CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, July 22, 2013

ஸ்பெஷல் மீல்ஸ் (22/07/13)பிரம்மா:
                                                                       
                                                                        Image: madrasbhavan.com

'அலுவலர்கள் வெளுப்பகம்' எனும் பெயர்ப்பலகைக்கு பிறகு என் புருவத்தை உயர்த்த வைத்த தமிழாக்கம் இது. இடம்: பாண்டி பஜார்(தி.நகர்).
......................................................................

சந்திப்போமா:
சென்ற ஆண்டைப்போலவே இம்முறையும் சென்னையில் பதிவர் சந்திப்பு நடத்துவதற்கான வேலைகள் துவங்கிவிட்டன. கமலா தியேட்டர் அருகே உள்ள Cine Musicians Union ஹாலில் செப்டம்பர் 1 ஆம் தேதி சந்திப்பு நடைபெறுகிறது. மேலும் விவரங்கள் அறிய படிக்க: சென்னை பதிவர் சந்திப்பு 
..................................................................

சொன்னா புரியாது: 
எழுதுபவர்களுக்கு சரியாக பேச வராது. அருமையாக பேசுபவர்களுக்கு எழுத வராது என்று சும்மாவா சொன்னார்கள்? சென்ற ஞாயிறு அன்று சினிமா சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. சமீபத்தில் வெளியான படங்களுக்கு வசனம் எழுதிய புள்ளி ஒருவர் கிட்டத்தட்ட 2 மணிநேரம் டீ ஆத்தினார். குடுக்கப்பட்ட தலைப்புக்கும், அவர் அள்ளி வீசிய தகவல்களுக்கும் பெரிதாக தொடர்பே இல்லை. தலைப்பை பார்த்து விழாவில் கலந்து கொண்ட என் போன்ற நபர்களின் காதுகளில் குருவி ரிங்கென்று சுத்தியதுதான் மிச்சம்.
...............................................................

Oh My God:
சென்ற ஆண்டு பார்க்கத்தவறிய ஹிந்தி படங்களில் ஒன்று ஓ மை காட். நேற்றுதான் காண முடிந்தது. பூகம்பத்தில் இடிந்து போன தனது கடைக்கு கடவுள்தான் நஷ்ட ஈடு தர வேண்டுமென வழக்கு தொடுக்கிறார் பரேஷ் ராவல். இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் மதவாதிகளிடம் கோர்ட் விவாதத்தில் மோதி எப்படி ஜெயிக்கிறார் என்பதுதான் கதை.

நாத்திகராக பரேஷ், கடவுளாக அக்சய் குமார் மற்றும் Self Styled Godman ஆக மிதுன் சக்ரவர்த்தி ஆகியோரின் நடிப்பு பிரமாதம். கடவுள் நம்பிக்கை குறித்து இருதரப்பினர் கருத்துக்களையும் வெகுஜனங்கள் ரசிக்கும் வண்ணம் படமாக்கி இருப்பது சிறப்பு. சந்தேகமின்றி இது ஒரு க்ளாஸ்ஸிக் படம்தான்.
...................................................................

சிவப்பதிகாரம்:
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சட்டம், ஒழுங்கு கட்டுக்குள் இருக்கும் எனும் கூற்று வரலாறாகிப்போய்விடுமோ என்றெண்ணும் வண்ணம் சம்பவங்கள் நடந்தேறி வருவது வருத்தத்திற்கு உரியது. சாதியின் பெயரால் தர்மபுரி தகித்த நிலைக்கு சமமாக மதக்கட்சி சார்ந்த அரசியல் பிரமுகர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருவது பதட்டத்தை அதிகரித்துள்ளது. சமீபகாலமாக பா.ஜ.க./ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களை குறிவைத்து ஒரு கும்பல் கொன்று குவித்து வருகிறது. சேலத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். செக்ரட்டரி ரமேஷ் சென்ற வெள்ளியன்று பலியாகி இருக்கிறார்.

இத்தொடர் கொலைகளுக்கான பின்னணி என்னவென்று தெளிவாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவில்லை. சாதி மற்றும் மதத்தின் பெயரால் நடக்கும் இவ்வெறியாட்டங்களை வெகு விரைவில் ஒடுக்கித்தள்ள ஜெயலலிதா முடிவெடுத்தாக வேண்டிய நேரம் நெருங்கி விட்டது.
...............................................................

அம்மன் கோவில் வாசலிலே:
ஆடி அல்லோகலம் ஆரம்பமாகிவிட்டது. எந்தப்பக்கம் திரும்பினாலும் 'ஆடி அள்ளுபிடி ஆபர், போத்தீஸின் இலவச இம்போர்டட்(!) உண்டியல் என வித விதமான லொள்ளுபடிகளின் விளம்பரம். இதற்கு இணையாக பக்தகோடிகளின் ரணகளம் வேறு. மஞ்சள் துணி கட்டிக்கொண்டு தெருக்களை மறித்து 'டேக் டைவர்சன்' சொல்ல தனிப்படையே அமைத்து இருக்கிறார்கள்.

அல்லக்கை அரசியல்வாதிகளே அரண்டு போகும் அளவிற்கு ப்ளெக்ஸ் பேனர்கள். அதில் அம்மன் படத்தை சுற்றி ஏரியாவில் இருக்கும் நண்டு, நசுக்கான் முதல் தொண்டு பெருசுகள் வரை ஆக்ரமித்து இருப்பது, பிரத்யேக பூசாரி பூச்சட்டியுடன் நம்மை முறைத்து பார்ப்பது, லோக்கல் பெரும்புள்ளி தங்க ப்ரேஸ்லெட், அத்தே தண்டி செயின், மோதிரம் அணிந்து செல்போனில் பேசுவதுபோல போஸ் குடுப்பது(இதுல ப்ரெஞ்ச் தாடி வேற) என தூள் பரத்துகிறார்கள். முடியலடாங்கப்பா!!
........................................................    

மக்கள் ஆட்சி:
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் புகழை மேலும் தமுக்கடித்து பரப்பி வருகிறார்கள் மம்தா ஆன்ட்டியின் த்ரிணமூல் காங்கிரஸ் கட்சியினர். மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலையொட்டி அக்கட்சியினர் பேசும் வீர உரைகள் பின்னி பெடலெடுக்கின்றன:

'நாம ஜெயிச்சே ஆகனும்.  காங்கிரஸ்காரன் தலைய வெட்டு. சுயேட்சைங்க வீட்ல நெருப்பு வை. போலீஸ் மேல குண்டை வீசு' என தொண்டர்களுக்கு ஆர்டர்கள் பறக்கின்றன. இதுவல்லவா மக்கள் ஆட்சி.
............................................................  

மரியான்:
சென்ற ஆண்டு ராஜ் டி.வி. நடத்திய 'என்றென்றும் வாலி' பாராட்டு விழாவில் வாலி பேசியது: 'உங்கள் வாழ்த்துகள் எனக்கிருந்தால் இன்னும் 25 ஆண்டுகள் வாழ்வேன்'. தலைமுறைகள் தாண்டிய பாடல் வரிகள் 25 ஆண்டுகளையும் தாண்டி நிற்குமென்பதை அறியாமல் மறைந்து விட்டார் ஒரு பெருங்கவி.

காணொளி பார்க்க: என்றென்றும் வாலி 
..........................................................


சமீபத்தில் எழுதியது: 
மரியான் - விமர்சனம்


9 comments:

கோவை நேரம் said...
This comment has been removed by the author.
கோவை நேரம் said...

மீல்ஸ் சூப்பர்....

திண்டுக்கல் தனபாலன் said...

பெருங்கவி மனதில் மரியான்... மீல்ஸ் நல்ல சுவை...!

தனிமரம் said...

பெரும் கவி நின்றுநிலைப்பார் ! மீல்ஸ் சூப்பர்!

வெங்கட் நாகராஜ் said...

ஹெவியான மீல்ஸ் உங்கள் ஸ்பெஷல் மீல்ஸ்.....

நன்றி.

Unknown said...

அறு சுவை உண்டி படைத்தமைக்கு நன்றி!அம்மா சட்டம் ஒழுங்கைக் கவனிப்பார் என நம்புவோம்!

MANO நாஞ்சில் மனோ said...

உருவாக்ககம்//

எனக்கு புரியல !

ஸ்பெஷல் மீல்ஸ் நம்ம ஹோட்டல் பஃப்பே போல பல்சுவை...!

பதிவர்கள் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்...!

திண்டுக்கல் தனபாலன் said...

நீங்கள் மாட்டிக் கொண்டது ? : http://nanjilmano.blogspot.in/2013/07/blog-post_22.html

தொடர வாழ்த்துக்கள்...

Unknown said...

சூப்பர்..

Related Posts Plugin for WordPress, Blogger...