CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, March 12, 2013

அது வேற வாய். இது நார வாய்.           
மஞ்சா துண்டு வூடு எங்கே இருக்கிறது என்று கேட்டால் "அதோ தெர்து பாத்தியா அரிச்சந்த்ரன் வூடு. அதுக்கு பக்கத்லயே ஒரு குட்டி குடிசை இருக்கு பார். அதான்" என்று சாமான்யனும் சொல்லிவிடுவான். அத்தே பெரிய நாயஸ்தனை பாத்து நெஞ்சுல மஞ்சா சோறு இல்லாத பாவிங்க இன்னா பேச்சு பேசுறாங்க. அன்னக்கி ஒரு பேச்சு, இன்னக்கி ஒரு பேச்சு பேசுற பேமானி இல்லைய்யா எங்காளு. இன்னாது நம்ப மாட்டியா??? அப்ப இத்த படிங்கறேன்:

மொதோ:  29.8.1983  சீரணி அரங்கத்தில் "இந்திரா அவர்களே, அடுத்த 10 வருஷம் நாங்கள் தேர்தலில் நிற்கவில்லை. நீங்களே ஆளுங்கள் தமிழகத்தை. ஆனால் இலங்கை தமிழனுக்கு தனி நாடு வாங்கித்தர வேண்டும். அது உங்கள் பொறுப்பு" 

அப்பால: 2006  "ஈழ பிரச்னையில் இந்திய அரசின் நிலைப்பாடே எங்களுடையதும்" 
..................................................

மொதோ: 14.9.2008 "இன்னும் 15 நாட்களில் போர் நிறுத்தம் செய்யாவிடில் எங்கள் கட்சியின் அனைத்து எம்.பி.க்களும் ராஜினாமா செய்வார்கள்"

அப்பால: இன்று நீங்கள் இப்பதிவு படிக்கும் வரை அனைவரும் பெவிகால் வலுவாக தடவப்பட்ட சீட்டில் இறுக்கி அமர்ந்து உள்ளனர்.
.....................................................

மொதோ:"போர் நின்று விட்டதாக பிரணாப் முகர்ஜி தகவல். உண்ணாவிரதத்தை முடித்து கொள்கிறேன்"

அப்பால: "பிரணாப் என்னிடம் தவறான தகவலை கூறி விட்டார்"
.....................................................

மொதோ: மஞ்சா துண்டு ஆட்சியில் சேனல் 4 வெளியிட்ட காணொளிகளை விநியோகம் செய்த தமிழ் உணர்வாளர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது. 

இப்போ: உண்மைய வெளிச்சம் போட்டு காட்டிய சேனல் 4 நிர்வாகிக்கு மஞ்சா துண்டு தொலைபேசியில் வாழ்த்து.
.......................................................

மொதோ: "இந்தியாவுடன் சேர்ந்துதான் நாங்கள் யுத்தம் நடத்தினோம். அவங்கதான் வெப்பன் சப்ளையர்ஸ். கோத்தபயலே போஸ் குடு. போஸ் குடு" - பக்கி வீரன் ராஜபக்கிசே.

இப்போ: "இன்னொரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட முடியாது" -காங்கிரஸ் அரசு. (ஆனா பக்கிசே அரசுக்கு வெப்பன் தரலாம், பங்களா தேசத்திற்கு சுதந்திரம் வாங்கி தரலாம். அப்ப எங்க போச்சி உங்க கொள்க).

மஞ்சா ரியாக்சன்: "ஓம் சாந்தி. ஓம் சாந்தி".
...........................................................

நெரிசல் மிக்க தெருவில் ஒரு திருடனை பொதுமக்கள் துரத்துகிறார்கள். எங்கே மற்றவர்கள் தன்னை பிடித்துக்கொடுத்து விடுவார்களோ என்கிற அச்சத்தில் அவனும் சேர்ந்து "அதோ திருடன் ஓடுறான். புடிங்க. புடிங்க" என ஓடுவானாம். அப்படிப்பட்ட டமுக்கு டப்பாவுக்கு வால் புடிக்க அல்லக்கைங்க வேற.

எவனாவது கேள்வி கேட்டா "நீ அ.தி.மு.க. வா"ன்னு கேக்கறது. பாவம் அதுக்கு எந்த ஆதாரமும் இல்லைன்னு தெரிஞ்சுதும் "ஐயோ இந்த நட்ட நடு சென்டர் கூட்டம் தொல்ல தாங்கலயே"(கலாய்க்கிறார்களாம்) என்று பிதற்றுவது. மானத்தோட கட்சில இருக்கிற ஒன்னு ரெண்டு பேரு நம்மிடம் வாதம் பண்ணாக்கூட பரவா இல்ல. மாநாட்ல விசிலடிக்க காசு வாங்குற சொத்தைங்க கூவுற கூவு இருக்கே. யப்பா. இணையத்தில் ஏற்கனவே ஒரு விசைப்பலகை வீரர் அண்ணன் கே.ஆர்.பி.செந்திலிடம் வாங்கிய உண்டைக்கட்டி:

"எங்களுக்காவது தலைவன் என்று ஒருவர் இருக்கிறார். உங்களுக்கு தலைவன் யார் என்றே தெரியாது"

"தலைவன் வைத்துக்கொள்ளும் அளவிற்கு நாங்கள் காமடி பீஸ் இல்லை"
.........................................................................

மொதோ: 03/02/2009 தி.மு.க ஆட்சியில் இருக்கையில் முழு அடைப்பு நடத்துவது சட்டவிரோதம் என்று மற்ற கட்சியினரை எச்சரித்தது.

 

இப்போ: இன்று டெசோ தலைவர் சார்பாக மாநிலத்தில் முழு அடைப்பு.                                        
.........................................................

போட்றா தலைவன் பாட்ட... 

"மஞ்சா துண்டை நம்பாதே. உன்னை ஏமாற்றும்...
     
போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்.
புரியும் அப்போது மெய்யான கோலம்.

ஓம் டேஷோ என்று சொல்லி உச்சரிக்கும் கேடிகளே 
ருத்ராட்ச பூனைகளா வாழுறீங்க.
இனத்தலைவன் போர்வையிலே சாமான்ய மக்களையே 
ஏமாத்தி கொண்டாட்டம் போடறீங்க.

பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை.
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை.

மஞ்சா துண்டை நம்பாதே. உன்னை ஏமாற்றும்..."
......................................................

முந்தைய பதிவு:


 reference: media voice 
                              

14 comments:

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா சவுக்கடி பிரமாதம்...!

ராஜ் said...

சூப்பர் சிவா...

rajamelaiyur said...

மஞ்சதுண்டு முகபுத்தக சுவரில் இதை போடுங்க. . . படிச்சாவது திருந்துராரானு பார்போம். . .

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா..ஹா...

தாக்கு செம தாக்கு...

தமிழ்மகன் said...

உலகின் முதல் இருபது இணைய தளங்கள் ----- http://mytamilpeople.blogspot.in/2013/02/most-popular-websites-on-internet.html

காப்பிகாரன் said...

அண்ணே அப்படியே அந்த அம்மாவை பத்தியும் ஒரு பதிவு போடலாம்லனே

சத்ரியன் said...

யெப்பா... செவுலுல ங்ங்ங்ங்ஙொய்ய்ய்ய்ய்யின்னு சத்தம் கேக்குது ராசா. என்னா அடி!

”தளிர் சுரேஷ்” said...

அருமையான சவுக்கடி! மஞ்ச துண்டு இதப்படிச்சா பொங்கிட போறார்!

சென்னை பித்தன் said...

என்ன அடி அடிக்கறீங்க சிவா?!டாப்பு!

Yoga.S. said...

வணக்கம்,சிவா சார்!///இதெல்லாம் உறைக்குமா மஞ்சத்துண்டுப் பெரியவருக்கு?த்தூ!!!!!!!!!!!!!!

சீனு said...

அருமை தலைவா...

கார்த்திக் சரவணன் said...

போட்டுத்தாக்குங்க...

நாய் நக்ஸ் said...

siva... super...

பால கணேஷ் said...

இத்தவுட செமையா எவனும் குத்திர முடியாது சிவா! ஆனா மஞ்சாத் துண்டு கும்பலுக்கு சூடு சொரணை எதுனாச்சியும் இருக்குன்ற நீயி?

Related Posts Plugin for WordPress, Blogger...