நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் வெற்றி வாகை சூடிய சூட்டோடு சென்ற ஆண்டு காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா என இளைய வரவுகள் தூள் கிளப்பியபோது நலன் மட்டும் சற்று அதிகமாகவே பொறுமை காத்தார். 'குறும்பட வெற்றிகளுக்கு பிறகு சட்டென படமெடுக்க விரும்பவில்லை' என்பதே அவர் பதிலாக இருந்தது. ந'ல'பாகம் எப்படி இருக்குமென்ற ஆவலில் காத்திருந்த ரசிகர்களுக்கு இன்று சூது கவ்வும் எனும் Kid-Com(கிட்நாப் காமடி.நான் வச்ச பேரு!) மூலம் விடை கிடைத்திருக்கிறது.
துவக்கத்தில் தாஸ் கேரக்டருக்காக வேறொரு நடிகரை மனதில் வைத்து கதை பண்ணிய நலனிடம் போராடி 'என்ன இந்த கேரக்டருக்கு மிடில் ஏஜ் லுக் வேணும் அவ்வளவுதான?. வர்றேன்' என்று கூறி குறுகிய காலத்தில் சொன்னபடி வந்து நின்றாராம் விஜய சேதுபதி.கதையாகப்பட்டது என்னவெனில் 'சொதப்பலாக சின்ன சின்ன கடத்தல் செய்யும் விஜய சேதுபதியுடன் ஒரு கட்டத்தில் கூட்டாளி ஆகிறார்கள் சிம்மா, அசோக் மற்றும் திலக். நேர்மையான அரசியல்வாதியான எம்.எஸ்.பாஸ்கரின் மகனுடன் சேர்ந்து ஒரு போலி கடத்தலை அரங்கேற்ற முயன்று எதிர்பாராத கதிக்கு ஆளாகின்றனர். 'சூதின் வாழ்வுதனை தர்மம் கவ்வும். மீண்டும் சூதே வெல்லும்' எனும் நம்பிக்கையுடன் இருக்கும் நண்பர்கள் என்னவானார்கள்? தட்ஸ் ஆல்.
'என்ன ஒரு நடிப்புய்யா?' என்று நாம் சிலாகிக்கும் அளவிற்கு சேதுபதிக்கு இன்னும் சந்தர்ப்பம் அமையாவிடினும் வைட்டான கதை,திரைக்கதை,நேரம் என ஏதோ ஒன்று நம்மாளுக்கு க்ளிக் ஆகி விடுவது சமீபத்திய வரலாறு. கிட்டத்தட்ட அதுபோல்தான் இங்கும். ஆனால் மிடில் ஏஜ் நடிப்பை இளமை துருத்திக்கொண்டு டேக் ஓவர் செய்வதால் பெர்பக்சன் குறைகிறது. அவருடைய கற்பனை தோழியாக சஞ்சிதா. மாமா மாமா என்று முதல் பாதியில் அறுப்பவரை இடைவேளையோடு ஆப் செய்து அனுப்பிய இயக்குனர் வாழ்வாங்கு வாழ்க. சைக்கோ இன்ஸ்பெக்டரை கெத்தாக உலவவிட்டு இறுதியில் வழக்கமான சினிமாத்தனத்தில் சிக்க வைத்து விட்டார் இயக்குனர். இந்த கேரக்டரை மட்டும் இன்னும் சிறப்பாக கையாண்டிருந்தால் சிக்சர் அடித்து இருக்கலாம்.
நண்பர்களாக வரும் மூன்று பேரின் நடிப்பும் ஜஸ்ட் ஓகே. எம்.எஸ்.பாஸ்கர், ராதா ரவி இருவரும் வழக்கம்போல் நிறைவு. அருமை நாயகமாக கருணாகரன்..பேர் சொல்லும் பிள்ளை. 'உன் மகன் இதுக்குத்தான் சரிப்பட்டு வருவான்' என்று ராதாரவி சொல்லுமிடமும், அதனைத்தொடர்ந்து ஒலிக்கும் 'எல்லாம் கடந்து போகுமடா' ப்ளாக் & ஒயிட் கால பாடலும் அமர்க்களம். கானா பாலாவின் 'காசு, பணம்' பாடல் எடுபடவில்லை.

டாஸ்மாக் கோஷ்டி மோதலை சமாளிக்க ஊழியர் கையில் கொதிக்கும் எண்ணை சட்டியுடன் ஓடி வருவது விஷுவல் ரகளை. போலீஸ் சூழ்ந்திருக்க நடு மைதானத்தில் இருந்து பணப்பையை அலேக் செய்வதும், அச்சமயம் ஒலிக்கும் பின்னணி இசை மற்றும் படத்தின் தீம் மியூசிக்கும் சிம்ப்ளி ஆவ்சம் சந்தோஷ்.
'சப்பிட போறோம். பார்சல் வங்கி வரவும்' எழுத்துப்பிழை காமடி, இட்லியை சாம்பாரில் குழைத்து அடிக்கும் சிம்மாவை பார்த்து 'டேய்..இத இட்லின்னு சொன்னா அந்த சட்னி கூட ஒத்துக்காதுடா' என அசோக் அடிக்கும் கமன்ட், இருட்டறையில் நால்வரையும் சைக்கோ போலீஸ் பொளந்து கட்டும்போது 'இதுதான் இருட்டு அறையில் முரட்டு குத்தாடா?' எனும் அலறல் சத்தம் எல்லாம் ஹை க்ளாஸ் மாஸ் ஹ்யூமர்.
மந்திரி மகனின் வீடியோ வாக்குமூலம் பதிவு செய்யப்பட கருவி ஒன்றை (மேலிருக்கும் படத்திலுள்ள) சட்டைப்பையில் வைத்துக்கொண்டு காரில் பயணிக்கிறார் சேதுபதி. ஸ்பீட் ப்ரேக்கரில் ஏறி இறங்குகையில் அக்கருவி கீழே விழுந்து உடைந்து போவதாக ஒரு காட்சி. மேற்பகுதியில் மூடப்பட்ட டபுள் பாக்கெட் சட்டையில் இருந்து விழுகிறதாம்...போங்கண்ணே!
முதல் பாதியில் மதுகுடிக்கும் சீன்கள்(எத்தன படத்துல...சலிச்சி போச்சி), திணிக்கப்பட்டது போன்ற உணர்வை தரும் சஞ்சிதா பாத்திரம், அனைத்திலும் மேலாக குறும்பட ஹாங் ஓவரில் ஆங்காங்கே தடுமாறும் இயக்குனரின் நெறியாள்கை 'சூது கவ்வும் சூப்பர் அப்பு' என்று நம்மை ஓங்கி பறைசாற்ற விடவில்லை. எனினும் பெரிய தொய்வின்றி ஒரு வித்யாசமான களத்தை அமைத்து சிரிக்க வைத்திருக்கிறார் நலன். குறும்படம் மற்றும் சினிமாவுக்கான வேறுபாட்டை தெளிவாக உணர்ந்து பீட்சா டெலிவரி செய்த கார்த்திக் சுப்பராஜின் மேஜிக்கிற்கு இணையாக நலனிடம் அதிகம் எதிர்பார்த்த என் போன்றோருக்கு...சம்திங் மிஸ்ஸிங்!!
.......................................................................

10 comments:
இப்ப படம் பார்க்கலாம்'ன்னு சொல்றீங்களா ? வேணாம்'ன்னு சொல்றீங்களா ?
அது ஒவ்வொருத்தரோட எதிர்பார்ப்பு, ரசனை பொருத்தது. என் எதிர்பார்ப்புக்கு கம்மின்னு கடைசி வரில சொல்லி இருக்கேன். அம்புடுதேன் :)
சூதின் வாழ்வுதனை தர்மம் கவ்வும். மீண்டும் சூதே வெல்லும்... சூப்பர்...!
யோவ் பிலாசபி..குசும்பு ஜாஸ்தி மேன் உனக்கு. மொதல்ல நானும் டுபுக்கு மாதிரி சீரியஸ் ரிப்ளை போட்டுட்டேன்.
@ D.D.
என்ன சார் சூது வெல்லும்னு சொன்னா சூப்பர்னு சொல்றீங்க. தப்பு தப்பு.
அண்ணே போங்கண்ணே படம் நல்ல தான் இருக்கு அலெக்ஸ் பாண்டியன் படத்துக்கு ஆயிரம் மடங்கு தேவலாம்
http://chakkarakatti.blogspot.in/2013/05/blog-post.html
எனது விமர்சனம் இங்கே
jakie annan supera irukkunu solrar..nanga padam pakkalama venama
உங்கள் கூகிள் ஆட்சென்ஸ் அப்ரூவல் 10 மணி நேரத்தில்...அக்கவுண்ட் விலை ரூ.500 மட்டும். அப்ரூவல் ட்ரிக் ரூ.3500 பேச ° 9626062173, திருவண்ணாமலை. http://uradsenseid.blogspot.in/
Blogger Ad Revenue
Blogger Ad Revenue Sharing Site
அன்பார்ந்த வலைப்பதிவர்களே வணக்கம். உங்கள் வலைப்பக்கங்களின் மீது கூகிள் விளம்பரங்களை சேர்த்து அதன்மூலமாக மாதம் ஒரு தொகையை (மாதம் குறைந்தது 1000 முதல் 20000 வரை) எளிமையாக பெறலாம். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது கீழ் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதுதான். பின் உங்கள் மின் அஞ்சலுக்கு அனுப்பப்படும் விளம்பர கோடிங்கை உங்கள் வலைத்தளத்தில் சேர்க்க வேண்டும். உங்கள் வலைப்பதிவை காணவருவோர் அவர்களைக் கவரும் விளம்பரத்தை சொடுக்குவார்கள். அதன்மூலம் கிடைக்கும் பணத்தில் உங்களுக்கு பாதி தரப்படும்.
அதாவது ஆட்சென்ஸ் ரெவின்யு சேரிங் என்பார்கள். இந்த பணமானது 50 சதவீதம் ரூ.500 கிடைக்கும் பட்சத்தில் அந்தப்பணம உடனுக்குடன் உங்கள் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும். 15 நாட்களுக்கு ஒரு முறை உங்கள் பணம் அனுப்பப்டும். நீங்கள் கண்டிப்பாக உங்கள் விளம்பரங்களை நீங்களாகவோ அல்லது நண்பர்களிடம் கிளிக் செய்யச் சொல்லவோ கூடாது. வேறு நுணுக்கங்களையும் கையாண்டு விளம்பரங்களை கிளிக் செய்யக் கூடாது. அவ்வாறு செய்வது உங்கள் கணக்கை துண்டிக்க ஏதுவாக அமையும். கவனமாக கூகிள் நிபந்தனைகளை (AdSense Terms and Conditions) படியுங்கள். பின் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யுங்கள். வேறு சந்தேகங்களுக்கு எங்களை தொலைபேசி மூலமாகவும் கூகிள் டாக் மூலமும் மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.
படிவத்தை பூர்த்தி செய்யுஙகள்
Email This BlogThis! Share to Twitter Share to Facebook
Home
Payout Details
Minimum Payout : Rs. 500
Payout : Monthly Twice
Payment Type : Bank Transfer
Clicks Statement : Mail Delivery Daily
http://www.bloggeradrevenue.org/
Post a Comment