CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, May 20, 2013

பெரு'மால்' பெருமை - ஃபோரம் விஜயா

                                                     
                                                                 

கமலா தியேட்டர் எதிரே புதிதாக முளைத்திருக்கும் ஃபோரம் விஜயா மாலுக்கு 'ரெமோ' பாலகணேஷ்(மின்னல் வரிகள்) அவர்களுடன் நேற்று மட்ட மதிய நேரத்தில் விசிட். கோடம்பாக்கம்-வடபழனி உரசும் ஒரு சந்தினுள் இருந்து மெயின் ரோட்டிற்கு வந்து சேர்ந்தோம். ஷேர் ஆட்டோ ஓட்டியிடம் 'அண்ணே புது மால் எங்க இருக்கு' என்று கேட்க 'எதிர்லயே பப்பரப்பேன்னு நிமுந்து நிக்குது. கேக்குறான் பாரு கேள்விய..' எனும் முகபாவத்துடன் ஆள்காட்டி விரலை எதிர்ப்புறம் நீட்டினார். ஆத்தாடி எத்தே பெருசு!!

'பார்க்கிங் சார்ஜ் எம்புட்டோ?' என்று பதறியவாறு ரெமோ தமது டூ வீலருடன் உள்ளே நுழைய (சில நாட்களுக்கு மட்டும்) இலவசம் என்று கேள்விப்பட்டதும் பூரிப்பில் மிதந்தார். பாதாள தளத்தில் பொதுவாக பிக் பஜார் தான் எல்லா மால்களிலும் மளிகைக்கடைகளை விரிப்பது வழக்கம். ஆனால் இங்கு அவ்விடத்தை பிடித்திருப்பது இன்னொரு சூப்பர் மார்க்கெட். 'கடை பேரு என்னண்ணே?'... காவலாளி 'தெறக்க இன்னும் கொஞ்சம் நாளாகும். பேரு motion. வேல்ட் பேமஸ் கடைங்க' என்றார். 'என்னது மோஷனா?' புலம்பலுடன் பெயர்ப்பலகையை தேடிப்பார்த்தால் Auchan. ஸ்ஸ்..!!  ஆனால் நிஜமாகவே வேல்ட் பேமஸ் கடைதான். ஃபிரான்ஸை தலைமையிடமாக கொண்டு 12 தேசங்களில் வியாபாரம் செய்கிறார்கள்.
                                                                 
                                              'ரம்பைகள் ஹார்ட்டின் ரிங்டோன் ரெமோ' - பாலகணேஷ் 

செயற்கை பட்டாம்பூச்சிகள் மாலின் பல்வேறு இடங்களில் பதிந்திருக்க சிறப்பாக ஃப்ளோரிங் செய்திருக்கிறார்கள். உட்புற வடிவமைப்பில் சென்னையின் சிறந்த மால் என்று அடித்து சொல்லலாம். சோனி, சாம்சங், விவேக்ஸ், KFC மற்றும் சில விரைவில் உதயம். தரை மற்றும் முதல் தளங்களில் ஆர்.எம்.கே.வி.யின் இரு பிரம்மாண்ட ஷாப்கள். முதல் தளத்தில் ஆர்.எம்.கே.வி.யினுள் நுழைந்ததுமே நெற்றியில் விபூதியுடன் படுபவ்யமாக ஊழியர்கள் வணக்கம் போட்டு வரவேற்றனர். அருகிலேயே எலக்ட்ரானிக் கருவியின் உதவியுடன் புடவை நெய்து கொண்டிருந்தார் ஒருவர். படம் கீழே.
                                                            

தி.நகரில் புதிதாக காலடி வைத்த காலத்தில் பெயர்பெற்று விளங்கிய ஆ.எம்.கே.வி அதன்பின்பு போத்தீஸின் அசுர வளர்ச்சி மற்றும் அருகருகே உதயமான சரவணா பிரம்மாண்டம், ஜெயச்சந்திரன் ஆகியவற்றால் டல்லடிக்க ஆரம்பித்தது. ஆனால் தற்போது வேளச்சேரி ஃபீனிக்ஸ் மற்றும் ஃபோரம் மால்களில் தடம் பதித்து மறுமலர்ச்சிக்காக காத்திருக்கிறது.

ஆர்.எம்.கே.வி.அருகிலேயே Sportsxs. விளையாட்டு பொருட்களுக்கான பிரத்யேக ஷாப். அந்தக்கால கவாஸ்கர்/எம்.ஜி.ஆர் தொப்பி ரூ.600. மலையேறும் வீரர்களுக்கான டென்ட் ரூ.4999. இரண்டே நொடியில் டென்ட் அடித்து விடலாம் என்பது இதன் சிறப்பு. 

அடுத்து கண்ணில் தென்பட்டது Tambulya. ரிடர்ன் கிஃப்ட் ஷாப் என்று பெயரிப்பட்டு இருந்தது. 'அதென்ன ரிடர்ன் கிஃப்ட்?' என்று கல்லா பெட்டியாளை கேட்டால் '(தப்பித்தவறி) உங்களுக்கு கல்யாணம் ஆகுதுன்னு வச்சிக்கங்க...($%^& மேல சொல்றா) உங்களுக்கு நிறையே பேரு கிஃப்ட் கொடுப்பாங்க இல்லையா...(எனக்கு ஒரு சொந்தக்காரன் கூட இல்ல. நண்பன்னு சொல்லிட்டு திரியற பயலுக கூட 10 பேர் க்ரூப் க்ரூப்பா சேந்து 101 ரூவா/ 200 ரூவா கடிகாரம் ஒரே  கிஃப்ட்டா தந்துட்டு ஓடிருவானுங்க)....அவங்களுக்கு பதில் மரியாத மரியாத செய்ற மாதிரி நீங்க தர்றதுக்கு பேருதான் ரிடர்ன் கிஃப்ட் (அடங்கொக்க அடங்கொக்க மக்கா. ஒத்த தேங்கா, ரெண்டு கல்கண்டுக்கே வக்கில்ல. படுவா).'

அருகே இருந்த பட்டத்து யானை பொம்மையின் புட்டத்தில் ஒட்டப்பட்டிருந்த விலையை எட்டிப்பார்த்தால்...ராஸ்கோல் 13,500 ஓவாயாம்ல!!
                                                               

சரி. நம்ம ஏரியா எங்கே என்று மூன்றாவது தளத்தில் நுழைந்தால் சத்யம் தனது 9 திரைகள் கொண்ட வாயிலை அடைத்து 'சீக்கிரம் வாரோம்' என்று அறிவிப்பு செய்திருந்தது ஏமாற்றம். தூரத்தில் இருந்து பார்த்ததில் அரண்மனை லுக்கில் இழைத்து கட்டி இருப்பது கண்ணில் பட்டது. ஐமேக்ஸ் டிக்கட் விலை நிர்ணயம் செய்வதில் அரசுடன் பஞ்சாயத்து ஓடிக்கொண்டு இருப்பதால் வேளச்சேரியிலும்  சத்யம் தியேட்டர்கள் திறப்பதில் தாமதம் ஆவதாக கேள்விப்பட்டேன்.

எக்ஸ்ப்ரஸ் அவின்யூவை  விட பல விதங்களில் சிறப்பாக இருக்கிறது இந்த  ஃபோரம் விஜயா மால்.சிறப்பான ஃப்ளோரிங், மித வேகத்தில் நகரும் எஸ்கலேட்டர்கள், விசாலமான நடைபாதைகள், கலர் சென்ஸுடன் அமைக்கப்பட்டிருக்கும் உட்புற அமைப்பு என ப்ளஸ்கள் அதிகம். ஃபோரம் ஃபுட் கோர்ட் பற்றிய பதிவை விரைவில் பகிர்கிறேன்!!

Image copyrights: madrasbhavan.com
........................................................

......................................
சமீபத்தில் எழுதியது:

நேரம் - விமர்சனம்
.....................................
11 comments:

பால கணேஷ் said...

Nice writeup siva. Food court kku thani post a.. athula en photo potte...... aluthuduven.

திண்டுக்கல் தனபாலன் said...

அந்த Power Loom-யை பார்ப்பதற்காவது உடனே ஒருமுறை வர வேண்டும்... அடுத்த பதி. திருவிழா எப்போது...?

சீனு said...

என்னது இங்கையும் சத்தியமா... பீனிக்ஸ் கூட கம்பேர் பண்ணலையா

கார்த்திக் சரவணன் said...

ம்.... ஒரு நாள் போயிருவோம்...

Unknown said...

வணக்கம்,சிவா சார்!///அந்த பிரெஞ்சு கடை பேரு(Auchan) ஓஷான்.

Unknown said...

ஸ்கூல் பையன் said...
ம்.... ஒரு நாள் போயிருவோம்..///ஸ்கூல் பையனுங்க அப்பா,அம்மா கூட தான் போகலாம்!

கலியபெருமாள் புதுச்சேரி said...

சென்னை பக்கம் வந்தா பாக்கலாம்..நமக்கு அந்த அளவுக்கெல்லாம் வசதி இல்லீங்க..சுத்திப்பாக்கலாம் துட்டு கேக்கமாட்டாங்க இல்ல?

SNR.தேவதாஸ் said...

ஒன்னுமே கொள்முதல் செய்யலையாக்கும்
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

MANO நாஞ்சில் மனோ said...

வளைகுடா நாடுகளில் எப்போதோ மஹால்கள் வந்துவிட்டது நம்ம ஊர்ல ரொம்ப லேட்டுங்கோ...!

! சிவகுமார் ! said...

கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.

ரூபக் ராம் said...

'சத்யம்' வர காத்துக்கொண்டிருக்கிறேன்

Related Posts Plugin for WordPress, Blogger...