CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, May 27, 2013

ஸ்பெஷல் மீல்ஸ் (26/05/2013)நஞ்சுபுரம்:  
                                                                         

'இந்தியர்கள்/சர்தார்ஜி/தமிழர்கள் இப்படித்தான்'என்று சொத்தையாக அடிக்கப்படும் ஜோக்குகளை கண்டால் கோபம் பொத்துக்கொண்டு வரும். ஆனால் சில நேரங்களில் அது சரிதான் என்று தோன்றுமளவிற்கு இருக்கின்றன படித்த பன்னாடைகள் செய்யும் காரியங்கள். வெள்ளியன்று சென்னை ஐ.டி.பார்க் ஒன்றில் நான் கண்ட காட்சி மேலுள்ள படத்தில். பேப்பர் கப், சிகரெட் பெட்டி போன்றவற்றை செடிகளின் அருகே பல இடங்களில் வீசி இருந்தனர் பீட்டர்கள். இன்னொரு செடி மீது பப்பில் கம்மை துப்பி இருந்தான் பக்கி. 

லிப்ட் மீது பப்பில் கம்மை சொருகுதல், கூல் ட்ரிங்க் பாட்டில்களை லிப்டிலேயே போட்டு விடுவது...உச்சக்கட்ட அராஜகமாக யூரின் அடிக்கும் பேசினில் பப்பில் கம்மை துப்பி விட்டு செல்வது என பட்டியல் நீளும். இத்தனைக்கும் rest room etiquettes என்று பட்டியல் போட்டு எழுதியும் இப்படி. அதை சுத்தம் செய்யும் தொழிலாளியின் நிலை குறித்து ஒரு நொடியேனும் சிந்திக்காத பட்டதாரி எருமைகளை என்ன சொல்ல?
...........................................................

குட்லக்: 
கேபிள் டி.வி.ஆபரேட்டர், விநியோகஸ்தர், Blogger, வசனகர்த்தா என்று படிப்படியாக வெற்றித்தடம் பதித்து தற்போது 'தொட்டால் தொடரும்' படத்தின் மூலம் இயக்குனராக முன்னேறி இருக்கும் எவர்யூத் சங்கத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் கேபிள் சங்கருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
...............................................................  

வேடிக்கை என் வாடிக்கை:
தமிழ்த்தாய்க்கு 100 கோடியில் சிலை எழுப்ப உத்தரவிடும் அதே நேரத்தில் கலை, அறிவியல் கல்லூரி தேர்வுகளை ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் எனும் அரச கட்டளை வரலாறு காணாத முரண். மாணவர்களின் விருப்பத்தை கூட கேட்காமல் தமிழ் மொழிக்கு சமாதி கட்டும் இந்த கொடுமைக்கு எனது கடும் கண்டனங்கள். பத்தாம் வகுப்பு வரை (தாய்த்)தமிழில் படித்த பெருமை ஒன்று போதுமெனக்கு. ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் புலமை இன்றி தவிக்கும் ரெண்டுங்கெட்டான் மாணவ சமுதாயத்தை எண்ணி பரிதாபப்படுவதை தவிர வேறு வழியில்லை.

ஈழப்பிரச்னைக்கு ஒற்றுமையுடன் குரலெழுப்பிய மாணவர்கள் இந்த அநீதிக்கு மௌனம் சாதித்தால் நஷ்டம் அவர்களுக்குத்தான்.
.....................................................................
நளதமயந்தி:
ஈகா தியேட்டர் அருகே உள்ள Door No.27 உணவகம்(உபயம் கேபிள் சங்கர்) சென்றிருக்கிறீர்களா? சென்ற மாதம் மட்டும் மூன்று முறை விசிட் அடிக்க வைத்து விட்டது உணவின் தரம். ஆரக்ள் (அமெரிக்கா) நிறுவனத்தில் செம டப்பு வேலையை உதறிவிட்டு ரெஸ்டாரன்ட் ஆரம்பித்து இருக்கிறார் யூத் ஓனர். சிம்பிளாக இரண்டு பக்க மெனு மட்டுமே. சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி ரைஸ் ருசி பெரும்பாலான ஹோட்டல்களில் ஒரே மாதிரித்தான் இருக்கும். இங்கு இரண்டும் தனிச்சுவை. சென்னையில் சிறந்த கத்தரிக்கா கொஸ்து கிடைக்கும் சிற்சில இடங்களில் இதுவும் ஒன்று என அடித்து சொல்லலாம். அதுபோக 55 ரூபாய்க்கு கேரட் தூவப்பட்ட  தயிர் சாதம்...ஆசம் ஆசம்.

இலியானா இடுப்பு போல ஒல்லியான க்ளாஸில் இத்னூண்டு திரவத்தை தந்து ஏமாற்றாமல் பெரிய க்ளாசில் தரப்படும் தரமான ஜூஸ்களும் சிறப்பு. உணவு வகைகள் மிகக்குறைவு என்பது சற்று ஏமாற்றம். விரைவில் கூடுதல் டிஷ்களை சேர்க்கவுள்ளனர். மென்பொருள் பூங்காக்களில் கிளையை திறப்பது தங்களுக்கு கட்டுப்படி ஆகாததால் தற்போதைக்கு அவ்வெண்ணம் இல்லை என்றார் ஓனர். ஆகமொத்தத்தில் Door No.27 வொர்த் ஈட்டிங்.
.......................................................................

மரியான்: 
'சட்டசபை பக்கமே எட்டிப்பார்க்காத இவரெல்லாம் ஒரு எதிர்க்கட்சி தலைவரா?' என்று ஓலமிடும் சோனகிரிகளே. ஞாயிறுதோறும் இரவு 7 மணிக்கு கேப்டன் டி.வி. பாருங்கய்யா. 'மக்களின் கேள்விக்கு கேப்டனின் பதில்' நிகழ்ச்சியில் எங்கள் அண்ணா பாட்டாளிகளின் கேள்விகளுக்கு வீட்டில் அமர்ந்தவாறு 'இன்னா சோக்கா ஆன்சர் சொல்றார் தெர்மா'! தல ஒக்காஞ்சி இக்குற கெம்பீரமான ராஜாகாலத்து சேர் இருக்கே..யம்ம யம்மா. அதை வடிவமைச்ச டிசைனரை...இறுக்க அணச்சி ஒரு உம்மா தரனும்!!
.....................................................................

திரு...மதி தமிழ்: 
                                                                       

மேட்லி ரோடு எப்ப மெட்லி ரோடாச்சி. 'மெட்லி'க்கு அகராதில அர்த்தம் பாத்தா ஒரே கொயப்பம் தான். கவுண்டர் அட்டாக் இப்படித்தான் இருந்திருக்கும் 'ஸ்ஸ்..எனக்கு ரெண்டு பொண்டாட்டி, மூணு சம்சாரம்..லாட் ஆப் கன்ப்யூசன்'
........................................................................

பம்பாய்: 
தேவி தியேட்டர் பின்பக்க கேட் எதிரே இருக்கும் பாப்புலரான பாம்பே லஸ்ஸி கடைக்கு வார இறுதியில் விஜயம். 20 ரூபாய்க்கு 'சூப்பர் மாமே' என்று கரவொலி எழுப்பி க்ளாஸை கொட்டுமளவிற்கு இல்லாவிட்டாலும் சிட்டியின் பிரதான இடத்தில் இப்படி ஒரு அபவ் ஆவரேஜ் லஸ்ஸி கிடைப்பது ஜோர். மிதமான இனிப்புடன் முந்திரி கலந்த கேரட் அல்வா அல்டிமேட். நொறுக்கு தீனிகளில் பார்சல் வாங்கிச்சென்றது ஓமப்பொடி, மிக்சர், ரிப்பன் பகோடா , காராபூந்தி மற்றும் கீரை பகோடா. கீரை பக்கோடாவை தவிர மற்ற அனைத்தும் சுமார் ருசிதான். அதிகமாக டால்டா சேர்த்திருப்பதால் தொண்டைக்குள் அணிவகுக்க அடம் பிடிக்கின்றன.

சமோசா, கச்சோடிகளை ஸ்பாட்டில் சாப்பிடுவோருக்கு தையல் இலையில் வைத்து அவற்றின் மேல் கொஞ்சம் ஒமப்பொடியை தூவித்தருகிறார்கள். முன்பெல்லாம் தேவியில் படம் பார்க்கும்போது இடைவேளை நேரத்தில் செக்யூரிட்டி அண்ணாத்தைக்கு 5 ரூபாய் வெட்டினால் வாயிற்கதவு ஓப்பனாகும். சட்டென இக்கடைக்கு ஓடிவந்து இரண்டு சமோசாவை உள்ள தள்ளிவிட்டு ரிட்டர்ன் ஆவது வழக்கம். இப்போது அதற்கு வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
.........................................................................

பெண்சிங்கம்:
அண்ணாசாலை சாந்தி தியேட்டர் எதிரே உள்ள பாட்டா ஷோ ரூம் அருகே அம்மாவை பாராட்டி வைக்கப்பட்டிருந்த பேனர்:

'சிங்கத்தை யாரும் கொஞ்ச முடியாது. அம்மாவை யாரும்  மிஞ்ச முடியாது'.

கோமா ஸ்டேஜில் இருக்கும் தமிழை வாழ வைக்கும் ஒரே ஆக்ஸிகன் இதுபோன்ற ப்ளெக்ஸ் பேனர் ஒட்டிகள்தான். நீ கலக்கு சித்தப்பா.
.........................................................................

..............................................
சமீபத்தில் எழுதியது:

அட்சயம் - பட்டன தட்டு. சோத்த வெட்டு
..............................................

Images copyright: madrasbhavan.com
7 comments:

கவியாழி said...

விருப்பமும் குழப்பமும் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறது .உங்களின் ஆதங்கம் நியாயமானதே

திண்டுக்கல் தனபாலன் said...

ஏற்கனவே சமாதி 'கட்டி'யாகி விட்டது... இப்போது மேல் பூச்சு...

ரூபக் ராம் said...

Door No.27 பெயரே வித்தியாசமாக இருக்கிறது, அந்த பக்கம் கண்டிப்பாக போக வேண்டும்.

கலியபெருமாள் புதுச்சேரி said...

டிராக்டர் சக்கரத்தில் சூச்சூ போகும் நாய்க்கும் இந்த எருமைகளுக்கும் என்ன வித்தியாசம்..

வெங்கட் நாகராஜ் said...

பொது இடங்களில் குப்பை போடும் இக்கலாச்சாரம் எங்கும் பரவி இருக்கிறது..... பேர் மட்டும் பெத்த படிப்பாளி! செய்வது கேவலமான செயல்.....

சிங்கத்தை யாரும் கொஞ்ச முடியாது - என்னவோர் அற்புத சிந்தனை! :)

சீனு said...

நளதமயந்தி... நியாயமாறே என்னிக்கு கூட்டிட்டுப் போவீங்க நியாயமாறே

”தளிர் சுரேஷ்” said...

கண்ட இடங்களில் அசிங்கம் செய்து வைக்கும் இவர்களை திருத்த முடியாது! தேர்வுகளை ஆங்கிலத்தில் எழுதச் சொல்வது அராஜகமாகத்தான் உள்ளது! நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...