this political puppy'.

மதச்சார்பற்ற தலைவர் ஒருவர்தான் இந்தியாவை ஆளவேண்டும் எனும் எண்ணம் தங்களுக்கு உள்ளதா எனும் கேள்விக்கு 'Justice to all. Appeasement to none.’ என்பதை பதிலாக வைக்கிறார். சுமாரான ஆங்கிலம் தெரிந்த என் போன்றோர் கேட்கும் கேள்வி: Then why the hell you try to appease the hindu community by calling the gujarat victims as puppy, Mr.Modi?  ஒரு இந்துவாக இக்கேள்வியை முன்வைக்கிறேன் என்பதை குறிப்பில் கொள்க மதச்சார்பற்ற பிரத(ம)ரே.
                                                                   

'மீண்டுமொரு முறை குஜராத்தின் முதல்வராகும் என்னும் எனக்கு இல்லை. எமது கட்சியில் இருந்து புதிதாக ஒருவர் அம்மாநிலத்தை ஆண்டுவிட்டு போகட்டும்' என்று இரக்கம் காட்டும் மோடி அதே பேட்டியில் 'தில்லி பற்றிய கனவு எதுவும் எனக்கில்லை' என்றும் நெஞ்சை நெகிழ வைக்கிறார். 'ஆசியாவின் பிரதமர் பதவி காலியாகத்தான்  உள்ளது. லகே ரஹோ மோடி பாய். ஹம் ஜரூர் ஜீதேங்கே' என்று பொடிக்காவி எவரேனும் ஊதி விட்டிருப்பாரோ?

'நான் ஒரு இந்து தேசியவாதி' என்று பிரகடனப்படுத்தி இருக்கும் மோடி எப்படி மதச்சார்பற்ற தேசத்து மக்களை அரவணைத்து செல்ல முடியும்? 'சிறுபான்மை மக்களின் அபிமான கட்சி எனும் ட்ரம்ப் கார்டை வைத்துக்கொண்டு இத்தனை காலம் காங்கிரஸ் ஆட்சி செய்யும் போது இந்துத்வா மங்காத்தாவை ஆடிப்பார்க்க அண்ணாத்தை முயற்சித்தால் மட்டும் என்ன கேட்டு போச்சி?' கேட்கிறான் பாபர் மசூதியில் காவிக்கொடி பறக்கவிட்ட அடிப்பொடிகளில் ஒருவன்.

20/20 போட்டிகளில் எதிர் நோக்கி வரும் வேகப்பந்துகளை எல்லாம் சுழற்றி அடித்து சிக்ஸர் அடிக்க எண்ணும் இளம் பேட்ஸ்மன்கள்  டெஸ்ட் போட்டிகளில் பெரும்பாலும் சோபிப்பதில்லை. அங்கு 'களமும்' பெரிது. காலமும் பெரிது. அதுபோல குஜராத்தின் 20/20 மேன் ஆப் தி மேட்ச் மோடி தனது தேசத்தலைவன் கனவை நிறைவேற்றும் திட்டத்தை ஆரம்பித்து இருக்கிறார். நாள் முழுக்க க்ரிக்கெட் பார்த்தே சீரழிந்து போன நமது குற்றப்பரம்பரைக்கு இதுவும் இன்னொரு ஆட்டமே.

 'வழில கெடந்த சாணிய நானாத்தான் அள்ளி வாய்ல போட்டுக்கிட்டனா?' என்று வடிவேலு புலம்பியதைப்போல அமைந்திருக்கிறது தலைவர் மோடியின் இப்பேட்டி. Secularism எனும் சொல்லுக்கு என்னிடம் இருக்கும் அகராதியிலும் மதச்சார்பின்மை என்றே அச்சிடப்பட்டு இருப்பதால்.....

I also hate this Political Puppy - Modi.  
.................................................................


சமீபத்தில் எழுதியது:

   

37 comments:

ராஜ் said...

என்ன கொடுமை பார்த்தீங்களா. தான் ஹிந்து மதத்தை நேசிக்கிறேன்னு கூட நம்ம நாட்டுல சொல்ல முடியல..ஓடனே ஹிந்துத்துவா முத்திரை விழுந்துரும். ஏன் அமெரிக்காவுல Sep11 க்கு அப்புறம் குண்டு வெடிக்கல தெரியுமா சிவா, இவங்க வெதச்ச பயம் தான் காரணம். அதே தான் மோதி குஜராத்ல 2002 அப்புறம் விதைச்சு இருக்காரு. 2002 க்கு அப்புறம் எந்த அசம்பாவிதமும் நடக்காத மாநிலம் குஜராத். கலவரம் பண்ண லோக்கல் சப்போர்ட் கிடைக்காது.
- I Support Modi.

! சிவகுமார் ! said...

ஹிந்துத்வா முத்திரையை யாரும் இவர் மீது திணிக்கவில்லை. அவரே நேற்று உலகம் பார்க்க பச்சை(யாக) குத்திக்கொண்டார்.

மதக்கலவரத்தில் உயிரிழந்தவர்களை நாய்க்குட்டியுடன் ஒப்பிடும் நபரை தேசத்தின் தலைவராக ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு அநியாயத்திற்கு நல்லவன் இல்லை நான். மன்னிக்க.

! சிவகுமார் ! said...


அமெரிக்கா எனும் தேசத்தின் பாதுகாப்புடன் குஜராத் மாநிலத்தை ஒப்பிடுவது ஏனென்று புரியவில்லை ராஜ். அப்படிப்பார்த்தால் தமிழகம் கூடத்தான் தீவிரவாத இலக்கிற்கு பலியாகாமல் பாதுகாப்பாக இருக்கும் மாநிலங்களில் ஒன்று.

அதற்காக நம் மாநிலத்தின் ஒப்பற்ற முன்னாள்/இந்நாள் முதல்வர்களை பிரதமர்கள் ஆக்கி அழகு பார்க்கும் விபரீத ஆசை வரலாமா?

நெனச்சாலே வவுத்த கலக்குது!

கேரளாக்காரன் said...

அவரு பப்பின்னு யாரை சொன்னார்னே இன்னும் பஞ்சாயத்து முடியல அதுக்குள்ளயா?

கேரளாக்காரன் said...

சென்னைல பக்கத்து தெருவுக்கு போறதுக்கு கூட துணைக்கு ஆள் தேடறவன் , அமேரிகாவுக்கு அவுட்சோர்ஸ் பண்ணும் போது மோடி இந்தியாவுக்கு பிரதமர் ஆவதில் என்ன தப்பு.

தமிழ்நாட்டுல எதுக்குனே தெரியாம யாரையாவது சந்தோஷப்படுத்த, நடுநிலை வேஷம் போட, நானும் நல்லவந்தான்ன்னு காட்டுற ஆள் இருக்காங்க.

So சாணிய அவர்தான் எடுத்து எதிர்ப்புவாதிகளுக்கு ஊட்டி விட்ருக்காரு

கேரளாக்காரன் said...

அவரு பாபர் மசூதிய இடிச்சதும், முஸ்லீம்களை கொன்னதும் என்னமோ இன்னிக்குதான் மக்களுக்கு தெரியவரும்ங்கற மாதிரி சொல்றீங்களே.

இன்னும் திராவிட அரசியலையே தாண்டாத மக்களுக்கு வேணும்னா அது புதுசா இருக்கலாம்

ராஜீவ் காந்தி said...

///.ஓடனே ஹிந்துத்துவா முத்திரை விழுந்துரும். ////

அப்போ ஹிந்துத்துவா முத்திரைன்னா ஏன் சார் பயப்படுறீங்க? குஜராத் மாதிரி ஒரு கலவரத்த நடத்தி முஸ்லிம்களை பயப்படுத்தி அடக்கி வைக்கலாம்னா, சங்க பரிவார மதவெறியர்களை என்ன பண்ணி பயப்படுத்தி அடக்கி வைக்கலாம்னு நீங்களே சொல்லுங்க?

! சிவகுமார் ! said...

@ கேரளாக்காரன்

அவர் பப்பி என்று யாரை சொல்லி இருப்பார் என ஆயிரம் கட்ட பஞ்சாயத்துகள் வைத்தாலும் வழக்கம்போல..

'நான் சொன்னதை வேறு அர்த்தத்தில் புரிந்து கொண்டார்கள்' எனும் சப்பை கட்டுதான் பதிலாக வரும் என்பது அனைவரும் அறிந்ததே.

ராஜீவ் காந்தி said...

////கேரளாக்காரன் said...
அவரு பாபர் மசூதிய இடிச்சதும், முஸ்லீம்களை கொன்னதும் என்னமோ இன்னிக்குதான் மக்களுக்கு தெரியவரும்ங்கற மாதிரி சொல்றீங்களே.

இன்னும் திராவிட அரசியலையே தாண்டாத மக்களுக்கு வேணும்னா அது புதுசா இருக்கலாம்
//////

அவர் முஸ்லிம்களை கொல்றதெல்லாம் புதுசில்ல, பழகி போச்சுனு சொல்றீங்க? பலே பலே நீங்கதான் உண்மையான தேசப்பற்றாளர். இந்த நாட்டில் முஸ்லிம்களை வெறுப்பவன், எதிர்ப்பவனே உண்மையான தேசப்பற்றாளன். அது இந்துவாக பிறந்தவனால் மட்டுமே சாத்தியம். நீங்க எவ்வளவு திறமையா இல்லேன்னு பூசிமெழுகி வாதாடினாலும், இதுதான் பிஜேபி/சங்க பரிவார இந்துத்துவ அரசியலின் அடிப்படை நாதம்.

! சிவகுமார் ! said...

கேரளாக்காரன் நீங்கள் இதே கமண்டை பேஸ்புக் மற்றும் ப்ளாக் இரண்டிலும் முன்வைத்தால் எங்கு பதில் சொல்ல? இரண்டிலும் மாறி மாறி பதில் சொல்ல வேண்டி இருக்கிறது.

மோடி மீதான எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. தங்கள் பார்வைக்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் நன்றி.

கேரளாக்காரன் said...

//அவர் முஸ்லிம்களை கொல்றதெல்லாம் புதுசில்ல, பழகி போச்சுனு சொல்றீங்க? பலே பலே நீங்கதான் உண்மையான தேசப்பற்றாளர். இந்த நாட்டில் முஸ்லிம்களை வெறுப்பவன், எதிர்ப்பவனே உண்மையான தேசப்பற்றாளன். அது இந்துவாக பிறந்தவனால் மட்டுமே சாத்தியம். நீங்க எவ்வளவு திறமையா இல்லேன்னு பூசிமெழுகி வாதாடினாலும், இதுதான் பிஜேபி/சங்க பரிவார இந்துத்துவ அரசியலின் அடிப்படை நாதம்.//

இந்துன்னு சொன்னாலே மதவாதி, மதவெறியன்னு சொல்லுவாங்க.

பாகிஸ்தான் கிரிக்கட் டீமுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க.

கல்குவாரியத்தவிர எல்லா இடத்திலயும் குண்டு வப்வாங்க.

மோடின்னு சொன்னாலே கீழ்ப்பாக்கம் கும்பல் மாதிரி ஒன்னுமே தெரியலைன்னாலும் லபோ திபோன்னு குதிப்பாங்க.

வேணும்னா அவங்கள தேசப்பற்றாளர்களா அறிவிச்சுடலாமா ஆப்பீஸர் ஸார்?

கேரளாக்காரன் said...

மோடி பேரை கேட்டாலே சும்மா அதிருதில்லே - பாகம் 16

ஓட்டுக்காக இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களை நான் பிரித்து பார்ப்பதில்லை. பிரிவினை எனக்கு பிடிக்காது.

நான் தேசியவாதி; நாட்டுப்பறுள்ளவன். இதில் என்ன தவறு இருக்கிறது என, குஜராத் முதல்வரும், பா.ஜ.,தேர்தல் பிரசார குழு தலைவருமான நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மோடி இன்று ராய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் ; நான் இதுவரை யாருக்கும் எவ்வித கெடுதலும் செய்யவில்லை. ‘ நான் பிறப்பால் இந்து. இதில் என்ன தவறு இருக்கிறது? இந்துவாக பிறந்ததால், இந்து தேசியவாதி என கூறுகின்றனர். நான் தேசியவாதி, நாட்டுப்பற்றுள்ளவன். இதில் தவறு இல்லை. ஆர்.எஸ்.எஸ்., இயக்கமும் தேசப்பற்றை போதிக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியும் முக்கியம் என கருதுகிறேன். எனது கட்சியில் யாரும் என்னை சிக்கல் ஆனவன் என்று சொல்லவில்லை.

2002 ல் நடந்த குஜராத் கலவரத்தை நான் அடக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்தேன். அப்போது நான் எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் சரிதான். சுப்ரீம் கோர்ட் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு கூட என்னை குற்றமற்றவன் என தெரிவித்து இருக்கிறது. நான் எந்த தவறும் செய்யவில்லை.

நாம் காரி்ன் பின் சீட்டில் உட்கார்ந்து போகும் போது தெருவில் சென்ற ஒரு நாய் குட்டி காரில் விழுந்து அடி பட்டால் கூட நமக்கு வருத்தம் ஏற்படுமா, இல்லையா... வருத்தம் இருக்கத்தானே செய்யும். அதே போன்ற வருத்தம் எனக்கும் ஏற்பட்டது. நான் முதல்வராக இருந்தாலும், இல்லாவிட்டாலும், நான் மனிதநேயமிக்கவன். ஓட்டுக்காக நான் கவலைப்பட்டதில்லை. பெரிய பதவிக்கு ஆசைப்படவில்லை. ஓட்டுக்காக இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களை நான் பிரித்து பார்ப்பதில்லை. பிரிவினை எனக்கு பிடிக்காது. இந்தியா ஜனநாயக நாடு. அனைவரும் அனைத்தும் பெற வேண்டும். இவ்வாறு மோடி கூறினார்

இதில் மோடி அவர்கள் ஒரு சிறு நாய் குட்டி நமக்கு தெரியாமல் கொல்லப்பட்டலே எத்தனை வருத்தம் அடைவோம், அப்படி இருக்கையில் பல ஆயிரம் மக்கள் இறந்தால் அது தன்னை எப்படி வேதனை படுத்தியிருக்கும், என்கிற அர்தத்தில் சொல்லி உள்ளார். ஆனால் மோடி அவர்கள் கொடுத்திருக்கும் இந்த பேட்டியை மைனாரிட்டி ஒட்டுப் பொறுக்கிகளான சோனியா காங்கிரஸ் கும்பலும், முல்லாவாதி பார்ட்டியும் இப்போதே திரித்துக் கூறி பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கிவிட்டன. மோடி முஸ்லீம்களை நாய் குட்டியோடு ஒப்பிடுகிறார் என்று அவை விஷமப் பிரசாரத்தில் இறங்கியுள்ளன.

Via Enlightened Master

ராஜீவ் காந்தி said...

/////இந்துன்னு சொன்னாலே மதவாதி, மதவெறியன்னு சொல்லுவாங்க.

பாகிஸ்தான் கிரிக்கட் டீமுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க.

கல்குவாரியத்தவிர எல்லா இடத்திலயும் குண்டு வப்வாங்க.

மோடின்னு சொன்னாலே கீழ்ப்பாக்கம் கும்பல் மாதிரி ஒன்னுமே தெரியலைன்னாலும் லபோ திபோன்னு குதிப்பாங்க.

வேணும்னா அவங்கள தேசப்பற்றாளர்களா அறிவிச்சுடலாமா ஆப்பீஸர் ஸார்?/////

இது எல்லாத்தையும் நாட்டுல உள்ள எல்லா முஸ்லிம்களும் பண்றாங்கன்னு ஒவ்வொருத்தரா செக் பண்ணி பார்த்தீங்களா சார்?
1930-கள்ல இருந்து இருக்கும் ஆர்.எஸ்.எஸ் சும்மா புல்லு புடிங்க்கிட்டு இருக்கீங்களா? எத்தனை எத்தனை அப்பாவிகளை கலவரம் என்ற பேர்ல கொன்னு குவிச்சிருக்கீங்க? அதெல்லாம் எந்த கணக்குல சார் வருது? உங்களை மாதிரி மூளைச்சலவை செய்யப்பட்ட இந்து வெறியர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் எந்த வித்தியாசமும் தெரியல எனக்கு. வாய்ப்பு கிடைத்தா ஒரு அப்பாவியை அவன் முஸ்லிம் அப்படின்றதுக்காக கொல்ல தயங்க மாட்டீங்க நீங்கள்லாம்

rajamelaiyur said...

குஜராத் கலவரம் பற்றி பேசும் யாரும் அதர்க்கு முன் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான காங்கிரஸின் கலவரத்தை மறைப்பது/ மறந்தது ஏன்?? முஸ்லிம்கலை விட அதிக சீக்கியர்களை கொண்ற காங்கிரஸ் மதசார்ப்பற்ற கட்சியா??

ராஜ் said...

@சிவா,
லாஜிக்கா பார்த்தா கண்டிப்பா பிஜேபினால மெஜாரிட்டி வர முடியாது. மெஜாரிட்டி விடுங்க, கூட்டணியில் கூட ஜெயிக்க முடியாது. சவுத்ல நாலு ஸ்டேட்டும் அவுட். கேரளால பிஜேபி ஒன்னு அல்லது ரெண்டு சீட் வாங்கும், தமிழ்நாட்டுல யாரும் அவங்களை ஆட்டதுக்கு சேர்த்துக்க மாட்டாங்க. கர்நாடகா அதோ கெதி தான். அப்புறம் ஆந்திராவுல TDP கூட ஒரு வேலை alaiance வச்சா ரெண்டு சீட் கிடைக்க வாய்ப்பு இருக்கு. 540 ல 150 சீட்க்கு அவங்க போட்டியே போட முடியாது. NE , J&K அப்புறம் WBல பிஜேபி என்கிற கட்சி இருக்கான்னு கூட அங்க இருக்கிற மக்களுக்கு தெரியாது. மிச்ச இருக்கிற 350 சீட்ல பிஜேபி கூட்டணி 270 ஜெயிக்கிறது எல்லாம் நடக்கவே நடக்காது. சீமான் கட்சி எப்படி தமிழ்நாட்டுல ஆட்சிய பிடிக்கும்ன்னு சொல்லுற மாதிரி தான் பிஜேபி சென்ட்டர்ல ஆட்சியை பிடிக்கும்ன்னு சொல்லுறதும். ரெண்டுமே நடக்காது. அதுனால் நீங்க பயபடுற மாதிரி மோதினால கண்டிப்பா பிரதமர் ஆக முடியாது. ]

அப்புறம் தமிழ்நாட்டை தீவிரவாத இலக்கிருக்கு ஆளாகத மாநிலம்ன்னு எப்படி சிவா சொல்லுவீங்க. 98 கோவை குண்டுவெடிப்பு இருக்கே. Feb 14 ஆம் தேதி குண்டு வெடிக்க போகுதுன்னு உக்கடம் கோட்டைமேடு முஸ்லீம்ஸ் எல்லோருக்கும் தெரியும்.ஒரு வாரம் என்னோட படிச்ச முஸ்லிம் ப்ரிண்ட்ஸ் யாருமே ஸ்கூல்க்கு வரல, குண்டு வெடிச்ச அப்புறம் அவங்களே அதை என்கிட்ட சொன்னாங்க. குஜராத்ல நடந்த அளவு இல்லாட்டியும் குண்டு வெடிச்ச அப்புறம் கோவையில பெரிய அளவு கலவரம் நடந்தது. முஸ்லிம் கடைகளை தேடி தேடி நாசம் பண்ணுனாங்க. தாத்தா கவர்மென்ட் பார்த்துகிட்டு தான் இருந்திச்சு.

நான் குஜராத் போய் இருக்கேன், அங்க வச்சு பார்த்ததை சொல்லுறேன். இந்தியாவின் தலைசிறந்த மாநிலம் குஜராத் என்று கண்ணை மூடி சொல்லுவேன். அமெரிக்கா அளவு முன்னேறி இருக்கு. அதுனால் தான் அமெரிக்காவையும் குஜராத்தையும் கம்பர் பண்ணினேன். என்னதா சொல்லுங்க மோடி ஒரு நல்ல நிர்வாகி.

அவர் shane Warne மாதிரி, Shane Warne is the best ever Captain which Austraila never had. :)

கலியபெருமாள் புதுச்சேரி said...

neenga yemba ippadi sandai pottukkareenga..irukkara kalavaram patthathaa..

கலியபெருமாள் புதுச்சேரி said...

neenga yemba ippadi sandai pottukkareenga..irukkara kalavaram patthathaa..

SOBHA FOREST VIEW OWNERS said...

Neengal ellam yen kashmiril Pandits nattukkuleye agadiyaga iruppadai patri pesuvadu illai. Avargal Muslimgalal viratti adikka pattadala? Illai ore katchikku vottu poda mattargal enbadala???

Rafik said...

@ராஜ்,

நீங்கள் கோவை கோட்டைமேடு முஸ்லிம்கள் அனைவரின் மீதும் ஒரு மிகப் பெரிய பழியை போடுகிறீர்கள். அவர்கள் ஏதோ ஒரு 100 பேரோ அல்லது 1000 பேரோ அல்ல. அவர்கள் குறைந்தது ஒரு இரண்டு லட்சம் பேர் இருப்பார்கள். ஒரு இரண்டு லட்சம் பேர் குண்டு வெடிக்கப்படுவது தெரிந்தும் மறைத்தார்கள் என்று சொல்லுவது மிகப் பெரிய அபாண்டம். இப்படித்தான் இந்துத்துவா சக்திகள் கோவை முஸ்லிம்களைப் பற்றி விஷமக் கருத்துகளை அங்குள்ள நடுநில்யான மக்களிடமும் பரப்பினார்கள். அந்த கலவரங்களின் போது கோவையில் பல இடங்களில் பள்ளிவாசல்கள் சூறையாடப்பட்டபோது கோட்டைமேட்டில் உள்ள கோயில்கள் எந்த ஒரு சேதமும் இல்லாமல் காக்கப்பட்டது.

கோவை கலவரத்தின் போது கோவையில் வாழ்ந்த பெரும்பான்மையான முஸ்லிம்கள் தங்கள் வீட்டை பூட்டிவிட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாக வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் உயிர் தற்காத்துக் கொள்ள சென்றார்கள். இந்தியர்களுக்கே இந்தியாவிலேயே இத்தகைய நிலை. இத்தகைய போக்கு எதில் போய் முடியும்...? யோசித்துப் பாருங்கள்.

Rafik said...

@ராஜ்,

அதே போல்.. கோவையில் நீங்கள் எந்த பகுதியில் வாழுகிரீர்கள் என்று தெரியாது. நீங்கள் வாழும் அந்த பகுதியில் வாழும் இந்துக்கள் அனைவரும் தீவிரவாத்தை ஆதரிப்பவர்கள், குஜராத் கலவரத்தை ஆதரிப்பவர்கள், அது போன்ற எல்லா இன அழிப்புகளை ஆதரிப்புவர்கள் என்று சொன்னால் அதை உங்களால் ஒப்புக்கொள்ள முடியுமா..?

ஒப்புக் கொள்ள முடியாதல்லவா..? அப்போ.. கோட்டைமேட்டில் வாழும் முஸ்லிம்கள் மட்டும் என்ன.. உங்களுக்கு இளிச்சவாயர்ளா..?

இது போன்று இன துவேசம் பேசும் மக்கள் முதலில் அவர்கள் மூளையையும் கண்ணையும் கழுவுவேண்டும். கழுவிவிட்டு பறந்து விரிந்த இந்த உலகத்தைப் பார்க்கட்டும். நிறைய படிக்கட்டும். அதன் பிறகு பார்க்கட்டும். அப்பொழுது பார்க்கும் இடங்கள் எல்லாம் மதம் தெரியாது.. மனிதர்கள் தெரிவார்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

அப்போ காங்கிரஸ் மட்டும்தான் டெல்லியில இருக்கனுமா ? நாட்டை ஆள வேற யாருக்கும் அனுமதி இல்லையான்னு கேக்குறேன் ?

குட்டன்ஜி said...

இந்த நாட்டில், சிறுபான்மையினரை திருப்திப் படுத்துவதே மதச்சார்பின்மை என்பது போலத்தான் எல்லாக் கட்சிகளும் நடந்து கொள்கின்றன! உன்மையான மதச்சார்பின்மை எங்கே இருக்கிறது சிவா?

சிராஜ் said...

@ராஜ்

// 2002 க்கு பிறகு குஜராத்தில் கலவரம் இல்லை... காரணம் மோடி விதைத்த பயம்தான்...//

2002 க்கு முன்னாடி அங்க முஸ்லிம்ஸ் எப்ப கலவரம் பண்ணி இருக்காங்க??? இப்ப பயந்துகிட்டு பண்ணாம இருக்க??? குஜராத்தில் முஸ்லிம்ஸ் எப்பொழுதும் கலவரம் செய்ததே இல்லை... பல வருடங்களாக ஆர்.எஸ்.எஸ் வகையறாக்கள் தான் கலவரச் சூழலை ஏற்படுத்தி வருகிறார்கள்...

முஸ்லிம் குழந்தைகளை பள்ளியிலே தனியாக அமர வைக்கும் கொடூரம் எல்லாம் குஜராத்தில் மட்டுமே நடக்கும்....

சிராஜ் said...

சில பதிவர்களின் நீதி...

கோவையில் குண்டு வைத்த அனைவரும் இன்று வரை ஜெயிலில்...

குஜராத்தில் கலவரம் செய்த பலர் சுதந்திரமாக இன்று வரை வெளியில்...

நீதி பற்றிலாம் பேசுறது உங்களுக்கே காமெடியா இல்லையா??

சிராஜ் said...

என்னமோ மோடி ஆட்சிக்கு வந்தா பாலாறும் தேனாறும் ஓட வைப்பார்ங்கிற மாதிரி பேசுறத நினைச்சா சிரிப்பு வருது...

அவர் கண்டிப்பா ஆட்சிக்கு வரணும்... 5 முழு ஆண்டுகள் ஆளனும்... ஹி..ஹி அப்ப தெரியும் இந்தியா ஒளிர்றது....

vellal said...

what is his eligibility to become a CM? for a while even if we forget about the communal riots he sponsored in 2002 what about the other factors or the economic developments he did to gujarat?

Rafik said...

@ராஜ், அப்பறம் இன்னொரு விஷயம்,

//2002க்கு அப்பறம் எந்த அசம்பாவிதமும் நடக்காத மாநிலம் குஜராத்.//

பச்ச பொய். ஒரு கீபோர்டும் ஒரு மாணிடரும் கிடைச்சா என்ன வேணா அடிச்சு விடறதா..? மோடிக்கு நடுநிலைவாதிகளிடம் தூக்கிப்பிடிக்க வேண்டும் என்பதற்க்காக இப்படியெல்லாமா கண்ணை மூடிக்கொண்டு அளந்து விடுவது.

2008 ல் அகமதாபாத்தில் குண்டு வெடிப்பு நடந்து அதில் 56 பேர் கொல்லப்பட்டனர், 200 பேர் காயமடைந்தனர். நெட்டில் சர்ச் பண்ணுங்கள். இந்த செய்தி சாரை சாரையாக வந்து விழும்.

ஏன் இதையெல்லாம் கணக்கல எடுத்துக்க மாட்டீங்களா..? ஒ.. ஒரு வேலை அதை மோடியே வச்சுட்டு முஸ்லிம்கள் மேலே பழியைப் போட்டாரு ஸோ.. அதை கணக்குல எடுத்துக்க மாட்டோம்னு சொல்ல வரீங்களா..? (ஏன் என்றால்.. அந்த குண்டு வெடிப்பில் இறந்ததில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள்.)

2002க்கு பிறகு குஜராத்தில் குண்டு வெடிக்கலைன்னு சொல்லி அதனால் "I support Modi" ன்னு சொன்னீங்க.. இப்போ அப்படி இல்லைன்னு நிருபிச்சாச்சு. இப்போ "I hate Modi" ன்னு சொல்வீங்களா...?

Saha, Chennai said...
This comment has been removed by the author.
Saha, Chennai said...

@ராஜ்,

//நான் குஜராத் போய் இருக்கேன், அங்க வச்சு பார்த்ததை சொல்லுறேன். இந்தியாவின் தலைசிறந்த மாநிலம் குஜராத் என்று கண்ணை மூடி சொல்லுவேன். அமெரிக்கா அளவு முன்னேறி இருக்கு. அதுனால் தான் அமெரிக்காவையும் குஜராத்தையும் கம்பர் பண்ணினேன். என்னதா சொல்லுங்க மோடி ஒரு நல்ல நிர்வாகி. //

சரி, ஒங்க பாயிண்டுக்கே வர்றேன், ஒரு நல்ல நிர்வாகியால கோத்ரா கலவரத்தை முளையிலேயே தடுத்திருக்க முடியாதா? அந்த கலவத்த அடக்க பல வாரங்கள் ஆனது ஏன்? போலிசு, ராணுவம் எல்லாம் அவ்வளவு நாளு என்ன பண்ணுச்சு?(யாருக்கு வேல பாத்துச்சு?)

இப்ப உத்ரகண்ட் வெள்ள பாதிப்பு வந்தப்ப, இந்த நிர்வாகி ஓடிப்போயி 15000 பேர அலேக்கா (!) தூக்கிகிட்டு வந்தாரில்ல, அந்த மாதிரி அவரு ஆட்சி செய்யுற மாநிலத்துல கோத்ரா கலவரம் நடந்தப்ப என்ன பண்ணிக்கிட்டு இருந்தாரு? ஏன் எதுவுமே நல்லது செய்யலே? எவ்வளவு உயிர் பலி, எவ்வளவு கற்பழிப்பு...


நல்ல நிர்வாகியாம், நிர்வாகி.. துப்பு கெட்ட நிர்வாகி...

சிராஜ் said...

// 2002க்கு பிறகு குஜராத்தில் குண்டு வெடிக்கலைன்னு சொல்லி அதனால் "I support Modi" ன்னு சொன்னீங்க.. இப்போ அப்படி இல்லைன்னு நிருபிச்சாச்சு. இப்போ "I hate Modi" ன்னு சொல்வீங்களா...? //

ஹி..ஹி..ஹி..

இப்படிலாம் கேட்கக் கூடாது.... நாங்க நியாயத்தையா பேசுறோம்?? இஸ்லாமிய எதிர்ப்ப காட்றோம்... இதில் பாயிண்டாவ்லாம் கேள்வி கேட்டுகிட்டு இருக்கீங்க???

சிராஜ் said...

எங்கள் குழுமத்தில் ஒரு சகோதரர் பதிந்த கருத்து...

//"நானொரு ஹிந்து தேசியவாதி" - ரேம்போ மோடி

இந்தியர்கள், இனி, தங்களை இந்திய தேசியவாதிகள் என்று அழைத்துக்கொள்ளாமல் முஸ்லிம் தேசியவாதிகள் என்றும், கிருத்துவ தேசியவாதிகள் என்றும், சீக்கிய தேசியவாதிகள் என்றும், இன்னும் யாரையாவது விட்டிருந்தால் அவர்களும் தாங்கள் சார்ந்த சமயத்தை அடையாலப்படுத்தி தங்களை தேசியவாதிகள் என்று அழைத்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.//

சிராஜ் said...

இன்னொரு சகோதரரின் பேஸ்புக் கருத்து...

// ”நாய் என்றால் ஏன் திட்டுவதாகவும் கேவலமாகவும் எடுத்து கொள்கிரீர்கள் நாய் என்றால் வைரவன் என்கிற கடவுளை குறிக்கும் கண்னியமான சொல்” - ராஜாவின் பொன்மொழி//

இனி அனைவரும் கண்ணியமாக அத்வாணி நாய், மோடி நாய், ராஜா நாய், ராதா கிருஷ்ணன் நாய் என்று அழைக்கலாம். இன்னும் கண்ணியமாக பி.ஜெ.பி யை நாய் கட்சி என்றும் அழைக்கலாம். வாழ்க நாய் கட்சி, வாழ்க நாய்க்கட்சியின் நாய் தலைவர்கள். வாழ்க நாய் கட்சியின் நாய் தொண்டர்கள்.

சிராஜ் said...

மேலுள்ள கமெண்டில் இருக்கும் நாய் என்ற கமெண்டிற்கு, இஸ்லாமியர்கள் மட்டுமே இருக்கும் ஒரு குழுமத்தில் மற்றொரு சகோதரர் பதிந்த கருத்து...
உண்மையில் இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் புரிந்து கொள்ள நினப்பவர்களுக்கு இதில் நிறைய அத்தாட்சிகள் உள்ளன...

//இல்லை சகோ.. மனித படைப்பு அல்லாஹ்வின் உயரிய படைப்பு .. அதை நாயுடன் ஒப்பிடுவதை தவிர்கவும்...
அவர்கள் அறிவில்லாதவர்கள் அவ்வாறு கூறுகிறார்கள் ....நாம் நடுநிலையாளர்கள் அல்லவா ...தவிர்க்கலாமே//

சிராஜ் said...

போராட்ட குணமும்... மார்க்கத்திற்காக உயிரை விடத் தயாராக இருக்கும் குணமும் மிக்க இஸ்லாமியர்களை எந்த ஒரு அரசும் அச்சுறுத்தி பணிய வைத்து விட முடியாது....

இதற்கான சான்றுகள் வரலாறு முழுதும் ஆயிரம் ஆயிரம் இருக்கின்றன... ஆனான பட்ட அமெரிக்காவே திணர்றான்.. அதோட ஒப்பிட்டா மோடிலாம் காமெடி பீஸ்.. உண்மையில் இந்திய முஸ்லிம்கள் இந்தியாவிற்கே விசுவாசமாக இருக்கிறார்கள்.. அவர்களை நாட்டிற்க்கு எதிரானவர்களாக எந்த ஒரு அரசோ, தனிநபரோ அல்லது இயக்கமோ மாற்றும் நொடி, இந்திய பிண்ணடைவுக்கான, இந்திய இறையாண்மை சின்னபின்னமாவதற்கான ஆரம்ப நொடி என்பதை மனதில் அனைவரும் நிறுத்திக் கொள்ளுங்கள்...

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

என்னது..?
நாய்க்குட்டி குறுக்கே வந்துச்சா..!?!?!
என்ன ஒரு அண்ட புளுகு..!
ஆகாச பொய்..!

ஆக்ச்சுவல்லி என்ன நடந்துச்சுன்னா... ரோட்டுக்கு வெளியே தூரத்தில் தூங்கிக்கொண்டு இருந்த அப்பாவி மனிதரை இழுத்து வந்து தம் காரின் வீலில் இட்டுக்கொல்லும் ஏற்பாட்டை நடத்தி வேடிக்கை பார்த்த கொடிய குஜராத் மன்னன் இவன்..! உச்ச நீதி மன்ற வார்த்தைகளில் சொல்வதானால்... குஜராத் பற்றி எரியும் பொது பிடில் வாசித்த நீரோவை போல... இரண்டாம் கொடுங்கோல் மன்னன் இவன். இவனுக்கான மனுநீதி சோழனின் தண்டனை என்னவாக இருக்கும்...? சிந்தியுங்கள்..!

நம் நீதி விசாரணை... இவனை இன்னும் தண்டிக்காமல் விட்டுவைத்திருக்கிறது..! நேர்மையான நீதி விசாரணை நடந்தால்.... விரைவில் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பினால்... இவன் தூக்கில் தொங்க விடப்பட வேண்டிய கொலைகாரன் இவன்...! கொலையை அனுமதிப்பதும் ஆதரிப்பதும் கொலைக்குற்றமே..! தெஹல்கா வீடியோ ஆதாரங்கள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் ஒப்புதல் வாக்குமூலங்கள், ஸ்ரீ குமார் IPS- சஞ்சீவ் பட IPS- பொது மக்கள் சாட்சிகள் என்று ஏகப்பட்டவை உள்ளன. அது போன்ற தண்டனை இந்திய உச்ச நீதி மன்றத்திடம் இருந்து வரும் என்று மனித நேயம் மிக்க இந்திய மக்களாகிய நாம் காத்திருக்கிறோம்..!

உங்கள் பதிவு அந்த காத்திருத்தலுக்கு நம்பிக்கை ஊட்டுகிறது..! மிக்க நன்றி சகோ.சிவக்குமார்..!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

போயும் போயும்... கொலைக்குற்றத்துக்கு தூக்குத்தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் ஒரு கொலைகாரனா பாஜகவின் இந்திய பிரதமர் வேட்பாளர்...?!?!?!

வேறு 'மனிதர்'களே இல்லையா அந்த BJP கட்சியில்..?!?!?!?

shame... shame... #puppy shame...!


இதற்கு பதில்...

எவருக்கும் இடைஞ்சல் தராத, எந்த ஆப்பாவியையும் கடிக்காத, வீணாக குறைக்காது, மற்ற நாயுடன் வீண் சண்டைக்கு போகாமல்... அமைதியாக வீட்டை காவல் காக்கும்... நல்லதொரு....

நாய்க்குட்டியை, பாஜக தமது பிரதமர் வேட்பாளராக நிறுத்தினாலும் கூட.... எனக்கு டபுள் ஓகே..! கேலியோ கிண்டலோ செய்ய மாட்டேன்..!

வவ்வால் said...

ரஃபீக்,
//2008 ல் அகமதாபாத்தில் குண்டு வெடிப்பு நடந்து அதில் 56 பேர் கொல்லப்பட்டனர், 200 பேர் காயமடைந்தனர். நெட்டில் சர்ச் பண்ணுங்கள். இந்த செய்தி சாரை சாரையாக வந்து விழும்.

ஏன் இதையெல்லாம் கணக்கல எடுத்துக்க மாட்டீங்களா..? ஒ.. ஒரு வேலை அதை மோடியே வச்சுட்டு முஸ்லிம்கள் மேலே பழியைப் போட்டாரு ஸோ.. அதை கணக்குல எடுத்துக்க மாட்டோம்னு சொல்ல வரீங்களா..? (ஏன் என்றால்.. அந்த குண்டு வெடிப்பில் இறந்ததில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள்.)//

சொந்த செலவில் சூனியம் வச்சிக்கிறதுனு இதைத்தான் சொல்வாங்கோ :-))

நெட்ல சர்ச் செய்தால் இந்தியன் முஜாகிதின், ஹர்ஹட் உல் ஜிஹாத் இஸ்லாமியா,ஜாமியா இஸ்லாமியா,சிமி, இயக்கத்தினர் தான் குஜராத் குண்டு வெடிப்பின் பின்னால் இருந்தார்கள், 50க்கும் மேற்பட்ட அவ்வியக்கத்தினர் கைது செய்து இன்னும் விசாரணை நடக்குதுனு தானே வருது :-))

இப்போ சொல்ல வருவது என்னனா, மோடியே இருந்தாலும் எங்காளுங்க குண்டு வைப்பாக,அதை எல்லாம் தடுக்க முடியாது என்றா?

# மோடியோ ஜாடியோ யாருக்கும் நாம ஆதரவு இல்லை, ஆனால் இன்னார் போட்டிக்கே வரக்கூடாதுனு என சொல்லவும் மாட்டேன், ஆனால், உங்களைப்போன்றவர்கள் ஏன் இன்னார் தேர்தலில் போட்டியே போடக்கூடாதுனு சொல்லிட்டு இருக்கிங்க, நீங்க என்ன மதச்சார்பற்றவரா? நீங்க எப்படி மதச்சார்பற்றவர் தான் ஆட்சிக்கு வரனும்னு சொல்ல முடியும்?

மதச்சார்பற்றவர் என்றால் அவர் நாத்திகராக இருந்தால் மட்டுமே மதச்சார்பற்றவராக இருக்க முடியும்,நீங்க நாத்திகரா இல்லையே, மேலும் ஒரு நாத்திகர் பிரதமரா வரேனு சொன்னால் முதலில் எதிர்ப்பவர்களாக இஸ்லாமியர்கள் தான் இருப்பாங்க. அப்புறம் என்ன இழவுக்கு மதச்சார்பற்றவர் ஆட்சிக்கு வரனும்னு சொல்லுறிங்க?

நீங்க எதிர்பார்க்கும் தகுதி தான் என்ன?

எந்த மதத்தவராக இருந்தாலும் இஸ்லாமியர்கள் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டனும் என்றா? இல்லை ஒரு இஸ்லாமியரே ஆட்சிக்கு வரனும் என்றா? சிறுபான்மை மக்களீன் விருப்பப்படி தான் ஒருவர் ஆட்சிக்கு வரனும் என நினைப்பதை எப்படி பெரும்பான்மை மக்கள் ஆமோதிப்பார்கள்?

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு இங்கே மதத்தின் பெயரால் அரசியல்,ஆட்சி செய்யக்கூடாது என்றால் முதலில் முஸ்லீக் என்ற கட்சியை எல்லாம் கலைத்துவிட்டு சொல்ல வாருங்கள், மதத்தின் பெயரால் இஸ்லாமியர்கள் கட்சி நடத்துவார்கள் எனில் இந்துக்கள்,கிருத்துவர்களும் ,இன்னப்பிறர்களும் நடத்துவார்கள், யாருக்கு ஓட்டு கிடைக்கிறதோ அவர்கள் ஆட்சிக்கு வருவார்கள், அதான் ஜனநாயகம், எனவே ஒருத்தர் தேர்தலிலேயே நிக்க கூடாது என சொல்வது எப்படி சரியாகும், மக்கள் ஓட்டு போட்டா ஜெயிக்க போறாங்க..

பிஜேபி என்ற கட்சி யாரை தேர்தலில் முன்னிறுத்துவது என்பது அவர்களின் உட்கட்சி பிரச்சினை, மோடியை தவிர யாரையாவது நிறுத்துங்கள் என ஆலோசனை சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கு? முஸ்லீக் கட்சியின் சார்பில் என்றாவது இஸ்லாமியர் அல்லாதவர்களை தேர்தலில் போட்டியிட செய்துள்ளீர்களா? அப்படி செய்ய சொன்னால் கேட்பீர்களா?

ஜனநாயக அரசியலில் ஒரு கட்சி கழுதையை கூட தலைவராக முன்னிறுத்தும்,புடிச்சா ஓட்டுப்போடு,இல்லைனா தூக்கிப்போடு,ஆனால் ஏன் கழுதையை தலைவரா வச்சிருக்க ,அதெல்லாம் கூடாதுனு சொல்ல முடியாது :-))

மோடியை மதவாதினு சொல்ல உங்களைப்போன்ற மதவாதிகளுக்கு தகுதியே இல்லை, நீங்கலாம் மதத்தினை துறந்துவிட்டு வாங்க,நாம ஒன்னா மதவாதிகளை எதிர்ப்போம் :-))
-----------------------

Related Posts Plugin for WordPress, Blogger...