CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, March 29, 2013

Himmatwala 1983, 2013


ஹிம்மத்வாலா - 1983:
                                                           

1983 ஆண்டின் நம்பர் ஒன் ஹிட் படமான 'ஹிம்மத்வாலா'வை மீண்டும் உயிர்ப்பித்து இருக்கிறார் இயக்குனர் சஜித் கான். அஜய் தேவ்கன், தமன்னா நடிப்பில் இன்று ரிலீஸ் ஆகியிருக்கும் ஹிம்மத்வாலா பற்றிய விமர்சனத்தை இறுதியில் பார்க்கலாம். முதலில் 1983 பட விமர்சனம்.

''மொதல்ல ஹிம்மத்வாலான்னா இன்னான்னு சொல்லுபா?'' என்று கேட்போருக்கு...''நம்ம பாஷைல சொல்லனும்னா 'தில்லு தொர'..போதுமாப்பா? தெலுங்கில் 1981 இல் வெளிவந்த ஊரிகி மொனகடுவின் ரீமேக். இரண்டையும் இயக்கியவர் ராகவேந்திர ராவ்காரன்டி. பெர்பெக்ட் மசாலா படத்திற்கான அனைத்து இலக்கணமும் உங்களுக்கு கேரன்டி.   

இஸ் பிக்சர் கா கஹானி க்யா ஹை பாய்?

ஆஜா தேக்லே....

ராம்நகரை ஆட்டிப்படைக்கும் டாகூர்(பண்ணையார்?) ஷேர்சிங்(அம்ஜத் கான்). ரொம்ப கெட்டவர். அவர் செய்யும் கொலையை ஹீரோவின் தந்தையான பள்ளி வாத்தியார் பார்த்து விடுகிறார். அவரால் பிரச்னை ஆகிவிடும் என்பதால் பழிசுமத்தி ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறார் ஷேர்சிங். உள்ளூரில் தாயும், தங்கையும் கஷ்டப்பட வருடங்கள் பறக்கின்றன. இளங்காளையாக ஊர் திரும்பும் ஹீரோ ஷேரை எப்படி திருத்தி பாடம் புகட்டுகிறார் என்பதை என்னமா சொல்லி இருக்கிறார்கள். யப்பா!!

ஹிம்மத்வாலா 1983 - உலக சினிமாத்தன உத்திகள்:

* அம்சமான விக், காராசேவ் மீசை, காலியான சூட்கேஸ், கைப்பை சகிதம்  ஊரில் வந்து இறங்குகிறார் ஜிதேந்திரா தி ஹீரோ. நதியின் குறுக்கே அணை கட்டும் நேர்மையான பொறியாளர். "அந்த காலி சூட்கேஸ், பைல  நாலு தேங்காயாவது போட்டு வைட் இருக்குற மாதிரி காட்டி தொலஞ்சா என்ன?" என்று கேட்கும் ரசனையற்ற மேதாவிகளே...சுப் ரஹோ. தட்ஸ் ஆல்.   

* நாயகி ஸ்ரீதேவி. ஸ்வாமி..இவர் யாராக இருக்கக்கூடும்? அதேதான். ஷேர்கானின் ஒரே செல்ல மகள். பணக்கார திமிருடன் அரைகுறை ஆடை அணிந்து ஏழைகளை பகடி செய்வது இவளுக்கு பொழுது போக்கு. சரிவிகித மசாலா மிக்ஸ் மிஸ் ஆகாமல் இருக்க அம்மணியுடன் எப்போதும் உலாவரும் தோழிகள் இல்லாமலா? உண்டு. உண்டு. முதலில் ஹீரோவிடம் மோதும் இவள் பிறகு அவனது ஈரம் சொட்டும் மனம் கண்டு காதலிக்க ஆரம்பிக்கிறாள். எப்டி? அமைதி. அமைதி. அதிரடி திருப்பமே இனிதான். காதல் பூத்து குலுங்க ஆரம்பித்ததும் மாடர்ன் ட்ரெஸ்ஸை உதறிவிட்டு(சென்ஸார்ட்) மீதிப்படம் முழுக்க புடவையில் வலம் வருகிறார். கெய்சா லகா?? ஷாக் லகா??? ரோனா  மத் மேரி ஹிம்மத் வாலே...குச் அவுர் பாக்கி ஹை. 

* ஜிதேந்திராவை தீர்த்துக்கட்ட தந்தை செய்யும் சதியை ஒட்டுக்கேட்டுவிட்டு கலங்குகிறார் ஸ்ரீதேவி. ஹீரோவிடம் ஓடிப்போய் 'மேரே பிதா ஆப்கோ மார்னே கேலியே ப்ளான் கியா ஹை' என சேதி சொல்ல அடுத்து ஒரு  ஃபைட். ஹவ் இஸ் தாட்?

* இப்படி இரண்டரை மணிநேர படம் நெடுக அன்லிமிடட் மசாலா பஃப்பே தான் போங்கள். ஓவர் ஹீரோயிசம் செய்யாத ஜிதேந்திரா, இஷ்டத்திற்கு உறுமி உயிரெடுக்காத அம்ஜத் கான் இருவரையும் பாராட்டலாம். பப்பி லஹரி இசையில் 'நைனோ மே சப்னா' பாடல் அடித்து தூள் கிளப்புகிறது. கிஷோர் குமார், லதா மங்கேஷ்கர் ஆகியோரின் க்ளாஸ் குரல்வளமும், கலர்ஃபுல் செட்டும் கனப்பொருத்தம். இன்னொரு ஹிட் பாடல் 'தாகி தாகி ரே'. செவிக்கினிமையான மெலடி துள்ளல். பாடியிருப்பது கிஷோர் குமாரும், ஆஷா போஸ்லேவும். 

* இளசுகளை சுண்டி இழுக்கும் அதிமுக்கிய அம்சம் சந்தேகமின்றி நம்ம ஸ்ரீதேவிதான். ஹோம்லி லுக், கிளாமர் கிக்...இந்திய சினிமாவில் இந்த தேவதையை பீட் செய்ய யார் இருக்கிறார்கள்? முதல் பாதி முழுக்க மினி ஸ்கர்ட், நீச்சல் உடை, தம்மாதூண்டு ட்ரவுசர் என கிறங்கடிக்கிறார். பாடல் காட்சிகளில் அற்புதமான நடன அசைவுகளால் (ஜிதேந்திராவுடன் நம்மையும் ) கட்டிப்போடுகிறார் இந்த கலியுக ரம்பை. ஐ லவ் 1980's ஸ்ரீதேவி!!!!!!!!  

இப்பேற்பட்ட ஹிட் சினிமாவை 2013 இல் எப்படி 'எடுத்து' இருக்கிறார்கள்?
      
ஹிம்மத்வாலா - 2013:        


ஹிந்தியில் முழுநீள நகைச்சுவை படங்களை நான் அதிகம் பார்த்ததில்லை. இயக்குனர் சஜித் கான் காமடி பட பிஸ்தா என்று கேள்விப்பட்டதாலும், அதனிமும் மேலாக அபிமான நாயகி தமன்னா தரிசனம் காணும் உந்துதலாலும் தியேட்டரில் என்ட்ரி குடுத்தேன். ரிலீசுக்கு முன்பு சஜித் பேசிய பேச்சு மீடியாவில் பெரிதாக பேசப்பட்டது. அவர் சொன்னது இதுதான்: "இந்தப்படம் கண்டிப்பாக ஹிட். விமர்சகர்கள் அரை ஸ்டார் போட்டாலும் எனக்கு கவலை இல்லை. அஜய் தேவ்கன் அறிமுகமாகும் சீனில் தியேட்டரில் க்ளாப்ஸ் விழாவிட்டால் டிக்கட் காசு திரும்ப தரப்படும்" என தலைவர் அள்ளிவிட்டது எல்லாம் ஓவர் கான்பிடன்ஸ் என்பதே உண்மை. 

WWF டைப் சண்டை ஒன்றில் ஃபாரின் பைட்டர் ஸ்டீல் கம்பியை வளைத்து தூக்கிப்போட அது தேவ்கன் கழுத்தில் விழுகிறது. அதை கையால் நிமிர்த்தி எடுக்கிறார் அண்ணாத்தை. இந்த சுரத்தில்லாத அறிமுக சீனுக்கு ஆடியன்ஸ் எவரும் க்ளாப்ஸ் அடிக்கவே இல்லை. கேரக்டர் பெயர்கள், பெரும்பாலான சீன்கள், செட் ப்ராப்பர்டிகள் போன்றவற்றை 1983 ஒரிஜினலில் இருந்து அப்படியே லாவி இருக்கின்றனர். 

1983 ஹிம்மத்வாலாவை நக்கல் அடிக்க முயற்சி செய்து பெரிய தோல்வியை சந்தித்து இருக்கிறார் இயக்குனர். 'தமிழ்ப்படம்' இயக்குனர் சி.எஸ். அமுதனிடம் ட்யூசன் போய் இருக்கலாம். வில்லன் மகேஷின் அல்லைக்கையாக வரும் 'தமாஷ் தாதா' பரேஷ் ராவல் கொஞ்சூண்டு கிச்சு கிச்சு மூட்டுகிறார். வாய் விட்டு சிரிக்க ஒரு சீனும் இல்லை. இரண்டாம் பாதி தொடங்கியதும் ஒரிஜினலை விட படு சீரியசாய் படம் நகர்வதால் சீட்டில் அமர முடியாமல் தவிக்கிறார்கள் மக்கள்.

"புலியுடன் டூப் இன்றி தேவ்கன் சண்டை போடும் காட்சி ஒன்று உள்ளது" என்று வேறு பில்ட் அப் தந்தார்கள். ஆனால் பொம்மை மற்றும் கிராஃபிக்ஸ் புலியை வைத்தே ஒப்பேற்றியது கொடுமை ரே சாலே. ஸ்ரீதேவி ரோலில் தமன்னா..ஐயோ பாவம். பத்மினிக்கு போட்டியாக சரோஜா தேவி ஆடுவதை பார்த்தால் எப்படி சிரிப்பு பொத்துக்கொண்டு வருமோ அதுபோல தமன்னாவின் நடிப்பும், நடன அசைவுகளும்...100% பசந்த் நஹி ஹை காவ் வாலோ.

சஜித் சொன்னதுபோல எக்குத்தப்பாக இப்படம் ஹிட் ஆகிவிட்டால் ஹிந்தி சினிமா ரசிகர்களின் நகைச்சுவை ரசனையை எண்ணி திருமலை நாயக்கர் தூணில் முட்டிக்கொள்ள வேண்டியதுதான். வேறென்ன செய்ய? 

எனது ரேட்டிங் - 1.5/5
............................................................

.....................................

சமீபத்தில் எழுதியது:


......................................2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

समीक्षा बहुत अच्छा कर रहे हैं ...!

என்றும் மார்கண்டேயினி தான்...

MANO நாஞ்சில் மனோ said...

ஸ்ரீதேவி மாமியை உச்சிக்கு கொண்டுபோன படமாச்செய்யா ஹி ஹி...!

Related Posts Plugin for WordPress, Blogger...