CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, June 11, 2013

ஸ்பெஷல் மீல்ஸ்(10/06/13)'தாய்'ப்பாசம்: 
                                                                           
   ரெமோ பாலகணேஷ், கேபிள் சங்கர், நான், ஆரூர் முனா  

ஆழ்வார்பேட்டையில் சாவதிகா எனும் தாய்லாந்து உணவகத்தில் சாப்பிட ஞாயிறு மதியம் ஆரூர் முனா செந்திலிடம் இருந்து ஒரு அழைப்பு. சாப்பாட்டுக்கடை ஓனர் கேபிள் சங்கர் மற்றும் 'ரெமோ' பாலகணேஷ்  ஆகியோரும் சம்மதிக்க ஸ்பாட்டை அடைந்தோம். வகை  வகையாக உணவுகளை தேடிப்பிடித்து சாப்பிடுவதில் இன்னும் அப்ரண்டிஸ் ஆகவே இருப்பவன் என்பதால் தாய் உணவுகள் எப்படியோ என்று லேசான கிலியுடனே நான் இருக்க என்னை விட அதிகம் பதறியது கேபிளார்தான். 

'இந்த ரெஸ்டாரன்ட் பத்தி சரியா விசாரிச்சீங்களா?' என்று அவ்வப்போது கேட்டுக்கொண்டே வந்தார். 'பேஸ்புக் சாப்பாட்டுக்கடையில் நண்பர் ஒருவர் சாவதிகா பற்றி எழுதி இருந்ததை பார்த்துதான் இதை தேர்வு செய்தேன். வாங்கண்ணே ' என்று கேபிளை இழுத்துக்கொண்டு உள்ளே சென்றார் ஆரூர். வெற்றிலைப்பாக்கு சகிதம் மினி பசியூட்டிகள், காளான் சூப், பெப்சி, பலாச்சுளைகள்  மிதக்கும் டெஸர்ட், ஜென்மத்தில் இதுவரை சாப்பிடாத ஆசம் நூடுல்ஸ் என தரத்தில் அசத்தி இருந்தனர். என்ன அளவுதான் கம்மியா போச்சி.
அசைவ உணவு தலைக்கு ரூ.249.

பிரபல தாய் உணவகமான 'பெஞ்சாரோங்'கில் வேலை பார்த்து வந்த இரு தமிழக இளைஞர்கள்  அங்கிருந்து விலகி சாவதிகாவை துவக்கி உள்ளனர். சாவதிகா உணவுகள் குறித்த விரிவான அலசல் விரைவில் கேபிள் பதிவில் வெளியாகும். லெட்ஸ் வைட்.       
..........................................................................

என் சுவாசக்காற்றே: 
'இனி தமிழ்ப்படங்களில் அவ்வப்போது இசைய மைப்பேன்' என்று ரஹ்மான் கூறி இருப்பது என் போன்ற ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். மரியான், காவியத்தலைவன், கோச்சடையான், ராஞ்சனா, ஐ, துருவ நட்சத்திரம் என  நீள்கிறது அவர் இசையமைக்கும் படங்களின் பட்டியல். ராக் ஆன் ரஹ்மான்!!

ஹிந்தியில் தனுஷ் நாயகனாக நடிக்கும் 'ராஞ்சனா' வில் ரஹ்மானின் பட்டையை கிளப்பும் பாடலைக்கேட்க க்ளிக் செய்க: ராஞ்சனா   
........................................................................  


சேட்டை:
                                                           

நகர்ப்புறங்களில் பகலில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடம் பார்த்து சொட்டு நீர்ப்பாசனம் செய்வது பெரும்பாலும் மத்திய வயது ஆண்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இத்தகு சேட்டையை கட்டுப்படுத்த சுவர்களில் கடவுள் படங்களை வரைந்து வைத்தாலும் அங்கிள்கள் அசருவதாக இல்லை. தி.நகர் உஸ்மான் சாலை அருகே உள்ள சந்தினுள் ஜிம்பலக்கடி அங்கிள் ஒருவர் பகல் பொழுதில் பரபரப்பாக இருக்கும் ஏரியா என்று கூட பாராமல் பம்ப் செட்டை திறக்கும் காட்சி. 
.................................................................... 

பிடிச்சிருக்கு:
பதிவுலகில் சிறந்த நகைச்சுவை படைப்புகளை தருபவர் ஒரு சிலரே. அதில் சேட்டைக்காரன் எப்போதுமே சூப்பர் ஸ்டார் என்பது பலருக்கு தெரியும். அவர் எழுதியதில் என்னை கவர்ந்த ஹ்யூமர் தெறிக்கும் பதிவுகளில் ஒன்று:

.....................................................................

அன்னை இல்லம்: 
                                                                
                                                    
சில நாட்களுக்கு முன்பு ஜெயா ப்ளஸ் சேனலில் நகரமயமாக்கல் குறித்த தலைப்பில் பேச சுரேகா அவர்களிடமிருந்து ஒரு அழைப்பு. வழக்கம்போல எதிர்க்கருத்து பேச ஒருவரும், தொகுப்பாளரும் உடன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்று ஸ்டுடியோ உள்ளே நுழைந்தால் தனியாக ஒரு இருக்கையில் அமரச்சொல்லி 'இப்ப பேசு மாப்ள' என்று கேமராவை ஆன் செய்து விட்டனர். சிற்றறிவுக்கு எட்டிய சில செய்திகளை வாசித்துவிட்டு கிளம்பினேன். மத்திய அரசின் 'கற்கும் பாரதம்' திட்டத்தை தமிழகம் எப்படி சிறப்பாக செயல்படுத்துகிறது உள்ளிட்ட சில செய்திகளை விரிவாக பகிர்ந்து கொண்டனர் அங்கிருந்த நிர்வாகிகள். அனுபவம் புதுமை. 
...............................................................

பொங்கலோ பொங்கல்: 
அம்மா மெஸ் ஆரம்பித்தபோது விசிட் அடித்து எழுதிய பதிவிற்கு பிறகு மீண்டும் ஒரு முறை அங்கே சாப்பிட சந்தர்ப்பம் கிடைத்தது. மதியம் லெமன் , கறிவேப்பிலை சாதங்கள் அறிமுகம் ஆகி இருப்பதால் வடபழனி அம்மா மெஸ்ஸில் அண்ணன் கே.ஆர்.பி.செந்திலுடன் என்ட்ரி. ஒரு சாம்பார் மற்றும் ஒரு லெமன் சாதம் ஆர்டர்.  அம்மா மெஸ் துவங்கியபோது இருந்ததை விட தற்போது சாப்பாட்டின் அளவு கம்மியாக இருந்தது.

வட சென்னை எம்.கே.பி.நகர் கிளையில் அரிசி குண்டாக இருப்பதால் அதிகம் உட்கொள்ள சிரமமாக இருப்பதாக  கூறினான். இங்கும் அவ்வாறே. லெமன் சாதத்தை சிரமப்பட்டே உட்கடத்த வேண்டி இருந்தது. சரியான விகிதத்தில் எலுமிச்சை சாற்றை சோற்றில் கலக்காததால் ருசி சுமார்தான்.  லெமன், கறிவேப்பிலை சாதங்கள் ஒரே நாளில் பரிமாறப்படுவதில்லை. 
                                                                   
                                                                    அம்மா மெஸ் லெமன் சாதம்

அதற்கு நேர்மறையாக சென்ற ஞாயிறு காலை நந்தனம் (சி.ஐ.டி .நகர்) அம்மா மெஸ்ஸில்  சாப்பிட்ட பொங்கல் ஆசம். சுடச்சுட திவ்யமான பொங்கலுடன் தொட்டுக்கொள்ள தரமான சாம்பார். இட்லி(ஒரு ரூபாய்) ஒவ்வொன்றிற்கும் தனி டோக்கன். பொங்கலுக்கு முன்பாகவே இட்லி போட்டு அடுக்கி விடுவதால் அதிகபட்சம் நான்கு இட்லிக்கு மேல் தொண்டைக்குள் ட்ராவல் செய்வது கடினம். சுற்றியும் சுகாதாரமான சூழல், கையுறை அணிந்து பரிமாறும் மகளிர், உணவு எப்படி இருந்தது என்பதை நாம் எழுத டோக்கன் தருமிடத்தில் ஒரு நோட்டு புத்தகம் என குறிப்பிடத்தக்க விஷயங்கள் இருப்பது சிறப்பு. சாப்பாடு ஓட்டாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
......................................................................

சில்லுனு ஒரு சந்திப்பு:
சென்ற ஆண்டைப்போலவே இம்முறையும் சென்னை பதிவர் சந்திப்பை சிறப்பாக நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கான ஆலோசனைகள் வரும் வாரங்களில் துவங்க இருக்கின்றது. இடம், தேதி மற்றும் விழா நிகழ்வுகள் குறித்த செய்திகள் விரைவில் பகிரப்படும். பல்வேறு ஊர்களை சேர்ந்த பதிவர்கள் அனைவரையும் வரவேற்க காத்திருக்கிறது தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்.
................................................................

விஸ்வரூபம்:
சென்னையில் ஆட்டோக்காரர்கள் வரையறையின்றி கட்டணம் வசூலிக்கும் போக்கை எதிர்த்து தீவிரமான செயல்பாடுகள் நடந்தேறி வருகின்றன. விரைவில் நியாயமான மீட்டர் தொகையை நிர்ணயிக்குமாறு சுப்ரீம் கோர்ட் தமிழக அரசிற்கு உத்தரவிட்டு உள்ளது. மறுபக்கம் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் இப்பகல் கொள்ளையை கண்டித்து கிட்டத்தட்ட ஒரு இயக்கமே நடத்தி வருகிறது. லெப்டுல இன்டிகேட்டர் போட்டு, ரைட்ல கை காமிச்சி, நேரா ஆட்டோ ஓட்டுற அண்ணாத்தைங்க என்ன ப்ளான் வச்சிருக்காங்களோ?
.....................................................

நினைவெல்லாம் நித்யா:
சர்வலோக நிவாரணி நித்தியை பிரமாதமாக ஓட்டிய இக்காணொளியை இப்போதுதான் பார்க்க முடிந்தது. செம காட்டு காட்டி இருக்காங்கப் போய்:  


..............................................................................

Images copyright: madrasbhavan.com

...................................................
சமீபத்தில் எழுதியது:

எம்.ஜி.ஆர். பேட்டிகள்  
...................................................


13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அப்ரண்டிஸ் என்பது படத்திலேயே தெரிந்து விடுகிறது...ஹிஹி...

திருவிழா விரைவில் (தி)சிறக்க வாழ்த்துக்கள்...

Surya Prakash said...

ஜெயா பிளஸில் நீங்க பேசினது யு டியுபில் இருக்கா அண்ணா

cheena (சீனா) said...

அன்பின் சிவா - படம் சாவதிகால சாப்பிட்ட பின்னாலெ எடுத்ததா ? மூணு பேருக்கும் நடுவுல ( ?? ) பாவம் போல நெருக்கப்படறது தான் சிவாவா ? சரி சரி - நல்வாழ்த்துகள் - ந்ட்புடன் சீனா

! சிவகுமார் ! said...

@ தனபாலன்

வாங்க சார்.

! சிவகுமார் ! said...

/Surya Prakash said...
ஜெயா பிளஸில் நீங்க பேசினது யு டியுபில் இருக்கா அண்ணா/

தெரியல சூர்யா. தேடிப்பாக்கனும்.

! சிவகுமார் ! said...


/ cheena (சீனா) said...
அன்பின் சிவா - படம் சாவதிகால சாப்பிட்ட பின்னாலெ எடுத்ததா ? மூணு பேருக்கும் நடுவுல ( ?? ) பாவம் போல நெருக்கப்படறது தான் சிவாவா ? சரி சரி - நல்வாழ்த்துகள் - ந்ட்புடன் சீனா/

ஆமாம் சீனா ஐயா. சரியாக சொன்னீர்கள். சாப்பிட்ட பிறகு எடுத்த படம்தான். நடுவில் சிக்கிக்கொண்டேன்.

Thozhirkalam Channel said...

அந்த சிவப்பு சட்ட பையன் பேசுனத கேக்கனுமே...!!
(உங்களுக்கு இங்கே ஃபேன்ஸ் எல்லாம் இருக்காங்க சிவா...)

தொழிற்களம் வாசியுங்கள்

! சிவகுமார் ! said...

@ தொழிற்களம் குழு

வீடியோ பதிவு கிடைக்கவில்லை. நல்லவேளை நீங்கள் தப்பித்தீர்கள்.

என்னுடைய உப்மா பதிவுகளை படித்துவிட்டு தர்ம அடி கொடுக்க காத்திருக்கும் fans அனைவருக்கும்...நன்றி நன்றி.

Unknown said...

ஜெயா டி வி ல மெட்ராஸ் பவனா கலக்குங்க தல (அதான் பதிஉல அம்மா புராணமா இருக்கா ஓகே ஓகே )அம்மா உணவகம் எதிர்பார்த்தது தான் இன்னும் மோசமான நிலைமைக்கு சென்றாலும் ஆச்சரியம் இல்லை

ஜோதிஜி said...

Google plus ல் பகிர்ந்துள்ளேன்.

ராஜி said...

ஸ்பெஷல் மீல்ஸ் சூப்பர்.., டிவி பொட்டில பேசுனதை முன்னமயே சொல்லியிருந்தா பார்த்திருக்கலாமே சிவா?!சில்லுன்னு ஒரு சந்திப்பை ரசிக்க காத்திருக்கோம்...

Unknown said...

மீல்ஸ் அருமை!அதிலும்,நித்தி ..............ஹி!ஹி!ஹி!!!தேங்க்ஸ்!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

போட்டோவுல மூணு பிரம்மாண்ட பிகர்களுக்கு (?) நடுவுல சிவா கொஞ்சமா தெரியறதே அதிகம்தான்.... இதுல ஓட்டலுக்கு வேறயா? ரொம்ப துணிச்சல்தாம்யா.....!

Related Posts Plugin for WordPress, Blogger...