CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, March 10, 2013

ஸ்பெஷல் மீல்ஸ்(10/03/13)Saheb Biwi aur Gangster Returns:

   
Class & Glass ரசிகர்களின் வரவேற்பை பெற்ற  Saheb Biwi aur Gangster இன் அடுத்த பாகம் இந்த வாரம் ரிலீசானது. பொருளாதார சிக்கல், பிரச்னைக்குரிய பீவி, அரசியல் எதிரிகள், செயலிழந்த கால்கள் என பல சிக்கல்களை ராஜபுத்திரன் ஆதித்யா(சாஹேப்) எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் ப்ளாட்.  இது போதாதென்று அவரது அரசியல் மற்றும் அந்தரங்க வாழ்வில் புகுந்து இந்த்ரஜீத் எனும் கேங்க்ஸ்டெர்(இர்ஃபான் கான்) தரும் குடைச்சல் வேறு. 

ராஜகுடும்ப நீதி, ராஜ் நீதி, கொல்லைப்புற காதல், ஒவ்வொரு கேரக்டரும் மற்றவருக்கு வைக்கும் செக் என சற்றும் நீர்த்துப்போகாத  நிகழ்வுகளால் கட்டிப்போட்டிருக்கிறார் இயக்குனர் திக்மன்சு. எவருமே ஓவர் ஆக்டிங் செய்யவில்லை. ராஜா, ராணியாக ஜிம்மி ஷேர்கில் மற்றும் மஹிமா கில் நடிப்பு கச்சிதம். ஆனால் பெரிதும் எதிர்பார்த்த தலைவன் இர்ஃபான் கான் நடிப்பில் இவ்வளவு சோர்வு...ஏமாற்றமே. 

"என்ன திடீரென கோட் சூட்டில்?" என்று ராணி கேட்க அதற்கு இர்ஃபான் தரும் பதில்: "காட் மேட் மேன். டெய்லர் மேட் ஜென்டில்மேன்". இப்படி ஆங்காங்கே ஒன்லைன் 'நச்'கள். எதிர்பாராமல் லாப்டாப்பில் கசமுசா படம் பலத்த சத்தத்துடன் ஒலிக்க அதை ஆஃப் செய்ய அரசியல்வாதி ஒருவர் படும்பாடு சூப்பர் ஹ்யூமர். க்ளைமாக்ஸை பார்க்கையில் மூன்றாம் பாகம் வருமென தெரிகிறது. மொத்தத்தில் ஒரு அபவ் ஆவரேஜ் சினிமா.
...................................................................

நீ வருவாய் என: 
காவிரி தீர்ப்பை கடும் சட்டப்போராட்டத்தின் துணையால் மத்திய அரசிதழில் வெளியிட வைத்ததற்கு மேடமை பாராட்ட வேண்டியதுதான். ஆனால் ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல மத்திய அரசு, தமிழகம், சுப்ரீம் கோர்ட் என்று யார் சொன்னாலும் இன்றுவரை நமக்கு 'தண்ணி காட்டி(?) ' வருகிறது கர்நாடகம். ராணுவமே வந்தாலும் அவர்கள் அசருவதாக இல்லை. முதலில் தேவையான அளவு நீர் ஓரிரு ஆண்டுகளுக்காவது நம் மாநிலம் வந்து சேரட்டும். அதன் பின் பாராட்டு விழா நடத்தினால் தகும். அதற்குள் 'பொன்னியின் செல்வி' விருது தந்தது...சரியாப்படல.
....................................................................   

Oz the great and powerful: 

                  
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ஜகஜ்ஜால சினிமா பார்க்க நேர்ந்தது. Oz  எனும்  உடான்ஸ் மேஜிக் நிபுணர்-கம்-ரோமியோ சொந்த ஊரில் உதை வாங்கி டார்க்  ஃபாரஸ்ட்டில் விழுகிறான். எமெரால்ட் சிட்டியின் செல்வாக்கான சகோதரிகளிடமும் தனது கைவரிசையை காட்ட அவர்களும் இவனை பழி தீர்க்க முனைகிறார்கள். க்ளிண்டா எனும் பெண்ணின் ஊர் மக்களுடன் சேர்ந்து தனக்கு தெரிந்த அப்ரண்டிஸ் வித்தையை வைத்துக்கொண்டு எமரால்ட் சிஸ்டர்சை எதிர்கொள்ள Oz படும்பாடே கதை.

ஜேம்ஸ்  ஃப்ராங்கோவின் ஆக்டிங் படத்தின் ப்ளஸ். விஷுவல்கள் கண்களை மயக்கும் கலர் வித்தைகள். த்ரீ டி எ ஃபெக்ட் சுமார். டால் ஃபி அட்மாஸ் ஒலியில் முதன் முறை சத்யம் தியேட்டரில் பார்க்கும் படமிது. ஸ்பெஷலாக எதுவுமில்லை. அதற்கு முழுக்காரணம் ஏற்கனவே கேட்டுப்பழகிய ஹாலிவுட் இசைதானே அட்மாஸ் செய்த பாவமேதுமில்லை. பறக்கும் குரங்கொன்று இதில் முக்கிய கேரக்டர். அது என்ன செய்தாலும் 'ஹே ஹே' என்று சிரித்து நம்மை தலையில் அடித்து கொள்ள வைக்கிறார்கள் உள்ளூர் ஹாலிவுட் ரசிகர்கள். சில்லி  ஃபெல்லோஸ்.

Oz தரும் கனமான பையை தூக்கிக்கொண்டு பறக்க முடியாமல் பல காட்சிகளில் நடந்தே செல்லும் குரங்கு பின் வரும் காட்சிகளில் பையுடன் சர்ரென பறக்கிறது. நம்மூரில் இப்படி ஒரு சீன் இருந்தால் சகட்டு மேனிக்கு பம்ப் அடிப்பார்கள். ஹாலிவுட்காரன் படம் என்றால் 'வாவ்' தான். ரசனைல தீய வக்க. "உலகின் சிறந்த மெஜிசியன் தாமஸ் ஆல்வா எடிசன்தான்" என்று Oz சொல்லும் வசனமும், அறிவியலின் துணை கொண்டு க்ளைமாக்சில் நடத்தும் தாக்குதலும் சிறப்பு. இட் இஸ் எ ஆவரேஜ் மூவி.
......................................................................

தனிக்காட்டு ராஜா:      
டெல்லியில் டெ'ஷோ' காட்டி ஈழத்தமிழர் மீதான பற்றை உலகிற்கு பறைசாற்ற (அ)நியாயத்திற்கு மெனக்கெட்டார்கள் தி.மு.க.வினர். இந்தியாவின் முன்னணி அரசியல் தலைவர்கள் பலருக்கு அழைப்பு விடுத்தும் பருப்பு வேகவில்லை. ஒரு சிலரே வந்தனராம். வழக்கம்போல தியேட்டர் ஆபரேட்டர் (சன் தாத்தாதான்) மற்றும் இன'மான' ஊழியர்கள் மட்டுமே ஆஜராகிவிட்டு ஊர் திரும்பி உள்ளனர். ஒரே சிப்பு சிப்பா வருது டோவ்!
......................................................................

சின்ன கவு'ன்'டர்:
ஏரியா பெட்டிக்கடையில் தொங்க விடப்பட்ட இதழ்களில் இம்முறை புதிதாக கண்ணில் பட்டதொன்று. 'தமிழகம்' எனும் பெரிய சைஸ் எழுத்துடன். குரு  குரு  குருவென பார்த்தால்..அட  'புதிய தமிழகம்'. ஒருவேளை நம்ம கிச்சுனசாமி ஐயாவோட பத்திரிக்கையோ..என்று பீதியுடன் அட்டைப்படத்தை நோக்கினால்..அதேதான். ஜெனிவா மாநாட்டில் கிச்சு ஐயா கூலிங் க்ளாஸ் போட்டவாறு நிற்கும் ஸ்டில். வெறும் 32 பக்கங்கள். டப்பு 10 ஓவாயாம். உள்ளே புரட்டினால் நத்திங் ஸ்பெஷலு. அடுத்து நமது அறிவுப்பசியை போக்க வரவுள்ள அரசியல் ஆசிரியர் யாரோ? என்டே குருவாயூரப்பா!! 
.....................................................................

தலைநகரம்: 
வேளச்சேரி  ஃபீனிக்ஸ் மாலுக்கு இரண்டாம் முறை செல்ல நேர்ந்தது. சென்னையின் மற்ற மால்களில் இல்லாத புதிய கடைகள் இங்கு ஏராளமாக இருக்கின்றன. டூ வீலர் பார்க்கிங் செய்ய ஒரே கட்டணம்தான். 50 ரூபாய். மாலின் இன்னொரு பக்கமுள்ள தரைத்தளத்தில் காற்று வாங்கிக்கொண்டு ஓய்வெடுக்க நிறைய இடமொதிக்கி இருப்பது சிறப்பு. 'இதோ வருது அதோ வருது' என்று 11 ஸ்க்ரீன் கொண்ட சத்யம் தியேட்டர் திறப்பு விழாவிற்கு இன்னும்  ஃபிலிம் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அநேகமாக சம்மர் ரிலீஸ்தான் போல.

90% மேட்டுக்குடி மக்களுக்கு மட்டுமே துணிக்கடைகள் இருந்தாலும் அவற்றை விட ஆர்.எம்.கே.வி.யில் ஆண்களுக்கான துணிகள் விலை குறைவாகவும், போதுமான அளவு ரகங்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 400 ரூபாய்க்கு தரமான டி ஷர்ட் ஒன்று கண்ணில் பட...வாங்கியாச்சி.
...................................................................... 

வின்னர்: 
சகவாச தோஷத்தால் சென்ற ஆண்டு மட்டும் சரமாரியாக கேரள படங்களை பார்க்க நேர்ந்தது.பெரும்பாலும் குப்பைகள் என்றாலும் சிற்சில மாணிக்கங்களும் இல்லாமலில்லை. உஸ்தாத் ஹோட்டல், 22  ஃபீமேல் கோட்டயம், அயாளும் ஞானும் தம்மில், தட்டத்தின் மறயத்து போன்ற படங்களே அவை. 2012-இல் எனக்கு பிடித்த படமாக அயாளும் ஞானும் தம்மிலை குறிப்பிட்டு இருந்தேன். அப்பதிவிற்கான லிங்க்: 2012 மலையாள சினிமா. சமீபத்தில் கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. நடுவர்கள் மற்றும் ரசிகர்களால் சிறந்த படம், இயக்குனர்,  நடிகர், நகைச்சுவை நடிகர் ஆகிய விருதுகளை அயாளும் வென்றுள்ளது மகிழ்ச்சி. 
..................................................................... 

மிஸ்டர் மெட்ராஸ்: 
நாட்டின் சிறந்த 20 நகரங்களின் பட்டியலை சென்ற வாரம் வெளியிட்டது இந்தியா டுடே இதழ். எங்கள் நகரம் சென்னை இந்தியாவில் முதல் இடத்தை பிடித்ததில் வீ ஆர் வெரி ஹாப்பி!! சிறந்த வளரும் நகரங்களில் 5 மற்றும் 8 வது இடத்தில் இருப்பது மதுரையும்(கல்வி, சுற்றுச்சூழல்), கோவையும்(முதலீடு). இதற்கும் சேர்த்து இன்னொரு சியர்ஸு!!
......................................................................

பொக்கிஷம்:
முந்தைய காலங்களில் நம் மாநிலத்தின் நிலப்பரப்புகள், சராசரி மக்களின்   உடைகள்,உணவு முறைகள் உள்ளிட்டவை  காணொளிகளால்  எப்படி பதியப்பட்டன என்பதை பார்க்கும் ஆவல் எப்போதுமே உண்டு. எனவே 1990- கள் வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் வெளியான திரைப்படங்களை அவ்வப்போது பார்ப்பதுண்டு. படம் எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் பொருட்டல்ல. மவுண்ட் ரோட் அலங்கார் தியேட்டர், வாகன நெரிசலில்லா பாரிமுனை என பல்வேறு பதிவுகளை கண் முன் நிறுத்துவது சினிமா மட்டுமே.

அதுபோல ஒரு தேடலில் ஈடுபட்டபோது இணையத்தில் பட்டது இரு முக்கியமான காணொளிகள். 1945 ஆம் ஆண்டு திருச்சி மற்றும் மதுரை நகரங்கள் எப்படி இருந்தன என்பதை அருமையாக பதிவு செய்துள்ளார் மைக்கேல் ரோக் எனும் வெளிநாட்டவர். காவேரி, வைகை  ஆற்றங்கரைகள், உச்சி பிள்ளையார், மீனாட்சி கோவில்கள், இதுபோக பல்வேறு சராசரி மனிதர்கள் பொது இடங்களில் புழங்கும் காட்சிகள் என சொல்வதற்கு நிறைய உண்டு. பார்த்துவிட்டு சொல்லுங்கள். சத்தியமாக இது காலப்பொக்கிஷம்தான்.

வாழ்வாங்கு வாழ்க மைக்கேல் புகழ்!! 

........................................................................
                             
                                                              
   

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஊர் முதல் இடத்திற்கு வாழ்த்துக்கள்...

மைக்கேல் ரோக் அவர்களுக்கு ஒரு சல்யூட் !!!

கவியாழி said...

திருச்சி,மதுரை பழைய இசையுடன் கூடிய படங்கள் அருமையாக இருக்கிறது, மற்றும் பலான மன்னிக்கணும் மலையாள படங்கள் விமர்சனம் மால் பற்றிய தகவலும் நன்று..

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஸ்பெஷல் மீல்ஸ் சூப்பர்.
நீதி மன்ற தீர்ப்பை கெஜட்டில் வெளியிடுவதால் பெரிய மாற்றம் வந்துவிடும் என்று தோன்றவில்லை.

சீனு said...

இன்னும் பீனிக்ஸ் மால் போகவில்லை, சீக்கிரம் போக வேண்டும்... இந்தியா டுடே அப்டியா போட்டு இருக்கான்.... புதிய தலைமுறைல கழுவி கழுவி ஊத்தியிருகான்( சில வாரங்களுக்கு முன்பு )

Unknown said...

சத்யம் வரும்னே பொறுமையா இருங்க

Yoga.S. said...

காலை வணக்கம்,சிவா சார்!///அருமையான மீல்ஸ்!அதிலும் பண்டைய திருச்சி&மதுரை காணொளி ...............ம்..ம்....ம்....ம்......!நன்றி பகிர்வுக்கு.

தமிழ்மகன் said...

உலகின் முதல் இருபது இணைய தளங்கள் ----- http://mytamilpeople.blogspot.in/2013/02/most-popular-websites-on-internet.html

தமிழ்மகன் said...

உலகின் முதல் இருபது இணைய தளங்கள் ----- http://mytamilpeople.blogspot.in/2013/02/most-popular-websites-on-internet.html

தமிழ்மகன் said...

உலகின் முதல் இருபது இணைய தளங்கள் ----- http://mytamilpeople.blogspot.in/2013/02/most-popular-websites-on-internet.html

Related Posts Plugin for WordPress, Blogger...