'பட்டன தட்டி விட்டா ரெண்டு தட்டுல இட்டிலி நம்ம பக்கத்துல வந்திடனும்' என்றொரு பாடலில் கலைவாணருக்கு கோரிக்கை வைப்பார் டி.ஏ.மதுரம். அவர்களின் கனவு மெய்ப்பட்ட நாள் இம்மாதம் 13 ஆம் தேதி. ஆம். அன்றுதான் ராமாபுரம் DLF மென்பொருள் பூங்காவில்(முன்பு சிவாஜி தோட்டம்) அட்சயம் துவக்கப்பட்ட தினம். நண்பர் ஒருவருடன் எந்த உணவகத்தில் சாப்பிடலாம் என்று சுற்றி வந்தபொழுது கண்ணில் பட்டது இவ்விடம். கண்ணாடி கதவுகளுக்கு வெளியே நின்றவாறு LCD திரையில் ஓடிக்கொண்டு இருந்த மெனுவை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தபோது 'ப்ளீஸ் கம் இன் சார்' என்று ஒரு செக்க செவேல் பெண் பகுமானமாக மீண்டும் மீண்டும் அழைக்க..'டெபனட்லி'யைத்தவிர வேறென்ன சொல்ல முடியும்? என்ன சொல்றேள்?
உள்ளே சென்ற எம்மிடம் அட்சய புராணத்தை ஆரம்பித்தார் செக்க செவேல். இந்தியாவிலேயே முதன்முறையாக 'பட்டன தட்டு. சோத்த வெட்டு' சிஸ்டத்தை நாங்கள்தான் அறிமுகம் செய்துள்ளோம் என்றார்(நெச மாத்தானா??). இங்கும் மால்களில் இருப்பதுபோல பிரத்யேக இஸ்துக்கோ நைனா(Swipe it bro) கார்ட். அதை வாங்கிக்கொண்டு அருகில் இருக்கும் டச் ஸ்க்ரீன் கணினியில் நமக்கு தேவையான உணவை ஆர்டர் செய்ய வேண்டும். ஒவ்வொரு உணவிலும் எவ்வளவு கலோரி, புரோட்டின் வகையறாக்கள் உள்ளன என்பதை பார்த்துக்கொள்ளலாம். அட்சயம்/க்ரெடிட் கார்டை இஸ்து தேய்த்தால் புவ்வா ரெடி.
பார்ட்னர்கள் ரமேஷ், சதீஷ்
ரமேஷ், சதீஷ் ஆகியோரின் பார்ட்னர்ஷிப்பில் இயங்கும் இக்கடையில் மேலும் சில ஒஸ்தி வீட்டு தோழர்/தோழியர்கள் உடன் வேலை செய்கிறார்கள். மேலிருக்கும் படத்தின் பின்னணியில் தெரியும் சிகப்பு நிற கருவியில்தான் உணவுகள் அனைத்தும் தட்டுகளில் நிரப்பப்படுகின்றன. அட்சயம் எந்த ஒரு உணவையும் தயாரிப்பது கிடையாது. போரூர், கிண்டியை சுற்றி இருக்கும் பிரபல ரெஸ்டாரன்ட்களில்(ஆசிப் பிரதர்ஸ், காரைக்குடி, அமராவதி, சங்கீதா, பஞ்சாபி நேஷன் மற்றும் சில) ஆறு மணி நேரத்திற்கு முன்பாக ஆர்டர் செய்து இங்கு அடுக்கி விடுகிறார்கள்.
நாம் உணவை தேர்வு செய்தபின்பு ப்ரோக்ராம் செய்யப்பட சிஸ்டம் மூலம் அவ்வுணவை கேட்ச் செய்து இன்னொரு மிஷினுக்கு அனுப்ப அங்கு சூடேற்றல் நடைபெறுகிறது. சிறப்பாக பேக் செய்யப்பட தட்டு நம்மருகே அதிகபட்சம் 100 நொடிக்குள் வந்து நிற்க..பிறகென்ன ஸ்வாகாதான்.
அட்சயத்தின் நிறை என்றால் உணவின் தரம். எண்ணை, மசாலா உள்ளிட்ட அனைத்து 'கலக்கும்' வஸ்துக்களையும் அளவோடு கலந்து ருசியுடன் வாடிக்கையாளர்களுக்கு அளிப்பது நன்று. நான் ஆர்டர் செய்தது அசைவ மீல்ஸ் (விலை 150. வரி தனியே). சிக்கன் கிரேவி, சிக்கன் வறுவல், மிளகு தூவப்பட்ட காய்கறிகள் என அனைத்தும் வீட்டு ருசி. ஆனால் குறை சொல்ல நிறைய உண்டு.
100 நொடியில் சட்டென உணவு, ப்ரோட்டீன் - கலோரி போன்ற மேஜிக்குகளை செய்தாலே கணினித்துறை இளைஞர்களை சுண்டி இழுத்துவிடலாம் எனும் அபார கணிப்புடன் இவர்கள் களத்தில் இறங்கி இருப்பது வியப்பை அளிக்கிறது. அதிலும் ஆங்கிலேயர்கள் பாணியில் நாக்கை குழைத்து சதீஷ் ஆங்கிலம் பேசி வாடிக்கையளர்களை இழுக்க மெனக்கெடுவது..very funny!
பிறந்த நாள், பதவி உயர்வு மற்றும் பல சந்தோச நிகழ்வுகளுக்கு ட்ரீட் வைக்க எண்ணுபவர்கள் அட்சயத்தை தேர்ந்து எடுக்கும் வாய்ப்பு குறைவு. ட்ரீட் தருபவர் தலைக்கு ரூ. 300 செலவு செய்து வயிற்றை நிரப்பியாக வேண்டும். இந்நிலையில் விரைவில் தாம்பரம் மெப்ஸ் கணினிப்பூங்காவில் கிளையை துவக்க உள்ளனர். பார்க்கலாம்.
ராமாபுரம் DLF-இல் கடை தொடங்கிய முதல் சில நாட்களிலேயே காலை உணவை நிறுத்தி விட்டனர்(விலை ஏகத்துக்கும் இருந்ததால் பலர் எட்டிப்பார்க்கவில்லை). இங்கு அரைவயிறு உண்ட வெறுப்பில் நண்பனுடன் DLF எதிரே இருந்த லோக்கல் ஹோட்டல் ஒன்றில் தளமான பரோட்டா நான்கு, ஒரு ஆம்லெட் மற்றும் தரமான சிக்கன் சால்னா சாப்பிட்டுவிட்டு வெறும் 50 ரூபாய் பில் கட்டிவிட்டு திருப்தியுடன் வெளியேறினேன்.
அட்சயம் - பெயரில் மட்டும்.....
...............................................................
12 comments:
உங்கள மாதிரி காசு உள்ளவர்கள் மட்டுமே சாப்ட முடியும்னு சொல்லுங்கண்ணே
தட்டுல உள்ள அய்ட்டங்களை பார்த்ததும் பசி எடுத்துடுச்சு... :-)
இன்னொரு கிளை...? எண்ணம் மாறலாம்...!
கார்ப்பரேட் மக்கள் அதிகரித்து விட்டார்கள்..அவங்களும் வாழ்ந்துட்டுப் போகட்டும்.
maaruna ennam engae sir pogum?
good..writeup
@ சக்கர கட்டி
அதுவும் சர்தான். இங்க காசுதான் இருக்கு. நோட்டு லேது.
/ஆமினா said...
தட்டுல உள்ள அய்ட்டங்களை பார்த்ததும் பசி எடுத்துடுச்சு... :-)
ஆமினா போன்ற பிரபல பதிவர் கமன்ட் இந்த உப்மா ப்ளாக்கர் தளத்தில். வாவ்.
@ DD, கலிய பெருமாள்
கருத்திற்கு நன்றி
/CrazyBugger said...
maaruna ennam engae sir pogum?
விட மாட்டீங்க போல :)
/Cable சங்கர் said...
good..writeup/
மோதிரக்கையால் good குட்டு. நன்றி தலைவா!
அன்பின் சிவகுமார் - போனமா சாப்பீட்டமான்னு இல்லாம - விமர்சனப் பதிவு - விளக்கமாப் போட்டது நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment