CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, May 3, 2013

ஸ்பெஷல் மீல்ஸ் (03/05/13)


சேட்டை: 
                                                               

மேற்கு மாம்பலம் ஸ்ரீனிவாசா தியேட்டர் அருகே எடுத்த புகைப்படம். தில்லுமுல்லு படத்தில் தேங்காய் ஸ்ரீனிவாசன் வீட்டில் மீசையில்லா ரஜினி அமர்ந்திருக்கும்போது சிறுவன் கட்டபொம்மன் அவரைப்பார்த்து 'நீ எம்.ஜி.ஆர் இல்ல. நம்பியாரும் இல்ல. ஏதோ எம்.ஆர்.ராதா வேல பாக்கற' என்பான். அதுபோல 'ஜாதி இருக்கு ஆனா இல்ல' என்று அரசாங்க தெருப்பலகை என்னமா ஈயம் பூசுது.
...........................................................................

கற்றது தமிழ்: 


'இலக்கிய சிந்தனை' விருதுபெற்ற பாரத ரத்னா எனும் நாடகத்தை தி.நகர் ஒய்.ஜி.பி. ஆடிட்டோரியத்தில் பார்த்தேன். சௌம்யா குழுவினரின் படைப்பான இதில் தமிழாசிரியார் ராமச்சந்திரனாக கரூர் ரங்கராஜன், அவரது மகன் ப்ரித்வியாக வெங்கட், இன்ஸ்பெக்டர் அருணாக ஜெயசூர்யா, கலெக்டர் பஞ்சாபகேசனாக முத்துகுமார், எம்.எல்.ஏ. வாக சுந்தர் மற்றும் சிவநேசன் செட்டியாராக டி.வி.ராதாகிருஷ்ணன்(இயக்குனரும் இவர்தான்).

மாசற்ற தமிழாசிரியர் ராமச்சந்திரன் ஒரு முறை பள்ளியில் எம்.எல்.ஏ பேத்தியை கண்டிக்க அவள் மயங்கி விழுகிறாள். 'எனக்கு சாதகமாக சில காரியங்கள் செய்தால் நல்லது. இல்லாவிடில் உம்மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்வேன்' என எம்.எல்.ஏ மிரட்டல் ஒருபுறம், வேலைக்கு அலையும் மகனுக்கு சிபாரிசு செய்யாமல் தடுக்கும் கவுரவம் மறுபுறம். எப்படி மீள்கிறார் என்பதை மேடையில் காண்க.

தமிழாசான் வேடத்திற்கு மிகப்பொருத்தமாக தேர்வு ராமச்சந்திரன். 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாடகத்துறையில் இருப்பதாக கூறினார். கலெக்டர், இன்ஸ்பெக்டர் ஆகியோர் இவரது முன்னாள் மாணவர்கள் என்று கூறி அன்பு பாராட்ட நமக்கு 'பள்ளிக்கூடம்' படம் பார்த்த உணர்வு. எம்.எல்.ஏ. சுந்தரின் நடிப்பு இழுவை. இயக்குனர் நகைச்சுவையாக நடிக்க கஷ்டப்படுகிறார். ஆங்காங்கே உச்சரிப்பு பிழைகள். நாடகம் முடிந்து அவர்களிடம் இதை சுட்டிக்காட்டியபோது 'இறுதி நேரத்தில்தான் அரங்கம் கிடைத்தது. அவசர ஒத்திகை. அதான்' என்றனர். 

'பல பாரத ரத்னாக்களை உருவாக்கும் உங்களைப்போன்ற ஆசிரியர்களுக்கு எதுக்கு சார் பாரத ரத்னா விருது. நீங்கள் எல்லாருமே பாரத ரத்னாக்கள் தான்' என்று தங்கள் ஆசானை கௌரவிக்கின்றனர் கலெக்டரும், இன்ஸ்பெக்டரும். அதீத பொறுமை இருந்தால் தாராளமாக பார்க்கலாம்.
.....................................................................

தில்லாலங்கடி:
பிற மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களை சென்னையில் ஏன் சத்யம் பல அடிகள் முன்னே இருக்கிறது என்பதற்கு இன்னொரு உதாரணம் இது. ஃபவுன்டைன் ரக கோக்கை மினி, மீடியம், லார்ஜ் என்று தனித்தனியே சத்யம் கேன்டீனில் விற்கிறார்கள். தனியாக படத்திற்கு செல்வோருக்கு மினிதான் முதல் சாய்ஸ். சென்ற வாரம் பி.வி.ஆர். சென்றபோது இடைவேளையில் 'மினி பெப்ஸி குடுங்க' எனக்கேட்டால் கிடைத்த பதில் 'சாரி சார். மீடியம்தான் இருக்கு. காம்போ பேக் வாங்குனாதான் மினி'. 'பரவாயில்லை. காம்போ வாங்கிக்கலாம்' என நண்பர் வலியுறுத்த நான் செவிசாய்க்கவில்லை. 'அவன் யாரு நம்ம சாப்புடற பொருளை தீர்மானிக்க?' என்று மறுத்துவிட்டு எதுவும் வாங்காமல் மீண்டும் படம் பார்க்க சென்று விட்டேன்.  
...................................................................

போக்கிரி ராஜா: 
அஜ்மல் கசாப்பிறகு இந்தியா மரண தண்டனை தந்ததால் கடும் கோபத்தில் இருக்கும் தீவிரவாத அமைப்புகளின் நிர்பந்தத்தின் பேரில் பாகிஸ்தான் சரப்ஜித் சிங்கை தீர்த்து கட்டி விட்டது எனத்தெரிகிறது. குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்காமல் குற்றம் சாட்டப்பட்டவரை திடுதிப்பென தூக்கில் ஏற்றுவது காங்கிரஸ் அரசின் ஸ்டைல் என்றால், அதைவிட சற்று டெர்ரராக சிந்திப்பது பாகிஸ்தான் ஸ்டைல். இவர்களது அரசியல் ஆட்டங்களுக்கு பலியாகும் அப்பாவிகள் பாவம். குறிப்பாக அவர்களது குடும்பத்தினரை ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வைத்து இறுதியில் இப்படி அழவிட்டு வேடிக்கை பார்ப்பது மகா கேவலம்.
...................................................................

முகமூடி: 
பிலிம்பேர் விருதுக்கு இணையாக தமிழகத்தில் 'நாங்கள்தான்' என்று விஜய் அவார்ட்ஸ் குழு நம்பிக்கொண்டு இருக்கிறது போலும். முதல் ஓரிரு ஆண்டுகள் வெற்றியாளர்களை சிறப்பாக தேர்வு செய்து பெயர் பெற்றாலும் அதன் பின் தரப்பட்ட விருதுகளைக்கண்டு விஜய் அவார்ட்ஸ் பார்க்கும் ஆவல் குறைய ஆரம்பித்தது. ஃபேவரிட் வகையில் ஒருபுறம் தங்கள் அபிமான ஸ்டார்களை மக்கள் தேர்ந்தெடுக்க, மறுபக்கம் க்ரிடிக்ஸ் சாய்ஸ் என்று நடுவர்களின் தேர்வு. 

அப்படி செய்தால்தானே அஜித், விஜய், சிம்பு, தனுஷ் என எல்லாருக்கும் விருது தந்து சகல தரப்பினரையும் திருப்தி படுத்தலாம். இது போக ரக ரகமாக புதுப்புது பெயரில் விருதுகள். இவ்வாண்டு சிறந்த நடிகைக்கான போட்டியில் ஹன்சிகா வேறு இருக்கிறார். எல்லாம் கடந்து போகுமடா.......
.................................................................    

சும்மா நச்னு இருக்கு: 
சீன ஊடுருவல், விலைவாசி ஏற்றம், இமாலய ஊழல், சுப்ரீம் கோர்ட் கண்டனங்கள் என எத்தனை பவுன்சர்கள் போட்டாலும் அசராமல் இருக்கும் பிரதமரை பெற என்ன தவம் செய்தோமோ? அண்ணாத்தையை பார்க்கும்போது வடிவேலின் நகைச்சுவை அடிக்கடி எண்ணத்திரையில் வந்து போகிறது:

'ஏ.கே.ஆண்டனி சார். உங்கள பாக்க சீன தூதர் வந்துருக்கார்'

மன்மோகன்: 'ஆண்டனி...ஒரு வாரம் சும்மா இருக்கணும். சும்மா இருக்கறதுன்னா சும்மாவா?'

'ராகுல் ஜி..தமிழ்நாட்ல காங்கிரஸ் அதல பாதாளத்துல தொங்கிட்டு இருக்கு. நீங்கதான் காப்பாத்தணும்'

மன்மோகன்: 'பப்லு...போகோ பாக்கறதோட சரி. சும்மா இரு. தானா நடக்கும்'
............................................................    

தேன் மழை: 
'நான் ஆணையிட்டால்' படத்தில் டி.எம்.எஸ்.ஸின் வசீகர குரலில் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் பாடல் 'நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்'. எம்.ஜி.ஆரின் மெஜஸ்டிக் திரையாள்கையும், ஆடைத்தேர்வும் பாடலுக்கு பக்க பலம். என்ன சரோஜா தேவி மாடர்ன் உடைகள் போட்டுக்கொண்டு ஆடுவதையும் சேர்த்து  பார்க்கும் இன்னலுக்கு ஆளாயினர் அக்கால ரசிகர்கள். நீங்களும் பார்க்க:


'சரோசா'

'என்ன டெய்லர்?'

'டான்ஸ் ஆடறியா?'

'ஆமா டெய்லர்'

'ஆடு ஆடு'     
...........................................................................................................
சமீபத்தில் எழுதியது:

................................................. 

6 comments:

Unknown said...

அண்ணே நானும் சத்தியதுள்ள வேலை பார்த்து இருக்கேன் திருட்டு பசங்க வாங்க ம வந்தது தான் சரி

திண்டுக்கல் தனபாலன் said...

ஹன்சிகா மீது ஏனிந்த கோபம்...?

rafi said...
This comment has been removed by the author.
Unknown said...

வணக்கம்,சிவா!நலமா?///'அவன் யாரு நாம சாப்பிடுற பொருளை தீர்மானிக்க'?நச்!!!!!ஹன்சி,ஹன்சி..............?!

MANO நாஞ்சில் மனோ said...

பல்சுவை பகிர்வு கொஞ்சம் கோவம் கூடிப்போச்சு நியாயம்தான்...!

பால கணேஷ் said...

இங்க மட்டுமில்ல சிவா.. ஜி.என்.(செட்டி) தெரு என்பது போல நிறைய இருக்கிறது சென்னையில்! எம்.ஜி.ஆரின் மெஜஸடிக் ஆளுமையையும், சரோஜாதேவியின் உடையலங்காரமும் தாண்டி அந்தப் பாட்டில் எம்.ஜி.ஆரின் புத்திசாலித்தனமும் மார்க்கெட்டிங் திறமையும் உண்டு சிவா! பாடலில் அவர்கள் ஆடுவதன் பின்னணியில் அவர் அடுத்து எடுக்கவிருந்த படமான ‘அடிமைப்பெண் விரைவில்’ என்பது சீரியல் லைட்களில் பளிச்சிடும். நல்லா கவனிச்சுப் பாருங்க...! (கனவுக்கன்னி(?) சரோஜாதேவியைத் தாண்டி... ஹி... ஹி...)

Related Posts Plugin for WordPress, Blogger...