CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, February 8, 2013

பெரு'மால்' பெருமை                                                   
ஸ்பென்சர் ப்ளாசா...மதராசப்பட்டினத்தின் முதல் ஷாப்பிங் மால். இன்றும் நடுத்தர மக்களின் நண்பனாய் விளங்கும் புண்ணியாத்மா. நானும் மால் திறந்திருக்கேன் என்று 'கொச கொச' கட்டமைப்பில் அபிராமி மெகா மாலை திறந்தார் ராமநாதன் அங்கிள். 'கோன் போலா யே மால் ஹை? அரே க்யா யார்?' என்று சப்பாத்தி தோ(ல)ழர்கள் அங்கலாய்த்தனர் அப்போது. அரும்பாக்கத்தில் உதயமான ஸ்கைவாக்கும் பெரிதாக பேசப்படவில்லை. ஜன நெருக்கடியை சமாளிக்க இடவசதி இன்று கூனிக்குறுகி மூச்சு விட்டுக்கொண்டு இருக்கிறது வானநடை. துரித நிழற்சாலை (எக்ஸ்ப்ரஸ் அவின்யூ) வந்த பிறகுதான் அசல் மால்தாசர்கள் பெருமூச்சு விட்டனர். செவ்வக வடிவில் ஒரே நேர்க்கோட்டில் குழப்பமின்றி கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது E.A வின் ப்ளஸ். ஆனால் அதையே அப்பீட் செய்யும் வண்ணம் வந்துள்ளது ஃபீனிக்ஸ் மார்கெட் சிட்டி!! சென்ற வாரம் அங்கெடுத்த புகைப்படங்களுடன் இப்பதிவு துவக்கம்.

வேளச்சேரி பிரதான சாலையில் செக்போஸ்ட் மற்றும் குருநானக் கல்லூரி பேருந்து நிறுத்தங்களுக்கு இடையே வீற்றிருக்கிறது ஃபீனிக்ஸ். மற்ற மால்களை போல சாலையில் இருந்து வாயை பிளந்து பார்க்கும் படி இன்றி உள்ளே சில பல மீட்டர்கள் தள்ளி கட்டிடத்தை நிறுவியுள்ளனர். ஃபீனிக்ஸ் குழுவினர் மால் கட்டுவதில் ஜித்தர்கள்  என்பது தெளிவாக தெரிகிறது. மும்பை, பெங்களூரு, புனேவிற்கு பிறகு சென்னையில் கால் பதித்துள்ளனர். மொத்தம் 25 லட்சம் ஏக்கராம்ல!!  

                                                                     பீச், பார்க்...அது ஒரு கனாக்காலம் 
      

வழக்கம்போல கீழ் தளத்தில் பெரிய சைஸ் துண்டு போட்டு இடம்பிடித்து உள்ளது பிக் பஜார். அதாகப்பட்டது 'சரவணா ஸ்டோர்ஸ்' ரீமேக். பருத்திக்கொட்டை, ஆமணக்கு முதல் ஆலிவ் ஆயில், ஜீன்ஸ் பேன்ட் வரை இவர்கள் விற்காத பொருட்கள் இல்லை. வீக்கென்ட் ஸ்பெஷல் தள்ளுபடி என்று 9 ரூபாய் கீரையை 2 ரூபாய்க்கு விற்கும் வள்ளல் தன்மையை என்னவென்று சொல்ல? சிறுகீரை கட்டொன்றை ஆளுக்கு 2 ரூபாய் தந்து வாங்கி வீட்டில் நானும், நண்பனும் கழுவி ஊற்றப்பட்டதுதான் மிச்சம். அம்மா தந்த பாராட்டு "பஞ்சத்துல அடிபட்ட ஆடு, மாடு கூட சீந்திப்பாக்குமா இந்த சிறுகீரைய?". ஏகப்பட்ட பொருட்களை தள்ளுபடியில் போட்டு தாக்குகிறார்கள். ப்ராண்டட் பொருட்கள் தவிர்த்து இவர்களே பேக் செய்து விற்கும் நொறுக்குத்தீனிகள் மட்டரக எண்ணையில் தலைக்கு குளித்து விட்டு கெம்பீரமாக க்யூ கட்டி நிற்கின்றன. பிக் பஜார்...சோட்டா க்வாலிட்டி. அரே ஓ சம்போ!!  

                                                                          இன்னாபா? எப்டி கீர?                                                    

ஃபீனிக்ஸ் சிட்டி உள்ளே நுழைந்ததும் எங்கெங்கு என்னென்ன கடைகள் உள்ளன என்பதை கன்னிமாலர்கள் அறிய ஏதுவாக ஒரு தொடுதிரையை வைத்துள்ளது நன்று. எக்ஸ்ப்ரஸ் அவின்யூவை விட விசாலமான இடம் இதன் மிகப்பெரிய ப்ளஸ். ஆனால் சந்தடி சாக்கில் மன்மதர்கள்/ரம்பைகள் எதிர்பாலினரை உரசா வண்ணம் அநியாயத்திற்கு விசாலமாக இருப்பதால் 'வகுறு' எரிகிறது. மெகாமார்ட், க்ளோபஸ், லைஃப் ஸ்டைல், டாடா க்ரோமா எல்லாமே ஓப்பனிங் சூன். கம்ப்ளீட் எக்ஸ்சேஞ்ஜ் ஸ்டோர் சென்னையில் முதன் முறை ஷட்டரை திறந்து 'எலெக்ட்ரானிக் பொருட்கள் வாங்க, விற்க, மாற்றிக்கொள்ள' வாங்கோ வாங்கோ என்று வசியம் செய்கின்றனர். 

                                                                      அந்தர ஆங்கிளில் ஒரு க்ளிக்           
   
'நம்ம ஏரியால சோக்கா ஒரு மார்க்கெட்டாமே?' என்று வியப்பு மேலிட சாமான்யர்கள் சிலர் மேலுள்ள படத்தின் வலது ஓரத்தில் இருப்பவர் போல கூச்சத்துடன் உலா வந்தபோது 'முக்காவாசி பேரு சும்மா சுத்தி பாக்க வர்றவங்கதான். நம்ம ஊருன்னே இது. எதுக்கு படபடப்பு?' என்று அவர்களை ஆசுவாசம் செய்யதூண்டியது மனது. ஃபுட் கோர்ட் பக்கம் எட்டி மட்டும் பார்த்தேன். மற்ற மால்களில் இருப்பது போல ப்ரீ பெய்ட் கார்ட் சிஸ்டத்தை ஒழித்து கைல காசு வாய்ல தோசை போடுகின்றன உணவகங்கள். மிகவும் வரவேற்க்கத்தக்க அம்சம். மாறாமல் இருந்தால் சரி. சுமார் 20 பேர் அமரும் வண்ணம் வெட்டவெளி ஃபுட்கோர்ட் அருகில் இருப்பது அடடே. அங்கே நுழைந்து சுவற்றோரம் கையமர்த்தி வேளச்சேரி நில அழகை ரசித்துவிட்டு திரும்பினால் யார் கண்ணிலும் படாத ஒரு ஓரத்தில் 'கப்புள்ஸ் டேபிள்'. அனேகமாக அங்கு அமர ஜோடிகள் மத்தியில் பெரும் கலவரம் ஏற்படலாம்.

                                                            கலையின் விலை ஜஸ்ட் 1,35,000 ரூ மட்டுமே!! 
     
இதெல்லாம் இருக்கட்டும். 'நம்ம' ஏரியா எங்கய்யா என்று புலம்பியபோது நண்பன் மேல் தளத்திற்கு அழைத்து சென்றான். வந்துட்டோம்ல. LUXE(Luxury  Entertainment) என்று பெயரிடப்பட்டிருக்கும் மல்டிப்லெக்ஸ் ஜகஜோராக காட்சி அளிக்கிறது. சத்யம் தியேட்டரின் அடுத்த ஆ(தி)க்கம். மொத்தம் 11 திரைகள். அதில் ஒன்று மிகப்பெரிய ஸ்க்ரீன் கொண்ட 'ஐமேக்ஸ்'. அடுத்த வாரம் கதவுகள் திறக்கப்படலாம் என்று தெரிகிறது. ஜெட்லியின் ட்ராகன் கேட் மற்றும் ப்ரூஸ் வில்லிஸின் டை ஹார்ட் ஐமேக்ஸ் ரிலீசிற்கு தயார். வார இறுதியில் சும்மாவே 'ஹவுஸ்ஃபுல்' என்று அண்ணாசாலை சத்யம் படம் காட்டுவது இயல்பு. ஐமேக்ஸ் என்றால் மொக்கைப்படம் கூட நிரம்பி வழியும். 'அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்னலே பிரமாதம். ஐமேக்ஸ்ல டிக்கெட் எடுத்துக்காட்டு பாப்போம்' என்று கட்டிளம் காளையர்கள் பந்தயம் கட்டும் நாட்கள் வெகு அருகில்.

                                                                        'சத்யமா சீக்கிரம் தொறப்போம் சார்' 

'தமிழ்நாட்டு எப்பங்க காவேரி தண்ணி வரும்?' என்பதை விட பன்மடங்கு ஆர்வத்தில் 'எப்ப பாஸ் தியேட்டரை தெறப்பீங்க' என்று விசாரித்தவர்கள் ஏராளம். விஸ்வரூபத்தை விஸ்வரூப ஐமேக்ஸ் ஸ்க்ரீனில் திரையிடவே முதலில் ப்ளான் செய்திருந்தனர். ஆனால் சர்ச்சையில் கமல் சிக்கி சிங்கி அடித்ததால் சற்று தாமதம். இன்னும் சில நாட்களுக்கு இலவச பார்க்கிங் உண்டு. வளாகத்தின் உள்ளேயே குடியிருப்பு பகுதி ஒன்று வேகமாக கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே வார இறுதியில் மகிழுந்தில் வந்து செல்வோரால் ட்ராபிக் பிதுங்கிக்கொண்டு இருக்கிறது. அபார்ட்மென்டும்  வந்தால் அமோகம்.  

தியேட்டர், லான்ட்மார்க் இருந்தால் மட்டுமே பெரும்பாலும் மால்களில் கொஞ்சூண்டு காசு செலவு செய்யும் நபர் நான். இரண்டும் இன்னும் ஓப்பன் ஆகாததால் 2 ரூபாய் கீரைக்கட்டுடன் கெட்/கேட் அவுட் ஆனேன். பார்க்கிங் பிரச்னையில் மேட்டுக்குடிகள் ரதங்களை வைத்துக்கொண்டு மாலின் நாலாபுறமும் திணறிக்கொண்டு இருக்க அலட்சிய சிரிப்பை உதிர்த்து விட்டு நான்கே ரூபாய் டிக்கட் எடுத்து மாநகர பேருந்தில் ஏறியமர்ந்தேன். செல்வந்தர்களின் சொகுசூர்திகளை விட பெரிய வடிவில் இருந்த 'எங்க' பேருந்து சும்மா ஜொய்யுனு பறந்தது!!

Images: madrasbhavan.com   
............................................................................. 

சமீபத்தில் எழுதியது:

விஸ்வரூபம் - விமர்சனம்

11 comments:

Easy (EZ) Editorial Calendar said...

உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

! சிவகுமார் ! said...

நன்றிய வச்சிட்டு நான் என்ன செய்ய. தட்டுல 150 ரூவா போட்டுட்டு போங்க. பர்கர் செலவுக்கு தேவை.

CS. Mohan Kumar said...

நம்ம ஏரியாவுக்கு வந்துக்கினு நம்மளை கண்டுக்காம போயிகிரியே நைனா !

பட்டிகாட்டான் Jey said...

இதெல்லாம் சென்னையில் இருக்கிற ’மால்’களா?!

தகவல்களுக்கு நன்றி, தட்டில சில்லறை போட்டுருக்கேன், எண்ணி எடுத்துக்கொள்ளவும்:-))).

பஸ்லயே இம்புட்டு இடத்துக்ம் சுத்திருக்கான்யா... கைப்புள்ளை...

பட்டிகாட்டான் Jey said...

இடம் விசாலமா இருந்து, உரச முடியலை ஓகே, சரி உனக்கு எதுக்கு ராசா ‘வகுறு’ எரியுது......

அதெல்லாம் வேறவங்க டிபாஅர்ட்மெண்ட் ஆச்சே!! :-))

(பதிவுல்க எழுதினத காப்பி பேஸ்ட் பண்ணி கமெண்ட் போடமுடியாம பண்ணிருக்காம் பரதேசி.

! சிவகுமார் ! said...

@ மோகன்குமார்

அடுத்த தபா மீட் பண்ணுவோம் சாரே. வேளச்சேரி தலப்பாகட்டுல நீங்க பிரியாணி வாங்கி தந்தா வேணாம்னா சொல்லப்போறேன்?

! சிவகுமார் ! said...

//பட்டிகாட்டான் Jey said...
இதெல்லாம் சென்னையில் இருக்கிற ’மால்’களா?!//

சிவாஜி செத்துட்டாரா?


//தகவல்களுக்கு நன்றி, தட்டில சில்லறை போட்டுருக்கேன், எண்ணி எடுத்துக்கொள்ளவும்:-))).//

சில்லறையா? நோட்டா போட்டா என்னவாம்.

பஸ்லயே இம்புட்டு இடத்துக்ம் சுத்திருக்கான்யா... கைப்புள்ளை//

நம்ம எப்பவுமே பெரிய்ய சைஸ் வண்டில நகர்வலம் வர்றதுதான் வழக்கம்.

! சிவகுமார் ! said...


பட்டிகாட்டான் Jey said...
இடம் விசாலமா இருந்து, உரச முடியலை ஓகே, சரி உனக்கு எதுக்கு ராசா ‘வகுறு’ எரியுது...... //

பின்ன எங்க கொள்ளு பாட்டனுக்கா எறியும்?

//அதெல்லாம் வேறவங்க டிபாஅர்ட்மெண்ட் ஆச்சே!! :-))//

சும்மா இருக்குற பிலாசபிய ஏம்பா சொறிஞ்சி விடறீங்க?

//(பதிவுல்க எழுதினத காப்பி பேஸ்ட் பண்ணி கமெண்ட் போடமுடியாம பண்ணிருக்காம் பரதேசி)//

ரெண்டு லைன் டைப்படிக்க அவ்வளவு வலியா?

சமீரா said...

இவ்ளோ பெரிய மால் சுத்தி பாத்து கால்வலிதான் மிச்சமாகும் போல இருக்கே!! கொஞ்சம் நாள் EA "ஈ" அடிக்கும்!!!...

திண்டுக்கல் தனபாலன் said...

என்ப்பா இது.... சொஞ்த ஊய்ரே இப்டி கலாய்க்லாமா...?

settaikkaran said...

மால் என்று சொன்னாலே காசு டமால் என்று பொருள். :-)

Related Posts Plugin for WordPress, Blogger...