CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, April 21, 2013

திருமதி தமிழ் - SYRUP மலர்


                                                                   
                                                                   நானும், என்னுயிர் தலைவனும் 

அஞ்சாசிங்கத்தின் பொன்மொழிகளில் என் ஃபேவரிட்: "கோழியே மசாலாவ தடவிக்கிட்டு கொழம்பு சட்டிக்குள்ள குதிச்சா நாம என்ன பண்ண முடியும்?". பதிவர்கள் பாலகணேஷ், ஆரூர் முனா, அஞ்சாசிங்கம், சீனு, அரசன் ஆகியோருடன் லேட்டஸ்ட் கோழியாக ஸ்கூல் பையனும் இணைய கோரஸாக 'திருமதி தமிழ்' சட்டிக்குள் சனியன்று குதித்தோம். உட்லண்ட்ஸ் சிம்பொனியில் ஒரு மகோன்னத மசாலாவை மாங்கு மாங்கென்று மனம் தளராமல்  பார்த்த பொன்னாள் அது. 

சட்டக்கல்லூரி மாணவரான தமிழரசன்(ராஜகுமாரன்) மாமன்/அத்தை மகள் ஜோதியை(தேவயானி) காதலிக்கிறார். ஒரு திடீர் சம்பவத்தால் சென்னைக்கு வந்து தோழன் மனோகருடன்(ரமேஷ் கண்ணா) தங்க நேரிடுகிறது.  ஆனால் தங்கள் மகள் சாருமதியை (கீர்த்தி சாவ்லா) பெண்பார்க்க வந்திருப்பது இவர்தான் என்று தவறாக புரிந்து கொள்கிறது  ஒரு டொட்டடொய் குடும்பம். கீர்த்தியும் தலைவரின் லிப்ஸ்டிக் உதட்டழகில் சொக்கி மன்மத பானம் வீச...ஒரே லவ்சுதான். ஆனால் சாருவை கட்டாய திருமணம் செய்ய அசல் மாப்பிள்ளை வீட்டார் சதி செய்ய  கதை (நமது சீட்டுக்கு அடியில்) ஏகத்துக்கும் சூடு பிடிக்கிறது.  வக்கீல் பத்மினி (இன்னொரு தேவயானி) சட்டத்தின் துணையுடனும், நம்ம தல சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டும் இந்த பிரச்னையை எப்படி தீர்க்கிறார்கள் என்பதுதான் கதை.
                                                                         
அஞ்சா.ஆரூர், ஸ்கூல் பையன், அரசன், பாலகணேஷ், சீனு 

முதல் சீனிலேயே நம்ம ரா(ஜ)கு(மாறன்) சாக்கடையில் இருந்து எழுந்து வருவதை பார்த்து பின் சீட்டில் இருந்த இருவர் சிதறி ஓட, இடைவேளைக்கு முன்பு ஆரூர் முனாவுடன் வந்தோர் பதறி ஓட, இடைவேளையில் அஞ்சாசிங்கமும், ஆரூர் முனாவும் கதறி ஓட அவர்களோடு அரசனும், பால கணேஷும் உதறி ஓட முயற்சித்தனர். மனோகரா சிவாஜியை போல அவர்கள் இருவரையும் தர தரவென்று இழுத்து வந்து மீண்டும் சீட்டில் அமர வைக்க நான் பட்ட பாடு தனிக்கதை. 

பால்கனியில் இருந்து தேவயானி சரமாரியாக தலைவருக்கு ஃப்ளையிங் கிஸ் தரும் காட்சி இருக்கே....போங்க எனக்கு வெக்க வெக்கமா வருது. எதிர்வீட்டு பால்கனியில் பசியோடு வாடியிருக்கும் கீர்த்திக்கு சாப்பாடு தர இடையே ஒரு கம்பை போட்டு கொட்டும் மழையில் ராகு நடந்து செல்லும்போது கம்பன், ஷெல்லி ஆகியோரின் கல்லறை தோட்டங்கள் கலைக்கப்பட்டிருக்கும் என்பதில் ஐயமென்ன? 

''என் காதலி உங்க மனைவியா வரலாம். பட்சே உங்க மனைவி என் காதலி ஆயிட்டு வராது சாரே''வை புரட்டிப்போட்டு அடித்திருக்கிறார் ரா.கு. அந்த வசனம் "ஆயிரம் தரம் தாலி கட்டுனாலும் காதலன்தான் உண்மையான புருஷன்". எப்டி?       


'விதி' சுஜாதாவை ஓரங்கட்டி தலைவி(தி) தேவயானி வாதாடும் இடங்கள் யம்ம யம்மா. சாம்பிள் வேணுமா? டேக் இட்: "யுவர் ஆனர்.  ஏப்ரல் மாச வெயில்ல நம்ம மக்கள் புழுங்கறாங்க. ஆனா இந்தியால புகுந்த வீட்டு கொடுமையால பெண்கள் புழுங்குறது யாருக்கு தெரியும்? நித்தம் நித்தம் நம்ம வேர்வைல குளிச்சா அவங்க மண்ணெண்னைல குளிக்கறாங்க. வேர்வை போக நம்ம சோப் போடறோம். ஆனா அப்பாவி பொண்ணுங்க தீக்குச்சிய கொளுத்தி ஒடம்புல போட்டுக்கறாங்க". 

என்ன அண்ணன் பெர்ஃபாமன்ஸ் எப்படியா?? விஸ்வரூபத்ல பெண்மை கலந்த நடிப்புல கமல் அசத்திட்டார்னு நெனச்சிட்டு இருந்தா, ரா.கு அந்த கேரக்டராவே வாழ்ந்து கோடம்பாக்க புகழை கோல்டன் க்ளோப் ரேஞ்சுக்கு ஒசத்திட்டார்னே சொல்லலாம். இந்த இரண்டரை மணிநேர படம் மூலம் 'பவர் ஸ்டாரை பந்தாட வந்திருக்கும் யுவர் ஸ்டார் நாந்தான்' என்று ரசிகர்கள் மனதில் இரண்டடி நீள செவன் ஓ க்ளாக் ப்ளேடால் அழுத்தமாக கீறி பதிவு செய்திருக்கிறார்.       


இப்படத்தை மீடியா நண்பர்களுக்காக ஸ்பெஷல் ஷோ போட்டாராம் ராஜகுமாரன். படத்தின் முடிவில் "இந்த படத்த விமர்சிக்க 10 படத்துலயாவது அசிஸ்டண்டா வேலை செஞ்சவனுக்குதான் தகுதி இருக்கு" என்று வேறு உறுமி இருக்கிறார். 'தம்பி. ரசத்துல கரப்பாம் பூச்சி(திருமதி தமிழ்) கெடக்கு'ன்னு கல்யாண வீட்ல சொன்னவங்கள பாத்து 'அத விடுங்க....சாம்பார்ல(மேதை, லத்திகா) பூனை செத்து கெடந்துச்சி. அதையே தூரு வாரி சாப்டுட்டு இருக்கேன்' அப்படின்னு சொல்லுற விமர்சகர்கள் நாங்க. ஒரு படத்துக்கே இந்த ஆட்டமா? எமோஷன கொறைங்கண்ணே.       

கர்ணனின் மடியில் பரசுராமர் தூங்கும்போது பெரிய சைஸ் வண்டு ஒன்று அவனது தொடையை குடைந்து மறுபக்கம் சென்றதாம். அதனால் ரத்தம் பெருக்கெடுத்து ஓடி பரசுவின் உடலை நனைத்து அவரை எழுப்பியதாம். வசமாக சிக்கிய கர்ணனை பார்த்து "நீ பிராமணன் அல்ல. சத்ரியன் தானே..சொல்லுடா படுவா" எனக்கடிந்து கொண்டாராம். நம்ம கிட்ட நடக்குமா? பரசு ட்வின்ஸா பொறந்து என்னோட ரெண்டு மடிலயும் படுத்துக்கிட்டு திருமதி தமிழை 100 தரம் போட்டாலும் ஒரு சொட்டு ரத்தம் சிந்தாம பாப்போம்ல!!
.........................................................................      

சமீபத்தில் எழுதியது:

..................................................17 comments:

பால கணேஷ் said...

100 தடவை போட்டாலும் ரத்தம் சிந்தாம பாக்கற பரசு ட்வின் தில்லு தலைவா! உம் புகழ் ஓங்குக!ராகுவின் நளினத்தை நான் விமர்சனத்துல குறிப்பிட மறந்துட்டேன். சரியாச் சொன்னீங்க தல! சூப்பரு!

Prem S said...

உங்கள் தைரியத்தை எண்ணி வியக்கிறேன்

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா...

பொன்னாளை ஏற்படுத்தியது நீங்கள் தான் கேள்விப்பட்டேன்... அடுத்தமுறை பதிவர்களை இணைந்து படம் பார்ப்பது... உங்களுக்கு சிறிது சிரமம் தான்... ஹிஹி...

நண்பர்களின் தளத்தை வேறு tab-ல் திறக்க :

Visit : http://www.karpom.com/2011/07/blogger-tips-external-link-new-tab.html

Unknown said...

அண்ணே உங்க மேல கொலை கேஸ் பைல் பண்ணி இருகாங்க எல்லாரையும் அந்த படத்துக்கு அழச்சுட்டு போன காரணத்திற்காக

tamilvaasi said...

சிவா...

உம் திருமதி தமிழ் மீதான ஆர்வம் கண்டு புல்லரிக்கிறது...

நண்பர்களை ஒருங்கிணைத்து... டிக்கெட் எடுத்து.... சரியான இருக்கையில் அமர வைத்து... அப்பப்பா.....

வாழ்க உமது திருமதி தமிழ் பணி....

கார்த்திக் சரவணன் said...

லேட்டானாலும் சுவையான விமர்சனம்... சந்தைக்கு போவணும் ஆத்தா வய்யும் காசு குடு என்பதைப்போல் அண்ணன் ஆரூர் மூனா டேய் இடைவேளை விடுங்கடான்னு கத்தினது ஞாபகத்துக்கு வந்து போகுது..

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சொல்ல முடியாது இன்னொரு பவர் ஸ்டார் உருவாகிட்டார்.
ரா.கு, ரசிகர் மன்றம் ஆரம்பிச்சி face book
page ஓபன் பண்ணிடலாம்னு நினைக்கிறன் . படம் பாத்தவங்க வந்து லைக் போடனும்.சொல்லிட்டேன்.

சீனு said...

ஏன் தலைவா மெட்ராஸ் ஒட்டுமொத்த பதிவுலகமும் உங்கள வாழ்த்தி அப்பப்போ கமெண்ட் கொடுத்துட்டே இருந்ததே அந்தப் பொ(பு)ன்னான வரிகளை ஏன் எழுதவில்லை...

கதறி சிதறி பதறி உதறி உங்க ரைமிங் சூப்பர்...
திருமதி தமிழ் படம் எனக்குக் கற்றுக் கொடுத்த பாடம் "எங்கம்மா அப்பவே சொல்லிச்சு, இந்த மாதிரி பசங்க கூட சேராத சேராத"ன்னு

Unknown said...

ஆனாலும் ஓட்டறதுக்காவது இந்த மாதிரி படம்லாம் வரனும்...
அப்பதான் கஷ்டபட்டு சான்ஷ் தேடி அலையறவங்களுக்கு இவங்கலாம் படம் எடுக்கறப்ப நாம எடுக்க முடியாதானு நம்பிக்கை வரும்

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் நீங்க எல்லாரும் உயிரோடு திரும்பி வந்ததுக்காக சந்தோஷப் படுங்கப்பூ...

கோவை நேரம் said...

ஆனாலும் ரொம்ப தைரியம்தான்...

பட்டிகாட்டான் Jey said...

neenga "surarkal" othukidurom.... :-))

Sakthi Dasan said...

தங்களின் இந்த பதிப்பு மிகவும் அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர எங்களின் http://www.tamilkalanchiyam.com வலைபதிவில் பகிரும் மாறு வேண்டுகிறோம்.
இப்படிக்கு
தமிழ் களஞ்சியம்

arasan said...

இந்த படத்தை பார்த்ததுக்கு அப்புறம் இனி எந்த மாதிரி படம் வந்தாலும் பாக்க முடியும் என்கிற தன்னம்பிக்கையை கொடுத்திருக்கு அண்ணே ...

Unknown said...

ஆஹா,என்ன ஒரு தில் இருந்திருக்க வேண்டும்,சிவாவுக்கு?(அதுக்குத்தான் கூட நாலு பேரக் கூட்டிக்கிட்டுப் போனேய்யா,வெண்ண!)அருமையான ஒரு காவியத்தைப் பார்த்து வந்து,எங்களுக்கும் அதன் பெருமை உரைத்து,நீங்களும் பெறுக யாம் பெற்ற இன்பம் என்று....................அட,அட,அட....................உங்களை எப்படிப் புகழ்வது?(எந்த விளக்கு மாற்றால்?)நன்றி,நன்றி,நன்றி!!!!!!!!!!!!!!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல தைரியம் உங்களுக்கு.... இதுல கூட சில பதிவர்களை கூட்டிட்டு போய், எல்லாரும் பதிவு எழுத, நாலாவது விமர்சனம் படிக்கறேன்! :)

இதுலையே மயக்கம் வர மாதிரி இருக்கே..... படம் வேற பார்க்கணுமா என்ன?

:)))))) ரசித்தேன்.

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

உங்கள் மனதைரியம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. இந்தாங்கள் அருந்துங்ககள் இந்த உற்சாக சோம பானத்தை ... திருமதி தமிழ் 5௦௦ வது நாளில் உங்களை சந்திக்கிறேன்

Related Posts Plugin for WordPress, Blogger...