CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, March 3, 2013

அம்மா ஸ்பெஷல் மீல்ஸ்                                             
தலைநகரில் சுடச்சுட பேசப்படும் செய்தி அம்மா மெஸ் என்பதால் சனியன்று எப்படியும் விசிட் அடிக்க வேண்டும் என்று முடிவு கட்டி இருந்தேன். காலை 7 முதல் 10 மணி வரை இட்லி மட்டுமே என்பதால் சற்று பொறுமை காத்து மதிய நேரம் செல்லலாம் என முடிவு செய்தேன்.  அண்ணன் கே.ஆர்.பி.செந்தில் அவர்களுடன் தி.நகர் சிவஞானம் தெருவை (பாண்டி பஜார் போஸ்ட் ஆபீஸ் எதிரில்)  நோக்கி பயணம்...

மதிய உணவு நேரம் 12 முதல் 3 மணி வரை. சாந்தோம் உள்ளிட்ட பல அம்மா மெஸ்களில் கூட்டம் அலைமோதுவதாக சஞ்சிகைகளில் செய்தி படித்ததால் அரை மணிநேரம் முன்னதாகவே ஏழைப்பதிவர்களாகிய நாங்கள் ஸ்பாட்டை அடைந்தோம். ஒருவரைக்கூட அங்க காணவில்லை. 11.55 மணி வாக்கில் ஓரிருவர் 'எப்ப தெறப்பீங்க?' என்று விசாரித்து விட்டு சென்றனர். 

                                                                    
நேரம் 12 மணியை நெருங்க கூட்டம் மொய்க்க துவங்கியது. க்யூவில் 99% பேர் மத்திய/மூத்த வயது ஆண்கள் மட்டுமே.  ஜன்னலோரம் டோக்கன் வாங்க காத்திருந்த நேரத்தில் கே.ஆர்.பி. உள்ளே சென்று ஒளிப்பதிவு வேலைகளை கவனிக்க அருகில் இருந்த சிலர் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தேன். "சமோசா, ஊறுகாய் எல்லாம் இது மாதிரி போட்டா சும்மா பிச்சிக்கும்" என்றார் ஒருவர். முன்னிருந்த பெரியவரிடம் "ஒரு ஆளுக்கு ஒரு சாப்பாடு மட்டுந்தானா? " என நான் வினவுகையில் கிடைத்த பதிலிது "இல்ல. எத்தினி வேணா வாங்கிக்கலாம். நேத்தி கூட நான் 3 டோக்கன் வாங்குனேன். ஆனா ஒண்ணு  வெளில எட்துனு போவ வுட மாட்டாங்க". 

                                                                   
டோக்கன் தந்த இடத்தருகே பளிச்சென மூன்று வாஷ் பேஷின்கள். சரியாக 12.05   மணிக்கு ஜன்னலைத்திறந்தார் அன்னலட்சுமி. ஒரு சாம்பார் சாதம், ஒரு தயிர் சாதம் இரண்டிற்கும் சேர்த்து 8 ரூபாய் தந்துவிட்டு போஜன அண்டாவை நோக்கி உள்ளே நுழைந்தோம். பெரிய சைஸ் எவர்சில்வர் தட்டில் ஒரு நபர் தாராளமாக சாப்பிடும் அளவிற்கு சாதம் பரிமாறப்பட்டது. உணவருந்தும் அறைகள், சமையல் கூடம் மற்றும் குடிநீர் வசதி என அனைத்தும் சுத்தத்தின் உச்சம். 

                                                             
சாம்பார் சாதம் படு திவ்யம். (நம்ம) அம்மா கையால் நன்றாக பிசைந்து தரப்படும் ருசிக்கு நிகராக இருந்தது. 5 ரூபாய்க்கு ஓஹோ பேஷ் பேஷ். அதை கிளறிப்பார்த்ததில் கண்ணில் பட்ட காய்கறி என்றால் அது உருளைக்கிழங்கு மட்டுமே. தயிர் சாதத்தில் உப்பு சற்று தூக்கல். அம்மா மெஸ் துவங்கிய நாளில் பொதுமக்கள் குறிப்பிட்டு சொன்ன விஷயம் "வெறும் சோறு சாப்புட கொஞ்சம் கஷ்டமா இருக்குங்க. கூட கொஞ்சம் காசு வாங்கிட்டு சாம்பார் சாதத்துக்கு கொஞ்சம் பொரியல், தயிர் சாதத்துக்கு ஊறுகாய் போட்டா ரெண்டு கவளம் அதிகமா எறங்கும்" என்பதே. சாம்பார் சாதத்தின் ருசிக்கு "நான் அப்படியே சாப்பிடுவேன் ஜெயா மம்மி" என்று சமத்தாக சாப்பிட்டு விடலாம். ஆனால் தயிர் சாதத்திற்கு கொஞ்சம் ஊறுகாய் போடலாம் என்பது நியாயமான கோரிக்கைதான். மற்ற இடங்களில் எல்லாம் பேப்பர் தட்டில் சோறு போட இங்கு எவர்சில்வர் தட்டு என்பது சம்திங் ஸ்பெஷல் தான்.          

                                                             
டப்பு பார்ட்டிகள் அதிகம் உள்ள ஏரியா என்பதால் தி.நகரில் எதிர்பார்த்ததை விட கூட்டம் குறைவாகவே இருந்தது. பிற இடங்களில் மக்களின் படையெடுப்பால்  1 மணிக்கே அண்டாவை கவிழ்த்துவிட்டு 'இன்று போய் நாளை வா'தான் என்று செய்திகள் வருகின்றன. 'என்ன தம்பி ஒரு ஒரு பருக்கையா கிள்ளி சாப்புடறீங்க. வயசு புள்ள நல்லா மொள்ளி சாப்புடுங்க' எல்லாம் கிடையாது. செல்ப் சர்வீஸ்தான்.  உணவு வாங்கியவர்களை ''உள்ள எடம் இருக்கு. அங்க போய் சாப்புடுங்க சார்' என்று என்னிடம் பவ்யமாக கூறினார் ஒரு ஊழியர். மயிர் கூச்செறிய வைத்த மகோன்னத நொடிப்பொழுதுகள் அவை. வெளியே நிற்கும் வரிசையை ஒழுங்குபடுத்துதல் கூட அவரது இலாகாதான்.மற்றபடி  அக்காக்கள் ராஜ்ஜியம்தான். அனைவர் முகத்திலும் புன்சிரிப்பு மற்றும் அமைதியாக பதில் தரும் முறை...தேவுடா தி.நகர்ல மட்டுந்தான் இப்படியா? இல்ல இன்னைக்கும் மட்டும் நடக்குற அதிசயமா? 

"இந்த பணிவு, பளிச் சூழல் எல்லாம் எத்தனை நாளைக்குன்னு பாப்போம்"

"இந்த வெலைக்கி எத்தனை நாள் நல்ல சோறு போட முடியும்?"

இவ்விரண்டும்தான் அதிகம் கேட்கப்படும் கேள்விகள். அதை பொறுத்திருந்து பார்க்கலாம்.அங்கிருந்த பெரியவர் ஒருவர் "அவங்க தர்ற தட்டுலதான் சாப்புடணும்னு இல்ல. நம்ம கூட டிபன் பாக்ஸ் கொண்டு போகலாம். அதுல வச்சி உள்ள சாப்டுட்டு வெளில போலாம். பார்சல் கண்டி எட்துனு போன புட்சிக்குவான்" என்று  கிலியேற்றினார்.   

கலர் டி.வி., காப்பீட்டு திட்டம் என்று வகை வகையாக மக்கள் மனதை கவ்வுவதில் கலைஞர்தான் கில்லி என்றால் அவரது திட்டங்களால் இம்ப்ரஸ் ஆகி தனது ஸ்டைலில் அம்மா பிழிந்து இருக்கும் சென்டிமென்ட் ரசம் தற்போது வெற்றி நடை போடுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.   

                                                                 
சென்னை மாநகரின் ஏழைப்பதிவர்களே உங்க ஏரியா அட்ரசை நோட் பண்ணிக்கங்க. ஞாயிறு கூட லீவு இல்லையாம்: 

 1. 185, Thiruvottiyur High Road, Thiruvottiyur
 2. 29 Street, Mathur, Manali
 3. Mattur Link Road, Surapet, Madhavaram
 4. Bommi Sivaramulu Street, Old Washermenpet
 5. 37, Nattu Pillaiyar Koil Street, in ward 55 of Royapuram Zone
 6. Dr.Ambedkar College Road, Pulianthope
 7. Kattabomman Street, Oragadam, Ambattur
 8. Taylors Road, Kilpauk
 9. near IG Registration Office, Santhome High Road
 10. Sivagnanam Salai, T.Nagar
 11. Poonamallee High Road, near North Mada Street, Maduravoyal
 12. Nehru High Road, Nanganallur
 13. Kuppam Kadarkarai Salai, Thiruvanmiyur
 14. Anna Nedunchalai, Perungudi 
 15. Kannagi Nagar Second Main Road, Thoraipakkam
     
இன்று மேலும் சில உணவங்களின் திறப்பு விழாவாம். முகவரி கீழே:

Manali Express Road, Thiyagi Sathyamurthy Nagar, ward 6;
Perumal Koil Street, Elanthanoor, ward 16; 
Nehru Street, Ponniammanmedu, ward 33;
New Vinobha Nagar, ward 38; 
Mangammal Thottam, New Washermenpet, ward 40; 
Anna Pillai Street, ward 57; Egmore railway station entrance near Dina Thanthi, ward 58; 
Paper Mills Road, Sembium, ward 68;
Valluvan Street, Otteri, ward 75; Mariamman Koil Street, Menambedu, Ambattur, ward 82;
No. 24, Mangalapuram, 7th Street, Chetpet, ward 107; 
MGR 3rd Street, MMDA Colony, ward 108; 
No. 4, Muthiah Street, Royapettah, ward 120; 
No. 1, Ayyappa Nagar Main Road, Koyambedu, ward 127; 
Kamaraj Colony Main Road, Kodambakkam, ward 134; 
Madha Koil Street, Nerkundram, ward 145; Raja Street, First Lane, Alandur, ward 162; 
Balakrishnapuram Main Road, Adambakkam, ward 163; 
Thiruvenkatan Street, near zonal office, Adyar, ward 175; 
First Avenue, Besant Nagar, ward 176; 
MGR Nagar, Velachery-Taramani Road, ward 183; 
division office, ECR, Palavakkam, ward 185; 
Velachery-Tambaram Main Road, near Pallikaranai compost, ward 190; 
Kaliamman Koil Street, Karapakkam, ward 197.   
.........................................................................

குறிப்பு: தி.நகர் மம்மி மெஸ்ஸில்  சாப்பிட்ட அனுபவம் இங்கு பகிரப்பட்டுள்ளது. வேறு கிளைகளில் புவ்வா சாப்பிட்டுவிட்டு "என்னடா இங்க அன்ன அனுபவம் இப்படி இருக்கு? நீ என்னவோ அப்படி சொன்ன? " என்று  டமுக்கு டப்பாத்தனமாக கேள்வி எழுப்பினால் அரசாங்க இட்லியால் ஓட விட்டு அடிப்பேன். 
.........................................................................  
    
சமீபத்தில் எழுதியது:

சிவாஜி செத்துட்டாரா?

28 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

first idly

கோகுல் said...

2nd சாம்பார் சாதம்

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான பகிர்வு! எங்க ஊரு பக்கம் இந்த மெஸ் வரலை போல! வந்தா நல்லா கல்லா கட்டலாம்! (பொன்னேரி ஏரியா) நன்றி!

Yoga.S. said...

நல்ல பகிர்வு,சிவா சார்!ஏழைப் பதிவர்கள் பயன் பெறுவார்கள்!!!!

திண்டுக்கல் தனபாலன் said...

ஏழைப் பதிவர்களே... நல்லா சாப்பிடுங்கப்பா...

Prem S said...

கூட்டம் அதிகமானால் அந்த தட்டை கழுவுவாங்களா .கழுவாமல் தண்ணீரில் முக்கி எடுக்கவே பேப்பர் தட்டில் போடப்பட்டு வருகிறது கையேந்தி பவன்களில் ..

CS. Mohan Kumar said...

சுவாரஸ்யமாய் பதிவு செய்துள்ளீர்கள். மற்ற இடங்களும் இதே போல் இருந்தால் மகிழ்ச்சி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதெல்லாம் உண்மையா இல்ல வஞ்சப்புகழ்ச்சியான்னு தெரியலையே ராஜா........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்படியே அன்லிமிட்டடும் போட சொல்லுங்கப்பா......

பால கணேஷ் said...

அப்ப... குறைஞ்ச விலையில சாப்பாடு டிசைன்... ச்சே, ‘டிவைன்’ங்கறீங்க...!

செங்கோவி said...

Raittu.

! சிவகுமார் ! said...

@ ரமேஷ்

Let's hope for kushboo idly in dmk rule.

! சிவகுமார் ! said...

@ கோகுல்

5 ரூவா டோக்கன் வாங்கிட்டு வரவும்.

! சிவகுமார் ! said...

@ கோகுல்

5 ரூவா டோக்கன் வாங்கிட்டு வரவும்.

! சிவகுமார் ! said...

@சுரேஷ்

நல்ல கல்லா கட்டனும்னா கஜுரஹோ போனாத்தான் உண்டு.

! சிவகுமார் ! said...

@ யோகா

நன்றி யோகா.

! சிவகுமார் ! said...

//Prem s said...
கூட்டம் அதிகமானால் அந்த தட்டை கழுவுவாங்களா .கழுவாமல் தண்ணீரில் முக்கி எடுக்கவே பேப்பர் தட்டில் போடப்பட்டு வருகிறது கையேந்தி பவன்களில் ..//

தேவைப்பட்டால் டிபன் பாக்ஸ் கூட கொண்டு போகலாம்.

! சிவகுமார் ! said...

@ மோகன்குமார்

நன்றி சார்

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
இதெல்லாம் உண்மையா இல்ல வஞ்சப்புகழ்ச்சியான்னு தெரியலையே ராஜா...!!//

உண்மைதானுங்க.

! சிவகுமார் ! said...


//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அப்படியே அன்லிமிட்டடும் போட சொல்லுங்கப்பா......//

பட்டிக்ஸ் தலைமையில் நிதி நிர்வாகக்குழு இது குறித்து முடிவெடுக்கும்.

! சிவகுமார் ! said...


//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அப்படியே அன்லிமிட்டடும் போட சொல்லுங்கப்பா......//

பட்டிக்ஸ் தலைமையில் நிதி நிர்வாகக்குழு இது குறித்து முடிவெடுக்கும்.

! சிவகுமார் ! said...

/பால கணேஷ் said...
அப்ப... குறைஞ்ச விலையில சாப்பாடு டிசைன்... ச்சே, ‘டிவைன்’ங்கறீங்க...!/

ஆமாம் சார்.

! சிவகுமார் ! said...

//பால கணேஷ் said...
அப்ப... குறைஞ்ச விலையில சாப்பாடு டிசைன்... ச்சே, ‘டிவைன்’ங்கறீங்க...!//

ஆமாம் சார்.

! சிவகுமார் ! said...


//செங்கோவி said...
Raittu.//

வருக நண்பரே

Mr.Salem said...

Ponga sir

சென்னை பித்தன் said...

மற்ற எல்லாத் திட்டத்தையும் விட இது நல்ல திட்டம்!

ப.கந்தசாமி said...

கோயமுத்தூரிலும் ஏழைப் பதிவர்கள் இருக்கிறோம். கருணை காட்டப்படாதா? கார் பார்க்கிங் வசதி இருக்கிறதா?

ஆமினா said...

அம்மா மெஸ் பத்தி சிவா ப்ளாக்ல பதிவு வரும் விரைவில் என்ற காற்று வழியே கசிந்த செய்தியை கவ்விக்கிட்டு இன்னைக்கு தேடி பார்த்ததில் நல்லவேளை எளிதாகவே கிடைத்துவிட்டது இந்த பதிவு :-)

//Manali// சென்னையில் குளு, மணாலியா... இல்லை வீடுதிரும்பல் ப்ளாக் பார்த்த எபெக்ட்டா (என்னை நானே கேட்டுக்குறேன் :-)

பதிவு அருமை... அம்மா மெஸ் ல சாப்பாடு எப்படின்னு படிக்கும் முதல் பதிவு :-) பகிர்வுக்கு நன்றிங்க்

Related Posts Plugin for WordPress, Blogger...