CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, April 7, 2013

வரதராஜனின் - ஆசைக்கும் ஆஸ்திக்கும்


                                                           

சென்ற வார இறுதியில் தி.நகர் வாணி மஹால் களை கட்டி இருந்தது. எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன், ஒய்.ஜி. மகேந்திரா ஆகியோரின் நாடகங்கள் அரங்கேற, மறுபக்கம் வரதராஜனின் 'ஆசைக்கும், ஆஸ்திக்கும்' நாடகமும் ரசிகர்களை ஈர்த்தது. 'என்று தணியும் இந்த சுதந்திர தாகத்தில்' வரதராஜனை நாரதராக பார்த்ததால் இம்முறை சமூக கதாபாத்திரம் ஒன்றில் எப்படி பெர்ஃபாம் செய்துள்ளார் என்பதை காணும் ஆவலில் ஓபுல் ரெட்டி மினி ஹாலுக்குல் நுழைந்தேன். முதலில் குறிப்பிட்ட மூவரை போலன்றி வரது சரியாக மாலை 7 மணிக்கு டிராமாவை துவங்கி விடுவார் என ஒரு நப்பாசை இருந்தது. ஆனால்  7.16 க்குத்தான் திரை மேலே இழுக்கப்பட்டது.  

ஆசைக்கும், ஆஸ்திக்கும்..கதை, வசனம், இயக்கம் 'வேதம், புதிது' கண்ணன். பேமிலி ஃட்ராமா என்றாலும் கண்ணன் வசனம் என்பதால் கண்டிப்பாக போரடிக்காது என நம்பினேன். நம்பிக்கை வீண் போகவில்லை. கதை இதுதான். மயிலாப்பூர் வாழ் சட்டநாதன்(வரது), தையல் நாயகி(லக்ஷ்மி) தம்பதியருக்கு ஸ்ரீமதி மற்றும் நடராஜன் என இரு வாரிசுகள். நல்ல குடும்பத்தில் மகளை மணம் முடித்து விட்ட சந்தோஷத்தில் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர் பெற்றோர்கள். ஆனால் சில நாட்களே நீடிக்கிறது அந்த சந்தோஷம். மாமியார் வீட்டில் நகை, பணம் கேட்கிறார்கள் என்று அடிக்கடி ஸ்ரீமதி வீட்டில் வந்து நிற்க செய்வதறியாமல் திகைக்கின்றனர் இருவரும். அதற்கான அசல் காரணம் என்ன என்பது சஸ்பென்ஸ். 

தோழன் ஜி.வி.எஸ். மகன் அர்த்தனாரி டாலர் கணக்கில் பெரும்பணம் ஈட்டுவதைக்கண்டு    தங்கள் மகன் நடராஜனும்  அமெரிக்கா சென்று கை நிறைய சம்பாதிக்க வைக்க வேண்டும் என வரதுவும் அவர் மனைவியும் முடிவு செய்கின்றனர். அந்நேரம் பார்த்து கச்சேரியில் பாட ஒரு வாய்ப்பு வருகிறது நடராஜனுக்கு. அமெரிக்காவா? கச்சேரியா? எனும் நிலையில் கச்சேரியே என்று தீர்மானித்து பெற்றோரிடம் வாக்குவாதம் செய்கிறான் மகன். ஆனால் அவனை நிர்பந்தித்து அமெரிக்கா அனுப்பி வைக்கின்றனர். மகளைப்போல மகன் வாழ்விலும் ஒரு திருப்பம் நேர்கிறது. அது என்ன என்பதை மேடையில் காண்க.
                                                             

சட்ட நாதனாக வரதுவின் நடிப்பு க்ளாஸ். தேர்ந்த நாடக நடிகர் என்பதால் தந்தை கேரக்டரில் சிறப்பாக நடித்து கவனத்தை ஈர்க்கிறார். எதிரில் இருக்கும் கேரக்டர் ஜெர்க் அடிக்கும் வசனம் பேசும்போது சட்டென உடலை சிலமுறை சுழற்றி நிற்கும் காட்சிகளில் பாடி லாங்குவேஜ் பிரமாதம். எங்கே ஸ்லிப் ஆகி விடுவாரோ எனும் பதற்றம் நமக்குத்தான். அவருக்கில்லை. குரல் மற்றும் உருவ அமைப்பில் டி.டி. சேனலில் செய்தி வாசிக்கும்போது பார்த்தது போல் கிட்டத்தட்ட அப்படியே இருக்கிறார் மனிதர். 'நாடக மார்க்கண்டேயன்' பட்டம் ஏதேனும் வாங்கியுள்ளாரா என்று தெரியவில்லை. 

தையல் நாயகியாக லக்ஷ்மி தனது மகன் குறித்த கவலையில் நீளமான வசனம் பேசும் காட்சியில் அருமையாக ஸ்கோர் செய்துள்ளார். சென்ற ஆண்டு சிறந்த நாடக நடிகைக்கான விருது வென்றவர் என்றால் கேட்கவா வேண்டும். அப்பாவியாக ஆரம்பத்திலும், யு.எஸ் ரிடர்ன்  ஆக அலம்பல் செய்வதிலும் நடராஜன் கேரக்டர் வித்யாசப்படுத்தி இருப்பது நன்று. அலட்சியம் கலந்த நடிப்பில் ஸ்ரீமதி கேரக்டரும் ஓகே.       

'என் மகன் வெளிநாட்ல சம்பாதிக்காம டிசம்பர் மாசம் மத்யான கச்சேரி செய்யவா பிறந்திருக்கான்' போன்ற  கண்ணனின் வசனங்கள் பக்க பலம். நடுத்தர குடும்பங்களில் நடக்கும் பிரச்னைகளை ஏற்கனவே பலமுறை திரைப்படம் மற்றும் டி.வி. நாடகங்களில் பார்த்திருக்கும் நமக்கு, இங்கும்  கதையில் பெரிய வித்யாசம் தென்படவில்லை என்பது குறைதான். ஆனால்  நல்ல வசனம் மற்றும்  தொய்வற்ற  நடிப்புத்திறனால் பார்ப்போரை ரசிக்க வைத்திருக்கிறது 'ஆசைக்கும், ஆஸ்திக்கும்' அணி. அவ்வகையில் கண்டிப்பாக பாராட்டலாம்.

Image copyright: madrasbhavan.com   
..............................................................13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு பட்டத்தை தந்து விட்டீர்கள்... நாடக விமர்சனத்திற்கு நன்றி...

Unknown said...

தல இன்னுமா நாடகமெல்லாம் பாக்குறிங்க

! சிவகுமார் ! said...

@திண்டுக்கல் தனபாலன்

வாங்க சார்.

! சிவகுமார் ! said...

@ சக்கர கட்டி

எத்தனை நாள்தான் சினிமா பாக்குறது. அதான்!!

பால கணேஷ் said...

நம்மோட அடுத்த மீட்டிங்குல சமோசா, காபியோட உம்ம ரசிகப்படைகள் கைதட்ட... ‘நாடக விமர்சக மணி’ன்னு ஒரு பட்டத்தை உமக்குத் தர்றேன் ஓய்... அசத்தறீரே விமர்சனங்கள்லேயே..!

கவியாழி said...

நாடகம் பார்த்தும் நடிப்பவர்களையும் நாடகச் சபாக்களையும் உற்சாகப்படுத்தும் உங்களது பதிவு பாராட்டுக்குரியது

Yoga.S. said...

விமர்சனத்திற்கு நன்றி!

CrazyBugger said...

Ivaru vanthutttttaaaaalumm...

MANO நாஞ்சில் மனோ said...

அடப்பாவிகளா நாடகத்துக்கும் விமர்சனம் எழுத ஆரம்பிச்சாச்சா வெளங்கிரும் ஹி ஹி...

! சிவகுமார் ! said...

@ பால கணேஷ்

லம்ப்பாக ஒரு அமவுன்டையும் தந்தால் சந்தோஷமாக இருக்கும்.

! சிவகுமார் ! said...

@ கவியாழி

நன்றி சார்

! சிவகுமார் ! said...

@ யோகா

வருகைக்கு நன்றி யோகா

! சிவகுமார் ! said...

@ நாஞ்சில் மனோ

நீங்க பாத்திமா, சுகன்யா மேடம்களுக்கே விமர்சனம் எழுதும்போது இதெல்லாம் ஒரே மேட்டராண்ணே!!

Related Posts Plugin for WordPress, Blogger...