CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, July 28, 2013

Ship of Theseus


                                                                      
                                                                         

'இந்திய திரைப்பட வரலாற்றில் இதுவரை வெளிவந்த படங்களில் முற்றிலும் மாறுபட்ட படைப்பிது', 'பார்க்காமல் தவறவிட்டால் ஒரு சினிமா ரசிகனாக உங்களுக்கு மிகப்பெரிய இழப்பு', 'பிரமாதமான ஒளிப்பதிவு' என ஏகப்பட்ட பாராட்டுகள், உலக திரைப்பட விழாக்களில் தொடர் வெற்றிகள். இதற்கு மேலும் ஷிப் ஆப் தீசியஸ் பார்க்கும் ஆவலை கட்டுப்படுத்த இயலவில்லை. சென்ற வாரம் இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் ரிலீஸ் ஆனாலும் இவ்வாரம் தான் சென்னை, கொச்சி உள்ளிட்ட மேலும் சில நகரங்களில் வெளியானது . சனிக்கிழமை காட்சிக்காக செவ்வாய் நள்ளிரவே முன்பதிவு செய்தாகிவிட்டது. 

அது என்ன ஷிப் ஆப் தீசியஸ்? டைட்டில் கார்ட் போடும்போதே அதற்கான விளக்கத்தையும் தந்துவிடுகிறார் ஆனந்த் காந்தி. மூன்று கதைகளை உள்ளடக்கிய இப்படத்தில் முதலில் வருவது கார்னியா தொற்றுநோயால்  பார்வை இழக்கும் இளம் பெண் போட்டோக்ராப்கார் பற்றிய கதை. ஓரளவு வசதியான குடும்பப்பின்னணி கொண்ட அலியா(அய்தா) கருப்பு வெள்ளை புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் கொண்டவள்.  அவளெடுத்த புகைப்படங்கள் சில சிறப்பாக உள்ளதென நண்பன் கூறினாலும் 'பிடிக்கவில்லை. அழித்து விடு' என அழுத்தமாக விவாதிக்கிறாள். இடையே கண் அறுவை சிகிச்சையும் மேற்கொள்கிறாள். முடிவென்ன என்பதை பனிபடர்ந்த மலையோர ஆற்றினோரம் ஒரு அமைதியான காட்சி மூலம் சொல்லப்பட்டு இரண்டாம் கதை துவங்குகிறது.

           
மிருக வதையை எதிர்த்து முன்னணி  நிறுவனங்கள் மீது வழக்கு தொடுக்கிறார் ஜெயின் துறவி மைத்ரேயா(நீரஜ்). ஒரு கட்டத்தில் நுரையீரல் பாதிப்பிற்கு உள்ளாகிறார். மருத்துவர்கள் தரும் மாத்திரைகள் தனக்கு தேவையில்லை. பல்வேறு விலங்குகளை சோதனைக்கூடங்களில் துன்புறுத்தி அதன் மூலம் உருவான மாத்திரைகள் எனக்கெதற்கு என புறக்கணிக்கிறார். காலம் அவரை எப்படி மாற்றத்திற்கு உள்ளாக்குகிறது என்பதை நமக்கு உணர்த்திவிட்டு தொடங்குறது மூன்றாம் கதை.

'காசு,துட்டு, பணம், பைசா' என்று வாழ்ந்து வரும் பங்குச்சந்தை தரகராக இளைஞன் நவீன்(சோஹம்). 'பணத்தை தவிர வேறெதையும் சிந்திக்காக மனிதனாக எத்தனை நாள் வாழப்போகிறாய். பிறருக்கு உபகாரமாக எதையும் சிந்திக்க மாட்டாயா?' என வாதாடும் பாட்டியிடம் அவ்வப்போது மல்லுக்கு நிற்கிறான். கட்டிடத்தொழிலாளி ஒருவனின் கிட்னியை மருத்துவர்கள் திருடிய செய்தி அறிந்து அவனுக்கு சகாயம் செய்ய முடிவெக்கும் நவீன் அதனால் சந்திக்கும் எதிர்பாராத திருப்பத்துடன் முடிகிறது. மூன்றாவது கதை. 
                                                                 
                                                    
பார்வையற்ற பெண்ணாக அலியா கமல். அழகு ததும்பும் தோற்றத்துடன் நம் பார்வைகளுக்கு விருந்து படைக்கிறார் நடிப்பிலும் சேர்த்து. அடிப்படையில் போட்டொக்ரபி பற்றி தெரியாத பலருக்கு இப்படைப்பு முக்கியமான ஆவணமாய் திகழும்.  ஜெயின் துறவியாக நீரஜ் நடித்திருக்கும் பகுதி வாழ்க்கை தத்துவத்தை அடிப்படையாக கொண்டது. கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்திப்போகும் நீரஜ் தனது இளம் வயது தோழன் ஒருவனுடன் விவாதிக்கும்போது வெளிப்படும் வசனங்கள் ஒவ்வொன்றும் வைரக்கற்கள். 

இருவரில் எவர் சொல்வது சரியென சான்றோர்கள் கூட முடிவெடுக்க தடுமாறும் வண்ணம் வசனங்கள் ஆட்கொள்கின்றன. நோய்வாய்ப்பட்டவராக நடிக்க வேண்டிய சில காட்சிகளுக்காக நீரஜ் 17 கிலோ எடைக்குறைப்பு செய்திருக்கிறார் நீரஜ். அதற்காக அவர் பட்ட அவஸ்தையை எலும்பும், தோலுமாக  ஒரு க்ளோஸ் அப் சீனில் மிரட்சியுடன் புரிந்து கொள்ள முடிகிறது நம்மால்.                                            
   
அருமையான வசனங்களால் பின்னப்பட்டு இருக்கும் இப்படத்தில் இருந்து சில...

நண்பன்: ''Don't Start that again''.

அலியா: Don't start that 'don't start again'.

ஜெயின் துறவியிடம் நண்பன்: 'மாத்திரைகளை உட்கொள்ள ஏனிந்த பிடிவாதம்?   உங்களுக்கும் தற்கொலைப்படை தீவிரவாதிக்கும் என்ன வித்யாசம்?'

ஷிப் ஆப் தீசியஸின் உயிர்நாடியாக இருப்பது பங்கஜின் ஒளிப்பதிவு. சாலையோரம் மிகவேகமாக நடந்து கொண்டே ஒரே ஷாட்டில் நீரஜ் பேசுமிடம், ஸ்டாக்ஹோம் மேகக்கூட்டங்களுக்கு கீழே முன்னோக்கி வரும் கார், பல்வேறு பாதங்களின் மிதிபாடுகளில் சிக்காமல் மீளும் மரவட்டை, பச்சை வயல் தோன்றுவதற்கு பின்பு டைட் க்ளோஸ் அப்பில் வரும் நீரஜின் கண்கள். விஷுவல் ராஜபாட்டை!!!
             
பங்கஜ்.....கேமராதான் கண்களா? கண்களே கேமராவா? ஒத்தை வார்த்தைல ஓராயிரம் தரம் சொல்லணும்னா.

பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா... பிரம்மாதம்யா...          பிரம்மாதம்யா...           பிரம்மாதம்யா...          பிரம்மாதம்யா...
                              
இணைய தளம் ஒன்றிற்காக பங்கஜ் அளித்த பேட்டியை படிக்க:

பங்கஜ் - ஷிப் ஆப் தீசியஸ் 
                                                                    
  இயக்குனர் ஆனந்த் காந்தி

உலக சினிமாக்கள் குறித்த ஆழமான புரிதல் இல்லாவிடினும் தொடர்ந்து இதுபோன்ற படங்களை பார்க்கும் ஆர்வமுள்ள சராசரி ரசிகனாகிய என் போன்றோருக்கும் விளங்கும் விதத்தில் ஒரு சாலச்சிறந்த படைப்பை தந்திருக்கும் ஷிப் ஆப் தீசியஸின் அனைத்து கலைஞர்களுக்கும் வந்தனங்கள் பல.

உள்நாட்டில் பெரும்பாலும் காகிதக்கப்பல்களையே விட்டுப்பழகிய இந்திய கலைஞர்களுக்கு மத்தியில் உலக சினிமா எனும் சமுத்திரத்தில் கம்பீரமாக ஒரு டைட்டானிக் கப்பலை செலுத்தி இருக்கிறது 'கேப்டன்' ஆனந்தின் இந்த ஷிப் ஆப் தீசியஸ். 
...........................................................

குறிப்பு: ஆங்கிலத்தில் சப் டைட்டில் போடப்படுகிறது.
 

Thursday, July 25, 2013

தேசிய புகைப்பட போட்டியில் ஜாக்கி    
                                                                 
                                                                       Birkbeck - University of London

தி ஹிந்து நாளிதழும், லண்டன் பிர்க்பெக் பல்கலைக்கழகமும் இணைந்து தேசிய அளவிலான புகைப்பட போட்டிகளை நடத்தி வருகின்றன. தற்போது நடந்து வரும் போட்டியின் தலைப்பு  - உழைக்கும் முதியவர்கள்.

பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் மற்றும் மாக்சாசே விருது வென்ற சமூக சேவகர் அருணா ராய் ஆகியோர் நடுவர் குழுவில் இடம் பெற்று இருக்கின்றனர்.

முன்னணி தமிழ்ப்பதிவரான ஜாக்கி சேகரும் போட்டியாளராக களத்தில் குதித்துள்ளார். புகைப்படம்/ஒளிப்பதிவு மீது தீவிர ஆர்வமும், தேர்ந்த அனுபவமும் கொண்டிருக்கும் ஜாக்கி சேகர் இப்போட்டிக்காக எடுத்த படங்களுள் ஒன்று:
                                                                         

மேலும் தகவல்களை அறிய: http://www.thehindushutterbug.com/

இப்போட்டி குறித்து ஜாக்கி சேகர் எழுதிய பதிவினைப்படிக்க:

 http://www.jackiesekar.com/2013/07/blog-post_22.html#more

ஜாக்கி எடுத்ததில் தங்களுக்கு பிடித்த புகைப்படங்களுக்கு வாக்களித்து ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வாக்களிப்பதற்கான இறுதி நாள்: 28/07/2013 இந்திய நேரம் இரவு 11 மணி வரை. 31 ஜூலை அன்று வெற்றி பெற்றவர்கள் பட்டியல் http://www.thehindushutterbug.com/ தளத்தில் வெளியாகிறது.   
...............................................சமீபத்தில் எழுதியது:

D-Day விமர்சனம் 
Wednesday, July 24, 2013

D-Day


                                                                          


கெட்ட ஆட்டம் போட்ட ஒசாமா முதல் வீரப்பன் வரை அனைவரும் ஏதோ ஒரு ரூபத்தில் போட்டுத்தள்ளப்பட்டு விட மிஞ்சி இருப்பவர்களில் தாவூத் இப்ராஹிம்தான் மோஸ்ட் வான்டட். இவரை மையமாக வைத்து 'ஏக் மார் தோ துக்கடா' ஹிந்திப்படங்கள் வரிசையாக வந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் இந்த டி-டே. இதற்கும் முன்பு சுமாரான படங்களை இயக்கிய நிகில் அத்வானிக்கு டி-டே பெரிய பெயரை வாங்கித்தந்திருக்கிறது என்று சொல்லலாம்.

கராச்சியில் காலாட்டியவாறே நிழலுலக இரும்புக்கரங்களால் இந்தியாவை அலற வைத்துக்கொண்டு இருக்கும் Goldman (எ) தாவூத் (எ) ரிஷிகபூரை உயிருடன் பிடித்து வர R&AW திட்டம் தீட்டுகிறது. 'ஆபரேஷன் கோல்ட் மேன்' என பெயர் சூட்டி நம்பிக்கையான நான்கு உளவாளிகளிடம் அப்பொறுப்பை ஒப்படைக்கிறார்கள். நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தன் மகனின் திருமணத்திற்காக தாவூத் வரப்போவதை மோப்பம் பிடிக்கும் நால்வரும் தங்கள் திட்டத்தை செயல்படுத்த களமிறங்குகிறார்கள். வென்றார்களா/தோற்றார்களா என்பதே கதை.  

R&AW தலைமை அதிகாரியாக நாசர். ரவுடி ராத்தோர் மசாலா படத்தில் வில்லனாகவும், இன்னபிற ஹிந்தி படங்களில் ஆங்காங்கே தலைகாட்டி வந்த நாசரின் நடிப்பிற்கு டி-டே சரியான தீனியை வழங்கி இருக்கிறது. சென்டிமென்ட் உளவாளியாக இர்பான் வழக்கம்போல் அதகளம். அர்ஜுன் ராம்பால், 'கேங்ஸ்ஆப் வாசேபூர்-2' நாயகி ஹுமா குரேஷியும் நடிப்பில் பாஸ் ஆகி விடுகிறார்கள். 

அர்ஜுன் ராம்பாலுடன் உலக நாயகி ஸ்ருதி பின்னிப்பிணைந்து இருக்கும் ஸ்டில் பட ரிலீசுக்கு முன்பே பரபரப்பாக பேசப்பட்டது/ பார்க்கப்பட்டது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம். கராச்சி சிகப்பு விளக்கு பகுதியில் விலைமாதாக ஸ்ருதி. ராம்பாலை சுடச்சுட லிப் லாக் செய்யும் காட்சியின்போது தியேட்டர் ஏசி தானாகவே ஆப் ஆகி விடுகிறது. தந்தை 8 அடி என்றால் குட்டி 24 அடி பாய்ந்திருக்கிறது. அதே நேரத்தில் திரைக்கதைக்கு வேகத்தடை போடுவதும் மேடம் வரும் சீன்கள்தான். அதை க்ளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில் புரிந்து கொண்டு ஸ்ருதியை கௌரவக்கொலை செய்து விடுகிறார் இயக்குனர்.

                                                                       

ரிஷி கபூர்.... 'இந்த கெத்தான நடிப்ப இத்தன வருஷம் எங்க ஒளிச்சி வச்சிருந்த தலைவா' என விசிலடித்து பாராட்டும் அளவிற்கு வெளுத்துக்கட்டி இருக்கிறார். 'என்னை கைது செஞ்சி என்ன சாதிக்க போறீங்க? எனக்கு கராச்சியும் ஒண்ணுதான். மும்பையும் ஒண்ணுதான். நாடுமுழுக்க பரபரப்பா நாலு நாள் பேசுவீங்க. 'அர்னாப் கோஸ்வாமி' டி.வி.ல அலறுவார். அவ்ளோதான? உள்ள இருந்துட்டே பிசினெஸ் செய்வேன் பாக்கறியா?' என ரிஷி பேசும்போது 'அர்னாப் மூலம் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் இருந்து பலமாக விழுகிறது கைத்தட்டல். 

முதல் பாதியில் நட்சத்திர ஹோட்டலை சுற்றி நடக்கும் அதிரடி காட்சிகள் ஹாலிவுட் தரம். சங்கர் -எஹ்சான் -லாய் க்ரூப்பின் பின்னணி இசை மிரட்டல். ஸ்ருதி கொடூரமாக தாக்கப்படும் நிகழ்வை பாடலுடன் விஷுவல் செய்திருப்பது ரத்தமயமான லவ்லி ரொமான்ஸ். ஷங்கர் மகாதேவன் மற்றும் அவர் குழுவினரின் குரல்களில் ஒலிக்கும் 'முர்ஷித் கேலே' பாடல் மனதை கொள்ளை கொள்கிறது.

நகரின் பரபரப்பான மார்க்கெட்டில் உளவு பார்க்க செல்லும் பழமையான சீன், உளவுத்துறையால் சுற்றிவளைக்கப்படும்போது இம்மியளவு கூட பதட்டம் காட்டாமல் ரிஷி அவ்வப்போது பேசும் பஞ்ச் போன்றவை லேசான நெருட வைக்கின்றன. மற்றபடி நிழலுலகம்/ தாவூத் பின்னணி கொண்ட ஹிந்திப்படங்களில் டி-டே தனி இடத்தை பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
...........................................................................


சமீபத்தில் எழுதியது:


Monday, July 22, 2013

ஸ்பெஷல் மீல்ஸ் (22/07/13)பிரம்மா:
                                                                       
                                                                        Image: madrasbhavan.com

'அலுவலர்கள் வெளுப்பகம்' எனும் பெயர்ப்பலகைக்கு பிறகு என் புருவத்தை உயர்த்த வைத்த தமிழாக்கம் இது. இடம்: பாண்டி பஜார்(தி.நகர்).
......................................................................

சந்திப்போமா:
சென்ற ஆண்டைப்போலவே இம்முறையும் சென்னையில் பதிவர் சந்திப்பு நடத்துவதற்கான வேலைகள் துவங்கிவிட்டன. கமலா தியேட்டர் அருகே உள்ள Cine Musicians Union ஹாலில் செப்டம்பர் 1 ஆம் தேதி சந்திப்பு நடைபெறுகிறது. மேலும் விவரங்கள் அறிய படிக்க: சென்னை பதிவர் சந்திப்பு 
..................................................................

சொன்னா புரியாது: 
எழுதுபவர்களுக்கு சரியாக பேச வராது. அருமையாக பேசுபவர்களுக்கு எழுத வராது என்று சும்மாவா சொன்னார்கள்? சென்ற ஞாயிறு அன்று சினிமா சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. சமீபத்தில் வெளியான படங்களுக்கு வசனம் எழுதிய புள்ளி ஒருவர் கிட்டத்தட்ட 2 மணிநேரம் டீ ஆத்தினார். குடுக்கப்பட்ட தலைப்புக்கும், அவர் அள்ளி வீசிய தகவல்களுக்கும் பெரிதாக தொடர்பே இல்லை. தலைப்பை பார்த்து விழாவில் கலந்து கொண்ட என் போன்ற நபர்களின் காதுகளில் குருவி ரிங்கென்று சுத்தியதுதான் மிச்சம்.
...............................................................

Oh My God:
சென்ற ஆண்டு பார்க்கத்தவறிய ஹிந்தி படங்களில் ஒன்று ஓ மை காட். நேற்றுதான் காண முடிந்தது. பூகம்பத்தில் இடிந்து போன தனது கடைக்கு கடவுள்தான் நஷ்ட ஈடு தர வேண்டுமென வழக்கு தொடுக்கிறார் பரேஷ் ராவல். இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் மதவாதிகளிடம் கோர்ட் விவாதத்தில் மோதி எப்படி ஜெயிக்கிறார் என்பதுதான் கதை.

நாத்திகராக பரேஷ், கடவுளாக அக்சய் குமார் மற்றும் Self Styled Godman ஆக மிதுன் சக்ரவர்த்தி ஆகியோரின் நடிப்பு பிரமாதம். கடவுள் நம்பிக்கை குறித்து இருதரப்பினர் கருத்துக்களையும் வெகுஜனங்கள் ரசிக்கும் வண்ணம் படமாக்கி இருப்பது சிறப்பு. சந்தேகமின்றி இது ஒரு க்ளாஸ்ஸிக் படம்தான்.
...................................................................

சிவப்பதிகாரம்:
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சட்டம், ஒழுங்கு கட்டுக்குள் இருக்கும் எனும் கூற்று வரலாறாகிப்போய்விடுமோ என்றெண்ணும் வண்ணம் சம்பவங்கள் நடந்தேறி வருவது வருத்தத்திற்கு உரியது. சாதியின் பெயரால் தர்மபுரி தகித்த நிலைக்கு சமமாக மதக்கட்சி சார்ந்த அரசியல் பிரமுகர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருவது பதட்டத்தை அதிகரித்துள்ளது. சமீபகாலமாக பா.ஜ.க./ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களை குறிவைத்து ஒரு கும்பல் கொன்று குவித்து வருகிறது. சேலத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். செக்ரட்டரி ரமேஷ் சென்ற வெள்ளியன்று பலியாகி இருக்கிறார்.

இத்தொடர் கொலைகளுக்கான பின்னணி என்னவென்று தெளிவாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவில்லை. சாதி மற்றும் மதத்தின் பெயரால் நடக்கும் இவ்வெறியாட்டங்களை வெகு விரைவில் ஒடுக்கித்தள்ள ஜெயலலிதா முடிவெடுத்தாக வேண்டிய நேரம் நெருங்கி விட்டது.
...............................................................

அம்மன் கோவில் வாசலிலே:
ஆடி அல்லோகலம் ஆரம்பமாகிவிட்டது. எந்தப்பக்கம் திரும்பினாலும் 'ஆடி அள்ளுபிடி ஆபர், போத்தீஸின் இலவச இம்போர்டட்(!) உண்டியல் என வித விதமான லொள்ளுபடிகளின் விளம்பரம். இதற்கு இணையாக பக்தகோடிகளின் ரணகளம் வேறு. மஞ்சள் துணி கட்டிக்கொண்டு தெருக்களை மறித்து 'டேக் டைவர்சன்' சொல்ல தனிப்படையே அமைத்து இருக்கிறார்கள்.

அல்லக்கை அரசியல்வாதிகளே அரண்டு போகும் அளவிற்கு ப்ளெக்ஸ் பேனர்கள். அதில் அம்மன் படத்தை சுற்றி ஏரியாவில் இருக்கும் நண்டு, நசுக்கான் முதல் தொண்டு பெருசுகள் வரை ஆக்ரமித்து இருப்பது, பிரத்யேக பூசாரி பூச்சட்டியுடன் நம்மை முறைத்து பார்ப்பது, லோக்கல் பெரும்புள்ளி தங்க ப்ரேஸ்லெட், அத்தே தண்டி செயின், மோதிரம் அணிந்து செல்போனில் பேசுவதுபோல போஸ் குடுப்பது(இதுல ப்ரெஞ்ச் தாடி வேற) என தூள் பரத்துகிறார்கள். முடியலடாங்கப்பா!!
........................................................    

மக்கள் ஆட்சி:
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் புகழை மேலும் தமுக்கடித்து பரப்பி வருகிறார்கள் மம்தா ஆன்ட்டியின் த்ரிணமூல் காங்கிரஸ் கட்சியினர். மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலையொட்டி அக்கட்சியினர் பேசும் வீர உரைகள் பின்னி பெடலெடுக்கின்றன:

'நாம ஜெயிச்சே ஆகனும்.  காங்கிரஸ்காரன் தலைய வெட்டு. சுயேட்சைங்க வீட்ல நெருப்பு வை. போலீஸ் மேல குண்டை வீசு' என தொண்டர்களுக்கு ஆர்டர்கள் பறக்கின்றன. இதுவல்லவா மக்கள் ஆட்சி.
............................................................  

மரியான்:
சென்ற ஆண்டு ராஜ் டி.வி. நடத்திய 'என்றென்றும் வாலி' பாராட்டு விழாவில் வாலி பேசியது: 'உங்கள் வாழ்த்துகள் எனக்கிருந்தால் இன்னும் 25 ஆண்டுகள் வாழ்வேன்'. தலைமுறைகள் தாண்டிய பாடல் வரிகள் 25 ஆண்டுகளையும் தாண்டி நிற்குமென்பதை அறியாமல் மறைந்து விட்டார் ஒரு பெருங்கவி.

காணொளி பார்க்க: என்றென்றும் வாலி 
..........................................................


சமீபத்தில் எழுதியது: 
மரியான் - விமர்சனம்


Friday, July 19, 2013

மரியான்                                                                     

தமிழில் படமெடுப்பது சுடுதண்ணீர் வைப்பதை விட எளிதான விஷயம் என்பதை 'வந்தே மாதரம்' பரத் பாலாவும் புரிந்து கொண்டு மரியானை கடலில் இறக்கி ஆழம் பார்த்து இருக்கிறார். இயக்குனர் தனது அன்புத்தோழர் என்பதால் ரஹ்மான் மெனக்கெட்டு மெட்டமைத்து இருப்பாரென்பது ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பு. அத்தோடு துக்ளியூண்டு டிக்கட் காசிற்கு ஆப்ரிக்கா எக்ஸ்கர்ஷன்  அழைத்துச்சென்றே தீருவேன் என ஆஸ்கார் ரவிச்சந்திரன் அண்ணாச்சி தீர்மானித்தால் வேண்டாமென்றா சொல்லப்போகிறோம்.

அரபி மற்றும் வங்கக்கடல் முழுக்க தலைகீழாக சம்மர் அடித்து  நீரோட்டமுள்ள (திரைக்)கதையை கழுத்தாமட்டையில் போட்டு பிடித்து வந்திருக்கும் பரத் பாலாவிற்கு முதலில் ஒரு பெரிய 'கும்புடறோம் குருசாமி' போட்டு விடுவோம். முதல் காட்சியில் தனுஷ் உள்ளிட்ட மூன்று ஆயில் நிறுவன தொழிலாளிகளை கடத்தி செல்கிறது ஆப்ரிக்கன் சுள்ளான் க்ரூப். அப்போது  தனுஷிடம் ஜெகன் 'உன் கதை என்ன?' என்று கேட்ட குத்தத்திற்காக நம்மை குத்த வைத்து மொத்தி எடுத்திருக்கிறார்கள்.

நீரோடி எனும் கடலோர கிராமம்.  மீன்பிடிப்பதில் வல்லவரான லோக்கல் நெத்திலி தனுஷை சொம்மா தொர்த்தி தொர்த்தி காதலிப்பது நமது  'பூ' பார்வதி. 'தள்ளிப்போடி' என ஓப்பன் ஹார்ட்டுடன் உலவும் அவ்விள நெஞ்சை ஆரம்பத்தில் கடிந்துவிட்டு பிறகு நெஞ்சோடு கெட்டியாக அணைத்துக்கொள்கிறார் வங்கக்கடல் ராசா. பார்வதி இவ்வளவு சீன் காட்டியிருப்பார் என்று முன்பே தெரிந்திருந்தால் 10 ரூபாய் டிக்கட் எடுத்து முதல் வரிசையில் அமர்ந்திருப்பேன்.

காதலியின் கடனை தீர்க்க சூடான சூடானில் வேலைக்கு செல்கிறார் சும்பன் சுறா. இடைவேளை. அங்கிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை நீங்கள் அமெரிக்காவில் பார்த்தாலும். ஆப்ரிக்காவில் பார்த்தாலும் சரி.
                                                                

முந்தைய படங்களை விட இப்படத்தில் தனுஷிடம் குறிப்பிடத்தக்க மாற்றம் இருப்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். அது யாதெனில் 'மரியான்' எனும் டைட்டில் கொண்ட படத்தில் இதற்கு முன்பு தம்பி நடிக்கவில்லை என்பதே. அசலூர் தோழராக அப்புக்குட்டி, ஆப்ரிக்க தோஸ்தாக ஜெகன். வந்தார்கள் சென்றார்கள். கேரளத்தின் முன்னணி நடிகர் சலீம் வீணடிக்கப்பட்டு இருப்பது கொடுமை. உருப்படியாக நடித்த ஒரே நபர் உமா ரியாஸ் மட்டுமே. அவரையும் சிற்சில சீன்களில் (நரைத்த) தலை காட்ட வைத்து விட்டு ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டனர்.

மரியானில் இந்திய ரசிகர்களின் கண்ணீர் மோட்டாரில்லா காட்டாறாக உதட்டினுள் உப்புக்கரித்து ஓடவைக்கும் காட்சியொன்றும் உண்டு. சூடான் பாலைவனத்திலோர் ஒற்றை மரம். மரத்தின் பின்புறம் தனுஷ். அவரருகே இரு சிறுத்தைகள் 'அனல் அனலா ஆப்ரிக்கா. மரத்த மரத்த சுத்தி வா. கொலவெறி பாடுனவன் இங்கிருக்கான். சிக்கிக்கிட்டான் ஒண்டிப்புலி' என பாடாத குறையாக வலம் வருகின்றன.

'சிறுத்தைங்க தனுஷை கடிக்க. தனுஷை சிறுத்தைங்க கடிக்க. ரெண்டுல ஏதோ ஒண்ணு நடக்கப்போதுப்போய்' என்று முன்சீட்டில் இருப்பவர் மூக்கின் நுனிக்கே நீங்கள் செல்லும்போது 'மாட்டேன். உடனே கடிக்க மாட்டேன். என்ன பாத்து பயப்படராப்ல கொஞ்ச நேரம் நடிச்சாத்தான அவருக்கு நேஷனல் அவார்ட் தருவீங்க' என காத்திருக்கின்றன அச்சிறுத்தைகள். சங்க காலத்தில் வீரமறத்தி ஒருத்தியின் முறத்தால் ஓட ஓட விரட்டப்பட்ட சிறுத்தை இதுவாக இருக்கக்கூடுமோ என கேவலமாக எண்ணிய எனக்கு சத்தியமாக பரிகாரம் இல்லையே...அய்யகோ!!
                                                                    


கடத்தப்பட்ட காலத்தில் பசியில் துடிக்கும் ஜெகனை சாந்தப்படுத்த தனுஷ் 'வறுமையின் நிறம் சிகப்பு' பாணியில் அறுசுவை உணவு உண்பது போல பாவனை செய்யும் சீன் க்ரியேட்டிவிட்டி இருக்கே... பரத் உங்க தாடிக்கு 10 கிலோ ப்ளாக் ரோஸ் டை பார்சல். க்ளைமாக்ஸ் 'நெஞ்சே எழு, நெஞ்சே எழு' பாடலில்  500.1 DTS எபெக்டில் ரஹ்மான் அலறி ஆனது ஒன்றுமில்லை. உலகையே வாய்க்குள் அடக்கிய கிருஷ்ணன் கூட நான் கொட்டாவி விட்டபோது எனது வாய்க்குள் இருந்ததாக மல்டிப்ளெக்ஸ்புரி வாழ் மக்கள் பேசிக்கொண்டனர்.  

யோவ்... சிங்கம் சூர்யா. ஒமக்கு சீப்பு வக்கிற எடத்துல ஏதோ மச்சம் இருக்குய்யா!!!
...........................................................

சமீபத்தில் எழுதியது:

Bhaag Milkha Bhaag - விமர்சனம் 


Thursday, July 18, 2013

Bhaag Milkha Bhaag                                                                     

காலனி ஆதிக்க விளையாட்டான க்ரிக்கெட் தவிர்த்து வேறு விளையாட்டுகளை மையமாக கொண்டு அவ்வப்போது சில ஹிந்தி சினிமாக்கள் வருவதுண்டு. உதாரணத்திற்கு சக் தே இண்டியா(ஹாக்கி), பான் சிங் தொமர் (தடகளம்)  மற்றும் பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளிவரவுள்ள மேரி கோம் (குத்துச்சண்டை) போன்றவற்றை சொல்லலாம்.  அவ்வரிசையில் இன்னொரு முயற்சிதான் பன்முகக்கலைஞன் பரான் அக்தர் நடிப்பில் வெளியாகி இருக்கும் பாக் மில்கா பாக்.

யார் இந்த மில்கா சிங்? காலம் காலமாக க்ரிக்கெட்டை மட்டுமே கொண்டாடித்தீர்க்கும் ஒவ்வொரு  இந்தியனும் எழுப்பும் அபத்தமான கேள்வி. உலகின் மிகமுக்கிய மற்றும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றான ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் புகழை 1950 மற்றும் 1960 களில் எட்டுத்திக்கும் பரப்பிய முதல் மற்றும் ஒரே வீரர்தான் இந்த மில்கா. 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பி.டி. உஷா எப்படி வெண்கல பதக்கத்தை மயிரிழையில் தவற விட்டாரோ அதே போல 1960 ரோம் ஒலிம்பிக்கில் நான்காவது இடத்தை மட்டுமே பிடித்த துரதிர்ஷ்டசாலி இந்த மில்கா.

'பாக் மில்கா பாக்'கை இயக்கி இருப்பது ராகேஷ்(ரங் தே பசந்தி, டெல்லி -6). இந்திய -பாகிஸ்தான் பிரிவினையின்போது பெற்றோரை பறிகொடுத்தது, திருடனாய் சில காலம் நாட்களை நகர்த்தியது, ராணுவ மற்றும் தடகள வாழ்க்கை. அதோடு கொஞ்சம் காதலும். இப்படி பல்வேறு நிகழ்வுகளை கடந்து வந்த மில்கா சிங்கின் வாழ்க்கையை ஒரு Biopic ஆக பதிவு செய்ய 3 மணி நேரம் தேவைப்பட்டிருக்கிறது ராகேஷிற்கு. அது ஏற்புடையதும் கூட.
                                                                     


அகதிகள் முகாமில் கணவருடன் தனது சகோதரி உடலுறவு கொள்ளுதல், ஆஸ்திரேலிய வீராங்கனையுடன் தனக்கிருந்த உறவு உட்பட அனைத்து விஷயங்களையும் ஒளிவு மறைவு இல்லாமல் படமாக்க சம்மதம் தந்திருக்கும் மில்கா சிங்கை முதலில் பாராட்டியாக வேண்டும்.

சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் படம் நெடுக பிரமாதமாக ஓடியிருக்கிறார் பரான். இந்த கேரக்டருக்காக கடுமையான உழைப்பை தந்திருக்கும் பரானுக்கு ஹாட்ஸ் ஆப். ரொமான்ஸ், போட்டிகளில் வெற்றி தோல்வி, கோபம் என அனைத்திற்கும் 'செஞ்சி வச்ச செல' போல ஒரே முகபாவத்தை பிரதிபலிப்பது குறைதான். இவர் நடிப்பிற்கு குட்டி மில்கா பையன் ஒரு படி மேல்.

கொஞ்சமே வந்தாலும் கொஞ்சும் கிளி சோனம் கபூர் நெஞ்சை அள்ளுகிறார். மில்காவின் 'பார்ட் டைம்' காதலியாக வரும் ரெபெக்கா ஹாட்டோ ஹாட். பரான்...மச்சக்காரன்யா நீ. ராணுவ அதிகாரியாக தமாசு மீசையுடன் பிரகாஷ்ராஜ். வாங்கிய பணத்திற்கு வஞ்சனை இல்லா நடிப்பு. ஆல்மோஸ்ட் நேருவாக தலிப்பின் தோற்றப்பொருத்தமும் சிறப்பு.
                                                               

ஷங்கர் - எஹ்சான் - லாய் இசையில் பாதியில் ஒலிக்கும் பக்கா பஞ்சாபி பாடலான 'மஸ்தோ கா', தீப்பறக்கும்  'ஜிந்தா' இரண்டும் சிறப்பு. ஜாவேத் பஷீர் பாடிய 'மேரா யார்'   காதல் ஜிகர்தண்டா பாஸு. இணையத்தில் கேட்கிறேன். கேட்கிறேன். கேட்டுக்கொண்டே இருக்கிறேன். இடைவேளைக்கு பிறகு வரும் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம்தான்.

ஆவணப்படம், கமர்ஷியல் காவியம் ஆகிய இரண்டில் ஒன்றாகி விடக்கூடாது. அதேநேரத்தில் இரண்டாம் பாகத்திற்கு வழிவகுக்காமல் மில்காவின் வாழ்வை பதிவு செய்து விட வேண்டும். லேசாக தட்டுத்தடுமாறினாலும் எப்படியோ வெற்றிக்கோட்டை தொட்டுவிட்டார் இயக்குனர்.


இப்படத்தை பார்த்த பிறகு கண்ணீரில் மூழ்கிய மில்கா சிங் 'எனது வாழ்வை சிறப்பாக படமாக்கி உள்ளீர்கள். பரான்...என்னை நேரில் பார்ப்பது போன்றே இருந்தது உங்கள் உடல்மொழி' என பாராட்டி இருக்கிறார். அரசாங்கம், பத்திரிக்கை மற்றும் மக்களால் மறக்கப்பட்ட இந்தியாவின் தலைசிறந்த விளையாட்டு வீரனின் வாழ்வை படமாக்கி இருக்கும் 'பாக் மில்கா பாக்' அணிக்கு தங்க மெடலை தாராளமாக அணிவிக்கலாம்.
..........................................................

சமீபத்தில் எழுதியது:

Sixteen - விமர்சனம் 

  

Wednesday, July 17, 2013

Sixteen


                                                                   முதிர் வயது நாயக நாயகிகளுக்கு பள்ளிச்சீருடை அணிவித்து ரசிகர்களை இம்சைக்கு ஆளாக்கும் காலகட்டத்தில் அக்மார்க் க்யூட்டிஸ்களை ஆன் ஸ்க்ரீனில் அரங்கேற்றினால்? அதுதான் சிக்ஸ்டீன். 16 வயதினிலே மேட்டுக்குடி மொட்டுக்கள் சந்திக்கும் ரகரகமான பருவக்கோளாறுகளை புட்டு புட்டு வைக்கிறார் புதிய இயக்குனர் ராஜ் புரோஹித்.
 
பள்ளித்தோழிகளான அனு(இசபெல்) , நிதி(மேஹக்)  மற்றும் தனிஷா(வமிகா).  மூவரின் உலகமும் வித்யாசமானது. மிகப்பெரிய மாடலாக என்ன விலை வேண்டுமானால் கொடுக்க தயாராக இருப்பவள் அனு. காதலுக்கும், இனக்கவர்ச்சிக்குமான குழப்பத்தில் தனிஷா. தந்தை  அளித்த சுதந்திரத்தை வைத்துக்கொண்டு தோழனுடன்  சிநேகம் பாராட்டினாலும் செக்ஸிற்கு இடமளிக்காமல் உஷாராக இருக்க முயலும் நிதி. இம்மூவரும் எதிர்பாராத வண்ணம் சந்திக்கும் பிரச்னைகள்தான் கதை.

கேரக்டர்களுக்கு பாந்தமாக பொருந்தும் சிட்டுக்களை தேர்ந்தெடுத்த இயக்குனர் முதுகில் நாள் முழுக்க தட்டிக்கொண்டே இருக்கலாம். தனிஷா சிம்ப்ளி ராக்ஸ்.  மகன் அஷ்வினை கலக்டர் ஆக்க கண்டிப்புடன் நடந்து கொள்ளும் தந்தையாக ஜாகிர், நிதியின் தந்தையாக வருபவர் மற்றும் ஒருதலையாய் இப்பெண்களை காதலிக்கும் மாணவர்கள் என கேரக்டர்களை அழகாக செதுக்கி இருக்கிறார் ராஜ்.

தனிஷாவின் வீட்டில் குடியேறி காதலில் சிக்கும் எழுத்தாளராக கீத்தின் கதாபாத்திரம்தான் படத்தின் பலம். 'எழுத்தாளர்களுக்கு அமைதியான சூழல்தான் பிடிக்குமென  யார் சொன்னது?' என்பதில் தொடங்கி 16 வயதில் ஏற்படும் குழப்பங்களை தெளிவாக எடுத்துரைப்பது வரை கீத்தின் சீரான நடிப்பு சிறப்பு.
                                                                  

                                         
கேண்டீனில் தோழி ஒருத்தி பேசியே கொல்லும்போது நிதி தொடர்ந்து 'உம்' கொட்டுவது, அஷ்வின் தற்கொலைக்கு முயலும் திக் திக் காட்சி போன்ற இடங்களில் இயக்குனர் டச் பிரமாதம். தந்தைக்கு தந்த வாக்குறுதியை மீறி தோழனுடன் தவறான உறவு வைத்து கர்ப்பமாகிறாள் நிதி. கருக்கலைப்பு செய்ய மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கும் அவள் 'தயவு செய்து அப்பாவை உள்ளே வர சொல்லாதே. அவரை பார்க்கும் தைரியம் எனக்கில்லை' என்று தாயிடம் பதறும்போதும், அதன்பின் தந்தையை அணைத்துக்கொண்டு கண்ணீர் சிந்தும் காட்சியும் நெகிழ்வின் உச்சம்.    


செல்வராகவன் வகையறாக்களிடம் இதுபோன்ற கதை சிக்கி இருந்தால் சூட்டை கிளப்பும் எசகுபிசகான காட்சிகளும், பாடல்களும் வியாபித்து இருக்கும். ஆனால் அதுபோன்று பிட் பட காட்சிகளை பெரிதாக நம்பாமல்,  அதே சமயம் பிரச்சாரமும் செய்யாமல் ஸ்வீட் சிக்ஸ்டீன் மூவியை தந்திருக்கிறார். டோன்ட் மிஸ் திஸ் Miss மூவி.
......................................................................


நாளைய விமர்சனம்:

Bhag Milkha BhagSaturday, July 13, 2013

மோடி - காவி(ய)த்தலைவன்

           

எத்தனை நாட்களுக்குத்தான் விளம்பரம் செய்துகொண்டிருப்பது? தொழிலை தொடங்க வேண்டாமா? குஜராத்தின் குறுவியாபாரியாக மாநில மக்களிடம் நற்பெயரை(?) சம்பாதித்த மோடி தற்போது தேசிய அளவில் பிஸினசை துவக்குவதற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார் என்பதற்கு இன்னுமோர் உதாரணம் நேற்று இக்காவி(ய)த்தலைவர் அளித்த பேட்டி. குஜராத் கலவரம் குறித்த கேள்விக்கு இறையாண்மையை ஆரத்தழுவி காக்கப்போகும் நாளைய பிரதமர்(!) தந்த பதில்:  'நான் காரோட்டியாகவோ அல்லது காரின் பின்புறம் அமர்ந்திருப்பவனாகவோ இருக்கையில் ரோட்டின் குறுக்கே ஒரு puppy (குட்டி நாய்) மீது அவ்வாகனம் மோத நேர்ந்தால் இதயம் வலிக்கத்தானே செய்யும்?'  

இஸ்லாம் சமுதாய மக்கள் மனதில் ஆறா ரணமாக இருக்கும் அக்கொடூர நிகழ்வை எவ்வளவு சாதாரணமாக வார்த்தைகளால் கடந்து விட முடிகிறது இம்மனிதரால். 'ஹாட்ரிக்' முதல்வராக தேர்வு செய்யப்பட்டபோது அத் தேர்தலில் கணிசமான சிறுபான்மை ஓட்டுக்களையும் இவர் வென்றார் எனும் செய்தியும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. 

ஒரு சாமான்யனாக 'இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் அந்நிகழ்வை பற்றி பேசிக்கொண்டு இருப்பது.மாநில/தேச வளர்ச்சிக்கும், ஜனநாயகத்திற்கும் பாடுபட ஒரு போல்டான லீடர் வந்தால் அனைவருக்கும் நன்மைதானே' என இவர் மீது சற்று நம்பிக்கை வைத்த மங்குனி மக்களில் நானும் ஒருவன். மோடியின் இப்பேட்டி மூலம் அக்கருத்தையும் தீவிர மறுபரிசீலனைக்கு உட்படுத்தி பார்க்கையில் உள்மனது உரக்க உச்சரித்த சொற்கள் இவைதான்:  'Reject this political puppy'.

மதச்சார்பற்ற தலைவர் ஒருவர்தான் இந்தியாவை ஆளவேண்டும் எனும் எண்ணம் தங்களுக்கு உள்ளதா எனும் கேள்விக்கு 'Justice to all. Appeasement to none.’ என்பதை பதிலாக வைக்கிறார். சுமாரான ஆங்கிலம் தெரிந்த என் போன்றோர் கேட்கும் கேள்வி: Then why the hell you try to appease the hindu community by calling the gujarat victims as puppy, Mr.Modi?  ஒரு இந்துவாக இக்கேள்வியை முன்வைக்கிறேன் என்பதை குறிப்பில் கொள்க மதச்சார்பற்ற பிரத(ம)ரே.
                                                                   

'மீண்டுமொரு முறை குஜராத்தின் முதல்வராகும் என்னும் எனக்கு இல்லை. எமது கட்சியில் இருந்து புதிதாக ஒருவர் அம்மாநிலத்தை ஆண்டுவிட்டு போகட்டும்' என்று இரக்கம் காட்டும் மோடி அதே பேட்டியில் 'தில்லி பற்றிய கனவு எதுவும் எனக்கில்லை' என்றும் நெஞ்சை நெகிழ வைக்கிறார். 'ஆசியாவின் பிரதமர் பதவி காலியாகத்தான்  உள்ளது. லகே ரஹோ மோடி பாய். ஹம் ஜரூர் ஜீதேங்கே' என்று பொடிக்காவி எவரேனும் ஊதி விட்டிருப்பாரோ?

'நான் ஒரு இந்து தேசியவாதி' என்று பிரகடனப்படுத்தி இருக்கும் மோடி எப்படி மதச்சார்பற்ற தேசத்து மக்களை அரவணைத்து செல்ல முடியும்? 'சிறுபான்மை மக்களின் அபிமான கட்சி எனும் ட்ரம்ப் கார்டை வைத்துக்கொண்டு இத்தனை காலம் காங்கிரஸ் ஆட்சி செய்யும் போது இந்துத்வா மங்காத்தாவை ஆடிப்பார்க்க அண்ணாத்தை முயற்சித்தால் மட்டும் என்ன கேட்டு போச்சி?' கேட்கிறான் பாபர் மசூதியில் காவிக்கொடி பறக்கவிட்ட அடிப்பொடிகளில் ஒருவன்.

20/20 போட்டிகளில் எதிர் நோக்கி வரும் வேகப்பந்துகளை எல்லாம் சுழற்றி அடித்து சிக்ஸர் அடிக்க எண்ணும் இளம் பேட்ஸ்மன்கள்  டெஸ்ட் போட்டிகளில் பெரும்பாலும் சோபிப்பதில்லை. அங்கு 'களமும்' பெரிது. காலமும் பெரிது. அதுபோல குஜராத்தின் 20/20 மேன் ஆப் தி மேட்ச் மோடி தனது தேசத்தலைவன் கனவை நிறைவேற்றும் திட்டத்தை ஆரம்பித்து இருக்கிறார். நாள் முழுக்க க்ரிக்கெட் பார்த்தே சீரழிந்து போன நமது குற்றப்பரம்பரைக்கு இதுவும் இன்னொரு ஆட்டமே.

 'வழில கெடந்த சாணிய நானாத்தான் அள்ளி வாய்ல போட்டுக்கிட்டனா?' என்று வடிவேலு புலம்பியதைப்போல அமைந்திருக்கிறது தலைவர் மோடியின் இப்பேட்டி. Secularism எனும் சொல்லுக்கு என்னிடம் இருக்கும் அகராதியிலும் மதச்சார்பின்மை என்றே அச்சிடப்பட்டு இருப்பதால்.....

I also hate this Political Puppy - Modi.  
.................................................................


சமீபத்தில் எழுதியது:

   

Tuesday, July 9, 2013

ஸ்பெஷல் மீல்ஸ் (09/07/13)பெண் சிங்கம்:
'பெண் சிங்கம் கம்பீரமா சட்டசபைல பேசி பாத்து இருக்கியா? ஓங்கி அப்புனா ஒன்ற டன் வைட்ரா...வாங்கிக்கறியா?'
                                                                 

மேடம் நடித்த இப்படத்தின் பெயரை முதலில் சொல்வோருக்கு ஒரு பூமர் பப்பிள் கம் பரிசு. 
............................................................

நான் கடவுள்: 
ரிமோட்டால் சேனல்களை கடந்து சென்றபோது SVBC வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் கண்டேன் ஒரு திவ்ய தரிசனத்தை.உள்ளூர் கலெக்டரின் திருப்பதி கோவில் வருகையை ஒட்டிய சிறப்பு கவரேஜ் அது. அவர் செல்லுமிடமெல்லாம் பின் தொடர்கிறது கேமரா. ஒரு கட்டத்தில் கலெக்டர் மொட்டை அடிப்பதை கூட 'கத்தரிக்காமல்' முழு ஒளிபரப்பு செய்தனர். யாருக்காக சேனல் ஆரம்பித்தார்களோ அவர் கால் கடுக்க காத்திருக்க இங்கே இந்தக்கூத்து. என்ன கொடும நாராயணா.
.......................................................................

நிழல் தேடும் நிஜங்கள்:
                                                             
                                                                             Image: madrasbhavan.com

சில வாரங்களுக்கு முன்பாக கட்சி பிரமுகர்களை சந்தித்த ஜெ 'புதுசா தண்ணீர் பந்தல் திறக்கும்போது மட்டும் நாலஞ்சி பானை, புது டம்ளர், ப்ளெக்ஸ் எல்லாம் வக்கிறது. கொஞ்ச நாள் கழிச்சி ஒரு பானைல மட்டும்தான் தண்ணி இருக்கும். அதுக்கப்புறம் அந்த பானையும் இருக்காது. இதுதான் நீங்க வேலை செய்யற லட்சணமா?' என்று காய்ச்சி எடுத்தாராம். அதற்குப்பிறகும் சில ர.ர.க்கள் பயப்படுவதாக தெரியவில்லை.அண்ணா சாலை தண்ணீர் பந்தலொன்று குடிமகனின் தற்காலிக ஓய்வறையாக மாறி இருப்பதை பாரீர். மேடம் கிட்ட சேதி போறதுக்கு முன்னால வாத்யார் மூஞ்சில சோடா அடிச்சி கெளப்பிட்டு பானைய வைங்கப்போய்!!     
.......................................................................

நீர்ப்பறவை:
நண்பர் ஒருவரை வழியனுப்பி வைப்பதற்காக நேற்று தி.நகரில் இருந்து கோயம்பேடு செல்ல வேண்டி இருந்தது. தி.நகர் பேருந்து நிலையத்தின் உள்ளே இருக்கும் கழிப்பறையில் இருந்து சுச்சா வாசம் பல அடி தூரம் வரை குப்பென்று வீசிக்கொண்டு இருந்தது. அரை மயக்கத்தில் பேருந்தேறி ஒருவழியாக   கோயம்பேடடைந்தோம்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையத்தின் பின்பக்கத்தில் குறிப்பிட்ட பேருந்தை பிடிக்க காத்திருக்கையில் பார்த்த காட்சி பிரமாதம். வெட்டவெளியில் நாலாபுறமும் சொட்டுநீர்ப்பாசனம் செய்து கொண்டிருந்தனர் இந்நாட்டு மக்கள். அங்கு தனியே கழிப்பறை இருந்தும் காற்றோட்டமாக 'சொய்ங்' அடிக்கும் சொகமே தனி எனும் கொள்கை வீரர்களை என் சொல்ல? கருணாநிதி ஆட்சியில் சுத்தமாக இருந்த கோயம்பேடு பேருந்து நிலையம் தற்போது இந்த கதிக்கு ஆளாகி விட்டது என பரவலாக பேச்சு எழுந்து வருகிறது. மேடம் ஜெ சீக்கிரம் தலைவரோட எங்க வீட்டு பிள்ளை சாட்டைய எடுங்க. கப்பு தாங்கல.
.................................................................

பிடிச்சிருக்கு:


பிடிச்சிருக்கு பகுதியில் இம்முறை இடம் பிடித்து இருப்பது மணிஜியின் படைப்பொன்று. கூகிள் ப்ளஸ் பக்கம் கரையேறிவிட்ட சிறப்பான எழுத்தாளர்கள் சிலரில் மணிஜி குறிப்பிடத்தக்கவர் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. நேரம் கிடைக்கும்போது சீனியர்களின்  க்ளாஸ்ஸிக் பதிவுகளை படித்து வருகிறேன். சமீபத்தில் படித்த மணிஜியின் க்ளாஸ்ஸிக்:

ஜோரா கை தட்டுங்கப்பா

இத கோபாலபுரத்துக்கு குரியர் செஞ்சாத்தான் என்னங்கறேன்?
....................................................................

ஜோர்:
தி.நகர் சரோஜினி தெருவில் உள்ள ரேணுகா மெஸ்ஸில் சாப்பாடு நன்றாக இருக்கும் எனும் செய்தி கேட்டு கடந்த ஞாயிறு மதியம் விசிட் அடித்தேன். காற்றோட்டமான இடம், போதுமான இடைவெளியில் இருக்கைகள், அன்பான உபசரிப்பு. மூவருக்கான அசைவ சாப்பாடு, ஒரு நெத்திலி வறுவல் மற்றும் சங்கரா மீன் குழம்பு மற்றும்  4 ஆப் பாயில்கள். மொத்தம் சேர்த்து 420 ரூபாய். ருசி பரம திருப்தி. நடுத்தர மக்களுக்கான சிறந்த உணவகங்களில் இதுவும் ஒன்று என்பதில் ஐயமில்லை . உஸ்மான் ரோட்டை சுற்றி இருக்கும் போலி தலப்பாக்கட்டி மற்றும் ஆம்பூர், ஹைதராபாத் பிரியாணிக்கடைகளில் சாப்பிடும் மக்கள் தங்கள் 'கடை'க்கண் பார்வையை ஒருமுறை இங்கு திருப்பிப்பார்க்கலாம்.
...................................................................

தங்கமகன்:
பொதுவாக ப்ரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டியில்தான் முன்னணி வீரர்கள் துவக்க சுற்றுகளிலேயே மண்ணை கவ்வுவது வழக்கம். நடால் போன்ற ஏதேனும் ஒரு ஸ்பெயின் வீரர் டாப் ஸ்டார்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் தருவார்கள்.

ஆனால் இம்முறை விம்பிள்டனில் பெடரர், நடால், செரீனா, ஷரபோவா போன்ற மலைகள் சாய்க்கப்பட ஜோகோவிச் தான் கோப்பையை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 77 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளூர் மைந்தன் முர்ரேவின் வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியில் மிதக்கிறது இங்கிலாந்து.
....................................................................

ராவணன்:
வழக்கம்போல் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அயோத்தி ராமர் கோவில் பிரச்னையை கையில் எடுத்து இருக்கிறது பா.ஜ.க. 'எனக்கு கோவில் கட்டு' என்று ராமரும் கேட்கவில்லை, பொதுமக்களும் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அடம்பிடிக்கிறது இந்த அகில உலக ராமர் ரசிகர் மன்ற கூட்டம்.

அயோத்திக்கு போயி அங்க இருக்குற சந்து போனதுல எங்கயாவது ராமர் விட்ட அம்பு கெடந்தா அதை எடுத்து அமித் ஷா தொப்புள்ள சொருகிட்டு வந்தா என்ன?
.........................................

முத்துக்கு முத்தாக:
'சார்லி என் விரலை கடிச்சிட்டான்' என அவனது அண்ணன் முறையிடும் யூ ட்யூப் வீடியோ சக்கை போடு போடுவதாக நண்பர் சொன்னார்.அந்த சேட்டைக்கார சார்லியின் காணொளி உங்கள் பார்வைக்கும்:  


..............................................

.............................
சமீபத்தில் எழுதியது:

Singam II - Review
....................

Saturday, July 6, 2013

Singam - II Reviewஓடாதீங்க.சுட்டுபுடுவேன்.இந்த ஆங்கில விமர்சனம் பரி'சோதனை' முயற்சிதான்.  படிச்சிட்டு சொல்லுங்க Folks:

தமிழ் விமர்சனம் படிக்க க்ளிக் செய்க:

சிங்கம் - II   தமிழ் விமர்சனம்

                                                                 

'Excuse me bro. Am new to the city. What's the easy way to reach gemini bridge from here(DMS bus stop)'.

'Just note down. Cross the road and take a share auto. get down at teynampet signal. Catch 23C bus and get off from it once you reach SIET college. Make a call to your parents and say 'take care'. Ensure that you do not pose like a stranger. Wipe off 'vaale, pole' from your memory and pronounce the words 'thala DMS variyaa, 100 rs romba ovarnaa'. Buy a boomer in a petty shop near DMS. Walk straight for few minutes. Must keep an eye on those who whizz past you in a bolero or Tata sumo. You will be in gemini within a couple of minutes. safe journey dude'

'Thats so nice of you thala. Anyway may I know your good name anna?'

'HARI'.

Yes. Hari is back with same old 'mas(s)'ala formula by joining hands with supercop Surya for the extended version of Singam. It is an acid test for both because the success rate of sequel movies in kollywood(especially for mass heroes) is too less by far. Then how about this one. the much awaited sequel. Here we go...

The story unfolds from here: After resigning from the ACP post, Surya works as a NCC leader in Tuticorin. Undercover police Surya inspects all the illegal activities along the coastal city in a silent mode/mood. At one (gun)point of time Duraisingam cracks the nexus between Sagayam, Bhai, Thangaraj and international drug smuggler Danny. Now its time for Singam to take charge as DSP since things are going out of control in the port city. From thereon  the director's typical marathon chase begins. Hari take us to a whirlwind tour in various vehicles. To make a (sea)change from his earlier film car chases,  Hari manages to import a couple of ships and boats from the producer's pocket. 

We know that with his fiery eyes Surya was all set and fit for a heavy duty sequel. As expected the steamy hero successfully delivers it. As a kind son to his parents, within-the-limit lover boy and a roaring cop...this pocket dynamite explodes on the screen and pierces straight in to the audience's heart. The scene in which he explains Hansika about his 'pure for sure' love with Anuska is heart touching. 

It is a bit hard to digest to watch Hansika as a schoolgirl. But stills she deserves some appreciation for her no nonsense screen presence combined with an ounce of acting too. Hari offers nothing to Anuska to show off her acting skills except a glamour song or two. On the comedy part, Vivek is totally sidelined by Santhanam this time. As usual Santhanam steals Goundamani's comedy dialogues and serves them in his own(!) style. Few of Santhanam's ROFL lines: Ivanoda budhdhi koormaikku bodhi dharmare bouequet thandhaalum aacharyam illa. (It won't be a surprise if bodhi dharma offer him a bouquet for his smart act(Surya). enna nallaa paathu kittaa unga veetla gajalakshmiye vandhu gangjam dance aaduvaa (If you(Surya's family members) treat me well, lord gajalakshmi will perform gangnam style here).  
                                                                   

Scope for senior artists like Radha Ravi, Manorama and Thalaivaasal Vijay are very minimal. Out of the four villains Rahman stands tall. He simply fits into the tailor made role. But Rajendran(Naan Kadavul fame), Mukesh Rishi and the freshly imported 'African-Ayyanaar' Danny's performances are just average. Surya makes all of his inter-country flight trips only through 'spice jet'. Still guessing which TV will hold the satellite rights for this? Come on my Sun Son.

The another DSP(Devi Sri Prasad) of the film fails to impress the audience with his mediocre BGM and below par tunes in song sequences. He firmly stands between express speed screenplay as a giant speed-breaker. From the first (Anjali item) song to the last one, DSP guarantees 100% cheers to the canteen owners. I hardly remember even a single line after making an exit from the lion's cage. The fire-cracking stunt scenes and camera work deserve a special mention. 

It's indeed a old wine in a new bottle. But it will surely fulfil the mass movie fans' appetite. If it was Dabangg that brought back the mass audience to the theatres when the hindi people start recognising class films like Dev D, Kaminey, Ishqiya etc..Then it is going to be the same story  for Singam-II too. Bring on 'Pizza' kinda flix and more from kodambakkam. You are most welcome. But the dinner always ends with our own veechu parotta like Singam.

Just like paruthi veeran that opened the flood-gates for madurai based blood(y) films, The success of Singam - II will make way for tsunami of sequels from the megastars. Thuppakki -2, Baashaa - 2 and even Alex pandian -2... all the possibilities are out there. Fasten your seat belts to face the sequences of the sequels!!

Verdict:
Singam II - Spice Jet
...................................................


       
Related Posts Plugin for WordPress, Blogger...