தென்னிந்தியாவில் இருந்து வரும் தொழில்நுட்ப கலைஞர்கள், நாயகிகள் மற்றும் இயக்குனர்களை அங்கீகரிக்கும் பாலிவுட் உலகம் நாயகர்களை மட்டும் வளரவிடாமல் ஸ்விட்ச் ஆப் செய்துவிடும். கூடவே மீடியாவும் துணை போகும். அதையும் மீறி ஹிந்தியில் ஒரு நல்ல டீமுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தாலும் தெற்கத்தி ஹீரோக்களின் படங்கள் ஊத்தி மூடிக்கொள்வது தொடர்கதை. சூர்யா, மாதவன், சித்தார்த் போன்றவர்கள் மும்பையில் சோலோவாக போலோ சாப்பிடப்போய் பளிப்பு வாங்கியாகிவிட்டது. இப்போது தனுஷுன் இன்னிங்ஸ்!
கதையாகப்பட்டது யாதெனில் தமிழகத்தை சேர்ந்த பண்டித குடும்பம் பெனாரஸ் கோவிலில் வாழ்ந்து வருகிறது. அவர்களின் மகனாக தனுஷ். பெரும் செல்வம் படைத்த முஸ்லிம் குடும்பத்தின் மகளாக சோனம் கபூர். பொடிப்பய பருவத்தில் இருந்தே சோனம் மீது நம்மாளுக்கு லவ்ஸ் பூக்கிறது. டீன் ஏஜ் பருவத்தில் படிப்பிற்காக வெளியூர் செல்கிறார் நாயகி. ரிட்டர்ன் வருபவளிடம் 'இன்னும் எத்தனை வருஷம் காத்திருப்பது' என்று தலைவர் கேட்க அதற்கும் சோனம் தரும் பதில் 'பாப்ரே. அது வெறும் இனக்கவர்ச்சி. சீரியஸா எடுத்துக்காத. நான் ஒருத்தன லவ் பண்றேன். நீதான் சேத்து வக்கணும்'. போதுமா?
30/40/50 வருடங்களுக்கு முந்தைய கதையை 300 அடி ஆழ பாழுங்கிணற்றில் இருந்து தூர்வாரி எடுத்து இருக்கிறார் இயக்குனர்.
சென்னை மைந்தனான தனுஷால் ஆடுகளத்தில் மதுரை வட்டார தமிழை கையாள வாயாள முடியுமா என்று புருவத்தை உயர்த்தியாவரே சென்றபோது ஆளு அதகளம் செய்திருந்தார்(இந்த நேரத்துலயா ஒஸ்தி சிம்பு பேசுன திருநெல்வேலி தமிழ் காதுக்குள்ள ரிங்குனு சுத்தணும்). சில பிசிறு தட்டல்கள் இருந்தாலும் அபவ் ஆவரேஜ் ஹிந்தி வசன உச்சரிப்பில் ஹமாரே ஹீரோ ராக்ஸ். பள்ளி மாணவனாக இன்னும் எத்தனை ஆண்டுகள் நடித்தாலும் தம்பி கலக்குவாப்ல. யஹா பீ அச்சி தரா ஆக்ட் கர்லியா சாலே. செல்வராகவன் படத்தில் வருவது போல இங்கும் தனுஷின் காதலுக்கு எதிரியாக ஒரு மைதா மாவு செகண்ட் ஹீரோ(அப்பே தியோல்). சிலிண்டரை எடுத்து வைக்க அப்பே உதவிய பின்பு வெறுப்பில் அதை இறக்கி மறுபடி ஏற்றும்போதும், 'you forget me' என கடுகடுக்கும் சோனாவிடம் அதை ரிப்பீட் செய்து கொஞ்சலுடன் சொல்லும்போதும் அப்ளாசை அள்ளுகிறார் தனுஷ்.
அமேசிங் ப்யூட்டியாக முதல் பாதியில் சோனம் நெஞ்சை அள்ளினாலும், பாப்கார்ன் கவ்விய பிறகு வரும் சீன்களில் கல்லூரி மாணவர் தலைவியாக அரசியல் அவதாரம் எடுத்து பொங்கும்போது....போர் அடிக்குது போங்கள். பாஸ்கின் ராப்பின்ஸ் ஐஸ் க்ரீமகாவே இருந்தாலும் மதியச்சோறு அளவிற்கு அள்ளியா தின்ன முடியும்?
பை பெர்த்திலேயே அழகாய் இருக்கும் பெனாரசை இன்னும் கலர்புல்லாக காட்டி இருக்கிறார் நம்ம கேமராமேன் நட்டு. ரஹ்மானின் இசையில் அனைத்தும் மான்டேஜ் கானாக்கள். தும் தக், ராஞ்சனா பாடல்கள் காதல் ரங்கோலி.
இரண்டாம் பாதியில் மாணவர் அரசியல் எனும் பெயரில் படம் பார்க்கும் அனைவரின் கைகளையும் இழுத்து வைத்து ப்ளேடு 'போட்டு தள்ளுகிறார்கள்'. மனதில் இயக்குனர் ஆனந்தின் பெயரை உரக்க ஜெபித்தவாறு 'ஹமே யஹா சே சோட் தே பையா. கண்பதி பப்பா துஜே 100 சால் ஆசிர்வாத் கரேங்கே. மேரி மா கீ கசம்' என்று கதறி அழ வேண்டியதாகிவிட்டது. அம்பிகாபதி பார்க்கப்போகிறவர்கள் அலெர்ட் ஆகிக்கொள்க. ஜெய் போலேநாத்.
...........................................
7 comments:
இடைவேளையை புதுமையான வார்த்தையைக் கொண்டு சொன்ன விதம் ரசித்தேன் மெட்ராஸ்
அம்பிகாபதி அடுத்த வாரம் தானே ரிலீஸ்..
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்... படம் பார்க்கலாமா வேண்டாமா?
அடப் போ'கங்;ப்பா . ..!
ஜெய் போலேநாத்...!
பகுத் அச்சா ஹி ஹி
M:))))))
கணபதி பாப்பா நூறு வருஷம் இவிங்களுக்கு கொடுத்தா, நம்ம கதி..?
மும்பையில் இருக்கும் திரை டெக்னீசியன் நண்பர்கள் சிலர் எனது நண்பர்கள் கூட....அவர்களும் நீர் சொன்ன அதே கதையைத்தான் அப்போதே சொல்லக் கேட்டு இருக்கேன், ரஜினியைத் தவிர [[சின்ன சின்ன ரோல்களில் கலக்கி சாவடிப்பது]] கமல் கூட நிலை நிற்க கூடாமல் போனது.
காயல் என்னும் ஒரு ஹிந்திப்படம், சன்னி தியோல் நடித்த படம், செம ஹிட்டானது, அந்தப் படத்தில் நடிக்க கேட்டதுக்கு கமல் மறுத்து விட்டதாக செய்தி உண்டு, அப்படி அந்தப்படத்தில் நடித்து இருந்தால் பாலிவுட்டில் கமல் இன்னொரு ரவுண்டு வந்திருப்பாரோ என்னமோ...?
ரஜினி கிரேஸ் இங்கே இன்னும் குறைய வில்லை என்பது மட்டும் உண்மை...!!![[மராட்டி ராக்ஸ்]]
விமர்சித்த பாங்கு அருமை!நாங்க தான்(ஹீரோ/ஹீரோயின்)பஞ்சப் பராரிகள் ஆச்சே?///என்ன ஆச்சு உங்களுக்கு,நிறைய எழுத்துப் /வசனப் பிழைகள்?)
Post a Comment