CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, June 28, 2013

தலை இருக்கறவன் எல்லாமே தலைவன்தான்டோவ்!!


                                                                   

ஊர் மிராசு கவுண்டர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது மகளிடம் காதல் தூது விடுகிறார் செந்தில். சட்டென உள்ளே நுழையும் கவுண்டரை கண்டதும் பதறி வெளியேற முயற்சிக்கிறார் செந்தில்.

கவுண்டர்(தல): எவன்டா அது பம்முறது?

செந்தில்: வாங்கண்ணா வணக்கங்கண்ணா.மை சாங்க நீங்க கேளுங்கண்ணா. நான் ஒளரல ஒளரலண்ணா.  ஹீ..ஹீ...நாந்தாண்ணே வெளுத்தபாண்டி.

தல: ஓ...சின்ன சலவையா? வழக்கமாக உங்கப்பன் மொண்ண மூக்கந்தான துணி கொண்டு வருவான்...

செந்தில்: ஊர் ஆத்துல துணி தொவச்சி அவருக்கு அலுத்து போச்சாம். அதான் கொஞ்ச நாளைக்கி ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கார்.

தல: ஆமா..இல்லனா மட்டும் அரபிக்கடல்ல துணி தொவச்சிடுவாறு. அது சரி ஆள் இல்லாத வீட்ல பூந்து என் பொண்ணு கிட்ட எதுக்கு கிளுகிளுப்பு காட்டற?

செந்தில்: எங்க அப்பாரு காலம் ஆத்தோடயே  போச்சி. ஆனா இந்த வெளுத்தபாண்டி  அரபிக்கடல்ல தான் இனிமே துணி தொவைக்க போறான். பை தி பை தலைவா..உங்க பொண்ணுக்கு என் மொபைல்ல 'தலைவா' ட்ரெயிலர் காமிச்சேன் தலைவா. 

தல:தலை இருக்கறவன் எல்லாமே தலைவந்தான்டா ராஸ்கோல். குண்டுவெடிப்பு, தாக்கரே பேமிலி ரவுசு எல்லாம் இல்லாம கொஞ்ச நாள் பாம்பே நிம்மதியா இருக்கறது ஒனக்கு புடிக்கல? உங்கப்பன் ஆத்த நாறடிச்சான். நீ கடல நாறடிக்க போறியா? 

செந்தில்: பாம்பே ஜனங்கள காப்பாத்தி நானும் ஹீரோவா மாறப்போறேன் தலைவா.

தல: ஹீரோவா மாறு. ஹீரோவா நாறிடாத. எங்க அந்த ட்ரெயிலரை ஓட்டு பாப்போம்.

2 நிமிட காட்சிகளை பார்த்ததற்கே கிறுகிறுத்து போகிறார்.

தல: ஏன்டா உலர்சலவ.... கமலு, ரசினில இருந்து எல்லா ஈரோங்களும் பாம்பேவை காப்பாத்தவே ஓடறாங்களே. நம்ம பாப்பநாயக்கன்பட்டி, கல்கத்தாவை எல்லாம் எப்படா காப்பாத்தறது? என்னதான் சொல்லு கேப்டன் லெவலுக்கு காஷ்மீர எல்லாம் காப்பாத்த இந்த பானி பூரி தலையன்களுக்கு  தம் பத்தாது. ஆமா இந்த உலக சினிமாவோட டைரக்டர் யாருடா?        
                                                               
 
செந்தில்:  விஜய்ண்ணே...

தல: தம்பி இப்ப டைரடக்சன் எல்லாம் பண்ணுதா? 'இந்த படத்தை இயக்கியது உங்கள் விஜய்'ன்னு வேற அடிக்கடி போட்டு காட்டுவாங்களே  யப்பா...

செந்தில்: யூ ஆர் மிஸ்டோக்கன் தலைவா. இவரு வெறும் டைரக்டர் விஜய். 

தல: டேய் டண்டணக்கா. மனசுல டி.ஆர். பாலுன்னு நெனப்பா?  அதுக்கு பேரு மிஸ்டேக்கன்ரா. டைரக்டர் விஜய்....ஓஹோ....அவுரா. டைட்டானிக், ஐ ஆம் சாம் படங்களுக்கே ரீமேக் ரைட்ஸ் தந்த வள்ளலாச்சே. இப்ப நாயகன், பாட்ஷா மாவை புதுசா பெனஞ்சி தோசை சுடுராப்லயா. சுத்தமடா. ஆடுனவன் காலும், பாடுனவன் வாயும் சும்மா இருக்காதாம். என்னதான் காவலன், துப்பாக்கின்னு நடிச்சாலும் சனங்கள சேவ் பண்றாப்ல சேவ பண்ணாத்தான அடுத்த மொத மந்திரி ஆக முடியும். 

செந்தில்: ப்ளட் ப்ரதர். உங்களுக்கும் சேத்து பாம்பே ப்ளைட்ல டிக்கட் போடவா?

தல: வேணான்டா சாமி. ஒன்ன மாதிரி ஓட்ட காலணா எல்லாம் இங்க இருந்து போனாலே ஊருக்கே பொங்க வச்சி கொண்டாடுவேன். ராசா...ஒனக்கும், தளபதிக்கும் சும்மிங் தெரியுமா? இல்லனா டோன்ட் வொர்ரி. அங்க நம்ம சன் தாத்தா மாதிரி கட்டுமரமா மெதக்குற தலைவன் எவனா இருப்பான். அதுல  புட்போர்ட் அடிச்சாவது அப்படியே கராச்சி பக்கம் போயிடுங்க.    

செந்தில்: டேங்க் யூ தலைவா. ஐ கோ பாம்பே. கமிங் வில்லேஜ் நெக்ஸ்ட் தீபாவளி.

தல: கம் னா கம். கம்முனாட்டி கோ.     
......................................................................     
              

சமீபத்தில் எழுதியது:


       

5 comments:

அனைவருக்கும் அன்பு  said...

இவர்களின் நகை தனிச் சுவைதான் படிக்கும் போதே அவர்களின் நடிப்பு கண்முன் வந்து ..பதிவிற்கு வாழ்த்துக்கள்

”தளிர் சுரேஷ்” said...

விஜயை நக்கலடித்த கவுண்டரின் டயலாக்குகள் சூப்பர்! நன்றி!

Unknown said...

அங்க நம்ம சன் தாத்தா மாதிரி.......................சூப்பர் தலீவா!!!!!!

ரூபக் ராம் said...

ஹா ஹா ....

வெங்கட் நாகராஜ் said...

நல்ல நகைச்சுவை.... ரசித்தேன்.

கவுண்டமணி-செந்தில் மீண்டும் இந்த கலக்கல் ஜோடியை இங்கே பார்க்கமுடிந்ததில் மகிழ்ச்சி.

Related Posts Plugin for WordPress, Blogger...