'என்னது இலங்கைல இனப்படுகொலையா?' என்று பதவி போன பின்பு, விழித்தெழுந்த மாதிரி நடித்து இப்போது ஏக உக்கிரத்தில் நித்தம் ஒரு காட்சியை அரங்கேற்றிக்கொண்டு இருக்கிறார் 'தி சோ கால்ட்' தமிழினத்தலைவர். அஹ்..த்தூ..(மன்னிக்கணும் நாராயணா. வாய்க்குள்ள கொசு). நெஞ்சுல மஞ்சா சோறு இருக்கிற தமிழன் ஏற்றுக்கொண்ட தன்மானத்தலைவர்கள் என்றால் அது இருவர் மட்டுமே. மண்டைக்கு மேலேயும், குண்டிக்கு கீழேயும் ஏசி போட்டுக்கொண்டு சூப்பர் ஃப்ளாப் படம் காட்டாமல், சுயநலம் மறந்து மக்களுக்காக உழைத்து உயிர்நீத்த கர்மவீரர் காமராஜர் ஒருவர். போர்க்களத்தில் ஒட்டுமொத்த குடும்பத்தையும் தாரை வார்த்து நீங்காப்புகழ் பெற்றிருக்கும் மாவீரன் பிரபாகரன் இன்னொருவர்!
'சொல்வதை செய்வோம், செய்வதை சொல்வோம்' எனும் வார்த்தைகள் அடங்கிய ஓலைச்சுவடி ஞாபகம் இருக்கிறதா மக்களே. அநேகமாக எழும்பூர் மியூசியத்தின் பாதாள அறைக்கு சென்றால் இதைப்பார்க்க வாய்ப்புண்டு. 'சொல்ல வேண்டியதை சொல்லோம். செய்யக்கூடாததை செய்வோம்' எனும் தலைப்பில் ரீமிக்ஸ் பாடல் ஒன்றே சாலப்பொருத்தமாக இருக்கும் இந்த கென்டக்கி கர்னல்களுக்கு. என்னதான் வாய்கிழிய வகை வகையாக வடை சுட்டாலும், அதிகாரப்பூர்வமாக முன்னெடுக்கப்படும் செயல்களுக்கு இருக்கும் வலிமையே பூரணமானது. மத்திய அரசிதழில் காவிரி தீர்ப்பு, இலங்கை இனப்படுகொலைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் என தனது நிலைப்பாட்டை 'கெணறு வெட்டுன ரசீது' வைத்துக்கொண்டு நிரூபித்து வருகிறார் ஜெ. ஆனால் பொறி உருண்டையோ 'அனகோன்டாவை தீண்டி இருக்கிறேன். சீனப்பெருஞ்சுவரை தாண்டி இருக்கிறேன்' என்று சூரமொக்கை டயலாக்குகளை பேசி வருகிறார். இது 2013 சாமி. இன்னுமா?
டெ'ஷோ' காட்டும் பெருங்கட்சியின் சீமந்த சீடர்களே, தற்போது மிஞ்சி இருக்கும் ஈழ சொந்தங்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி 'எங்கள் தலைவர் உங்கள் இனமீட்சிக்கு போராடுவது சம்மதமா?' என்று ஒரே ஒரு முறை கேட்டுப்பாருங்கள். ஒருவேளை பெரும்பாலானோர் 'ஆம்' எனக்கூறிவிட்டால் பிய்ந்த செருப்பால் என்னை அடித்து கழக அலுவலக வாசலில் போடுங்கள். அடுத்த நொடியே அடி(ப்)படை உறுப்பினராகி வாழ்நாள் முழுக்க உங்கள் தலைவர், அவரது மகன், பேரன், கொள்ளு, லொள்ளு பேரன்கள் புகழ் பாடியே மோட்சத்தை அடைய முயற்சிக்கிறேன்.
'திருச்சி சிவா எனும் கழகப்பெருமான் நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழ் மக்களுக்காக உணர்ச்சி பொங்க பேசினார். தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி அவர் நிகழ்த்திய இடிமுழக்கத்திற்கு முன்பு (பூம்புகார்) கண்ணகியின் வசனங்கள் எம்மாத்திரம்' என்று புளகாங்கிதம் அடையும் இணைய உடன்பிரப்ஸ்களே, அப்படியே முறுக்கேறிய நரம்புகளுடன் கோபாலபுரம் நோக்கி படையெடுத்து 'அய்யா....நீதி செத்து போச்சுங்க. நாயம் வித்து போச்சுங்க. இன்னைக்கு மத்யானம் அம்மா மெஸ் சாம்பார் சாதத்த சாப்டுட்டு 'நம்ம தயிர் சாதங்க'ளோட டெல்லி போகனுமுங்க. எம்.பி. பதவியை ராசினாமா செஞ்சிட்டுதானுங்க மறுவேல பாக்கோனும்' என்று சொல்ல இன்றே முயற்சி செய்யுங்கள். ஓ சாரி.. டெக்னிக்கல் ஃபால்ட். இன்று தாத்தாவின் பிறந்த நாள் வேறு. நாளை முயற்சிக்க. 60 வயசு ஆனாலே தாத்தான்னு எங்க ஒண்ணாப்பு டீச்சர் சொல்லி இருக்காக. ஆனா ஒங்க க்ரூப்பு மட்டும் ஒத்துக்க மாட்டேங்குது. என்றா இது பசுபதி!!
'ஆதாரங்களுடன் சேனல் 4 டி.வி.காரனும், ஈரநெஞ்சுடன் சில தமிழக தலைவர்களும், இது போக பல்வேறு நல்ல உள்ளங்களும் ராஜபக்சேவின் கோர தாண்டவத்தை உலகம் உணரும் வண்ணம் சபைக்கு அம்பலப்படுத்தி போராடிக்கொண்டு இருக்கின்றனர். 'ஒருவேளை நாளை அந்த ராவணன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஈழத்தமிழர்கள் மறுவாழ்விற்கு ஏதேனும் நன்மை விளைந்துவிட்டால்? அப்பெருமையில் நமது பெயர் பொறிக்கப்படாமல் போய் விடுமோ??' என்று பொறி உருண்டை கலங்கித்தவிக்கிறது.
இருக்காதா பின்னே? 'ஈழ மானம் காத்த இனமானமே', 'ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்த நாட்டி தாத்தனே' என லட்சக்கணக்கான கவர்ச்சி வார்த்தைகள் தாங்கிய ப்ளெக்ஸ் பேனர்களுக்கு ஆர்டர் தந்து மாதங்கள் பல ஆகிப்போனதன்றோ. இன்னும் அப்படி என்னதான் பேசி தீர்க்கிறார்களோ ஜெனிவாவில். ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் குழுத்தலைவர் டி.ஆர்.பாலு அவர்களே. சபாரி சூட்டை மாறுங்கள். ஜெனிவா புறப்படுங்கள். ''இனி எத்தனை காலந்தான் ஏமாற்றுவீர். அடுத்த கூட்டத்தை கோபாலபுரத்தில் கூட்டுங்கள். For how long you will cheat us. Bull Shit. We next meet Gopalapuram'' என சட்டு புட்டென்று சவுக்கடி தர ஏதுவான நேரம் இதுவன்றி வேறென்ன?.
'ஆமா கலைஞர் தாத்தா..நீங்க ஏன் டைரக்டா ஹீரோவா பண்ணக்கூடாது?'
'நானா மாட்டேங்கறேன். எம்.ஜி.ஆர் மரு வச்சி மாறுவேஷம் போட்டா மட்டும் நம்பறாங்க. நம்மளை போக்கிரி வடிவேலுன்னு கரெக்டா கண்டு புடிச்சிடறாங்க. அடிக்கடி மண்டைல இருக்கற கொண்டைய மறந்துடறேன்'.
பார்லிமென்ட் தேர்தல் வேற வருது. அடுத்த ஷோவை ஆரம்பிக்கனும். ஏகப்பட்ட ஜோலி கெடக்கு திருச்சி சிவா தம்பி. நீங்களும் ஜெனிவா போயிட்டு சென்னைக்கு திரும்பி வர்ற வழில அம்மா மெஸ்ல ரெண்டு இட்லி, கொஞ்சம் புதினா சட்னி...பார்சல் வாங்கிட்டு வந்துருங்க ராசா!!
.......................................................................
11 comments:
அண்ணே என்னதான் சொன்னாலும் அவங்க பிம்ளிப்பி பிளாப்பி விளையாட்டை நிறுத்த மாட்டாய்ங்க போல....
இந்தப் பருப்பெல்லாம் நம்ம கிட்ட வேகாது திருச்சி.சிவா தம்பி!
heartless selfish bastards....
எங்க சிங்கத்துக்கு கோவம் வந்த்ருச்சு... இனி எங்கண்ணன் ரத்தம் பாக்காம கிளம்ப மாட்டாரு... எற்றா வண்டிய விட்ரா கோவாலு புரத்துக்கு
பெருந்தலைவர் காமராஜரை இன்றைய மனிதர்கள் யாரோடும் தயவுசெய்து ஒப்பிடாதீர்கள் - அது அவருக்கு நாம் இழைக்கும் அநீதி! பொய்யர்களின் பேச்சை நம்பி காமராஜரை தோற்கடித்த முட்டாள் தமிழ் மக்களுக்கு கருணாநிதி என்னும் கயவனை இனம் புரிந்து கொள்ள நெடுங்காலம் தேவைப்பட, அதற்குள் அவர் தமிழ்நாட்டையே வாங்கிவிட்டார்!
பிரபாகரன் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. There are so many controversies around Prabhakaran & also he is involved in assassinations of Rajiv Gandhi & many others.
செம.
பின்னி பெடலெடுத்துட்டீங்க போங்க...
நல்ல கிழிந்த செருப்பாலஅடிச்ச மாதிரி இருக்கு...சூப்பர்..
என்ன அண்ணே பன்றது
நச்!
என்ன வேகம் எழுத்தில்!சூப்பர் சிவா.
Post a Comment