CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, July 9, 2013

ஸ்பெஷல் மீல்ஸ் (09/07/13)பெண் சிங்கம்:
'பெண் சிங்கம் கம்பீரமா சட்டசபைல பேசி பாத்து இருக்கியா? ஓங்கி அப்புனா ஒன்ற டன் வைட்ரா...வாங்கிக்கறியா?'
                                                                 

மேடம் நடித்த இப்படத்தின் பெயரை முதலில் சொல்வோருக்கு ஒரு பூமர் பப்பிள் கம் பரிசு. 
............................................................

நான் கடவுள்: 
ரிமோட்டால் சேனல்களை கடந்து சென்றபோது SVBC வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் கண்டேன் ஒரு திவ்ய தரிசனத்தை.உள்ளூர் கலெக்டரின் திருப்பதி கோவில் வருகையை ஒட்டிய சிறப்பு கவரேஜ் அது. அவர் செல்லுமிடமெல்லாம் பின் தொடர்கிறது கேமரா. ஒரு கட்டத்தில் கலெக்டர் மொட்டை அடிப்பதை கூட 'கத்தரிக்காமல்' முழு ஒளிபரப்பு செய்தனர். யாருக்காக சேனல் ஆரம்பித்தார்களோ அவர் கால் கடுக்க காத்திருக்க இங்கே இந்தக்கூத்து. என்ன கொடும நாராயணா.
.......................................................................

நிழல் தேடும் நிஜங்கள்:
                                                             
                                                                             Image: madrasbhavan.com

சில வாரங்களுக்கு முன்பாக கட்சி பிரமுகர்களை சந்தித்த ஜெ 'புதுசா தண்ணீர் பந்தல் திறக்கும்போது மட்டும் நாலஞ்சி பானை, புது டம்ளர், ப்ளெக்ஸ் எல்லாம் வக்கிறது. கொஞ்ச நாள் கழிச்சி ஒரு பானைல மட்டும்தான் தண்ணி இருக்கும். அதுக்கப்புறம் அந்த பானையும் இருக்காது. இதுதான் நீங்க வேலை செய்யற லட்சணமா?' என்று காய்ச்சி எடுத்தாராம். அதற்குப்பிறகும் சில ர.ர.க்கள் பயப்படுவதாக தெரியவில்லை.அண்ணா சாலை தண்ணீர் பந்தலொன்று குடிமகனின் தற்காலிக ஓய்வறையாக மாறி இருப்பதை பாரீர். மேடம் கிட்ட சேதி போறதுக்கு முன்னால வாத்யார் மூஞ்சில சோடா அடிச்சி கெளப்பிட்டு பானைய வைங்கப்போய்!!     
.......................................................................

நீர்ப்பறவை:
நண்பர் ஒருவரை வழியனுப்பி வைப்பதற்காக நேற்று தி.நகரில் இருந்து கோயம்பேடு செல்ல வேண்டி இருந்தது. தி.நகர் பேருந்து நிலையத்தின் உள்ளே இருக்கும் கழிப்பறையில் இருந்து சுச்சா வாசம் பல அடி தூரம் வரை குப்பென்று வீசிக்கொண்டு இருந்தது. அரை மயக்கத்தில் பேருந்தேறி ஒருவழியாக   கோயம்பேடடைந்தோம்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையத்தின் பின்பக்கத்தில் குறிப்பிட்ட பேருந்தை பிடிக்க காத்திருக்கையில் பார்த்த காட்சி பிரமாதம். வெட்டவெளியில் நாலாபுறமும் சொட்டுநீர்ப்பாசனம் செய்து கொண்டிருந்தனர் இந்நாட்டு மக்கள். அங்கு தனியே கழிப்பறை இருந்தும் காற்றோட்டமாக 'சொய்ங்' அடிக்கும் சொகமே தனி எனும் கொள்கை வீரர்களை என் சொல்ல? கருணாநிதி ஆட்சியில் சுத்தமாக இருந்த கோயம்பேடு பேருந்து நிலையம் தற்போது இந்த கதிக்கு ஆளாகி விட்டது என பரவலாக பேச்சு எழுந்து வருகிறது. மேடம் ஜெ சீக்கிரம் தலைவரோட எங்க வீட்டு பிள்ளை சாட்டைய எடுங்க. கப்பு தாங்கல.
.................................................................

பிடிச்சிருக்கு:


பிடிச்சிருக்கு பகுதியில் இம்முறை இடம் பிடித்து இருப்பது மணிஜியின் படைப்பொன்று. கூகிள் ப்ளஸ் பக்கம் கரையேறிவிட்ட சிறப்பான எழுத்தாளர்கள் சிலரில் மணிஜி குறிப்பிடத்தக்கவர் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. நேரம் கிடைக்கும்போது சீனியர்களின்  க்ளாஸ்ஸிக் பதிவுகளை படித்து வருகிறேன். சமீபத்தில் படித்த மணிஜியின் க்ளாஸ்ஸிக்:

ஜோரா கை தட்டுங்கப்பா

இத கோபாலபுரத்துக்கு குரியர் செஞ்சாத்தான் என்னங்கறேன்?
....................................................................

ஜோர்:
தி.நகர் சரோஜினி தெருவில் உள்ள ரேணுகா மெஸ்ஸில் சாப்பாடு நன்றாக இருக்கும் எனும் செய்தி கேட்டு கடந்த ஞாயிறு மதியம் விசிட் அடித்தேன். காற்றோட்டமான இடம், போதுமான இடைவெளியில் இருக்கைகள், அன்பான உபசரிப்பு. மூவருக்கான அசைவ சாப்பாடு, ஒரு நெத்திலி வறுவல் மற்றும் சங்கரா மீன் குழம்பு மற்றும்  4 ஆப் பாயில்கள். மொத்தம் சேர்த்து 420 ரூபாய். ருசி பரம திருப்தி. நடுத்தர மக்களுக்கான சிறந்த உணவகங்களில் இதுவும் ஒன்று என்பதில் ஐயமில்லை . உஸ்மான் ரோட்டை சுற்றி இருக்கும் போலி தலப்பாக்கட்டி மற்றும் ஆம்பூர், ஹைதராபாத் பிரியாணிக்கடைகளில் சாப்பிடும் மக்கள் தங்கள் 'கடை'க்கண் பார்வையை ஒருமுறை இங்கு திருப்பிப்பார்க்கலாம்.
...................................................................

தங்கமகன்:
பொதுவாக ப்ரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டியில்தான் முன்னணி வீரர்கள் துவக்க சுற்றுகளிலேயே மண்ணை கவ்வுவது வழக்கம். நடால் போன்ற ஏதேனும் ஒரு ஸ்பெயின் வீரர் டாப் ஸ்டார்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் தருவார்கள்.

ஆனால் இம்முறை விம்பிள்டனில் பெடரர், நடால், செரீனா, ஷரபோவா போன்ற மலைகள் சாய்க்கப்பட ஜோகோவிச் தான் கோப்பையை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 77 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளூர் மைந்தன் முர்ரேவின் வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியில் மிதக்கிறது இங்கிலாந்து.
....................................................................

ராவணன்:
வழக்கம்போல் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அயோத்தி ராமர் கோவில் பிரச்னையை கையில் எடுத்து இருக்கிறது பா.ஜ.க. 'எனக்கு கோவில் கட்டு' என்று ராமரும் கேட்கவில்லை, பொதுமக்களும் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அடம்பிடிக்கிறது இந்த அகில உலக ராமர் ரசிகர் மன்ற கூட்டம்.

அயோத்திக்கு போயி அங்க இருக்குற சந்து போனதுல எங்கயாவது ராமர் விட்ட அம்பு கெடந்தா அதை எடுத்து அமித் ஷா தொப்புள்ள சொருகிட்டு வந்தா என்ன?
.........................................

முத்துக்கு முத்தாக:
'சார்லி என் விரலை கடிச்சிட்டான்' என அவனது அண்ணன் முறையிடும் யூ ட்யூப் வீடியோ சக்கை போடு போடுவதாக நண்பர் சொன்னார்.அந்த சேட்டைக்கார சார்லியின் காணொளி உங்கள் பார்வைக்கும்:  


..............................................

.............................
சமீபத்தில் எழுதியது:

Singam II - Review
....................

14 comments:

சீனு said...

இப்ப சார்லி வளந்து ஸ்கூல்க்கே போயிருப்பான்... :-)

Unknown said...

தண்ணீர் பந்தலை பற்றி நானும் குறிப்பிட்டு இருந்தேன் \\\\

அம்மா பாக்சிங் லாம் கத்து இருகங்கல அம்மாடியோவ்

ராஜி said...

மீல்ஸ் நல்லா இருந்துச்சு. இத்தனை அயிட்டமா?! ஆனா. எல்லாமே சென்னை ஸ்பெஷலா இருக்கே! மத்த ஊர் ஸ்பெஷலையும் கவனிங்கப்பூ

சாய்ரோஸ் said...

பெண்சிங்கம், நான்கடவுள், நீர்ப்பறவை, ராவணன்...
ஒவ்வொரு மேட்டருக்கும் ஒவ்வொரு சினிமாப்பட டைட்டில வச்ச குசும்புல மேல சொன்ன நாலும் மேட்டருக்கு செமையா மேச் ஆன சூப்பரு(குசும்பு) டைட்டிலுங்கோவ்...!!!

Robert said...

பூமர் பப்பிள் கம் பரிசு// அவ்ளோ பெரிய பரிசை வாங்கும் ஆசை இல்லாததால் நான் படத்தின் பெயரை சொல்ல வில்லை..

கோகுல் said...

இம்முறை விம்பிள்டனில் பெடரர், நடால், செரீனா, ஷரபோவா போன்ற மலைகள் சாய்க்கப்பட ஜோகோவிச் தான் கோப்பையை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.//

wavelength??????

வெங்கட் நாகராஜ் said...

Special Meals நல்லா இருந்தது.... ரசித்தேன்.

உணவு உலகம் said...

பாயாசம் எங்கே?

Unknown said...

அருமையான சாப்பாடு,நன்றி!!!யூ டியூப் சுபெர்ப்!!!

MANO நாஞ்சில் மனோ said...

மோரும் பப்படமும் பழமும் எங்கே ?

”தளிர் சுரேஷ்” said...

சுவையான சாப்பாடு! நன்றி!

ரூபக் ராம் said...

நான் தோல்விய ஒத்துக்கறேன், அந்த அப்படம் பேர எனக்கு mail பண்ணிடுங்க

Unknown said...

film name " neenga nalla irukkanum

! சிவகுமார் ! said...

Thanks Abdul.

Related Posts Plugin for WordPress, Blogger...