CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, June 8, 2013

கிராமத்து இளைஞன் என்ன கிள்ளுக்கீரையா?'பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பாத்தா மாதிரி', 'வந்துட்டான் பார் மஞ்ச பைய தூக்கிட்டு' என கிராமத்தில் இருந்து வருவோரை எள்ளல் செய்த காலம் சில ஆண்டுகளுக்கு முன்பே மலையேறி விட்டது. உடல் ஊனமுற்றோரை குருடன், நொண்டி என்று கிண்டல் அடித்து வந்த பொது பேச்சுவழக்கு ஓரளவு படித்தவர்கள் மத்தியில் மாற்றுத்திறனாளி என்று மாறிவருகிறது. சர்தார்ஜி, சவரம் செய்பவர் என ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்தோரை ஊடகம் மற்றும் பத்திரிகைகளில் நையாண்டி செய்வது முகச்சுளிப்பை ஏற்படுத்தியதால் ஒரு சிலரைத்தவிர வேறு எவரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை. 

பொதுவாழ்வில் ஈடுபடும் நபரை அவரது செய்கைகளின் அடிப்படையில் கொச்சையாக அர்ச்சனை செய்யாமல் கிண்டலடிப்பது வேறு. ஆனால் பொத்தம் பொதுவாக இவர்கள் இப்படித்தான் என்று ஏளனம் செய்வது எத்தனை பேருக்கு ஏற்புடையதாக இருக்கும்? கண்ட இடங்களில் ப்ளெக்ஸ் வைப்பவர்கள், 'சில்லறை இல்லாவிட்டால் இறங்கு என்று' பேசும் நடத்துனர்கள் ஆகியோரை ரவுசு கட்டுவது என்பது சரி. அதற்கு  நமது அன்றாட அனுபவங்களே சாட்சி. ஆனால் போகிற போக்கில் இஷ்டத்திற்கு எள்ளலுடன் எழுதினால்?  அப்படி ஒரு கட்டுரையை (சென்னை உன்ன வரவேற்கிறது) இவ்வார ஆனந்த விகடனில் படிக்க நேர்ந்தபோது நெருடலாய்த்தான் இருந்தது. 

கிராமத்தில் இருந்து சென்னைக்கு வரும் தமிழக இளைஞன் இப்படித்தான் இருப்பான் என்று சரண் எழுதி இருப்பது எதன் அடிப்படையில் என்று தெரியவில்லை. அதுவும் நான்கைந்து தரமல்ல. பல்வேறு முறை தொடர்ச்சியாக நீள்கிறது இதுபோல...

சென்னைக்கு முதன்முறை வரும் இளைஞன்...... 

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமானம் நிற்கிறதா என்று எட்டிப்பார்ப்ப்பான்.

- (எனது அனுபவத்தில்) சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர்கள்  ஆனாலும் பேருந்துகளில் விமான நிலையத்தை எட்டிப்பார்ப்பது இயல்புதான். 

இறுக்க, கிறக்க டீன் ஏஜ் டிக்கட்டுகளை வாய் பிளந்து பார்ப்பான்.

-அட கொடுமையே. பருவப்பெண்களை சைட் அடிக்க மட்டுமே வாரந்தோறும் மால்களில் திரிவது சிட்டி இளைஞர் க்ரூப்பின் பொழுது போக்கு. எமது கிராமத்து இளைஞனை மட்டும் குறிவைத்து தாக்குவது எதனால்?

வள்ளுவர் கோட்டத்தில் வள்ளுவரை பார்க்க போய் பல்ப் வாங்குவான்.

- அட!!  விட்டால் 'சென்னை காய்கறி கடையில் 'பெங்களூரு தக்காளி இங்க விக்கறீங்க? அப்ப இது சென்னை இல்லையா?' என்று கூட கிராமத்து இளைஞன் கேட்பான் என்று எழுதாமல் போனீர்களே. 

வேப்பேரிக்கும் வேளச்சேரிக்கும் வித்யாசம் தெரியாது, சாலிக்கிராமத்தில் கிராமம் எங்கே என தேடுவான் என பட்டியல் நீள்கிறது.

பிரதான சென்னை நகரில் பிறந்து வளர்ந்தவன் என்கிற முறையில் இக்கட்டுரை பெரும்பாலும் அபத்தங்களை சுமந்து வருகிறது என்று அடித்து சொல்லுவேன். 

பொதுவாக என் போன்ற மாநகர இளைஞர்களுக்கு வேலை தேடுதலில் லேசான சோம்பேறித்தனம் இருப்பதுண்டு. உதாரணம்:  'விடு. ஊர்ல கம்பனிங்களுக்கா பஞ்சம். அடுத்த இன்டர்வியூல பாத்துக்கலாம்'. அதுபோல இலட்சியங்களின் உயரம் கிராமத்து இளைஞர்களை விட சிட்டி யூத்களிடம் சற்று குறைவாகவே இருக்கும்.

'ஊரைவிட்டு மேன்சனில் குடியேறிவிட்டோம். இம்மாநகரில் கிடைக்கும்  வேலை வாய்ப்புதான் முதல் தலைமுறை பட்டதாரியாகி இருக்கும் எனது குடும்பத்தின் வறுமைப்பேயை அடித்து விரட்டும்' எனும் அதீத பொறுப்புணர்ச்சி மற்றும் குறிக்கோள் கொழுந்து விட்டெரியும். 'முதல் சில நாட்கள் குடும்பத்தாரை எண்ணி கண்ணீர் விட்டு அழுதேன். ஆனால் அதன் பின் யதார்த்தம் உணர்ந்து வாழ பழகிக்கொண்டேன்' என திருவல்லிக்கேணி மேன்சனில் குடியேறிய எனது நண்பனின் குமுறல் இன்னும் மனதை விட்டு அகலவில்லை. 

இரண்டு மூன்று ஆண்டுகள் மந்தமாக வேலை கற்கும் நகரத்து இளைஞனை விட வெகுவேகமாக முன்னேறுவதில் கிராமத்து இளைஞன் கில்லி. என்ன பாழாய்ப்போன ஆங்கிலம் மட்டும் அவனை உயர்பொறுப்பை நோக்கிச்செல்ல விடாமல் பின்னிழுக்கும். மீண்டும் உத்வேகத்துடன் தட்டுத்தடுமாறி ஆங்கிலத்தை சரளமாக கற்றுக்கொண்டு விடுவான். இப்படி எனது அலுவலக அனுபவத்தில் பார்த்து வியந்த தோழர்கள் உண்டு.

பொதுவாக நகரத்து இளைஞன்(நான் உட்பட) விடுமுறை தினங்களில் சினிமா, அரட்டை என கேளிக்கைகளில் ஈடுபடும் நாட்களில் 'அடுத்த கோர்ஸ் என்ன பண்ணலாம்? இம்முறை சம்பள உயர்வு கிடைக்காவிட்டால் அடுத்த திட்டமென்ன? 'வெளிநாட்ல நம்ம சொந்தக்காரர் இருக்காராமே..அவர்கிட்ட பேசி வேலைக்கு ஏற்பாடு செய்யனுண்டா'....இதுதான் படித்த கிராமத்து இளைஞன் மனத்திரையில் அவ்வப்போது ஓடிக்கொண்டிருக்கும்.

அதற்கு ஓர் உதாரணம் எனது அலுவலக நண்பன் வினோத். திருச்சி அருகே உள்ள கிராமத்தில் இருந்து சென்னைக்கு மூன்றாண்டுகளுக்கு முன்பு வந்த இளைஞன். நகர வாழ்வு, பன்னாட்டு நிறுவன கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்தும் அப்போது அவனுக்கு புதிது. ஆனால் வேலைக்கு சேர்ந்த ஒரு சில மாதங்களிலேயே தனது அபார திறமையால் முன்னுக்கு வந்தவன். 
                                                               

இம்மூன்று ஆண்டுகளில் அயல்நாட்டு க்ளயன்ட் மற்றும் வேலை செய்யும் நிறுவனத்தின் vice president போன்ற மிகப்பெரிய பொறுப்பில் இருப்போரின் பாராட்டுகளை தொடர்ந்து அள்ளி வருகிறான். 'ச்சே..பத்தாது. இன்னும் நிறைய உழைக்க வேண்டி இருக்கு' என என் போன்ற (நகர) அலுவலக நண்பர்களுக்கு உத்வேகத்தை அளித்து வருகிறது இவ்விளைஞனின் மெச்சத்தக்க வளர்ச்சி. 

25 வயது கூட பூர்த்தி ஆகாவிடினும் பங்குச்சந்தையின் அன்றாட நிலவரங்கள் இவனுக்கு அத்துப்படி. ஆங்கிலம் மட்டும் சரளமாக வந்துவிட்டால் மிகப்பெரிய உயரத்தை ஒரு சில வருடங்களில் எட்டிவிடுவான். அதற்கான முயற்சியிலும் தற்போது இறங்கியாகி விட்டது. வழிகாட்ட படித்த உறவினர்கள், நகரத்து இளைஞர்கள் பெருமளவில் இல்லை எனினும் எதிர்நீச்சல் போட்டு வெற்றிக்கோட்டை நோக்கி வேகமான பயணம் அனுதினமும் தொடர்கிறது. quality rating/பணியை நேர்த்தியாக செய்வதில் மூன்றாண்டுகள்  100% துல்லியமாக செயல்பட்டு பட்டையை கிளப்பி வருகிறான். 

இதுபோக இந்தியாவின் இதர நகரங்கள் மற்றும் அயல்நாட்டு நிறுவனங்கள் 'எம்மிடம் வேலைக்கு சேர வாருங்கள்' என நண்பனுக்கு மின்னஞ்சல்களை அனுப்பிய வண்ணம் உள்ளன. இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் தான். நண்பன் போல மாநகரின் ஒவ்வொரு அலுவலம், கடைகள், ஊடகங்கள் என பல்வேறு துறைகளிலும் தடம் பதித்து வரும் எமது கிராமத்து சகோதரர்களை அவ்வளவு லேசில் கிள்ளுக்கீரையாக கேலி செய்வது உறுத்தலாக இருக்கவே செய்கிறது.

பல்லாண்டு கால விகடன் வாசகனாக மனதில் பட்டதை கூறினேன். முன்னணி இதழான விகடன் இதை கருத்தில் கொண்டால் நன்று.
.......................................................................... 
12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விகடன் கண்ணுக்கு அவ்வளவு தான் தெரிந்து உள்ளது போல... 25 வயதில் இந்த முன்னேற்றம் என்றால், அவரிடம் இருக்கும் ஆர்வம், நீங்கள் சொல்வது போல்... மிகப்பெரிய உயரத்தை அடையட்டும்... வாழ்த்துக்கள்...

கிள்ளுக்கீரையாக நினைப்பதும் சிலருக்கு முன்னேற்றமே... எனது அனுபவத்தில்... நன்றி...

சீனு said...

ஹா ஹா ஹா படிக்க ஆரம்பிக்கும் போது விகடன் மேல கோவம் வந்தது... எவ்வளவோ தாங்கியாச்சு.. இத தாங்க முடியாதா.. இது மறைமுகமாக தாழ்வு மனப்பான்மையை அல்லது பிரிவு உணர்ச்சியை வளர்க்கும் முறை...

பல முறை படித்து புளித்துப் போய்விட்டது..

உங்க கோபத்திற்கு ஒரு சபாஷ் மெட்ராஸ்

Seeni said...

nalla pakirvu !
sako...

Unknown said...

இன்று சென்னையில் வெற்றிகரமாக இயங்கும் சரவண பவன் உரிமையாளர் உட்பட பல்வேறு தொழில் அதிபர்களும், சென்னையில் பதவியில் இருக்கும் பெரும்பாலான அரசியல்வாதிகளும், நீங்கள் சொல்லும் இளைஞரைப் போல் முன்னணி நிறுவனங்களில் பெரிய பதவியில் இருப்பவர்களும் , பெரும்பாலான திரையுலக படைப்பாளிகளும் - பாரதிராஜா, இளையராஜா முதல் இன்றைய அறிமுக இயக்குனர் வரை - கிராமத்தில் இருந்து வந்தவர்களே.

Unknown said...

உம் அறச்சீற்றம் எம்மை வியக்க வைக்கின்றது.பட்டிக்காட்டான் (ஜெய் அல்ல) முட்டாய் கடைய பாத்தா வியந்துதான் பாப்பான்...ஆனால் கொஞ்ச நாள்ல முட்டாய் கடை அதிபர் ஆயிருவான்...!

saidaiazeez.blogspot.in said...

தன்ஜாவூர் மாவட்ட திர்துர்பூண்டிலேர்ந்து மெட்ராஸுக்கு பொய்க்க வந்தவர்தாம்பா நம்ம வாசன் அய்யா!
விகடன் ரொம்ப விசயத்த மர்ந்துட்துபா!
ஒவ்வோர் தபாவும் தான் ஒரு அப்பாடக்கர்னு நெனச்சே, பல்பு வாங்கிகீது.

”தளிர் சுரேஷ்” said...

கிராமத்து இளைஞர்கள்தான் படிப்பிலும் வேலை வாய்ப்புகளிலும் சாதித்து வருகிறார்கள்! என்ன ஒன்று ஆங்கிலம் மட்டும் நீங்கள் சொல்வது போல சரளமாக உரையாட வராது!இது விகடன் கண்ணுக்கு தெரியாதது ஆச்சர்யம்தான்!

Unknown said...

நல்ல சாட்டையடிப் பகிர்வு/பதிவு!கிராமத்தான் என்றால் சிலருக்கு/பத்திரிகைகளுக்கு எப்பவுமே இளக்காரம் தான்!////ஆரம்பத்தில்,'"வந்துட்டான் பார் மஞ்சப் பையத் தூக்கிக்கிட்டு'"அப்புடீன்ன உடனே திடுக்கிட்டுட்டேன்,ஹ!ஹ!!ஹா!!!!

MANO நாஞ்சில் மனோ said...

விகடன் சில சமயம் இப்படிதான் நடந்து கொள்கிறது...!

Philosophy Prabhakaran said...

அது டைம்பாஸில் வெளிவர வேண்டிய கட்டுரை... தவறிப்போய் ஆவியில் வந்திருக்கிறது...

Ganapathi DCW said...

vigatanukku iniyavathu puthi varattum
M.Ganapathi
Thoothukudi

நண்பா said...

Excellent Response...!!!
Awesome Example..

Related Posts Plugin for WordPress, Blogger...