CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, March 8, 2013

நாளொரு 'மேனி', பொழுதொரு வண்ணம்!!


                                                               
நண்பர் மரண கானா விஜி முன்பொரு முறை இத்தளத்திற்கு அளித்த பேட்டியில் இருந்து: 

"சென்னையின்  பேருந்து நிறுத்தங்களில் ஒன்று.  தவறான தொழில் நடக்கும் இடமும் கூட " என விவரிக்க தொடங்கினார்  விஜி.."சில வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வு. இந்த பஸ் ஸ்டாண்டில் பெண் குழந்தையுடன் நிலா எனும் பெண் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்தாள். நான் அவ்வழியே செல்கையில் தனக்கும், தன் குழந்தைக்கும் உண்ண உணவு வாங்கித்தருமாறு என்னை அவ்வப்போது கேட்பாள். என்னிடம் இருக்கும் கொஞ்ச பணத்தில் பாலும், ரொட்டியும் அவர்களுக்கு வாங்கித்தருவேன். இரவு நேரங்களில் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருக்கும் பேருந்தினுள் அவள் தொழில் துவங்கும். தன் கண் முன்னே அப்பெண் குழந்தை இருப்பதையும் பொருட்படுத்தாமல் ஆண்மகனுடன் இருப்பாள். இதைக்கண்ட நான் ஒருமுறை அவளிடம் 'உன் மகளை என்னிடம் ஒப்படைத்து விடு. வேறு எங்காவது சேர்த்து விடுகிறேன்' என்றேன். அதற்கு அவள் 'அவளை விட்டு பிரிந்தால் பிறகு நான் என்ன செய்வேன். சொல்' என்றாள். என்னால் பதில் சொல்ல இயலவில்லை. ஏனெனில் நிலாவின் ஒரே உலகம் அவளது மகள். 

"ஒரு நாள் அந்த அதிர்ச்சி சம்பவத்தை காண நேர்ந்தது. இரவில் ஆண்மகனை அழைக்க நிலா தன் பாவாடையை சிறிது தூக்கி காட்டுவாள். இதை பார்த்து பழகிய அவளுடைய ஆறு வயது பெண்ணும் பசி ஏற்படுகையில் தன்னை கடந்து செல்லும் ஆண்களை பார்த்து ஆடையை தூக்கி காட்ட துவங்கினாள். இது யார் குற்றம்? சொல்லுங்கள். அப்போது என் மனநிலை என்னவாக இருந்து இருக்கும் என்பதை உங்களால் உணர முடிகிறதா? 

சில மாதங்கள் கழித்து...  

அன்றொரு தினம். பஸ் ஸ்டாண்ட் அருகே கூட்டமாக இருந்தது. என்னவென்று பார்த்தேன். ஒரு குழியில் 19 கத்தி குத்துகளுடன் நிர்வாணமாக உயிரை விட்டிருந்தாள் நிலா. என்ன செய்வதென்று தெரியவில்லை. அவள் குழந்தையை தேடினேன். சற்று தொலைவில் கன்னத்தில் கை வைத்து நிம்மதியாக உறங்கிக்கொண்டு இருந்தது அந்தப்பிஞ்சு. அப்போது அவள் மன ஓட்டம் என்னவாக இருந்திருக்கும்.......

"தான் கண் விழித்ததும் உணவு தர தாய் வருவாள் என்று ஒரு நம்பிக்கையில்தானே அந்த குழந்தை இவ்வளவு நிம்மதியாக உறங்க முடியும்?"

"நிலா கொடூரமாக வெறியர்களால் கொல்லப்பட்ட அதிர்ச்சியில் இருந்த நான் சில நிமிடங்களுக்கு பிறகு திரும்பி பார்க்கையில் அச்சிறுமி அங்கு இல்லை. மனது வருந்தியது. ஒன்றும் செய்வதற்கில்லை. வருடங்கள் ஓடின"

"ஒரு நாள் எனக்கு பாண்டிச்சேரி ஆசிரமத்தில் இருந்து அழைப்பு வந்தது. அங்கு விரைந்தேன். சிறிது நேரம் ஆசிரம ஆட்களிடம் பேசிவிட்டு அங்கிருந்த குழந்தைகளை காணச்சென்றேன். ஒவ்வொரு குழந்தையிடமும் 'வருங்காலத்தில் நீ என்னவாக விரும்புகிறாய்' என்று கேட்டுக்கொண்டே வந்தேன். "டாக்டர், இஞ்சினியர்" என்று ஆளாளுக்கு தங்கள் ஆசையை சொன்னார்கள். இன்னொரு குழந்தையிடம் கேட்டதற்கு அவள் சொன்ன பதில் "நான் கன்னியாஸ்திரியாக விரும்புகிறேன். மக்களுக்கு சேவை செய்வதே என் நோக்கம்". அதற்கு நான் "நல்ல எண்ணம். நீ அப்படி ஒரு நிலையை அடைந்தால் எனக்கு பாவமன்னிப்பு தருவாயா?" என கேட்டேன். 

"தரமாட்டேன்" என்றாள். 

"ஏன்? "  

"நீங்கள் பாவமே செய்யவில்லையே" 

"நான் பாவம் செய்யவில்லை என்று உனக்கு எப்படி தெரியும்?"

"எனக்கு நன்றாக தெரியும். நீங்கள் பாவம் செய்யவில்லை"

"எப்படி மீண்டும் உறுதியாக சொல்கிறாய்?"

"பசியின் கோரப்பிடியில் இருந்த நாட்களில் பல முறை பாலும் ரொட்டியும் வாங்கி தந்தீர்களே... அந்த நிலாவின் மகள் நான்தான். இப்போது சொல்லுங்கள்..உங்களுக்கு நான் ஏன் பாவ மன்னிப்பு தரவேண்டும்?"

"நான் எதிர்பாராத ஆச்சர்யத்தில் நிலைகுலைந்து போனேன். அன்பு அலைமோத என்னை  கட்டிப்பிடித்து அழுதாள். எனது சட்டையின் மேற்பகுதி அவளின் கண்ணீர் துளிகளால் ஈரமாகிப்போனது". 

அனாதை சிறுமியாக கடற்கரையோரம் அலைபவள் எல்லாம் கடற்கரையில் காமப்பசியுடன் அலையும் ஆண்மகனின் வெறிக்கு ஆளாகி விடுகிறாள். ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள். முன்பு ஒரு முறை கடற்கரை பக்கம் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு சிறுமி என்னருகே வந்து நின்றாள். என்ன வேண்டும் என்றேன். அதற்கு அவள் சொன்னாள்: "அண்ணா, என் பின்புறத்தை உபயோகித்து கொண்டு பத்து ரூபாய் மட்டும் தாருங்கள்..". விபச்சாரம் செய்யும் பெண்களைப்பார்த்து காசுக்காக எதைச்செய்ய வேண்டும் என அவள் மனது உள்வாங்கிக்கொண்டதன் விளைவு".  

''அதே மெரினாவில் அவ்வப்போது சந்தித்த நபர்களில் ஒருவர் மீனாட்சி பாட்டி. வயது 70 க்கு மேலிருக்கும். தொழிலில் ஈடுபடும் சக்தி இல்லாததால் ஒதுக்குப்புறமாக இச்சை கொண்ட ஆண்களை அழைத்து சென்று அவர்களின் பிறப்புறுப்பில் வாய் குழைத்து இன்பமேற்றுவாள். ஆளொன்றுக்கு 10 ரூபாய் வாங்கினாள் அப்போது. "இந்த பிழைப்பிற்கு நீ செத்து போகலாமே?" என்றொரு முறை கூறினேன். மறுநாள் அவள் மனசாட்சி உறுத்தியதின் விளைவாக..கிடந்தாள் கடற்கரை மணலில் பிணமாக"    
....................................................................

டெல்லி பாலியல் கொடுமை நடந்த பின்பும் இந்தியாவின் காமபுத்திரர்கள் முன்பை விட இன்னும் வேகமாகத்தான் செயல்படுகிறார்கள். போபாலில் மூன்று வயது பெண்ணை கற்பழித்த தந்தை, சென்னை புளியந்தோப்பில் 70 வயது பாட்டியைக்கூட கற்பழித்த இளைஞன், சென்ற சனியன்று தலைநகராம் டெல்லியில் ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணை நாசம் செய்த பொறுக்கிகள் என எண்ணிக்கையில் அடங்காமல் நீள்கிறது பட்டியல்.

மகளிர் தினம் கொண்டாட வேண்டிய தேசமா இது?
....................................................................
10 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

:(

Yoga.S. said...

வணக்கம் சிவா!///ஒட்டு மொத்த ஆண்கள்/பெண்கள் அவ்வாறில்லையே?மகளிர் தினத்திலாவது இறுக்கமான செய்தி ஒன்றை பெண்கள் முன்வைக்க முடியுமே?

சீனு said...

பசி பணம் ஏதோ ஒரு விதத்தில் பெண்ணையும் அவள் குடும்பத்தையும் பாதித்துக் கொண்டுதான் உள்ளது

”தளிர் சுரேஷ்” said...

கண்ணீர் வர வைத்த பதிவு! பகிர்வுக்கு நன்றி! பெண்களை போற்றுவோம்!

பால கணேஷ் said...

இல்லை சிவா! இல்லை!

திண்டுக்கல் தனபாலன் said...

வறுமை... இளமையில் மிகவும் கொடுமை...

வெங்கட் நாகராஜ் said...

கடந்த சில நாட்களில் தில்லியில் மட்டுமே 10க்கும் மேல் வன் புணர்வுகள். :((((

எங்கே சென்று கொண்டிருக்கிறது நம் தேசம்.....

Unknown said...

கண்ணிரையே வரவழைத்து விட்டது இந்த பதிவு

ஆமினா said...

:(

Shan said...

Well said. Hatts off for the wonderful post.

Related Posts Plugin for WordPress, Blogger...